வெய்யோன் | ஜெயமோகன்


நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள்! கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்!

நூல் ஒன்பது – வெய்யோன் – 78

வெய்யோன்
வெண்முரசு நாவல் வரிசையின் ஒன்பதாம் நூல்
ஆசிரியர் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – நூல் ஒன்பது – வெய்யோன் – 1

venmurasu

இனி நான் உறங்கட்டும் நாவலைத் தொடர்ந்து, கர்ணனனைப் பற்றி இன்னுமொரு நாவலை அறிமுகப் படுத்துவதில் கடைசிபெஞ்ச் உவகை கொள்கிறது.

சுருக்கமான பார்வை

பரசுராமருடனான கர்ணனின் பிணைப்பு மற்றும் பிணக்கு பற்றிய சூதர் பாடலுடன் தொடங்குகிறது இந்நாவல். கர்ணனின் திருமண பின்புலம், அங்க நாட்டு அரசியல் மற்றும் சமூகச் சமநிலையை விவரிக்கும் அத்தியாயங்கள் விருவிருவென முடிகின்றன.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவர் ஜயத்ரதன் மற்றும் மகனுடன் அஸ்தினபுரிக்கு வரும் துச்சளையைச் சகோதரனாக நின்று வரவேற்க வேண்டும் என்கிற துரியோதனனின் அழைப்பை மகிழ்வுடன் ஏற்று அஸ்தினபுரிக்குத் திரும்புகிறான் கர்ணன். பிறகு, கௌரவர்களின் குழந்தைகளாலும் அவர்களின் வால் தனங்களாலும் நிறைந்திருக்கும் அஸ்தினபுரியின் காட்சி வெகு சுவாரசியமாகச் சொல்லப்படுகிறது.

ஜயத்ரதனுடனான கர்ணனின் மோதல், பிறகு அவரை அஸ்தினபுரியில் வரவேற்கும் கர்ணனின் தர்மசங்கடமான நிலைமையை வாசிக்கும்போது நம்மை இந்த நாவல் உள்ளே இழுத்துக்கொள்கிறது. இதற்கிடையில் இந்திரப் பிரஸ்தம் கட்டுமானம் நடக்கிறது. நகரம் கண் திறக்கப்படும் விழாவிற்காக கௌரவர்களை அழைக்க வருகிறான் பீமன்.

அஸ்தினபுரி விழா, அஸ்தினபுரியின் அமைப்பு விரிவாகச் சொல்லப்படுகிறது. எதிர்பாராவிதமாக நிகழும் கர்ண-ஜராசந்தனின் சந்திப்பு, அதன் தொடர்ச்சியாக நிகழும் ஜராசந்த-துரியோதனனின் மோதல் மற்றும் நட்பு ஆகியவை சுவையுடன் சொல்லப்படுகின்றன. பாண்டவர்கள் மீது தீராப் பகைமை கொண்ட, இந்திரப் பிரஸ்தத்தின் பழங்குடிகளான உரகர்களுடனான கர்ணனின் தொடர்பு கனவு லோகத்தில் ஆழ்த்தும். பிறகு அஸ்தினபுரியில் துரியோதனன் அவமானப்படுத்தப்படும் நிகழ்வுடன் இந்நாவல் முடிகிறது.

கருத்து திணிப்பும் கர்ணனின் மனப்போராட்டமும்

சூதர் குடியிலிருந்து மணம் முடிக்க விரும்பாத கர்ணன், அதிரதனின் பிடிவாதத்திற்காக சம்மதிக்கிறான். ஷத்ரியர் சபையின் தன் இருப்பை உறுதி செய்ய துரியோதனனுடன் சென்று கலிங்க அரசியைக் கைப்பிடிக்கிறான். தவிர்க்க இயலாது ராணிகளுக்கிடையில் பகை உணர்வு சூழ்கிறது. தன் கருத்துக்கு கர்ணனை சம்மதிக்க வைத்து, அவனைச் சங்கடத்தில் தள்ளும் நபர்கள் வரிசை குந்தியுடன் தொடங்குகிறது. அந்த வரிசையில் அதிரதன் அவரைத் தொடர்ந்து கர்ணனின் இராணிகளும் நிற்கின்றனர்

மீண்ட நட்பு – கர்ண-துரியோதன சந்திப்பு

karnan-duryodanan

திருமணங்கள் முடிந்த பிறகு, அங்கநாட்டில் இருந்து அஸ்தினபுரிக்கு வந்து துரியோதனனைச் சந்திக்கும் இடம் உணர்வு எழுச்சியுடன் தொடங்கி, சிரித்துக் குலுங்கும் நகைச்சுவையாகக் காட்டப்பட்டுள்ளது. கர்ணன் வரவை ஒட்டி, துரியோதனன் விடிகாலையிலேயே கள்ளுடன் கறிச் சோறு தின்னும் காட்சியில் வெடித்துச் சிரிக்கலாம்.

அவள் திரும்பும்போது துரியோதனன் மெல்ல “உண்மையிலேயே நான் எதையும் உண்ணவில்லை பானு” என்றான். “உண்ணாமலா உடையெங்கும் ஊன் சிதறிக் கிடக்கிறது?” என்றாள் பானுமதி. “ஆம். நான் அப்போதே பார்த்தேன் மூத்தவரே, நீங்கள் சரியாக துடைத்துக் கொள்ளவில்லை” என்றான் சுபாகு. கர்ணன் பானுமதியின் கண்களை பார்த்தபின் சிரிப்பை அடக்க அவள் சிவந்த முகத்துடன் ஆடையை இழுத்துச் சுற்றிக்கொண்டு திரும்பிச் சென்றாள்.

“சினத்துடன் செல்கிறாள்” என்றான் துரியோதனன். “ஆம், நான் சீரமைத்துவிடுகிறேன்” என்றான் கர்ணன். “நீத்தவர்களுக்கான பூசனைகள் செய்யாது உணவுண்பது பெரும்பிழை… விதுரரும் சொல்லியிருக்கிறார்” என்றான் துரியோதனன். “அரசே, உங்கள் மூதாதையரும் உங்களைப்போன்று புலரியில் முழுப்பன்றியை உண்பவர்களாகவே இருந்திருப்பார்கள். துயர்வேண்டாம்” என்றான் கர்ணன். “ஆம், மாமன்னர் ஹஸ்தி வெறும் கைகளால் யானையை தூக்குவார்” என்றான் துச்சலன். துச்சாதனன் கள்மயக்கில் “யானையை எல்லாம் எவராலும் தூக்கி உண்ண முடியாது…” என்றான். சிவந்த விழிகள் மேல் சரிந்த இமைகளை தூக்கி “வேண்டுமென்றால் பன்றியை உண்ணலாம்” என்றான்.

“பொதுவாக அவள் இங்கு வருவதில்லை. இங்கு நீர் வந்திருப்பதை அறிந்து உம்மை பார்க்காமலிருக்க முடியாமல் ஆகித்தான் வந்திருக்கிறாள்” என்றான் துரியோதனன். பின்பு “நான் மிகை உணவால் பருத்தபடியே செல்வதாக சொல்கிறார்கள்” என்றான். “ஆம், நீங்கள் மிகவும் எடை பெற்றுவிட்டீர்கள்” என்றான் துச்சலன். சினத்துடன் திரும்பி “என்னைவிட மும்மடங்கு பெரியவனாக இருக்கிறாய். நீ என்னை சொல்ல வேண்டியதில்லை” என்றான் துரியோதனன். அவன் தலை மெல்ல ஆடியது. வாயைத் துடைத்தபடி “நான் தேரில் ஏறினால் குதிரைகள் சிறுநீர் கழிக்கின்றன… இழிபிறவிகள்” என்றான். “ஆம், நானே பார்த்தேன்” என்றான் சத்வன். துரியோதனன் அவனை சிவந்த விழிகளால் நோக்கியபோது அவன் சித்தம் செயல்படாதது தெரிந்தது. தேவையில்லாமல் துச்சலன் வெடித்துச் சிரித்தான்.

நூல் ஒன்பது – வெய்யோன் – 29

துச்சளையின் நகர் நுழைவு

ரசிக்கும்படியான அத்தியாயம் ‘கூற்றெனும் கேள்’ அத்தியாயத்தில் வருகிறது. இளைய கௌரவர்களின் பட்டாளங்களுடன் சென்று கர்ணன் துச்சளையை வரவேற்கும் காட்சி அனுபவித்து உணரக்கூடியது.

கர்ணன் வெளியே சென்றபோது அவனைச் சூழ்ந்துவந்த இளைய கௌரவர்கள் கைக்குச் சிக்கிய அனைத்தையும் தூக்கிவீசி கூச்சலிட்டனர். “பெரீந்தையே! யானையை இவன் அடித்தான்” என்றது ஒரு குரல். ”பெரீந்தையே நான் வாளால் வெட்டினேன்” “பெரீந்தையே என் ஆடை எங்கே?” புரவி ஒன்றின் வால் இழுக்கப்பட அது மிரண்டு கனைத்தது. தூண் ஒன்று சரிந்து யானைமேல் விழ அது சுழன்று திரும்பி துதிக்கைநீட்டி அதைப்பிடித்து ஆராய்ந்தது. கர்ணனுக்குப் பின்னால் ஓடிவந்து இன்னொருவன் தோள்மேல் மிதித்து ஏறிப்பாய்ந்து தோளை கவ்விக்கொண்ட ஒருவன் “பெரியதந்தையே! என்னை வானை நோக்கி விட்டெறிடா” என்றான். கர்ணன் அவனைச் சுழற்றி வானை நோக்கி விட்டெறிந்து பிடித்துக் கொண்டான். “என்னை! என்னை!” என்று நூறு குட்டிக்கைகள் அவனைச் சூழ்ந்து குதித்தன.
நூல் ஒன்பது – வெய்யோன் – 33

கர்ணன் மட்டுமல்ல, கௌரவர்களும் கர்ணன் மீது கொண்டிருக்கும் அன்பையும் மதிப்பையும் ஜெயமோகனின் அத்தியாயங்கள் ரசிப்புடன் உணர்த்துகின்றன. துரியோதனன் கர்ணனின் பிறப்பைப் பற்றி அறிந்தவனாகவே ஆசிரியர் முன்னிறுத்துகிறார். மூத்தவர் என்றும், தனது அரியணை அவனது என்றும், தான் அவனது இளையவன் என்றும் அவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் இடம், மன நெகிழ்ச்சியைத் தருவது.

துரியோதனன் அதை இரு கைகளாலும் வாங்கி முகர்ந்துவிட்டு “உயர்ந்த மது! நான் உயர்ந்த மதுவை மட்டும்தான் அருந்துவேன். ஏனென்றால்…” என்றபின் ஓங்கி ஜயத்ரதன் தொடையில் அடித்து “மைத்துனரே” என்றான். ஜயத்ரதன் திடுக்கிட்டு விழித்து “யார்?” என்றான். “நான் துரியோதனன். அஸ்தினபுரியின் அரசன்! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி! ஆனால் இவர் என் மூத்தவர். இவரை…” என்றபின் தலைக்குமேல் கையைத்தூக்கி மும்முறை ஆட்டியபின் துச்சலனைப் பார்த்து “இவரைப்பற்றி நான் உன்னிடம் என்ன சொன்னேன்?” என்றான்.

“சொல்லத் தொடங்கினீர்கள் மூத்தவரே” என்றான் துச்சலன். “இவர் எங்கள் மூத்தவர். இவர் உண்மையில் எங்கள் மூத்தவர்” என்றான் துரியோதனன். கர்ணன் “போதும்! அருந்திவிட்டு படுங்கள்!” என்றான்.

……….

அவர்கள் கதவு வரை செல்வதை பார்த்த துரியோதனன் சரிந்த விழிகளை தூக்கி “ஆகவே நான் சொல்வது என்னவென்றால்… இவர் மூத்தவர். அங்க நாட்டுக்கு அரசர். ஆனால்…” என்றபின் ஜயத்ரதனை பார்த்து “ஆனால் ஒரு சொல் இவர் சொல்வார் என்றால் அஸ்தினபுரியின் அரசராக இவரே இருப்பார். இவருக்கு வலப்பக்கம் தருமன் நின்றிருப்பான். இடப்பக்கம் நான் நின்றிருப்பேன். இவர்களைச் சூழ்ந்து நூற்றிமூன்று உடன்பிறந்தார் நிற்பார்கள். பாரதவர்ஷத்தின் சூரியன் கால்படும் காமரூபத்து மேருமலை முதல் மாலை அவன் கால் நிழல்விழும் பால்ஹிகம் வரை இவர்தான் ஆள்வார். புரிகிறதா?” என்றான்.

நூல் ஒன்பது – வெய்யோன் – 36

கலிங்க ராணியைக் கவரும் இடத்தில் ஜயத்ரதனுக்கும், கர்ணனுக்கும் நேருக்கு நேர் போர் மூள்கிறது. கர்ணன் வெள்வதுடன் மட்டுமல்லாது, ஜயத்ரதனின் முடியை அறுத்து, இடைத் துணியையும் அறுத்து இழிவு செய்கிறான். பிறகு, அஸ்தினபுரியில் அவனே ஜயத்ரதனை வரவேற்கிறான். அந்தச் சூழலில் துச்சளை சொல்வதாக வரும் சொற்கள், துரியோதனன் போன்றே பிற கௌரவர்களும் கர்ணன் மீது மாறா அன்பு கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

“மூத்தவரே, உண்மையில் கடும் வஞ்சம் கொண்டுதான் கலிங்கத்திலிருந்து மீண்டார். என்னிடம் வந்து உங்களை பழிதீர்க்கப்போவதாக சொன்னார். நான் அவரிடம் நீங்கள் வெறும் ஒரு மலைச்சுனை. விண்ணாளும் சூரியனிடம் போரிடும் ஆற்றல் உங்களுக்கில்லை. வெல்வது மட்டுமல்ல, தோல்வி கொள்வதிலுமே பெருமை ஒன்றுள்ளது, அப்பெருமையை இழந்துவிடுவீர்கள் என்றேன். சினந்து என்னிடம் வஞ்சினம் உரைத்தபோது அவரை அறியாது உங்கள் பிறப்பு குறித்து ஒருசொல் வாயில் எழுந்தது. நான் கைநீட்டி போதும் என்றேன். என் விழிகளை நோக்கியவர் நடுங்கிவிட்டார்.”

துச்சளை சிரித்து “ஏனென்றால் நான் துரியோதனரின் தங்கை. அதை அக்கணம் நன்குணர்ந்தார். என் விழிகளைப் பார்த்தபின் பிறிதொரு சொல்லும் சொல்லாமல் இறங்கிச் சென்றார். அதன்பின் இன்றுவரை உங்களைப்பற்றி ஒருசொல்லும் சொன்னதில்லை” என்றாள். கர்ணன் “ஏன் அப்படி செய்தாய்? அவர் ஓர் அரசர்” என்றான். “மூத்தவரே, தங்கையென நான் இருக்கையில் அச்சொல்லை அவர் சொல்லியிருக்கலாமா?”

கிட்டத்தட்ட குரங்குக் குழு போன்று இருக்கும் அஸ்தினபுரி பிரிதொரு நாளில் ஒன்றுமில்லாது அல்லவா போகப்போகிறது. இனி நான் உறங்கட்டும் நாவலில் வரும் இளைய கௌவர்களின் மனைவிகள் ஈமக் கிரியைகள் செய்யும் காட்சி மனதில் நிழலாடுகிறது.

கிரகணம் விழுங்கிய சூரியன்

வெண்முரசு துவக்கம் முதல் துரியோதனன் நிழலாக இருந்து வருகிறான் துச்சாதனன். இணையாக இருந்து மூத்த கௌரவனைக் காத்து வருகிறான் துரியோதனன்.

