Coimbatore

Chennai to Covai


noyyal thaai

மாற்றம் ஒன்றே மாறாதது.
தத்துவம் ஒன்றை உதிர்த்து நெடுநாள் பின் விழுதுகளில் எனது புலம்பல்கள்.. இதோ…

சென்னை விடுத்து கோவை வந்து இரு மாதங்களுக்கு மேலாகின்றது. முன்னரே புலம்பலாம் என்றால் இணையம் பிறகு பணி என்று பல இழுத்தடிப்புகள்..

ஒரு ஊர் விட்டு ஒரு ஊர் மாறும்போது என்னென்னதான் நினைக்கிறது இந்த அடங்காத மனசு. புதிய இடத்தில் ஒட்டிக்கொள்ள நேரம் பிடிக்கிறது. நல்லனவோ கெட்டனவோ.. பழைய நினைவுகளின் ஆக்கிரமிப்புகள் அகல மறுக்கிறது….. நானும் சிவா அண்ணாச்சியும் சொந்த ஊரில் பழம் தின்று கொட்டை போட்டு அதில் முளைக்கும் செடியிலும் பழம் திங்க ஆசைப் பட்டவர்கள். விதி வலியது. என்றாலும் வினாடிக்கு வினாடி ஏற்படும் வாழ்வின் மாறுதல்கள்.. அட.. என்று சொல்ல வைக்கின்றன. (அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் விசியங்கள்… காப்பி அன்பேசிவம்).

சோகத்திலும் பெரிய சோகம்.. சொந்த மண்ணைப் பிரிகின்ற சோகம்.. (இதும் காப்பியே). மண்ணைப் பிரிகிற பொழுது வந்த வழியைத் திரும்பிப் பார்க்கையிலும் கண்ணீர் பொங்குவதை (எனக்கு அல்ல) இன்னொரு ஆளு பாவம் சொல்லி புலம்பி இருப்பார்.

செத்தாலும் சென்னை சேரமாட்டேன் என்று கல்லூரியில் வசனம் பேசினாலும் பிழைப்பு தேடி அங்கே ஓட வேண்டிய நிலை. பட்டும் படாமலும் வாழ்ந்தாலும் சென்னையின் பிரிவு சற்றே வருந்தக் கூடியதுதான். வாழ்வில் நம்பிக்கை சேர்க்கும் பணி. வீடுவரை-வீதிவரை-ரயில்வே நிலையம் வரை என்று பலதரப்பான மனிதர்கள். பேருந்து மற்றும் ரயில் இரைச்சல்கள் என்று சென்னையின் ட்ரேட்மார்க்கில் வாழ்க்கை நகன்றாலும்.. அவ்வப்போது திருவான்மியூர் மகாபலிபுரம் காஞ்சி மாநகர் என்று சுவையூட்டும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. சிவா கணேசு அண்ணாச்சிகள் சென்னை வந்தது. பெற்றோருடன் நண்பர்களும் சேர்ந்து ஒரே அறையில் ஏழெட்டு பத்து பேர் என உறங்கியது. குழந்தைகளுடன் கடல் நீரில் ஆட்டம் போட்டது. திருமணம். வாகனம் என்று நினைவில் நிற்கக்கூடிய பல நிகழ்வுகள் சென்னையிலேயே நடந்தன.

தி நகர் வீதியில் சைக்கிளில் டபிள்சு போனதில் இருந்து பழைய மகாபலி சாலையில் 100க் கடந்து பைக்கில் பறந்தது வரை சென்னையின் நினைவுகள் என்றுமே மாறாதவை. என்னவோ தெரியலை. . . இது போன்ற நினைவுகள்தான் அந்த இடத்தை நம்மோடு நெருங்கச் செய்யும் போல.

கோவைக்கு மாறுதல் கிடைத்ததும் ஒரே குஜாலில் நேரம் போனது தெரியலை. ஆனால் உண்மையின் தாக்கம் கோவை கிளம்பும் அன்று காலைதான் தெரிகிறது. மன பாரத்துடன் தூங்காத இரவு கடந்து அதிகாலை முதல் வேலையாக பிரியப்பட்ட திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்ல ஆர்வமாக இருந்தது. அது என்னவோ தெரியலை. பல முறை அண்ணாச்சியிடம் அந்த இடத்தைப் பற்றிப் புலம்பினாலும் இன்றும் ஆர்வம் தனிவதாய் இல்லை. ஒரே கடலை (கடலை அல்ல.. கடல்-ஐ) ஒவ்வொரு வேளையில் பார்த்தாலும் புதிசாகவே தெரியிது பாருங்க. பளபளக்கும் பவுர்ணமி கருங்கும் அமாவாசை வெயில் தட்டும் நண்பகல் பேய் அலையும் நடுநிசி எல்லாவற்றுக்கும் மேல் கடற்கரையே சுத்தமாக இருக்கும் சூரியோதய அதிகாலை. ஊஊஊஊ… இந்த இடத்தின் அழகே அழகு. அந்த கடைசி (அப்போதைக்கு!!) சூரியோதயம் முடிந்து சூரியன் உரைக்கும் வரை நானும் நகரவிலலை உடன் வந்த நண்பனும் நகரவில்லை. (பாவம் அவனுக்கென்ன சோகமோ..) அங்கிருந்து துரைப்பாக்கம் வேளச்சேரி என்று பழகிய பாதையில் ஓட்டினாலும் எல்லாமே அன்றைக்கு புதிதாகத்தான் தோன்றியது. பிறகு வீட்டைப் பூட்டிவிட்டு பல்லவனில் கோடம்பாக்கம் வழி பறந்தபோது… அனேகமாக முதல்முறை மீனம்பாக்கம் விட்டுப் பறக்கும்போது …..

ஆனால் எதுவும் குறைவில்லை. கோவைக்கு என்று சிறப்புகளாய் எதைச் சொல்வது. நான் வந்தபோதே இதை எழுகி இருந்தால்.. பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்த்த கதையாய் ஒண்டிப்புலி ஏளனம் செய்யக் கூடும்.. ஒண்டி மாநகர் ஆகட்டும் காந்திபுரம் ஆகட்டும் ஜில் ஜில்லென்று…. பேரூர் மருதமலை ஈச்சனாரி என்று பச்சைக்குள் ஒளிந்திருக்கும் இடங்களைப் பார்க்கும்போது.. ஆவ்வ்வ்வ்.. நாம் வந்திருக்கும் இடம் சரியான இடம்தான் என்று குஜாலாக (சென்னைக் கலப்பு) உள்ளது. தோப்பும் துறவுமாக பேரூர் செல்லும் பாதையும் அதைத்தாண்டி செல்லும் சிறுவாணி மெயின்ரோடும் சூப்பர்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s