chennai – mahabalipuram – ECR Touring


அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது? அவ்வண்ணமே எனக்கும். இன்றைய  (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் [...]

டூர் போலாம் வாங்க


ஊர் சுற்றுவது என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும். அதும் சைக்கிள் அல்லது பைக் பயணம் என்றால் உள்ளம் கேட்குமே மோர்!! வாலிப ஷோக்கில் நம்மூரிலும் நிறைய பேர் பைக்கில் ஊட்டி, கொடைக்கானல் போகிறார்கள். அத்தகு பயணங்கள், அதில் கிடைக்கும் அனுபவங்கள் (நல்லதோ கெட்டதோ) வாழ்வில் என்றுமே மறக்கக்கூடியதல்ல. மணிக்கணக்கில் தனியே பைக்கில் போவது.. அய்யோ.. அது போர்.. என்று அலறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் இரவு பவர் கட் என்று சொன்னதும் கொசு கடிக்குமே, அத்தோடு [...]

வலைப்பூ அறிமுகம்


வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. இந்த வலைப்பூவில் தாங்கள் ஊர் சுற்ற வழிகாட்டி, பயண டிப்ஸ், வழித்தடங்கள் போன்ற செய்திகளைத் தர நினைக்கிறேன். அத்துடன் பயணக்கட்டுரைகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி. மீண்டும் வருக

இறைவடிவங்களுடன் ஒரு மாலைப்பொழுது


பேரூர் நாட்டியாஞ்சலியில் நடைபெற்ற பத்மஸ்ரீ மாதவி முத்கல் அவர்களின் நாட்டிய நிகழ்வினைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் [http://bxbybz.wordpress.com/2009/10/10/perur-natyanjali-2009-odissi-performance-by-madhavi-mudgal/]. சென்றவாரம் இந்துவின் மெட்ரோப்ளசில் அதனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. பார்க்க.. http://www.hindu.com/mp/2009/10/15/stories/2009101550300100.htm

அல்லி அல்லி தீபாவளி


பண்டிகை என்றால் மனம் கொண்டாடும்தானே. அதும் தீபாவளி என்றால் இன்னும் கொஞ்சம் சேர்ந்தாடும். சமீப காலங்களில் பொங்கல் கொண்டாடுவோர் எண்ணிக்கையைவிட தீபாவளி கொண்டாடுவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதானே வருகிறது. சென்னையில் இருந்த வரை தீபாவளி பயண பரபரப்பு மூன்று மாதங்களுக்கு முன்பே, டிக்கட் எடுப்பதில் இருந்து, தொடங்கிவிடும். கோவை வந்த பிறகு அந்த பரபரப்பு சற்று குறைவு. கோயம்பேடு, எழும்பூர் என்பன மாறி, தற்சமயம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என்பது கூட்டம் இல்லாததாகத் தோன்றியது. நிற்க. திருச்சி மதுரை [...]