Duryodfhana_fall_into_water

பாண்டவர்களுக்கு இழைத்த தீமையை நினைத்து வருந்தும் துரியோதனன், மிகை நடிப்புடன் அதைக் கடந்து செல்ல முயல்கிறான். பாண்டவர்களுக்கு மனமில்லை என்றாலும், அவர்களுடன் உறவு பாராட்ட நினைக்கிறான். நகருக்குக் காவல் நிற்பதாக உறுதி சொல்ல நினைக்கிறான், திரௌபதிக்கு தேவயாணியின் மணிமுடியைப் பரிசளிக்கிறான், கருவூலத்தைத் திறந்து பரிசு கொண்டு செல்கிறான், பீமனுடன் தோள் பொருத நினைக்கிறான். ஒரு கை மட்டும் தட்டி என்ன ஆகும். பாண்டவர்களின் பகைமை, துரியோதனன் வழுக்கி விழும்போது, ஏளனப் புன்னகையாகவும், வெறுப்புப் பார்வையாகவும் பல் காட்டிச் சிரிக்கிறது.

அவன் எதையும் நோக்கவில்லை என்று கர்ணன் எண்ணிய கணமே “அவர்களின் விழிகள்!” என்றான் துரியோதனன். நடுநடுங்கும் கைகளால் கர்ணனின் கைகளை பிடித்தபடி “என் அறை வரை என்னை தாங்கிச் செல்லுங்கள் அங்கரே. என்னால் நடக்க முடியாது, மீண்டும் விழுந்துவிடுவேன்” என்றான்.

நூல் ஒன்பது – வெய்யோன் – 76

உரகர்களின் பின்புலமும், அவர்கள் கர்ணனை மனமாற்றம் செய்யும் இடமாக வரும் இடங்களும் கனவுலோகத்தின் கற்பனைகளாக வருகினறன. மது மயக்கத்திலும், தூக்கக் கலக்கத்திலும், இருட்டுக்குள்ளும், பூமியின் அடியிலும் காட்சிப்படுத்தப்படும் இந்த இடங்கள் ஒரு அமானுட உணர்வுடன், கர்ணனின் மனதிற்குள் பகைமையை விதைக்கின்றன.

இறுதிக் காட்சியில் விவரிக்கப்படும் சூரிய கிரகணக் காட்சியை, கர்ணனின் மனநிலைக்கு ஒப்புமைப் படுத்துகிறது இந்நாவல்.

நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்…

இன்னுமொரு நல்ல நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.

வெல்க பாரதம்


படங்கள் காப்புரிமை – வெண்முரசு

இனி நான் உறங்கட்டும் | பி. கெ. பாலகிருஷ்ணன்


“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்…” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்…”

“அர்ஜுனா செத்தாய் நீ…” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான்.

இனி நான் உறங்கட்டும்
ஆசிரியர் – பி. கெ. பாலகிருஷ்ணன்
மொழி பெயர்ப்பு – ஆ மாதவன்
(மலையாள மூலம் – ഇനി ഞാൻ ഉറങ്ങട്ടെ | Ini Njan Urangatte)
பதிப்பு – சாகித்திய அக்காதெமி, முதல் பதிப்பு 2001
NLBயில் இரவல் பெற – In̲i nān̲ ur̲aṅkaṭṭum
கன்னிமாராவில் இரவல் பெற –

 1. இனி நான் உறங்கட்டும் 1
 2. இனி நான் உறங்கட்டும் 2
 3. இனி நான் உறங்கட்டும் 3

wp-1460828161514.jpeg

ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். அங் மோ கியோ நூலகத்தில் நிகழ்ந்த வெண்முரசு விவாதத்தின்போது கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டதாக நியாபகம்.

என்னைக் கவர்ந்தவை என்று சொன்னால் பைரப்பாவின் பருவத்தையும், பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இனி நான் உறங்கட்டும்’-ம் சொல்லலாம். பருவம் நாவல் ஒரு வரலாற்றுத்தன்மையை உருவாக்கி மிகவும் யதார்த்தமாகக் கதையைச் சொல்லும் படைப்பு. இனி நான் உறங்கட்டும் ஒரு பெரிய ஓலம் அல்லது நினைவுக் கொந்தளிப்பைக் கொடுப்பதாக இருந்தது. வரலாற்றுத்தன்மை குறித்து அந்தப் படைப்பில் கவனமே இல்லை. இரண்டுமே என்னை பாதித்த படைப்புகள். 28 வயதிலேயே முழுமையாக மகாபாரதத்தை என்றாவது எழுதிப்பார்க்க என்னைத் தூண்டிய படைப்புகள் அவை.

ஜெயமோகன் தந்த அறிமுகம்

நூலகத்தின் Reference பகுதியில் இருந்த இந்த நூல், சமீபத்தில் இரவலுக்காக மாற்றி இருக்கிறார்கள். தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன். ‘இரவு’ நாவலை திருப்பி அளித்த அடுத்த நாளே இந்த நாவலை எடுக்க நினைத்தேன்.  இரவின் தாக்கம் இதை எடுக்க இயலாது செய்துவிட்டது. அப்படியே வைத்துவிட்டு கடந்த வார இறுதியில்தான் எடுக்க முடிந்தது.

இந்த நாவலை ஒரு மிகப்பெரிய ஓலம் என்று சொல்கிறார் ஜெயமோகன். ஒரு சூன்யம். போர் முடிந்தபின் ஏற்படும் சூன்யம். சகோதரர்களுக்கிடையே மூண்ட போர், ஒட்டு மொத்தமாக அனைவரையும் அள்ளிக்கொண்டு போன பின்,  சூன்யம் கவிழ்ந்த அமைதியின் கொந்தளிக்கும் உணர்ச்சி வெளி. பதறுகிறார்கள் ஒவ்வொருவரும்.

இந்த மகாபாரத நாவல், கர்ணனை மையப்படுத்தி எழுதப்பெற்றது. கர்ண வதம் முடிந்த பிறகு நிகழ்பவை காட்சிப் படுத்தப்படுகின்றன. மகாபாரதத்தின் கர்ணன், அனைவரையும் வசீகரிக்கும் ஒரு பாக்கியவான். சக்தி இருந்தும்,  தோற்கிறான். உயர் குலத்தில் பிறந்திருந்தும், சூதனாய் வளர்கிறான். அதர்மம் என பிறகுக்குத் தோன்றினாலும், அதிலும் தர்மம் காண்கிறான். காக்கவேண்டிய அன்னை அவனைக் கைவிடுகிறாள். வெல்ல வேண்டியவன் சாகிறான். இப்படி எல்லாம் இருக்கும்போது, கர்ணன் இலக்கியவாதிகளை அதிகமாக வசீகரிக்கிறான்.

நாவலின் தொடக்கத்தில் துரியோதனனின் மரணம் காட்டப்படுகிறது. அந்தக் காட்சியின் வீரியமானது நம்மை நாவலுக்குள் தள்ளிவிடுகிறது. ஈர்த்துக்கொண்ட இந்த நாவல் கர்ணனின் இறப்புக்குப் பின்னால், உண்மைகள் தெரிந்த யுதிஷ்டிரனின் சகோதர தாபத்தைச் சொல்கிறது. தாங்க முடியாத குற்ற உணர்வால் வாடும் யுதிஷ்டிரனைப் பார்த்து சகோதரர்கள் கோபம் கொண்கிறார்கள். ‘அபிமன்யு சாகிறான். வித்தைகளைக் கற்றுக்கொடுத்த குருக்கள் மடிந்தார்கள். பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்தார். அப்போதெல்லாம் வருந்தாத நீ, எதிரியான கர்ணனுக்காக ஏன் வருந்துகிறாய்’ என்று கோபிக்கிறார்கள்.

 • கர்ணன் களம் பட்ட கதையையும், அதன் பின் உள்ள நியாய அநியாய வாதங்களையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குக் கூறுவதாக, எழுத்தாளர் முன் வைக்கும் கூற்றுகள்
 • கர்ணன் – குந்தி சந்திப்பு
 • கர்ணன் – கிருஷ்ணன் சந்திப்பு
 • துகிலுரிதல்
 • துரியோதனனின் கையறு நிலை
 • கர்ணவதம்

ஆகியன இந்த நாவலில் படிப்பவருக்கு மன எழுச்சியை ஏற்படுத்தும். போர் ஓய்ந்த கங்கைக் கரைக் காட்சிகள் கோரமானவை. கொந்தளிப்பானவை.

அழிவின் வேராக குந்தி, அழிவை அமலாக்கும் திரௌபதி

Kunti (c) http://www.starsai.com
Kunti (c) http://www.starsai.com

குந்தியின் அழுத்தமான முகம் நாவல் முழுவதும் வந்து போகிறது. கர்ணன் யுதிஷ்டிரனின் அண்ணன் என்பதால், நீத்தார் கடன் செய்யும்போது கர்ணனுக்குத்தான் முதலில் செய்யவேண்டும் என்று கர்ண பிறப்பின் ரகசியத்தை வெளிக் கொணர்கிறாள் குந்தி. வாசகனுக்கு வரும் பல கேள்விகள் திரௌபதிக்கு எழுகின்றன.

உண்மை, உலகை நோக்கி பிராண பயத்துடன் பாய்ந்து வருவது போல – திரௌபதி படபடப்போடு எழுந்து நின்றவள் குந்தியின் முழங்கால்களில் கைகளைச் சுற்றி, முகம் உயர்த்தி அழலானாள். தனக்க அதீதமாகிய ஒரு வித ஆற்றலின் உந்துதலினால் பரபரத்தவாறு அவள் சொல்வாள்…

“அவன், உன் மகன் என்பதை ஒரு தடவையேனும், ஏன் நீ சொல்லவில்லை தாயே… அவன் உன் மகன்தான் என்பதைக் கூறி இந்த மாபெறும் நாசகாரியத்தைத் தடுத்திருக்கலாமே?”
-திரௌபதி ப129

பாண்டவ-கௌரவர்களின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றத்தின்போது, கர்ணனை குலப்பிறப்பை இழிந்து பேசும்போது மயக்கமுற்று விழும் குந்தி, அதையே அர்ஜுனனுக்குச் செய்வாளா என்று வினவுகிறாள் திரௌபதி.

சகோதர தாபத்தால் யுதிஷ்டிரன் நிம்மதி இழந்து காடு ஏகிறேன் என்கிறான். மகனை இறந்த சோகத்தில் தவிக்கிறாள் குந்தி. கர்ணன் கொடுத்த வாழ்வினால் பிற பாண்டவர்கள் மலைத்துப்போய் நிற்கிறார்கள். பாண்டவர்கள் அனைவரும் கர்ணனுக்காக வருந்தும் வேளையில், தீராத வஞ்சத்தை கர்ணன் மேல் வளர்த்து வந்த திரௌபதி தனிமையை உணர்கிறாள். தன் உடன் பிறந்தார்களும், தந்தையும் போரில் மாண்டார்கள். தனக்கென்று ஒரு மனிதரும் இப்போது இல்லை. துச்சாதனன் ஆடைகவர்ந்த போது, சிரித்து மகிழ்ந்த கர்ணனுக்காக இவர்கள் வருந்துகிறார்கள். நான் பட்ட வலிக்கும், வஞ்சத்திற்கும், தூக்கம் தொலைத்த தனது இரவுகளுக்கும் என்ன பொருள் என்று மனம் மயங்குகிறாள்.

“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி சத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே”
கிருஷ்ணன் – ப108

கிருஷ்ணனும், குந்தியும் கர்ணனின் பிறப்பு ரகசியத்தைக் கூறுகின்றனர். தவிப்பாலோ அன்பாலோ அல்ல. ஒரு விதத்தில் நடக்கப்போகும் அழிவுப் போரைத் தவிர்க்கவும், கர்ணனை கௌரவர் குழாமிலிருந்து, பாண்டவர் குழாமிற்கு மாற்றவுமே. விட்டு வந்தால், யுதிஷ்டிரனுக்கு அண்ணனாக, பாண்டவர் சாம்ராஜ்ஜியத்தை ஏற்கவேண்டும் என்று கர்ணனை மனம் மாற்ற முயலும் காட்சிகள் செரிவானவை.

யுதிஷ்டிரன் தூக்கிப் பிடித்திருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழே, அர்ஜுனன் சவுக்கேந்தி நடத்திடும் ரதத்தில், பீமசேவிதனாய் வீற்றிருக்கும் கர்ணனின் சித்திரம், அந்த முதன்மைப் பாண்டவனின் அருகில் இருக்கும் பாஞ்சால புத்திரியின் சித்திரம்! இதையெல்லாம் நினைவில் அணி சேர்த்திட பயந்த திரௌபதி தானாக தலையை உதறிக் கொண்டாள்.
ப237

(நான் ஒரு ஓவியனாக இல்லாது போய்விட்டேனே என்று வருந்துகிறேன், நண்பர்களே! எனக்கு பாண்டித்தியம் இருந்திருந்தால், அறு பாண்டவர்களுடன் பாஞ்சாலியின் சித்திரத்தை வரைந்திருப்பேன்.)

அதற்கு திரௌபதி விசனம் கொண்டு  தனக்குள் கேள்வி கேட்டுக்கொள்கிறாள். பெண்ணாகிய தனக்கு தர்மநீதி தவறாத கணவர்கள் இழைத்த தவறுகள் குறித்து குமைகிறாள். அஸ்தினபுரி அரண்மனையில் பட்ட அவமானமாகட்டும், வனவாசத்திலாகட்டும், தான் கேவலப்படுத்தப்படும்போது ஒன்றுக்கு ஐந்து கணவர்கள் இருந்தும், அவர்கள் தன்னைப் பனையமாக்கி எந்த தர்மத்தைக் காக்கின்றனர் என்ற நொந்து கொள்கிறாள்.

எல்லாம் விதியென்று தான் சொல்லவேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தர்ம நீதிக்கு ஊறு ஏற்படும் வழிகளைப் பின்பற்றாத கணவர்கள் உண்மையில் லௌகீக நீதி பிறழாத உலகப் புகழ் ரத்தினமொத்தவர்களே! இருப்பினும், பெண் ஒருத்தி, வெட்கித் தலைகுனிந்திடும் நிலை வந்துவிட்டதல்லவா? ஆணிடமிருந்து பெண் எதிர்பார்க்கும் அன்பு – பெண்மைக்கே உரிய அனைத்து அபிமான உணர்விற்கும் அடிப்படையான அன்பு தனக்கு, தனது ஐந்து கணவர்களிடமிருந்து ஒருபோதும் கிட்டியதில்லை. பிரியங்கொண்டவளைப் பற்றியுள்ள ஆவல் காரணமாக- அன்பு காரணமாக – கணவர்கள் எதையும் ஒரு போதும் மறக்கவில்லை.
-திரௌபதி ப231

Draupati (c) unknown
Draupati (c) unknown

திரௌபதி குழம்பியபடி உதிர்க்கும் கேள்விகள் சாரமான பெண்ணீய பார்வை கொண்டவை.

துச்சானனது பிடியில் அகப்பட்டு, ‘சொல்லுங்கள் நீதிமான்களே – நான் தாஸியா?’ என்று அரண்டு அழுதிடும் திரௌபதியை நிமிர்ந்து பார்த்திடக்கூட சக்தியற்றவராகிய பீஷ்மர், “சுசரிதையாகிய பாஞ்சால புத்ரியே, மெத்த அறிவு கொண்ட யோக்யமானவர்கள் கடைபிடிக்கும் தர்மத்தின் போக்கை நீயே பார்க்கிறாய்… பலசாலியான ஆண்மகன், எதனை தர்மமென காண்கிறானோ, அதுவேதான் உண்மையான தர்மம்! பலவீனர்தர்மம் பற்றி சொன்னபல் அது அதர்மமாகவே பாவிக்கப்பெறும்! ஏனென்றால் இந்த வம்சத்தின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது!”
ப91

அவளுக்குப் பீஷ்மர் சொல்லும் பதில் சூடானது. ‘நீ கேட்பது நியாயம்தான். ஆனால் அதற்குப் பதில் சொல்லவேண்டியவன் யுதிஷ்டிரனே’ என்கிறார்.

