குத்தாலம்


எமது அழிக்கப்பட்ட பழைய பதிவிலிருந்து ஒரு நாஸ்டால்ஜியா. குத்தாலம். சின்ன வயசில நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடம். என்னோட மாமா அங்க இருந்தார். ஒன்னாப்பு ரெண்டாப்பு படிக்கையில ஒவ்வொரு விடுமுறையும் அங்கதான். கதிராமங்கலம் இருக்கு இல்லையா.. அந்த வழி. அங்க ஒரு பெரிய சிவன் கோயில் இருக்கே. அதுக்கு பக்கமா மெயின் ரோட்டிலதான் மாமா வீடு. மாமாவுக்கு குழந்தைகள் இல்லாததுனால என்னோட அண்ணன் குத்தாலத்திலதான் சின்ன வயசில வளர்ந்தார். அஞ்சு வருஷம்னு நினைக்கிறேன். நானும் அக்காவும் [...]