Draupati (c) http://devdutt.com
Draupati (c) http://devdutt.com

பாண்டவர்களைக் கேள்வி கேட்கிறாள், கர்ண வதத்தை வஞ்சம் தீர்ப்பாக உணர்கிறாள். குந்தியின் அழுத்தமான முகத்தைக் கேட்கிறாள். கௌரவர்களைப் பார்த்துக் கேட்கிறாள்.  இறுதியில் போரில் வென்றாலும், யாருமே தனக்கு ஆதரவில்லை, இதையா நான் விரும்பினேன் என்று மனம் மயங்குகிறாள்.

ஒரு தாயாக, தன் குழந்தைகளிடம் ஆதரவாக நடந்து கொள்ளமுடியாமல் செய்துவிட்டது இந்த வஞ்சம் என்று வருந்துகிறாள் திரௌபதி. உணர்வுக் கொந்தளிப்பான பக்கங்கள் அவை. காந்தாரியை முன் வைத்து, ஒரு தாயாக, தன் தவறினை உணர்ந்து புலம்புகிறாள்.

கிருஷ்ண-கர்ண சந்திப்பு

பாண்டவர்களின் தூதனாக கிருஷ்ணன் அஸ்தினபுரி வருகிறான். போரைத் தவிர்க்க இயலாது வெறுங்கையுடன் திரும்புகிறான். திரும்புவதற்கு முன்னர் கர்ணனைச் சந்தித்து, அவனது பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறான். பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து, பாஞ்சாலி சமேதராக நாடாள அழைக்கிறான்.

Krishna and Karna - www.wikiwand.com
Krishna and Karna – http://www.wikiwand.com

உறுதியாக மறுக்கிறான் கர்ணன். மீண்டும் மீண்டும் அஸ்தினபுரியின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றத்தில் தன் மானம் காத்த துரியோதனைத் திரும்பத் திரும்ப நினைவு கூர்கிறான் கர்ணன். தன், வளர்ப்புத் தாய் ராதையைப் பற்றி கர்ணன் நினைத்துப் பார்க்கும் இடங்கள் நெகிழ்வை ஏற்படுத்துபவை. தோல்வியுடனும் வருத்தத்துடனும் திரும்புகிறான் கிருஷ்ணன்.

“பூமிக்கு சர்வநாசம் நெருங்கிவிட்டதென்பது நிச்சயமாகிவிட்டது. நான் மனமுவந்து உனக்குத்தர எண்ணிய ராஜ்ஜியத்தை உன்னால் ஏற்க முடியாத காரணத்தால், சர்வசம்ஹாரமிக்க போர், பூஉலகை தழுவப்போகிறது. கர்ணா உனக்கு நன்மைகள் வருவதாக…!”

கர்ணன், கிருஷ்ணனருகில் வினயத்துடன் எழுந்து நின்று, விடைபெறும் முகத்தான் பேசலானான்:

“கிருஷ்ணா, க்ஷத்திரியகுலம் மடிந்து நாசம் கொள்ளம் இந்த மாபெரும் அவலம் நீங்கப்பெற்று – உன்னை உயிருடன் காணும் நிலை நேருமென்றே நினைக்கின்றேன். அவ்வாறு நேருமாயின் நட்பு கொண்ட நெஞ்சமுடன் மீண்டும் சந்திப்போம். அல்லது சொர்க்கத்தில் நாம் கண்டடைவோம்”
ப122

குந்தி – கர்ண சந்திப்பு

கர்ணன் மதியவேளையில் சூரிய வணக்கம் செய்து, தர்மம் வழங்கும் வேளையில் குந்தி கர்ணனைச் சந்திக்கிறாள். கிருஷ்ணன் கூறிய அதே செய்திகளைக் கூறுகிறாள். மூத்த பாண்டவனாக, பாண்டவர் பக்கம் வரும்படி அழைப்பு விடுக்கிறாள்.

“சந்தனக்கட்டைகள் அடுக்கிய சிதையைக் காட்டி பிணங்களை ஆசை காட்டிடும் வீண்வேலை… அர்த்தமற்றதும் கொடூரமானதுமான வீண் உடற்பயிற்சி! விரைவில் நாமிந்த காட்சியை முடித்துக் கொள்வோம்… எந்த லட்சியம் கருதி நீ இங்கு வந்தாய் – என்பதைச் சொல். இனி நான் மேற்கொள்ள வேண்டிய செயல் என்னவென்பதையும் கூறிவிடு. அச்செயல் என்ன ஆயினும் நானதற்குப் பணிவேன் என்பதை நிச்சயமாக நம்பிக்கொண்டு, சொல்லவேண்டியதை விரைவில் சொல்லி முடித்துவிடு”
-கர்ணன் ப136

கர்ணன் வருத்தத்துடன் கோபத்தை அடக்கிக்கொண்டு அவளுடன் உரையாடும் காட்சிகளைக் காட்டியிருக்கிறது இந்த நாவல். ‘உனக்கு அர்ஜுனனுடன் போரிடவேண்டும் என்பது சரி. ஆனால் பிற பாண்டவர்களுக்கு உயிர் பிச்சை கொடு’ என்று கேட்கும் தருணம், ஏற்கனவே கதைகள் மூலம் அறிந்திருந்தாலும், வியக்க வைக்கிறது.

கர்ண – பீஷ்மர் சந்திப்பு

Bhishma at Kurukshetra (c) hindutva.info
Bhishma at Kurukshetra (c) hindutva.info

தொடர்ந்து கர்ணனை தூற்றியும், பழித்தும் பேசி வருகிறார் பீஷ்மர். அரசவையின், பலபேர் முன்னிலையில் இத்தகு அவமானங்களையும் பொறுத்துக்கொண்டவன், பீஷ்மர் இருக்கும் வரை, நான் போரில் இறங்கமாட்டேன், படை நடத்தமாட்டேன் என்று விலகி நிற்கிறான். 10ஆம் நாள், சரப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் பீஷ்மரை சந்திக்கும் கர்ணன் காட்சிகள் அழுத்தமானவை.

“தேவவிரதரே, உமது தூற்றல் மொழி கேட்டிட வந்தவன் நான்… உமது சாப மொழிகளைக் வாழ்க்கைப் பேறாக ஏற்றுக்கொள்ள நான் உம் முன் வந்தேன். சகிக்கவொண்ணா நெருப்பு தந்த வெக்கைப் பிரவாகம் மட்டுந்தான் என் வாழ்க்கையாக இருந்தது. எனது பிறப்பின் ரகசியத்தை முன்னதாகவே தெரிவித்திடாதது மூலம், என்னிடம் தயையின்றி நடந்து கொண்டதாக- மகாத்மாவாகிய தாங்கள் – வீணாக கவலைப் படுகிறீர்கள்… எனது ஜனன ரகசியம் நான் அறிவேன்.”
ப185

இந்தப் பின்புலத்தில் ஜெயமோகன் எழுதிய நாடகம் இங்கே உள்ளது. வடக்குமுகம் [நாடகம்] – 5

துரியோதன கையறு நிலை, கர்ணவதம்

குருக்ஷேத்திரக் காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. தர்ம நியாய விசாரங்கள் முடிந்து போர் தொடங்கும் பக்கங்கள் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. அதற்குள் சகோதரர்கள் இறந்திருக்கிறார்கள்.

wp-1460828166276.jpeg

அபிமன்யுவை ஏத்தும் நமது எழுத்தாளர்கள் விருக்ஷசேனனை ஏனோ விட்டுவிடுகின்றனர்.

காண்டீபத்தின் நாணொலி முழக்கிய அர்ஜுனன் கர்ண புத்திரனிடம் சொல்வான். “விருக்ஷசேனா நன்றாக இருக்கிறது உனது அசுர வித்தைகள். ஆனால் சற்று வரம்புமீறிவிட்டது பாலகனே… சரி, அதையெல்லாம் என்னிடம் காட்டிடு. நானும் பார்க்கிறேன்?”
ப 256

கௌரவ நூற்றுவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். துச்சாதனனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாகப் போட்டு, நர வேட்டை ஆடுகிறான் பீமன். இந்த துர்மரணம் கண்டு, மன உறுதி இழந்து போகிறான் துரியோதனன். தன் தவறையும், இனி எதையுமே மாற்ற முடியாது என்பதையும் உணர்ந்த துரியோதனனின் பின்வரும் கூற்றினை வாசிக்கையில் நாம் நெகிழ்ந்து போகிறோம்.

“பாண்டவருடன் இணைந்ததான ஒரு வாழ்க்கை, இனி சுயோதனனுக்கில்லை. துச்சாதனனின் ரத்தக் கொலையை, எவ்வாறு நான் மறப்பேன்? பீமன் கொன்றொடுக்கிய, எனது தம்பியரது நிணம் – எவ்வாறு என்னால் மறக்க முடியும்? உடன் பிறந்தாரையெல்லாம் சாவூர் அனுப்பிட்ட இந்த நான், பாண்டவரோடு ஒன்றுபட்டு எந்த நாட்டை ஆண்டிடவேண்டும்? அவர்களுக்கு நான் இழைத்த துரோகச் செயல்களை அவர்களும் மறந்திடார். எம்மவர் இருவர்க்கும் ஒன்றாக இனி இப்புவிமேல் இடமில்லை. குருபுத்திரனே, என் மனம் வேதனை கொள்கிறது. அன்பு நிமித்தம் இனியும் பலகூறி என்னை வேதனை கொள்ளச் செய்திடவேண்டாம்”

துக்கம் மிகக் கொண்ட அஸ்வத்தாமன், “எல்லாம் விதி” என்றவாறு தலைகுனிந்து பின் திரும்பினான்.
ப259

போரில் வெறிஆட்டம் போடுகிறான் கர்ணன். ஆனால் அர்ஜுனன் தவிர்த்த பாண்டவர்களைக் கொல்லும் தருணம் வந்தும், கொல்லாது விட்டு விடுகிறான், தாய் குந்தி கேட்ட வரத்தின் படி. பீமன் ஒளிந்து ஓடும் காட்சி அருமையாகப் புனையப்பட்டுள்ளது.

Bhima lost to Karna at Kurukshetra (c) http://kanigas.com
Bhima lost to Karna at Kurukshetra (c) http://kanigas.com

சல்யர் கர்ணனுக்குத் தேரோட்டுவதும், குழி பறிப்பதும் விவரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், கர்ண வத நாளின் பிற்பகுதியின் கர்ணனுக்கு உரிய உபதேசங்களை அளிக்கிறார். பாவம், அந்த புதைந்த தேர் சக்கரத்தை சல்யர் எடுத்துவிட்டு இருக்கக் கூடாதோ?

“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்…” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்…”

“அர்ஜுனா செத்தாய் நீ…” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான்.
ப264

கர்ண வதம் (c) Wikimedia
கர்ண வதம் (c) Wikimedia

தீ்ர்ந்த வஞ்சம்

ini njan urangatte

தர்மவான் கர்ணன்.  மூத்த பாண்டவன் கர்ணன். நட்புக்கு இலக்கணம் கர்ணன். ஆனால், சில தவறுகள் செய்கிறான். செய்யப்பட்ட நிமித்தங்கள் காரணமாக, திரொளபதி அவன் மீது தீராத வஞ்சம் கொள்கிறாள். அவளும் அவனை ஓரிடத்தில் பிறப்பைக் காரணம் காட்டி, மணக்க மறுக்கிறாள். ஆக, இது இருபுறம் கொழுந்துவிட்டெரிந்த வஞ்சம். இரு தீயை மறு தீ எரித்து அழித்தது.

எல்லோரும் கர்ணனுக்காக வருந்தும் போது, பாண்டவர் அகம்படி செய்ய, கர்ணன் அரியணை அமர்ந்திருப்பதும், பக்கத்தில் தான் அமர்ந்திருப்பதையும் காட்சிப் படுத்திக்கொள்ளும் திரௌபதியின் மனநிலைக் கொந்தளிப்பு இன்னொன்றையும் நடிக்க முயல்கிறது. அவ்வளவு பேர் இறந்து பட்ட போர்வெளி, விதவைகளின் கூடாரமாகியிருக்கிறது. பல விதவைகள், தன் கணவர்களுக்காக சாந்திகள் செய்கிறார்கள். தானும் அந்த விதவைக் கூட்டத்தில் ஒருத்தியோ என்று ஓரிடத்தில் நினைக்கிறாள் அவள். ஒரு நிமிடம் நான் திடுக்கிட்டுவிட்டேன்.

தீர்ந்த வஞ்சத்துடன், தீராத உணர்வுகளுடனும் அவள் உறங்கப்போகட்டும். நாம் இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

Last but not least, ஆ மாதவனின் மொழிபெயர்ப்பு தரமானது. ஒரு இதிகாச சுவையைத் தருகிறது. Punctuations முதற்கொண்டு, எல்லாவற்றிலும் கவனம் எடுத்திருக்கிறார்.

வெல்க பாரதம்.

இரவு | ஜெயமோகன்


“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு

இரவு 6

இரவு – ஜெயமோகன்
பதிப்பு – தமிழினி, இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2011
இணையத்தில் வாசிக்க –  இரவு – 1
NLBயில் முன்பதிவு செய்ய – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200127887
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – தளம் வேலை செய்யவில்லை.

iravu jeyamohan front cover

240 பக்கத்தில் அமைந்த ஒரு பதைக்க வைக்கும் மிகுபுனைவு (தமிழில் fantasy🙂 ) வகை நாவல்.

நாவலை இதுவரை படிக்கவில்லை என்றால் என்னுடைய இந்தப் பதிவை வாசிப்பதை விடுங்கள். ஏனென்றால் இது உங்கள் வாசிப்பின் சுவாரசியத்தைக் குறைக்கலாம். நாவலை வாசிக்க மேலே சுட்டி தரப்பட்டுள்ளது. கடந்த முறை சென்னை செல்லும்போது, பகல் பிரயாணம் என்பதால், முன்னரே நூலகத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன்.  ஆனாலும், தடைகளின் காரணமாக, இரவலைத் திருப்பியளிக்கும் கடைசி நாள் வரை நீடித்துவிட்டது.

இரவு வாழ்க்கை என்பது தகுந்தது – யோகத்திற்கும் போகத்திற்கும். ஆனால் அதன் உண்மையான வீரியத்தை நம்மால் எதிர்கொள்ள இயலுமா என்று கேட்கிறது இந்த நாவல். சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது பகல் பொழுது. இரவு என்கிற கட்டட்ற வேளையின் பிரம்மாண்ட வலிமையை, அதன் குண்டூசிமுனையை சூடுபடுத்தி, கண்ணுக்குள் செலுத்துவது போல விவரிக்கிறது.

நாயகன் சரவணன் பணி நிமித்தம் கேரளா போகிறான். அங்கே இரவில் மட்டும் விழித்து, பகலில் உறங்கும் வயதான மேனன்-கமலா தம்பதியினரைச் சந்திக்கிறான். மேனன் உற்சாகமாகப் பேசுகிறார்.  கலையான முகம் கொண்ட மேனனின் மனைவியும், கண்மூடித்தனமாக இரவுப் பொழுதை அனுபவிக்கும் மேனனும் சரவணனை ரொம்பவே பாதிக்கிறார்கள். தானும் அறியாது, இரவுச் சமூகத்தில் கலக்கிறான் சரவணன்.

“நாக்டிரனல்னா தமிழிலே என்ன?” ”இரவுலாவி” என்றேன். ”குட்..தமிழிலே எல்லாத்துக்கும் வார்த்தை இருக்கு கமலம்…ஸீ..மலையாளத்திலே நமக்கு எதுக்கும் நல்ல வார்த்தை கிடையாது. ஒண்ணு அப்டியே இங்கிலிஷ். இல்லாட்டி அசிங்கமா சம்ஸ்கிருதம். என்ன அது,  நிஸாசஞ்சாரி. மை ·பூட்”

மேனன் – இரவு 3

மேனனின் மூலம், நாயர் மற்றும் அவரது மகள் நீலிமா, சாக்த சாமியார் பிரசண்டானந்தா, ஃபாதர் ஜோசப் என்று நிறைய பேரைச் சந்திக்கிறார்.

பிரசண்டானந்தா சொல்லும் படிமங்களை ரசிக்கும் மேனனுக்கு, அவரது யோக கலைகளில் ஆர்வமிருக்கவில்லை. ஆனால் கமலாவிற்கு அதில் ஆர்வம் உள்ளது என்று மேனன் சொல்லும்போது மெலிதாக நான் சந்தேகம் கொண்டேன். அது பின்னால் அவிழ்க்கப்படும் முடிச்சு.

“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு

இரவு 6

இந்த சாக்த சாம்ராஜ்ஜியங்கள் பற்றி எனக்கு விரிவாகத் தெரியாது. ஆனால் மேலோட்டமாக அறிந்திருக்கிறேன். இந்து மதப் பிரிவுகளில் சில குழுக்கள் செய்த தவறுகள் காரணமாக மீடியாக்களில் அடிபட்டபோது மேலோட்டமாக அறிந்தேன். பிரசண்டானந்தா மூலம் ஒரு பெரிய நிகழ்வைக் காட்டுகிறார் ஜெயமோகன். எனக்கு ஒரு நிமிடம் சிலிர்த்துவிட்டது.

அந்த பிரசண்டானந்தா குழுவில் இருக்கிறார் முகர்ஜி. யக்ஷி படங்களை வரிசையாக வரைகிறார்.

நான் கைகழுவும்போது ”ஊணு மோசமா?” என்று அவள் பின்னாலிருந்து கேட்டாள். ”நல்லா இருந்தது…எனக்கு பசியில்லை” என்றேன். அவள் சில நிமிடங்கள் தயங்கிவிட்டு ”…அந்த மேனன் விட்டுக்கு போனா…அவங்க யட்சி உபாசனை உள்ள ஆட்களாக்கும். அங்க போனா அவங்க மாயம் வச்சு பிடிச்சுடுவாங்க. பின்ன அதிலே இருந்து தப்ப முடியாது” என்றாள். நான் ”இல்லல்ல நான் சும்மாதான் போனேன்” என்றேன். ”போன வருஷம் ஒரு தோணிக்கார பையன் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டிருந்தான். பின்ன அவனுக்கு கிறுக்காயிபோச்சு. இப்பம் அவன் கிறுக்கா அலையுறான்னு கேட்டிட்டுண்டு.” என்றாள். என் முகம் மாறியதை தடுக்க முயன்று வேறுபக்கம் பார்த்தேன்.

பங்கஜம் இரவு – 9

மேனனின் மனைவி கமலா அப்படிப்பட்ட ஒரு வசீகரியாக வலம் வருகிறார். தோற்றம் மட்டுமல்ல, பழக்கத்தில், பேச்சின் கூர்மையில் (ஒரு நொடிப்பொழுதில் நீலிமா மீதான சரவணனின் ஈர்ப்பை அறிகிறார்), சிரிப்பில், சமையலில். கமலாவை வயதான யக்ஷி என்கிறார் முகர்ஜி. முகர்ஜியைச்  சந்தித்ததாக நீலிமாவிடம் கூறுகிறான் சரவணன், அதை அவள் ரசிக்கவில்லை.  மற்றொரு வசீகரியான நீலிமாவிற்குத் தெரிந்துள்ளது கமலா மீதான முகர்ஜியின் ஆர்வம்! இதை நூல் பிடித்துக்கொண்டே வந்து கொலைக்குப் பிறகான முகர்ஜியின் நிலையழிவைப் பாருங்கள். கமலாவைக் கொன்ற பிறகு, தான் வரைந்த யக்ஷி ஓவியங்களைக் கிழித்துப்போடுகிறார். ஆக, கமலா கொலை என்பது, மதத்திற்காகவோ, இரவு வாழ்க்கைக்காகவோ, ஒழுக்கத்தின்பொருட்டோ நடந்ததல்ல. தெளிவாக இரவு வாழ்க்கையை அறிந்த, பிறரின் நிர்வாணத்தைத் தெளிவாக அறிந்து உணர்ச்சி மட்டுப்போன, ஒரு கலைஞன் தன் பெண்ணாசையின் பொருட்டு நிகழ்த்திய ஒரு வஞ்சம்.

பிரசண்டானந்தாவுடனான கமலாவின் உறவிற்கு இருவர் எப்படி எதிர் வினையாற்றுகிறார்கள் என்று ஆர்வமுடன் நினைத்துப் பார்க்கிறேன். முகர்ஜி கொலை செய்யும் அளவிற்குப் போகிறார். மேனன் கமலாவை வெறுக்காவிட்டாலும், தன் மனைவியின் நடத்தைப் பிறழ்வுக்குக் காரணமான இரவுக் சமூகத்தை விட்டே ஓடிவிடுகிறார். மேனன் கமலாவின் அஸ்தியைப் பெற்ற பிறகு, கதறும் இடத்தில் கலங்கிவிட்டேன்.

நாவலின் உச்சமான தருணங்களில் கமலாவின் கொலையும் ஒன்று. பகலில் இல்லையா துரோகங்கள், சீரழிவுகள். அவற்றை ஒழுக்கம், நடத்தை என்று தடைக் கயிறு கட்டி வைத்துள்ளது சமூகம். இரவுகளில் அந்த சக்திகள் தன் முழு சக்தியைக் காட்டி பீரிட்டு வருகையில் அதன் விசையை ஒரு மனிதரால் தாங்க இயலுமா? முடியாது என்றே என் வலிமையற்ற மனம் சொல்கிறது.

iravu jeyamohan back cover

நீலிமா மது அருந்தி தன் மனதின் வஞ்சத்தைக் காட்டும் தருணம் நாவலின் இன்னாரு உச்சம்.

“என்ன பண்ணப்போறே? பகலிலே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமா? பட் யூ ஹேவ் டு ·பக் ஹர் இன் த நைட்… அதுக்கு அப்றம் அவ தூங்காம இருட்டை பாத்துட்டு கிடப்பா. அப்ப அவளோட ஆழத்திலே இருந்து விஷம் திகட்டி வந்து நாக்குல் முழுக்க கசக்கும். அப்ப நீ அவளைத் தொட்டா ராஜநாகம் கடிச்சது மாதிரி ஒரு சொல்லால உன்னைக் கொன்னிருவா…. யூ நோ எல்லா பெண்ணும் யட்சிதான்… யூ ஸில்லி ரொமாண்டிக் ஃபூல்…யூ..”

நீலிமா இரவு – 13

‘நானே ஒரு யக்ஷிதான்’ என்கிறாள் நீலிமா. கமலா நெய்விளக்கில் எழுகிறார் என்றால், நீலிமா அப்பட்டமான காட்டுத்தீயில் எழுகிறாள். நீலிமாவின் கழுத்துப் பகுதியிலே மயங்கிக் கிடக்கும் சரவணனுக்கு, அதுமட்டுமே நான் அல்ல என்று அப்பட்டமாகக் காட்டுகிறாள். ‘அவள் அப்படித்தான்’ படத்தின் ஸ்ரீப்ரியாதான் நினைவிற்கு வந்தார். `உண்மை என்பதைப் புதைத்து வைக்கமுடியாது. எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தாலும்  பீறிட்டு மேலே வரும்’ என்கிறார் நம் நாட்டின் பெரியவர் ஒருவர். எனவேதான் நம் உண்மைகள் காவிய ரச சுவையுடன் வருகின்றன நாவலின் இறுதி பாகத்தில் வருகிறது.

எனக்கு இது வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக வேஷம் போட முடியுமா என்று நீலிமா உணர்த்துகிற கட்டத்தில், ஒரு கடுப்பான கஷாயத்தை விழுங்கியது போல் உணர்ந்தேன். அவள் பேசுவது ஒன்றும் தப்பில்லையே. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு சரவணனுக்கோ (படிக்கிற நமக்கோ) ‘திராணி’ இருக்கிறதா என்பதுதான் முக்கியம். நிலவில்லாத வின்மீண்கள் செறிந்த வானில், நீலிமாவும் சரவணனும் இன்பம் துய்க்கும் கணம், ஒரு ரசிக்கக் கூடிய ஒரு கனவு. அந்த வேளை முடிந்த பிறகு, சிந்தனைக்குள் அமிழும் சரவணணைப் பார்த்தபொழுது, ஒரே யக்ஷியால் மீண்டும் மீண்டும்  சப்பிப்போடப்படும் ஒருவனாகத்தான் இருக்கப்போகிறானோ என்று மனம் பதறுகிறது. நாவலின் இறுதியில் வாசகரைப் போன்றே மேனனும் பதறுகிறார்.

“எனக்கு அந்தரங்கமாக ஒரு விஷயம் தெரியும். நீ கமலாவால் தீவிரமாக கவரப்பட்டிருந்தாய். அவள் அப்படித்தான். நெருப்பு போல. அவளை விட்டு யாரும் கண்களை எடுக்க முடியாது. நீலிமா கமலாவின் ஒரு சிறிய மாற்றுவடிவம்தான் உனக்கு”

மேனன் இரவு – 23

எப்படியோ, ஒன்று சேர்கிறார்கள் சரவணனும் நீலிமாவும். கமலாவை இழந்த விரக்தியில் இரவு வாழ்க்கையை விட்டு வெளியேறிய மேனன், இரவு வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்கிறான் சரவணன். அவனது மனஉறுதியின் மீது எனக்கு சந்தேகம் வருகிறது. 35 ஆண்டுகள் வாழ்ந்த மேனனுக்கே கமலா அளித்த அதிர்ச்சயை, நீலிமா இவனுக்குத் தரமாட்டாளா? அப்படிப்பட்ட வீரியமான தாக்குதல் சரவனனுக்கு இல்லாமல் போகுமா என்ன? இது நீலிமா மீதான நடத்தையின் ஒரு ஆணாக என் சந்தேகம். ஆனால் இந்தப் பதிவை எழுதுகிறபோது ஒன்றை நான் அறிகிறேன். கமலா ஒரு வேடம் பூணுகிறாள். இரவுவாழ்க்கை என்கிற பெயரில் பிரசண்டானந்தா, முகர்ஜி என்று தன் வாழ்க்கையில் அவள் அனுமதிக்கிற சுரண்டல் ஆண்களை விட்டு, தெளிவாக வெளியே நிற்கிறாள் நீலிமா. அந்த வகையில் எனக்கு அளவு கடந்த திருப்தி ஏற்படுகிறது. இதுவும் பகல் சார்ந்த, ஒழுக்கம் விதிகள் பூசப்பட்ட ஒரு ஆணின் திருப்திதான் என்றாலும், ஒரு வேலை அப்படி நீலிமா இருக்க இயலாதென்றால் அது தவறு என்று வாதிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வெல்க பாரதம்!

 

 

புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி


“யாரிடமாவது வெறுமே பெற்றுக் கொண்டால்தான் தவறு. திருடினால் குற்றம். அநியாயமாக சம்பாதித்தால் பாவம். பணம் சம்பாதிப்பதற்காக நம் குணத்தை இழந்தால்தான் நாம் வெட்கப் படணுமே தவிர உழைத்துப் பிழைப்பதால் நாம் யாருக்குமே தலை வணங்கத் தேவையில்லை என்பாள் எங்க அக்கா”
-வாசு

புஷ்பாஞ்சலி – திருமதி யத்தனபூடி சுலோசனாராணி

எங்க பேட்டை நூலகத்தை மூடிவிட்டார்கள். 4 மாதம் ஆச்சு. பக்கத்து வட்டார நூலகத்தில் சில வாரங்கள் முந்தி சுற்றிக் கொண்டிருந்த பொழுது, புதிய வரவுகள் தட்டில் கிடைத்தது. பக்கத்திலேயே, புஷ்பாஞ்சலி கிடைத்தது. அனேகமாக, இரண்டு நாவலுக்குமே நான்தான் முதல் வாசகன் என்று நினைக்கிறேன். புத்தம் புது காகித மணம்.

wp-1458563111475.jpeg

240 பக்கங்களில் எளிதான தொடர்கதை டைப் நாவல். கடகடவென பக்கங்கள் ஓடிவிடுகின்றன.

கதைச்சுருக்கம் படிப்பவர்கள் கீழே படித்துக் கொள்ளலாம்.

புஷ்பாஞ்சலி
புஷ்பாஞ்சலி

யத்தனபூடியின் இந்த நாவலிலும், திருப்பங்கள், நாடகத்தனமாகவே இருக்கின்றன. எதேச்சையாகத் தெருவில் பார்த்தவள் திடீரென ரயிலில் வருகிறாள். பணக்காரப் பெண் திடீரென ஏழையாகிக் கந்தல் கட்டுகிறாள். மாதவனின் முறைப் பெண்ணின் கணவன் திடீரென சந்தியாவின் வகுப்புத் தோழன் ஆகிறான். இப்படி நிறைய திடீரென!… சரி போகட்டும்.

Vijethaசுதாவின் மீதான மாதவனின் குற்றச்சாட்டுடன் தொடங்குகிறது கதை. காதலித்த பெண், காதலித்தவன் செத்துப் போனான் என்று தெரிந்த பின் பின் மனது மாறுவது பாவமா என்ன? அவன் சாகாமல் திரும்பி வரும்போது, அடுத்தவரின் மனைவியாக இருந்துகொண்டு கையைப் பிடித்து ‘அய்யோ அத்தான்’ என்று கதறத்தான் முடியுமா? மாதவன் வழி இந்த கதை சொல்லப் படுகிறது. அவன் அவனுக்குள்ளயே வாழ்கிறான். அவனே என்னென்னவோ நினைத்துக்கொண்டு செய்கிறான். அது என்னென்னவோ சிக்கலை உண்டாக்குகிறது.

குழந்தை விபரத்தை நேரடியாக சொல்லாமல், ஒரு கடிதத்தில் எழுதி, அதை இரும்புப் பொட்டியில் போட்டுவிட்டு, தன் அறைப் பக்கம் புழங்காத சந்தியா அதை எடுத்துப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் என்று மாதவனின் தடுமாற்றம் எனக்கு அவன் மீது அதிருப்தியை உண்டாக்கியது.

ஒன்று நினைக்கிறேன். ஒரு பார்வையில் – யத்தனபூடியின் இந்த மாதவனும், ஜெயகாந்தனின் பிரபுவும் (பார்க்க ) ஒரு தன்மையைக் கொண்டவர்களே. ஆனால் மாதவனிடம் இல்லாத பக்குவம் பிரபுவிடம் உள்ளது. இத்தணைக்கும் மாதவன் நல்லவன். பிரபு ஒரு பணக்காரப் ‘பொறுக்கி’. அவனா இவனா என்று வரும்போது மாதவனை ஏறி மிதித்து நம்மை வாழ்க்கையைக் காட்டுபவன் பிரபுதான். இருவரிடமும் குழப்பங்கள் உள்ளன. ஆனால், மாதவனிடம் சிறுபிள்ளைத்தனம் அதிகம். சுயவதையும் அதிகம்.

ஒரு ஆணின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட நாவல். எளிமையான வாசிப்புக்கு உகந்த நூல். (மதியம் ஆந்திரா மீல்சை முடித்துவிட்டு, சாயங்கால காபிப் பொழுது வருவதற்குள் முடிந்துவிட்டது). அதற்கு முக்கிய காரணம் இதன் மொழிபெயர்ப்பு. சொப்பன சுந்தரியும் சரி, புஷ்பாஞ்சலியும் சரி, கடகட வென படிக்க வைக்கிறது கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்.

 

ஜனநாயகக் கடன் – மியான்மர்


Update: 2016 March 23 6:20 PM.

Suu Kyi would take Foreign Affairs, President’s Office, Education and Energy ministries.

‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’.

வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது.

அதையும் மீறி, வியத்நாமில் போய் ஆயில் தோண்டுறேன் பேர்வழி என்று போனோம். ‘அத்துப் புடுவேன் அத்து’ என்று அந்தப் பக்கமாக ஒரு சத்தம் கேட்டது. வாலைக் கக்கத்தில் சுருட்டிக்கொண்டு ஓடி வந்துவிட்டோம். இதுதான் இந்தியாவின் கிழக்காசிய கொள்கை! நேரு காலத்தில் பொற மண்டையில் வாங்கிய அடியில் நமக்கு இன்னமும் சித்தம் தெளியவில்லை. பர்மாவின் நிலைத்தன்மை ஏன் இந்தியாவிற்குத் தேவை என்கிற இந்தப் பதிவோடு, இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

Oh we need power for the sake of making change. Let us not be pusillanimous about it. If we want to bring about the kind of changes we want, we need power, not power for the sake of power, but power for the opportunity of bringing about the changes we would like to bring about.

தி இந்து பத்திரிகைக்கு 2012ல் சூ கி அளித்த பேட்டி

ஆசியானும் இந்தியாவும் பின்னே IMTயும்

சமீப காலமாக இந்தியா ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ள முயன்று வருகிறது (காலம் கடந்து). மிலிட்டரிப் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தியா ஆசியானுடன் வர்த்தக மற்றும் இராணுவ ஒத்துழைப்பை விரும்புவதாக சமிஞ்ஞை உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசியானை, இந்தியாவுடன் சாலை வழி இணைக்க, ஒரு ரோடு தேவை. தெற்கே ஆசியான். மேற்கே இந்தியா. வடக்கே சீனா. முச்சந்தியில் புள்ளையார் கோயிலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துள்ளது மியான்மர்.

imt-highway2

ஆக, இந்தியா, மியான்மர், தாய்லாந்து சாலை வழி பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து திட்டமிடப்படுகிறது (இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரம், சாலைகள் அமைச்சகம் இன்னும் 15 நாட்களில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரிவித்துள்ளது).

பர்மா வழியான பட்டுப் பாதை பற்றி முந்தைய பதிவு வில் பேசினோம். அதனுடன் சேர்ந்து இந்தியாவும் ஆசியானும், இந்த ஐஎம்டிஐ முன்னெடுக்கின்றன.

And I think, sometimes I think rather than disappointment, sad is the word I would use because I have a personal attachment to India through my friends as well as because of the friendship that existed between my father and Jawaharlal Nehru, because of the closeness that existed between the countries. So rather than disappointed, I was sad that it had to be like that.

இந்தியாவுக்கு மியான்மர் எந்த அளவில் உதவலாம்?

இந்தியாவின் பார்வையிலிருந்து – கடந்த சுதந்திர தினத்தன்று ஒரு வட கிழக்கு மாநிலங்களின் சாலைவழி தொடர்பு பற்றி ஒரு நாளேட்டின் செய்தியைப் பகிர்ந்திருந்தேன். இவ்வளவு வேகமாக ஒப்பந்தம் வரை சென்றிருப்பது நல்ல ஒரு மாற்றம். தவிர சீனாவிலிருந்து கோல்கத்தா  வழி பங்களாதேஷ் சாலையும் பேசப்படுகிறது.

I’d like to see a closer relationship between our two peoples, because I’ve always felt we had a special relationship — India and Burma — because of our colonial history, and because of the fact that the leaders of our independence movement were so close to one another.

வட கிழக்கு மாநில சச்சரவுகளை ஒழிக்க ஒரே வழி, அவர்களின் முன்னேற்றம் தான். அடங்கிக் கிடந்தால் ஆகாது. நாகாலாந்துக் காரன் பெங்களூர் வந்தால், ‘சீனாக்காரனை அடி’ என்று கல்லால் அடிக்கிற தேசம் இது. ஆக, அவர்களின் முன்னேற்றத்திற்கு, வட கிழக்கை எளிதில் ஒரு துறைமுகத்துடன் இணைக்க, இந்தியாவிற்கு பர்மா உதவலாம். ஐஎம்டி வடகிழக்கு மாநிலங்களை, அத்துறைமுகத்துடன் இணைக்க உதவும்.

(c) http://www.asiasentinel.com
(c) http://www.asiasentinel.com

மியான்மரில் இந்திய எதிர்ப்பு முகாம்கள் நிறைய உள்ளது. கடத்தல் ஆசாமிகள் உள்ளனர். அதற்கெல்லாம் உதவிய ஒரு ராணுவ பூட்சுக்காரனைப் பிடித்து சிறையில் தள்ளியுள்ளது பர்மா அரசாங்கம். இந்தக் கழிசடைகளின் ஆக்கிரமிப்பை ஒடுக்க, இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவிற்கு இன்றியமையாதது.

சீனாவின் மியான்மர் திட்டங்கள் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. சுரண்டலாகவும், சுற்றுப்புற பிரச்சினையாகவும் அது பார்க்கப்படுகிறது. இந்துமாக்கடலை எளிதில் அடைய மியான்மரின் உதவி சீனாவிற்குத் தேவைப்படுகிறது. மியான்மரின் புதிய அரசுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாக சீனா அறிவித்துள்ளதன் காரணங்களில் இதுவும் ஒன்று. சீன அளவிற்கு இந்தியாவிடம் பணமில்லாது இருக்கலாம். ஆனால் ஒரு நம்பிக்கையான நட்பு நாடாக அரசியல், வியாபார மற்றும் இராணுவ ரீதியில் இந்தியா இருக்க இயலும்.

சுற்றலா பற்றிப் பெரிதாகப் பேசுகிறார்கள். அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. ‘இந்தியாவா.. ரேப் பண்ணிடுவானுங்கள்’ என்பதுதான் கிழக்காசிய யுவதிகளின் பயமாக இருக்கிறது. வேண்டுமானால், இந்தியர்கள் பர்மா, தாய்லாந்து, கம்போடியா என்று காரை எடுத்துக்கொண்டு சுற்றி வரலாம். முடிந்தால் நானும் நீங்களும் போய்வரலாம்.

இராணுவ ரீதியாக மியான்மர் சீனாவின் பிரதேசமாக ஆக்காமல் இருக்க இந்தியா அங்கு செல்லவேண்டும் என்று பேசுகிறார்கள். அதுவும் ஒரு டைம்பாஸ். உன்னை அடிக்க, அவன் ஒளிஞ்சி ஒளிஞ்சி வரனுமாக்கும்.

மியான்மருக்கு இந்தியா என்ன செய்யலாம்?

மியான்மரின் பார்வையிலிருந்து பார்த்தால், ஏற்கனவே இந்தியா அங்கு முதலீடு செய்யத் தொடங்கி உள்ளது. தவிர, வியாபார ரீதியில் அங்கிருந்து நாம் இறக்குமதி செய்வதுதான் அதிகம். எனவே இந்தியாவின் வியாபார உறவு என்பது மியான்மருக்கு நட்டத்தை அளிக்காது.

பர்மா காளி கோயில்
பர்மா காளி கோயில் (விக்கிபீடியா)

சும்மா அசமந்தமா இல்லாமல், இலங்கை மாலத்தீவுகளில் தூங்கி வழிந்தது போல் இல்லாமல், மியான்மரின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்த, மக்களாட்சிச் சீர்திருத்தங்களை அமல் படுத்த உதவவேண்டும். பர்மிய உறவுகளை தொடர்ந்து ‘வைடு’ பந்துகளைப் போட்டு வந்த இந்தியா, இனிமேலாவது பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும்.

பிரிவினை வாத கும்பல், கடத்தல் அட்டகாசம் எல்லாம் நடக்கும் வடகிழக்குப் பிராந்தியத்தை, மியான்மருடன் இணைத்து ஆசியானுடைய, இந்திய வாசலாக மியான்மரை வைக்கலாம்.

சூ கி யை ஏமாற்றி உள்ளது இந்தியா. வேறு வழியில்லை என்று இராணுவ அரசுடன் உறவு வைத்துக்கொண்டு, உலகின் பெரிய ஜனநாயக நாடாக இருந்த போதிலும், பர்மிய ஜனநாயக முயற்சிகளுக்கு ஆதரவு தராமல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பர்மிய ஜனநாயக முயற்சி என்பது எளிதானதல்ல. ஆனால் நடந்து வரும் முன்னேற்றங்களை இந்தியாவும், உலக நாடுகளும் ஊக்குவித்து, அங்கீகரிக்கவேண்டும் என்கிறார் சூ கி.

And we have to do all that building ourselves, and I think this needs to be recognised by India and by the rest of the world — that we are not on the smooth road to democracy. We still have to be given the chance to build the road to democracy.

ஆசியான், சீனாவிற்கு மியான்மரின் உறவு என்பது வியாபார ரீதியாலானாது.  அதனை விட ஒரு படி மேலே போய், அந்நாட்டில் மக்களாட்சியை வளர்த்தெடுக்க, இந்தியாவைத் தவிர வேறெவருக்கும் பொறுப்பு இருக்காது. கிழக்காசியாவில் எத்தனை ஜனநாயக நாடு? விரல் விட்டு எண்ணிவிடலாம். பக்கத்தில நந்தி மாதிரி இருந்திட்டு, மக்களாட்சிக்கு ஏங்கும் பர்மாவை, மீண்டும் ஒரு முறை தவிரவிடக்கூடாது, இந்தியா.

பலருக்கு மியான்மர் முக்கியம்

சீனாவிற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடைய, பட்டுவழியை இந்துமாக்கடலில் இணைக்க, பர்மாவின் ஸ்திரத்தன்மை அவசியம்

இந்தியா ஆசியானுடன் வர்த்தக உறவு கொள்ள, வடகிழக்கு மாநிலங்களை துறைமுகத்துடன் இணைக்க மியான்மரில் ஒரு நிலையான அரசு தேவைப்படுகிறது

கிழக்காசியாவில் அமைதி, வளர்ச்சிக்காக, மியான்மரில் நிலையான அரசு அமைய ஆசியான் விரும்புகிறது

எல்லாவற்றுக்கும் மேல், 50 ஆண்டு காலம் பூட்ஸ் காலடியில் மிதிபட்டிருந்த நாட்டை, மக்களாட்சிக்கு மாற விரும்பும் அந்நாட்டு மக்களின் கனவு பலிக்கவேண்டும்.

ஆம், முச்சந்தியில் அடைப்பு ஏற்பட்டால், எல்லா பக்கமும் தண்ணீர் தேங்கும்.

You may divorce a spouse, but you can’t move away from your neighbouring country. So it’s very important that you maintain good relations. And again, I think, it’s people to people relationships which are most important. It’s not government to government. Governments come and governments go. But the peoples of the countries, they remain. And if we manage to establish genuine friendship between our peoples, then the future will be good for us. That’s not impossible.

Must read interview – ‘Let’s not be over-optimistic about Burma’

(இறுதி)

வளர்க பாரதம்

முந்தைய பதிவுகள்

 1. ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1
 2. பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா – மியான்மர் கூத்து – 2
 3. 2

 

பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா


“மன்னர் ‘லெவன்’ பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.”

“வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார்.

ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?”

கோடாரி – “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்”

ஜின் – “நமக்கு நிறைய பிக்காளிகள் இருக்காய்ங்க. எந்தப் பிக்காளியைப் பத்திப் பேசற நீயி”

கோடாரி – “பர்மா பத்திதான் சொல்றேன் தலிவரே. நம்ப கண்ட்ரோல்ல இருந்த பயக, இப்ப மேற்குப் பக்கமா சாய்ஞ்சிட்டு இருக்காய்ங்க. பிரசிடெண்டா இருக்கறப்ப, கடைசில இந்தியாவுக்கு சாமி கும்பிடப் போறேன்னு கிசும்பு பண்ணினான். அவனுக்கு அப்புறமா வந்து, இந்த மாசம் பதவி விலகப் போகிற த்தேய்ன் ஸெய்ன் தொடர்ந்து நம்மிடமிருந்து விலகிப் போயிட்டே இருக்கான் தலிவரே. ரிஃபார்ம் பண்றேன் அப்டின்னு கூத்தடிச்சிட்டு இருக்கான். மீடியா மீதான சென்சார்சிப்பைக் குறைத்தான். அரசியல் கைதிகளை விடுவித்தான், ஆங் ஸான் சூ கி உட்பட. 2012 பை எலக்சன்ல சூ கி தலைமையிலான எதிர் கட்சி NLDஐ எலக்சன்ல நிக்க வெச்சான்.”

ஜின் – “மீடியா, எதிர் கட்சி, எலக்சன் இந்த வார்த்தை எல்லாம் கேட்டால் குடலைக் குமட்டுது கோடாரி”

Narendra Modi with Thein Sein at Presidential Palace in Myanmar - PTI Photo
Narendra Modi with Thein Sein at Presidential Palace in Myanmar – PTI Photo

கோடாரி – “அதுக்குள்ளயேவா, இந்தப் பிக்காளிப் பயபுள்ள, இன்னொரு வெவகாரத்தையும் செஞ்சிட்டு இருக்குறான்ங்க. அவிய்ங்க ஊருல மையிட்சோன் அணை கட்டி அதில புனல் மின்சாரம் உற்பத்தி செய்து, `உனக்கு உமி எனக்கு அரிசி’ ன்னு ஒரு அஜ்ஜீஸ்மெண்டுல கரண்டு வாங்கிட்டு இருந்தோம். ‘வெள்ளம் சாஸ்தியா இருக்குது. பர்மாவுக்குக் கரண்டு வரலை. நாம் அதிகமா மின்சாரம் எடுத்துக்கிறோம். சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது’ அப்டின்னு பல கரச்சல் பண்ணிட்டு இருந்தாய்ங்க. நீங்களே சொல்லுங்க தலை. ஆப்பிரிக்காவில நாம பண்ணாத அழிச்சாட்டியமா. அவிங்க எல்லாம் எப்புடி காசு வாங்கிட்டு கம்முன்னு இருக்கறாய்ங்க. இந்த பயகளுக்கு மாத்திரம் ஏன் இவ்வளவு சண்டித்தனம்? இந்தத் த்தேய்ன் ஸெய்ன் நம்ப அணை திட்டத்தை நிறுத்திபிட்டான் தலிவரே.”

ஜின் பிங்குக்கு கும்பியோடு சேர்த்து உடலே எரிய ஆரம்பிக்கிறது. மேலும் வெறியேற்றிக் கொள்ள, சூடான சீன டீயை உள்ளே இறக்கிக் கொண்டார்

A Myanmarese living in Malaysia displays a placard in protest against the Myitsone dam project, outside Myanmar's embassy in Kuala Lumpur September 22, 2011. REUTERS/Bazuki Muhammad
A Myanmarese living in Malaysia displays a placard in protest against the Myitsone dam project, outside Myanmar’s embassy in Kuala Lumpur September 22, 2011. REUTERS/Bazuki Muhammad
Burmese living in Malaysia display placards in protest against the China-backed Myitsone dam project, outside the Burmese Embassy in Kuala Lumpur in September 2011. (Photo: Reuters)
Burmese living in Malaysia display placards in protest against the China-backed Myitsone dam project, outside the Burmese Embassy in Kuala Lumpur in September 2011. (Photo: Reuters)

கோடாரி – “போதாக் குறைக்கு கொக்கான் பகுதி பிரச்சினை வேற நமக்கு எதிரா போயிருச்சு. இந்தியாவோட அருணாச்சல் பிரதேசமும், பர்மாவோட கொக்காங் பிரதேசமும் நம்பளோட பகுதிகள்தானே தலிவரே. பர்மா கம்யூனிஸ்ட் தோழர் கட்சிகளோட சார்பில MNDAA படைகள் ரொம்ப காலமா வாய்ப்பு எதிர்பார்த்திட்டு இருந்தானுக. மித்த புரட்சிப் படைகள் மாதிரியே கடத்தல் செய்து வயிறு கழுவிட்டு இருந்தானுக. அந்தப் பசங்கள ‘கொக்காங் எல்லைப் பாதுகாப்பு படையா, மிலிட்டரிக்குக் கீழ இருங்கடா’ன்னு பர்மா பேசப்போக ரோசம் வந்து பொங்கி, போன வருசம் பிப்ரவரி மாசம் கொக்கான்ல தாக்குதல் நடத்தினாய்ங்க.”

Children queue for food at a refugee camp in the Kokang region of Myanmar, near the border with China, on February 21, 2015. (Stringer/Courtesy: Reuters)
Children queue for food at a refugee camp in the Kokang region of Myanmar, near the border with China, on February 21, 2015. (Stringer/Courtesy: Reuters)

“கிட்டத்தட்ட 40 லேருந்து 50 ஆயிரம் பேரு வீடு வாசல விட்டு சீனா பார்டர் தாண்டி அகதியா போனாங்க. 4500 பேரு மட்டும் பர்மாவோட ஷான் மாநிலத்துக்கு வந்தாய்ங்க.  அந்த சமயத்தில அவிய்ங்க கூட சண்டை போடுறேன்னு சொல்லி இந்த பர்மாகாரய்ங்க நம்ப ஊரு கரும்புக் காட்டுல பாம் போட்டு 8 பேரைக் கொன்னு போட்டாய்ங்க. அப்புறமா நாம் மிரட்டப்போக, மன்னிச்சிருங்க சாமின்னு கால்ல விழுந்தாய்ங்க.”

“ஆனா தலிவரே, பர்மா மிலிட்டரி உளவு பார்த்து சொன்ன ரிப்போர்டு வேற மாதிரி இருந்தது. முன்னாள் சீன ராணுவத்தினரை கூலிக்கு வைத்துக்கொண்டு, MNDAA படைகள் ஆதரவு தேடிகிட்டதா சொல்லுது. ஆனா அதெல்லாம் கிடையாது அப்டின்னு இந்தியாவில இருந்து வந்த கற்பூரத்தை அணைச்சி சத்தியம் பண்ணிட்டோம். பின்னால பிரச்சினை ஏதும் வந்தா, அது இந்தியா கற்பூரம், சத்தியம் செல்லாதுன்னு சொல்லிக்கலாம் பாருங்க.”

ஜின் – “ப்ப்ப்பூ….” என்று ஊதிக் கொண்டார்.

ஜின் – “இந்த லட்சணத்தில இந்த சூ கி பொம்பளை வேற அடுத்த மாசம் வரப்போகுது. அவிங்க ஊரு பசங்க அம்புட்டு பயலும் ஒட்டு மொத்தமா இந்த அம்மாவுக்கே ஓட்டு குத்திப்பிட்டாய்ங்க. அந்த அம்மாக் கண்டாலே குமட்டுது கோடாரி. அதென்ன மக்களாட்சி மண்ணாங்கட்டி. 2011க்குப் பிறகு அங்க மேற்கத்திய ஆதிக்கம் அதிகமாயிருக்கு. வெளிநாடுகள் பணம் போட ஆரம்பிச்சிருக்காய்ங்க. அது நமக்கு தலைவலி. நாமதான் முதல்ல அங்க முதலீடு பண்ணியிருக்கோம். இத்தணைக்கும் பர்மா மீதான தடையை அமெரிக்கா நீக்கனும்னு சொன்னதே நாமதான். முதல் அறுவடை நாம செய்யவேண்டாமா. ”

Myanmar's National League for Democracy (NLD) delegation led by its chairperson Aung San Suu Kyi (C) and officials from Chinese Embassy pose for a group photo at Yangon International Airport in Yangon, Myanmar, June 10, 2015. Aung San Suu Kyi left here on Wednesday for her first visit to China aimed at enhancing mutual understanding and promoting cooperation and friendly relations between the two neighbors. [Photo/Xinhua]
Suu Kyi at China -2015 Myanmar’s National League for Democracy (NLD) delegation led by its chairperson Aung San Suu Kyi (C) and officials from Chinese Embassy pose for a group photo at Yangon International Airport in Yangon, Myanmar, June 10, 2015. Aung San Suu Kyi left here on Wednesday for her first visit to China aimed at enhancing mutual understanding and promoting cooperation and friendly relations between the two neighbors. [Photo/Xinhua]
கோடாரி – “யூ ஆர் ரைட். இந்தம்மா வந்ததில இருந்தே பேசுற பேச்சே சரியில்லை. நம்பள பகைச்சிக்க முடியாதுங்கறதையும் உணர்ந்திருக்கு. அதே சமயத்தில ரொம்ப டிப்ளமேட்டிக்கா பேசுது. பொம்பளைங்க எப்படி பேசலாம்? நம்ப ஊரு மிஸ்ட்ரெஸ் நகரத்தில தவிர அவிக எங்கயும் பேசவே கூடாது. ‘பெய்ஜிங் உறவு பற்றி சிறப்பான கவனம் தருவேன்’னு சொல்லுது. அதே சமயத்தில, ‘வெளிநாட்டு உறவுகள்ல நடுநிலைமை நிலையைப் பின்பற்ற முயல்வோம்’னும் சொல்லியிருக்கு.  தேங்காய் எண்ணையைத் தடவிக்கொண்டு, வெறும் கையில் கெழுத்தி மீனைப் பிடிப்பது போல இருக்கிறது தலைவரே. ‘பொருளாதார திட்டங்கள்ல, வெளிப்படைத்தன்மை வேணும்’னு செல்லுது. அப்படி வெளிப்படைத் தன்மை கொண்டு வந்தா, மைஸ்டோன் அணை கரண்டு முழுவதையும் அவிங்களுக்கே கொடுத்திட வேண்டியதுதான். வேணும்னா சொல்லுங்க. இந்தியாவில திருப்பதிங்கிற இடத்தில நாமக்கட்டி கிடைக்கிதாம். வாங்கி ஆளுக்கு ஒரு நாமம் போட்டுக்குவோம்”

Chinese President Xi Jinping (R) meets Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi at the Great Hall of the People in Beijing on June 11, 2015. Myanmar's Aung San Suu Kyi met Chinese President Xi Jinping in Beijing on June 11, state media said, during her closely watched first visit that China hopes will establish a line of communication with the influential opposition leader. (CNS)
Chinese President Xi Jinping (R) meets Myanmar’s pro-democracy leader Aung San Suu Kyi at the Great Hall of the People in Beijing on June 11, 2015. Myanmar’s Aung San Suu Kyi met Chinese President Xi Jinping in Beijing on June 11, state media said, during her closely watched first visit that China hopes will establish a line of communication with the influential opposition leader. (CNS)

ஜின் – “டோன்ட் ஒரி. எவ்வளவோ ஆடல்களைப் பார்த்திட்டோம். இதையும் பார்ப்போம். இப்ப இருக்கர பர்மா கவுருமெண்டு அவிங்க ஊரு மக்களாட்சி மெம்பருக, ஆய்வாளருக, பத்திரிகையாளருகளை நம்ப ஊருக்கு சமீபத்தில அனுப்பினாய்ங்க. நல்லா வந்து சுத்திப் பாத்தானுக. குளிப்பாட்டி அனுப்பிருக்கோம். ராவ் ஹுய்ஹுவா வை வெச்சி வேணும்கிறத பேசியிருக்கோம். One Belt, One Road திட்டத்தால பர்மாவுக்கு என்ன என்ன போஷாக்கு கிடைக்கும் என்பதை எல்லாம் அவிக மண்டையில ஏத்தி அனுப்பியிருக்கோம்.”

Silk Road Belt - Source: WSJ
Silk Road Belt – Source: WSJ

கோடாரி – “அப்பவும், நம்ம திட்டம் வெளிப்படையா இருக்கணும்னு பர்மாக் காரனுக சொல்லியிருக்கானுக தலிவரே. நாம சீனாக் காரங்களுக்கே வெளிப்படையா இருக்கிறதில்ல. இந்தப் பர்மா பதர்களுக்கு நாம ஏன் தாழ்ந்து போகனும்னு கேக்கறேன். உள்ளுர் மக்களுக்கு நன்மை நடக்கனும்னு சொல்றானுக. ஆப்பிரிக்காகாரன் அப்டியா கண்டிசன் போட்டு நம்பள உள்ள விடுறான். அவன் பாட்டுக்கு குடுக்கற பணத்தை வாங்கிட்டு கம்முன்னு, இரும்பு ஈயம் எல்லாத்தையும் நமக்கு அனுப்பி விடலை? இவனுகளுக்கு என்னா? பர்மா காரனுக டூர் வந்த சமயத்தில மைஸ்டோன் டாம் பத்தி பேசினானுக. நம்ப ஆளுக வாயத் தொறக்கல. அதனால புது அரசு அமைஞ்ச பின்னர், இது நல்லபடியா போகுமான்னு தெரியலை. திரும்பவும் பர்மா பத்திரிகையாளர்கள சீனாவுக்கு கூட்டி வந்து, ‘புனல் மின்சாரம்’ என்றால் என்ன என்று  கற்றுத்த தந்தால், நம்ப பக்கம் திரும்பினானும் திரும்புவாய்ங்க அப்டின்னு நினைக்கிறேன்.

ஜின் – “பண்ணலாம். ஜாஸ்தி செலவு வராம பார்த்துக்க..” (பங்குச் சந்தை கிராஃபைப் பார்த்துக்கொண்டே முனங்கிக் கொள்கிறார்)

bull-in-a-china-shop-shoreditch-chicken-whisky-restaurant-bar-drunken-monkey-hibiki-whisky-credit-mark-sethi

கோடாரி – “நீங்க One Belt, One Road பத்தி பேசறீங்க. அப்பால ஒருத்தன் இருந்திட்டு இந்தியா-பர்மா-தாய்லாந்து முத்தரப்பு சாலைன்னு குறுக்கு சால் ஓட்றான் தலிவரே. மணிப்பூருல அட்டாக் நடந்தா பர்மாவில வெடி வெடிக்கிது.”

ஜின் – “பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியாலே.. கண்டிப்பா சொல்றேன். அவன் நம்ப சாதிக்காரப் பயதான்”

பிற பதிவுகள் –

ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1


இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.  ‘மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க’ என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

Photograph - The Guardian - Aung Shine Oo-AP
Photograph – The Guardian – Aung Shine Oo-AP

மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, அதிகாரப் பகிர்வு, சரியான (பொம்மை?) ஜனாதிபதி தேர்வு என்று தினசரி சலசலப்பு ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஒரு வழியாக எல்லாம் முற்றுக்கு வந்துள்ளது. சூ கி-க்கு ஒரு நம்பிக்கையானவராக உடன் பணியாற்றப் போகிறார் தின் க்யாவ்.

இந்தப் பக்கம் இந்தியா 1000 கிமீ அளவின் தன் எல்லையை மியான்மருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பக்கம் புல்டோசர் மாதிரி சீனா நின்று கொண்டுள்ளது. கேக்குக்கு நடுவில் வெண்ணை வைத்தது போல, மியான்மர் அமைந்துள்ளது. அந்த வகையில் சீனா மற்றும் இந்தியாவிற்கு பூகோள ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது.

குண்டன் குடுமி

பாகிஸ்தான் மாதிரிதான் சீனாவிற்கு மியான்மரும் என்கிற மாதிரி ஏதோ திருவாய் மலர்ந்திருக்கிறார் சீனாவுக்கான மியான்மர் தூதர்,. (வெளியுறவு இன்னும் மக்களாட்சிக்குப் போகவில்லை. இராணுவ குண்டன்கள் கையில்தான் இருக்கிறது. எனவே குண்டனின் குடுமி இப்படித்தான் ஆடும். வேறு வழியில்லை). பாகிஸ்தானுக்காக சீனா பல முதலீடுகளைச் செய்யதுள்ளது. PoK யில் சாலை, துறைமுகம் என்று. இந்தியா இருப்பதால் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வாழ்வு இது. அது போன்ற வாழ்வை மியான்மர் விரும்புவதாகவும் இவருடைய இந்தக் கூற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Source: The Economist
Source: The Economist

சூ கிக்கு இந்தியா ஆதரவாகவே இருந்துள்ளது. பூட்சு காரர்கள் வந்து அவரை அலேக்காக வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, நாட்டைக் கையிலெடுத்துக் கொண்டதும், இந்தியா அவரை ஆதரித்துள்ளது. 90களில் அவருக்கு விருதையும் வழங்கி கவுரவப் படுத்தியது. துரதிருஷ்ட வசமாக, அவருடைய சிறை வாசம் நீண்டு கொண்டே இருந்தது. இடைப்பட்ட நாட்களில், இந்திய எதிர்ப்பு குழுக்களின் கூடாரமாக மியான்மர் ஆகிப் போனது. மியான்மரின் மக்களாட்சிப் போராட்டத்தை ஆதரித்த இந்தியா, ஒரு கட்டத்தில் தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு, பூட்சுக் காரர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொள்ள ஆரம்பித்தது. இந்தியாவில் உள்ள பர்மிய அகதிகள் கொதித்துப் போனார்கள். 2010ல் ராணுவ ஜெனரல் த்தான் ஷ்வே, எதிர்ப்புகளுக்கிடையில், இந்தயாவிற்கு வந்து, புத்தர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு புளியோதரை தின்றுவிட்டுப் போனார். (இதே ஷ்வேதான் இந்தியாவிற்கு எதிராக சீனா விளையாடும் வண்ணம் பர்மிய கடல்படைத் தளங்களை சீனாவிற்குத் திறந்துவிட்டார்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு அரசு அமைந்துள்ள இவ்வேளையில் சூ கி உடனான உறவுகளைச் செப்பனிட இந்தியா முயன்று கொண்டுள்ளது.

A protest in New Delhi by Burmese pro-democracy groups against the visit of Than Shwe head of Burmas military junta. Photograph -Gurinder Osan-AP
A protest in New Delhi by Burmese pro-democracy groups against the visit of Than Shwe head of Burmas military junta. Photograph -Gurinder Osan-AP

ரகுபதி ஈ

பூட்சு காரன் காலடிக்குப் போன மியான்மர், சர்வதேச நாடுகளின் அனுசரணையிலிருந்து விலகத் தொடங்கியது. ஆள் இல்லாத இடத்தில் எருக்கு முளைப்பது நடப்பதுதானே. எனவே இடைப்பட்ட காலத்தில், பூட்சுக் காரனுக்கு பாலீஷ் டப்பியிலிருந்து, இராணுவ டாங்கி வரை அனைத்திற்கும் ஏகபோக சப்ளையராக சீனா மாறி வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் நிழல் மியான்மர் முழுவதும் படற ஆரம்பித்தது. இன்று சீனாவின் தாக்கமில்லாமல் ஏதுமில்லை என்கிற அளவிற்கு மியான்மரின் தினசரி வாழ்க்கை முறை மாறியுள்ளதாக சொல்கிறார்கள். ஏசியான் நாடுகளின் கூட்டமைப்பில், மியான்மரைச் சேர்ந்தது சீனா என்று சொல்கிறார்கள். தெரியலை. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வங்காள விரிகுடாவிற்கும் பொடிநடையாகவே போய் சேர்ந்துவிடலாம் என்று சீனா கணக்குப் போட்டு செய்து வந்திருக்கிறது.

மக்களாட்சித் தத்துவம் பேசி, சந்தோஷமாக கிழக்கைக் கவனிக்கத் தவறவிட்ட இந்திய மத்திய அரசாங்கங்கள் மகிழும்படி, மியான்மர் சீனாவின் கோட்டையானது. அதன் இயற்கை வளங்களைச் சுரண்ட ஆரம்பித்ததோடு, இந்தியாவிற்கெதிராக முகாம்களையும் குஷியாக வளர்த்துவிட்டது சீனா. சீனா கொடுத்த அடியில் காங்கிரசுக்குப் பிடித்த சளி, இன்னும் கொட்டிக்கொண்டுள்ளதால், கிழக்கைப் பார்த்தாலே பதறுகிறது. அதை வசமாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா மியான்மருடன் வியாபாரம், எரி சக்தி மற்றும் இராணுவ உறவுகளை பலப்படுத்திக் கொண்டது.

Chinas President Xi Jinping R and Myanmars President Thein Sein shaking hands. China is the biggest investor in Myanmar. Photo REUTERS - China Daily
Chinas President Xi Jinping R and Myanmars President Thein Sein shaking hands. China is the biggest investor in Myanmar. Photo REUTERS – China Daily

இந்தியா ஈயை அடிக்கக் கிளம்பியது அப்போதுதான். ஏட்டின்படி, மியான்மரின் மக்களாட்சியை ஆதரித்தாலும், தனது மூலோபாய நலன்களைக் கணக்கில் கொண்டு, பூட்சுக் காரர்களுடன் வியாபாரம் பேச ஆரம்பித்தது. மக்களாட்சி கிளர்ச்சியாளர்கள் மீது மியான்மர் இராணுவம் வெறியாட்டம் நடத்திய பொழுது, இந்திய பெட்ரோலிய அமைச்சர், யங்கூனில் தங்கி ஒப்பந்தம் கையெழுத்துப் போடப் போயிருந்தார். சீனா ஆக்கிரமிக்கும் கரம் என்றாலும், இந்தியா ஒரு நட்பு மற்றும் நம்பிக்கையான நண்பன் என்று பூட்சுக் காரர்களின் ஹெல்மெட் மண்டைக்குள் இருந்த மூளைக்கு உரைக்கும் வண்ணம் சொல்லப்பட்டது. இந்த ஒரு நம்பிக்கையை இழக்க இந்தியா விரும்பாது.

-முடிந்த வரை வரும்🙂

வளர்க பாரதம்

பிற பதிவுகள்

ஆலாஹாவின் பெண் மக்கள் | சாரா ஜோசஃப்


“கஞ்சி அண்டா என்ன ஓடியா போயிடும்? வெறி புடிச்ச மூதேவி” என்றாள் மார்த்தா டீச்சர்.

“பசி வெறி, இதுங்க ஜென்ப சுபாவம்!” அம்மிணியம்மா டீச்சர் சொன்னாள்.

பின்னர் அவர்களிருவரும் குரோதத்துடன் ஆன்னியை வெறித்தார்கள்.

“கையை சுத்தமா கழுவிக்க மார்த்தா, கோக்காஞ்சறவுலேர்ந்து வர்ற பிசாசுகள்” அம்மிணியம்மா டீச்சர் உபதேசித்தாள்.

ஆலாஹாவின் பெண் மக்கள் – சாரா ஜோசஃப்
தமிழ் மொழி மாற்றம் – நிர்மால்யா (மூலம் – மலையாளம் – ആലാഹയുടെ പെണ്മക്കള്‍)
பதிப்பு – சாகித்திய அகாதெமி, முதல் பதிப்பு 2009
NLB முன்பதிவு – Ālāhāvin̲ peṇ makkaḷ / Malaiyāḷa mūlam, Cārā Jōcak̲ap ; Tamil̲il, Nirmālyā.ஆலாஹாவின் பெண் மக்கள் / மலையாள மூலம், சாரா ஜோசஃப் ; தமிழில், நிர்மால்யா.
கன்னிமாரா  முன்பதிவு – ஆலாஹாவின் பெண் மக்கள்
சாரா ஜோசப் – விக்கி சகிப்பின்மை குறைந்து போய்விட்டது இண்டெலக்சுவல் அரசியல் செய்தவர்களில் ஒருவர்🙂
விரிவான கதைச் சுருக்கம் – நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்

உலகின் எந்த ஒரு சமூகத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டுக்குமான வித்தியாசங்கள் அதிகரிக்கும்போதுதான் கொலை, கொள்ளை அதிகமாகிறது. பணம் போஷித்த தனவந்தர்கள் ஒரு பக்கம். விளிம்புநிலை மனிதர்கள் மறு புறம். திருச்சூர் நகரத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் காபந்து பூமியான கோக்காஞ்சறவைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. 200 பக்கக்களில் செரிவான ஒரு படைப்பு.

alahavin_pen_makkal_01

சிறுமியாக இருக்கிறாள் ஆன்னி. அழுக்கு ஸ்கர்ட் போட்டு நாவல் முழுக்க வரும் அவளது பார்வையில் இந்த நாவல் விவரிக்கப்படுகிறது. அவளது குடும்பத்தை மையமாகக் கொண்டு, கோக்காஞ்சற சமூகத்தின் எழுச்சி, வாழ்வு, வீழ்ச்சி என்று நமக்குத் தரப்படுகிறது. ஆலாஹா – துயரம் துரதிருஷ்டம். ஆலாஹாவின் பெண் மக்களாக ஆன்னியும் அவளது குடும்பத்தினரும் வர்ணிக்கப்படுகிறார்கள்.

எழுச்சி

திருச்சூர் நகர மக்களின் வாழ்விற்கென, சில சமூகங்கள் தேவைப்படுகின்றன. புதர் மறைவில் மலம் கழித்துக் கொண்டிருந்தவர்கள் கழிப்பறையில் கழிக்கத் தொடங்குகையில், மலத்தை நீக்க ஒரு சமூகம் தேவைப்படுகிறது. தோட்டிகள் வந்து சேர்கிறார்கள். தோட்டிகளின் சேவைதான் வேண்டுமே ஒழிய, தோட்டிகள் தங்களின் பார்வையில் படக்கூடாது என்று நினைக்கிறார்கள் நகரத்துக் காரர்கள். ஊண் உண் ஆடு, மாடு, பன்றி இறைச்சி தேவைப்படுகிறது. ஆனால் அதை வெட்டும் இடம் நகரத்தை விடுத்து வெளியே இருக்கவேண்டி இருக்கிறது. ஆக இந்த சமூகங்கள் புற நகரான கோக்காஞ்சறவில் வந்து சேர்கிறார்கள்.

நகர வாசிகள் அவர்களை ‘பீ அள்ளுபவர்கள்’ என அழைத்தார்கள். அவர்களுக்கும் மலத்திற்கும் வித்தியாசமில்லை என்று நகரவாசிகளில் சாமானியர்கள் கூட நம்பினார்கள். மல டப்பாக்களை இழுத்துச் செல்லும் போது வீசும் நாற்றம் தமது நாற்றம் அல்ல; மலம் அள்ளுபவர்களின் நாற்றம் என்று சொல்வதையே நகரவாசிகள் விரும்பினார்கள்….. அவர்கள் எங்கு போவார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானலும் போகட்டும். அதிகாலையில் வந்து மலத்தை அள்ள வேண்டும்.

கோக்காஞ்சறவில் ஆன்னியின் குடும்பத்திலிருந்து இருந்து வாழ்க்கைப்பட்டுப்போன செறிச்சி கூட திரும்ப அங்கு வர மறுக்கிறாள். ஒரு முறை வந்த போது கூட, விடுவிடுவென கிளம்பிவிடுகிறாள். ஆன்னியைத் தொட்ட பள்ளி ஆசிரியை, தன் கையை முகர்ந்து பார்த்து, பைப் நீரில் கழுவிக் கொள்கிறாள். இத்தணைக்கும் நடுவில், ஒரு தேவாலயம் எழுகிறது. பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்களானாலும் கிறித்தவர்கள். காரியம் ஆவதற்காகவோ நம்பிக்கையின் காரணமாகவோ, மறைமுகமாக கிறித்தவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருக்கிறார்கள். செறிச்சியின் கல்யாணம் நடப்பதற்காகவே, ஆன்னியின் பாட்டி சுராயியில் சேர்கிறாள்.

ஜெபமாலை போட்ட பாட்டன்
குருசு மலைக்குப் போன பெறகு
எடுத்திட்டு வாடீ மாத்தரி
வெல்ல ஆப்பம்

அதைக் கேட்ட அம்மாவுக்கு ஆத்திரம் பொங்கும்.

”அது உங்க குடும்பக் காரங்களோட குணம்” என்பாள்.

பாட்டி கொல்லென்று சிரிப்பாள். ரோமன் காரி என்று ஆன்னியையும் கேலி பண்ணுவாள்

”என்னடீ செல்லக்குட்டி, உன் கழுத்தில? மாந்தல் மீனோட தலையா?”

வாழ்வு

தீண்டாமை, கிறித்தவ பிரிவுகளுக்குள்ளான வேறுபாடுகள், சச்சரவுகள், பொறாமைகள் என்று நிறைய ஓடுகிறது.

நிறைய இழைகள் ஓடுகிறது இந்த நாவலில். அன்னியின் அம்மாவான கொச்சு ரோது – நாவல் முழுக்க வீட்டு வேலை பார்க்கிறாள். கணவன் கம்யூனிஸ்ட் காரன் இவளை விட்டு ஓடிப் போய்விடுகிறான்.  அவள் பார்வையில் பார்த்தால் நமக்கக் கிடைப்பது ஒரு வேறு பட்ட பெண்ணிய கதை. அடக்கப்பட்ட உணர்வுகளோடு வரும் ரோது, ஒரு கிறித்தவ பேரணியில் (அரசியலும், கிறித்துவமும் சார்ந்த பேரணி) போகும்போது வெடிக்கிறாள்.

ஒரு நாள் அம்மா சுயமாகவே தொண்டைக் கிழிய கோஷமிட்டாள்.

“கம்மூஸ்டுகள வெட்டிக் கொல்லனும்”

யாரும், சுயமாக எதையும் ஊர்வலத்தின் போது கோஷமிடக்கூடாது என்றும், ஆயர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்றும் பெரிய சாமியாரே கூறியிருந்தார். இருப்பினும் அம்மா நிறுத்தவில்லை.

“வெட்டிக் கொல்லணும், வெட்டிக் கொல்லணும், கம்மூஸ்டுகள வெட்டிக் கொல்லணும்”

ஆன்னியின் பாட்டியாக வரும் மரி, ஆலாஹாவின் பெண் மக்களின் இன்னொருத்தி.

ஓடிப்போன பெரிய மகன், சீக்காளியான சின்ன மகன் – நல்லது என்று எதையுமே அனுபவிக்காமல் துன்பங்களை மட்டும் அடுக்கடுக்காகப் பார்த்து, மரத்துப்போன பழைய மரம்.  வெவ்வேறு கிறித்தவ பிரிவின் காரணமாக ரோதுவுடன் உரசல் இருந்தாலும், குடும்பத்தை அவளுடன் சேர்ந்து இவளும் இழுக்கிறாள். ரோதுவுக்குத் தெரியாமல் கீழ் ஜாதியான நீலிக் கிழவியின் வீட்டில் மண்ணெண்ணெய் வாங்குகிறாள். குட்டிப் பாப்பனுக்குத் தெரியாமல் அரிசி கடத்தல் கும்பலிருந்து கஞ்சிக்கு அரிசி பெற்று வருகிறாள்.

“ராட்சசன்களை விட ஆபத்தானவனுங்க மகளே, அரிசி புடிக்கிறவனுக! நம்ம மாதிரி ஏழைங்களோட பிச்சைச் சட்டியிலதான் கை போட்டு அள்ளுவானுங்க. பணக்காரங்களத் தொட மாட்டானுங்க. இதெல்லாம் என்ன அரிசி புடிக்கிறது இப்ப யுத்தம் எதுவும் இல்லியே.

கோக்கஞ்சறவின் வரலாறு முழுவதும் அறிந்த மரியின் பார்வையில் பார்த்தால் நமக்குக் கிடைப்பது சமூக வாழ்வுகளைக் காணும் இன்னொரு கதை.

இப்படி, ஆலாஹாவின் பிற பெண் மக்களான, குஞ்ஞிலை, சிய்யம்மா, சின்னம்மா என்று எல்லோரிடமும் ஒவ்வொரு இழைகள் நமக்குச் சொல்லப்படுகின்றன.

alahavin_pen_makkal_02

வீழ்ச்சி

எட்டு அறை வீட்டாரின் பிரச்சினையிலிருந்து கோக்கஞ்சற சமூகத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது. பகுதிகள் விரிவடைகின்றன. தேவாலயமும் சேர்ந்து விரிவடைகிறது.

alahavin_pen_makkal03
(c) https://www.flickr.com/photos/dinesh_valke/4217898305

நாவல் முழுக்க, வீட்டின் முன் உள்ள அவரைப் பந்தல் வருகிறது. தொடக்கத்தில் ஆன்னியும் அவள் பாட்டியும் அவரைப் பந்தல் போடுகிறார்கள். காய்க்கிறது, பூக்கிறது, காய் பூ ஏதுமின்றி தனித்திருக்கிறது. நகரமயமாக்கலையும் சந்திக்கிறது. இதை விரிவாகச் சொன்னால் வாசிப்பவர்களுக்கு சுவாரசியம் குறையக் கூடும் என்பதால் விட்டுவிடுகிறேன்.

பிற நிகழ்வுகள்

பல சுவையான நபர்கள் வந்து போகிறார்கள். கம்பவுண்டரின் சேவை, 14 போக்கிரிகளின் வயிற்றுப் போக்கு, சின்ன சாமியாருடன் சின்ன பாப்பனின் உரையாடல், சின்ன பாப்பனின் தேசீய வாதம் என்று இந்த நாவலைப் பிரித்துப் பிரித்துப் பேசினால் இன்னும் பல பதிவுகள் போடலாம்.

அப்படி எழுதும் அளவிற்கு என்னிடமோ, படிக்கும் அளவிற்கு உங்களிடமோ நேரமில்லை என்பதால் இத்துடன் இந் நாவல் அறிமுகம் நிறுத்தப்படுகிறது.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழ்க பாரதம்.

பதிவர் இராஜராஜேஸ்வரி (ஜெகமணி/மணிராஜ்) – அஞ்சலி


வருத்தமான செய்தி. மணிராஜ் இராஜராஜேஸ்வரி அவர்கள் தம் கடமையை முடித்து கடந்த மாதம் துயிலில் ஆழ்ந்துள்ளார் என அறிகிறேன்.

http://jaghamani.blogspot.sg/2016/03/blog-post_92.html?m=1

தனிப்பட்ட பழக்கமில்லை என்றாலும், அவரது பதிவுகளைப் பின் தொடர்ந்து வந்தேன். சிவன் மலைத் தீவு பற்றிய கடைசி பெஞ்ச் பதிவில் அவருடைய பின்னூட்டத்தையும் இன்று கண்டேன். அவருடைய நினைவாக அது என்னிடம் இருக்கும்.

image

கடைசி பெஞ்ச் மவுனிக்கிறது.

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 2


கண்ணையா குமார் பிணை மனுவின் தீர்ப்பு பற்றிய தமிழ் பதிவு இங்கே உள்ளது

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1

பாய்ந்த புலியும், பதுங்கிய எலியும்

2016 sedition case 6

9ஆம் தேதி குழப்பம் நடந்துள்ளது.

 • அப்சல் குரு, மக்பூல் பட் வாழ்க
 • இந்திய முழுதாக ஒழியும் வரை போர் தொடரட்டும் போர் தொடரட்டும்
 • போ இந்தியா திரும்பிப் போ
 • இந்திய ஆர்மி – ஒழிக
 • இந்தியா துண்டு துண்டாக சிதறும், இன்ஷா அல்லா இன்ஷா அல்லா
 • அப்சல் கொலையை பொறுத்துக் கொள்ள மாட்டேன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்
 • கண்டிப்பாக  சுய சுதந்திரம் கொடுக்கவேண்டும்
2016 sedition case 2
2016 sedition case 2

இப்படி வீராவேஷமாகக் கூவிவிட்டு, 11ஆம் தேதி தேசத்திலும் அரசியலமைப்பிலும் நம்பிக்கை உள்ளதாக வலிய வந்து உரையாற்றுகிறார் கண்ணையா குமார் – ஏன்? கோர்ட் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டுள்ளது?

கபில் சிபல் சொல்றார் – இந்திய அரசின் மீதான நம்பிக்கை கண்ணையாவிற்கு உள்ளது.

அரசு என்ன சொல்கிறது – 9ஆம் தேதி கடுமையான குற்றங்கள் செய்துள்ளதால், தனக்கு நீதி மன்றத்தின் கோபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு.

இந்தியா உடையக்கூடாது என்று மனதார பேசினாரா, 9 ஆம் தேதி நடந்த பிரச்சினையிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்த பேசினாரா என்பதையெல்லாம் இந்த தருணத்தில் கோர்ட் ஆராய முடியாது

– தீர்ப்பிலிருந்து

இதில் எது உண்மை என்று உங்கள் அறிவு உரைக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். (இவ்வளவு நேரம் செலவழிச்சி பதிவு எழுதறோம். உங்க மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுப்போம்)

எது உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் கண்ணையாகுமாருக்கு நான் ஒன்று தான் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் – ‘சிறையில் இருந்தால் கூட, நான் பேசியது தவறல்ல. ஜாமீன் செய்யமாட்டேன்’ என்று பிளிறியவர் எங்கள் மண்ணில் இருக்கிறார். அவர் பெயர் வை. கோபால் சாமி! கள்ளத்தோணி ஏறி இலங்கை போனாராம். நான் ஈழக் குடிமகனாவேன் என்றாராம். அட்சர சுத்தமாக செடிஷன் பேசும் அவரையே இந்தியா ஒன்றும் செய்யவில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன். அது தில்லு!

கனம் கோர்ட்டார் அவர்களே, பேச்சுரிமை என்னாச்சு?

2016 sedition case 7

பேச்சுரிமை கேட்கும் கண்ணையா கேளாய், ஒரு குடிமகனுக்கு உரிமையும் கடமையும் இரு கண்களாம்.

Part-III under Article 19(1)(a)ன் படி மனுதாரர் பேச்சுரிமையைக் கோருகிறார். Part-IV under Article 51Aன் படி ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது உரிமைகளையும் கடமைகளையும் ஒரே நாணயத்தின் இரு புறங்களாக வைத்தே வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை அவருக்கு நியாபகப்படுத்த வேண்டி உள்ளது.

– தீர்ப்பிலிருந்து

நீதியின் கருணை?

இந்தத் தீர்ப்பு கல்விக் கூடங்களின் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய தீர்ப்பு என்றே நினைக்கிறேன். தீர்ப்பில் எங்கேனும் இந்த அரசியல் பிரச்சினை பற்றி பேசவில்லை. இணையத்தில் கம்பு சுழற்றப்படும் எந்த ஒரு வார்த்தையும் கண்ணையாவின் ஜாமீன் மனுவில் எதிரொலிக்கவும் இல்லை. மாறாக, நான் தப்பே செய்யலை. விட்டுவிடுங்கள் என்கிற மன்றாட்டு தெனாவெட்டாக இருக்கிறது.

நீதிபதியின் தீர்ப்பிலும், நீ குற்றமற்றவன் என்று கூறவில்லை. அன்னையின் கண்டிப்பும் கனிவுமே இருக்கிறது.

JNUவின் சில மாணவர்கள் ஒருங்கிணைத்து ,நடத்திய நிகழ்வில் எழுப்பிய கோஷங்களில் உள்ள உணர்வுகள், பேச்சுரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டது என்று உரிமைக் கோரிக்கை வைக்க முடியாது. இது போன்ற மாணவர்களிடம் காணப்படும் இந்த தொற்று, ஒரு தொற்றுநோயாகப் பரவும் முன்னர் இது கட்டுப்படுத்தப் படவோ குணப்படுத்தப் படவோ வேண்டும்.

முழங்காலில் தொற்று ஏற்பட்டால், மருந்து கொடுத்து குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வேலை செய்யவில்லை என்றால் இரண்டாவதாக அடுத்த மருத்துவம் செய்யவேண்டும்.  ஒரு சமயம் அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். அதே சமயத்தில் கால் அழுகும் நிலை வந்துவிட்டால் ஊனம்தான் ஒரே மருத்துவம்.

அவருடைய முக்கியப் பணிகளைச் செய்வதற்கு ஏதுவாக நான் பழமையான சிகிச்சை முறையைச் செய்ய விரும்புகிறேன். 6 மாதம் பிணையில் விடுவிக்கிறேன்.

– தீர்ப்பிலிருந்து

இவ்வளவையும் வாங்கிக் கட்டிக்கொண்டுதான், நான் ஜெயிலில் அப்படி புரட்சி பேசினேன். சிறைக் காவலர்கள் புரட்சியில் மயங்கினார்கள் என்றெல்லாம் வடை சுடுகிறார் கண்ணையா.

2016 sedition case 3
2016 sedition case 3

யாருக்கோ வேலையில்லை. நிற்க நேரமில்லை

பி. எச்டி. பயிலும் மாணவர்கள் எப்படி இருக்கக் கூடும் என்று பிஎச்.டி ட்ராப் அவுட் ஆன எனக்குத் தெரியும். நான் சொல்வது ஜெயமோகன் நாவல்களில் எத்தணை முறை முலை என்கிற வார்த்தை வருகிறது என்று ஆய்வு செய்யும் தமிழாய்வாளர்களுக்குப் பொருந்தாது.

அறிவியலில் ஆய்வு செய்வோர்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட தொடர்ந்த பணிகள் இருக்கின்றன. இந்தப் பணிகளுடன், தொடர்ந்து தம் துறையில் பிறர் செய்யும் ஆய்வுகளின் முடிவுகள் பற்றித் தெரிந்து கொள்ள உலகலாவிய அளவிலான தரவு தளத்தை அலசவேண்டி உள்ளது. தவிர, வயிற்றுப் பாட்டுக்கு, ஏதேனும் ஒரு செயல்திட்டதில் பணிபுரிய வேண்டி உள்ளது. போதாக் குறைக்கு guide உடன் உரசல் சண்டை சச்சரவு, சக நண்பர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளில் லகரங்கள் வாங்கும்போது நாம் மட்டும் இன்னமும் செட்டில் ஆகாமல் இருக்கிறோமே என்கிற மன அழுத்தம் இருக்கிறது. இந்த வருடத்தின் டார்கெட் இத்தணை பேப்பர்கள் என்று பணி அழுத்தம் இருக்கிறது. இவ்வளவில் உழலுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். இவர்கள் outletக்கு என சினிமா, விளையாட்டு (சமயத்தில் பாலியல் ஈடுபாட்டில் கூட) கவனத்தைத் திசை திருப்பினாலும், அடுத்த நாள் காலை 8 மணிக்கு ஆய்வில் அமர்ந்து விடுவார்கள்.

(c) http://xocai.xocaistore.com/media/wysiwyg/Xocai/InfoPages/group_of_scientists.jpg
(c) http://xocai.xocaistore.com/media/wysiwyg/Xocai/InfoPages/group_of_scientists.jpg

மேற்கூறிய வேலையைச் செய்பவர்கள்தான் JNU பன்னாட்டு ஆய்வாளர்கள். அதில்தான் 3000 சம்பளம் வாங்கும் ஒரு அங்கன்வாடி பணியாளரின் மகனான கண்ணையா பி.எச்.டி செய்கிறார் என்று இடது சாரிகள் மற்றும் ஆதரவாளர்கள்  நெகிழ்ந்து கண்ணீர் மல்குகிறார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழவேண்டும். எழுந்ததா?

அறிவாளிகளின்  மையம் என்று அறியப்படுகிற ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தின் சர்வதேச பள்ளியில் Ph.D பயிலும் அறிவாளிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர் மனுதாரர்.  அவருக்கு எந்த விதமான அரசியல் தொடர்போ, கொள்கையோ இருக்கலாம். அதை அவர் தொடர எந்தவிதத் தடையும் இல்லை, அது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறைக்குள் இருக்கும் வரை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தியா ஒரு நல்ல உதாரணம். பேச்சுரிமை என்பது நமது அரசியலமைப்பின் Article 19(2)ன் தேவையான வரையறைக்குட் பட்டது.  ஆவணங்களின் படி, அப்சல் குரு, மக்பூல் பட்டின் படங்களை ஏந்திக்கொண்டு கோஷம் எழுப்பும் இந்த மாணவர் அமைப்பு தனது போராட்டத்தையோ அல்லது உணர்வையோ சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

JNU நிர்வாகமும் இவர்களை நல்வழிப் படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும், JNU பல்கலை ஏற்படுத்தப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கும் வழி செய்யவேண்டும்.

பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட அப்சல் குருவின் இறந்த நாளில், கோஷங்களை எழுப்பிய மாணவர்களின் தேசவிரோதக் கொள்கைகளைக் கண்டறிவதுடன் அதைக் கலையவும் வேண்டும். இதே போன்ற இன்னொரு நிகழ்வு நிகழாமல் தடுக்கவேண்டும்.

– தீர்ப்பிலிருந்து

பழைய மோர் தரும் புளிப்பு வீச்சம்

ரொம்ப காலமாக சொல்லப்பட்டு வரும் புளித்த மோர்தான் இந்தப் பிரச்சினையின் மூல காரணம் – இந்துத்துவ மாணவர் கழகம் Vs இடது சாரி மாணவர் கழகம். சிலரின் காழ்ப்புணர்ச்சியால் இந்துவத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று இந்தியம் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது.  சிலருக்கு அப்படித்தான் தோன்றும். பள்ளி கல்லூரிக்குப் போய் தேசீய கொடிக்கு சல்யூட் அடிப்பவன் எல்லாம் இந்துத்துவ வாதி. எனவே இந்துத்துவத்தை எதிர்ப்பதும் இந்தியத்தை எதிர்ப்பதும் ஒன்றுதான். (அல்லது இந்தியத்தை எதிர்த்தால்தான் அவர்களது வழக்கு நிற்கும்)

ஆக இந்தப் பிரச்சினை வெகு சாமர்த்தியமாக India Vs Left என்று மாற்றப்பட்டுள்ளது. RSSஐ எதிர்க்கிறேன் பேர்வழி என்று தேசத்தையே எதிர்ப்பதாகப் போய்கொண்டுள்ளதன் உதாரணம் இது. அதுதான் பாமர மக்களை விட்டு இடது சாரிகள் விலகிப் போதவற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடாது?

இடது சாரி அரசியல் – அம்பியும் அந்நியனும்

இடது சாரிகளை ஒழித்தே தீரவேண்டும் என்று இந்துத்துவர்கள் எழுதுகிறார்கள். இடது சாரிகளின் பழைய உளுத்துப்போன கோட்டைகளான கேரளம், வங்கத்தில் கூட அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது இந்துவர்களுக்கு மகிழ்வைத் தருகிறது. அதிலிருந்து மீண்டு வரத் துடிக்கும் காம்ரேடுகளுக்கு கண்ணையா குமார் வராது வந்த மாமணியாகத் தோன்றுகிறார். தேர்தலில் கண்ணையா பிரச்சாரம் கூட செய்யலாம் என்று செய்திகள் வருகின்றன.

என் ஊரின் பிண்ணனியிலிருந்து பார்த்தால் அப்படி ஒட்டு மொத்தமாக அவர்களை நிராகரிக்கலாமா? ஒரு பிரச்சினை என்றால் பாமரனுக்கு இவர்கள்தான் எளிதில் அணுக முடிபவர்களாக இருக்கிறார்கள். மீத்தேன் பிரச்சினையாகட்டும், கெயில் பிரச்சினையாகட்டும். திராவிட கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன. திராவிட கட்சி அரசியல் வாரிசுகளின் லேட்டஸ்ட் editions மக்களை தெருவில் சந்திப்பதை இழி செயலாகக் கருதுகிறார்கள். வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டும் முன்னரே கார் கண்ணாடியை ஏற்றி, ஏசியைத் தட்டிவிட்டுக்கொள்கிறார்கள். ஆக, பாமரன் சொல்வதைக் கேட்க ஒருவன் இப்போதைக்கு இருக்கிறான் என்றால் அது இடதுசாரிகளாகத்தான் இருக்க முடியும். (அவர்களால் காரியம் சாதிக்க முடிகிறது, முடியலை அது வேறு விஷயம்). அவர்களது இதழியல் சேவையான NCBHன் பங்களிப்பை மறுக்கிறவன் நான் இல்லை.

ஆனால், அவர்களின் மறுபக்கம்தான் பிரிவினை பேசும் மாணவர் சங்கங்கள்,  அடுத்த தெரு ஆட்டோக்காரனையே தன் ஸ்டாண்டில் நிற்க விடாத யூனியன்கள், கையூட்டு வாங்கி தொழிலாளி நொம்பலத்தில் விடும் யூனியன் தலைவர்கள்.

லேட்டஸ்ட் ஆயுதங்களுடன் இந்திய படையை எதிர்க்கும் திறன் இவர்களுக்கு உள்ளது.  வளத்தைக் காக்கிறோம், மக்களைக் காக்கிறோம் என்று இவர்கள் கூவும் இடத்திலெல்லாம் துரதிருஷ்டவசமாக தரித்திரம் தாண்டவமாடுகிறது. கலாச்சாரத்திற்கும் இறை மறுப்பிற்கும் வித்தியாசம் தெரியாத பல வடை மாஸ்டர்கள் இந்தக் கும்பலில் பகுத்தறிவுவாதிகள் என்று சுற்றிக் கொண்டு உள்ளார்கள். நவீன தமிழிலக்கியம் பற்றி தெரியாதவர்கள் தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று கூட சொல்லிக் கொள்வார்கள்.

அறிக்கியும் LC112ம் கூட்டு

இந்துத்துவ வலது சாரி அரசு இப்போது மத்தியில் ஆள்கிறது. ஆக அவர்கள் மீது காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பலத்த அதிருப்தி இருப்பது எதிர்பார்க்கக் கூடியது. ‘வலதிடது’ சாரியான காங்கிரஸ் ஆட்சியிலேயே எவ்வளவு ‘தலை போன’ பிரச்சினைகள். ஒரு பார்ட்டி ஆச்சா.

இந்துத்துவ அரசு எங்களுக்கும்தான் பிடிக்காது என்கிறது மாணவர் யூனியன். போதாக்குறைக்கு கல்லூரிகளில் இந்துத்துவ மாணவர் சங்கம் வேறு வந்துள்ளது. அவர்களைப் பார்ததாலே குமட்டிக்கொண்டு வருகிறது.

எதிரிக்கும் எதிரி நண்பன் என்கிற அரதப் பழசான லாஜிக்தான் இங்கு வேலை செய்துள்ளது. இடது சாரி மாணவர்களும், காஷ்மீர இஸ்லாமிய தீவிரவாத கொள்கை கொண்ட மாணவர்களும் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் புத்திசாலித்தனமாக இதை இடது சாரி – முஸ்லீம் கூட்டணி என்று வெளி உலகிற்குப் பறை சாற்றி விட்டனர். (இது எல்லாம் ரகசியமல்ல. தமிழ் பதிவுலகிலேயே பேசப்பட்டுதான் வருகிறது).

ஆக – அறிக்கியும் LC112ம் கூட்டு

போதாத குறைக்கு வழக்கு மன்றத்தில் தாக்குதல் நடத்தி, இந்தக் கூட்டணிக்கு எதிராக யார் வேலை பார்த்தார்கள், குழப்பத்தை அதிகப் படுத்தினார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

ஆக – நல்ல குழப்பம்.

ஆனாலும் மீடியாக்களுக்கு டிஆர்பி கிடைத்தது. பர்க்கா தத்துக்கு ஹீரோயிசம் கிடைத்தது. கண்ணையாவிற்கு ஜாமீன் கிடைத்தது. அர்ணாப்புக்கு இரத்தக்கொதிப்பு கிடைத்தது.

 

அரசியல் செய்யாமல் விவாதியுங்களேன் என்கிற ஈனஸ்வரம் எங்களைப் போன்ற மைனாரிடி இணைய இந்திய ரசிகர்களிடமிருந்து வருகிறது.

(முற்றும்)

 

இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழிய பாரத மணித்திருநாடு