உனக்கு என்ன பைத்தியமா?


“உனக்கு என்ன பைத்தியமா?”

“அப்டி போறதுன்னா ஒரு கார் எடுத்துக்க, இல்லைன்னா பஸ்ஸில போ.. மோட்ரு பைக் ரொம்ப ரிஸ்கி..”

மோட்டார் சைக்கிளில் டூரிங் செல்லுவதாய் நீங்கள் கூறினால், இதுதான் சக நண்பர்கள், உறவினர்களின் பதிலாய் இருக்கும். கார், பஸ், தொடர்வண்டி எல்லாம் சொகுசுதான். பயண நிமிட பிரச்சினைகளில் இருந்து நாம் பாதுகாக்கப் படுகிறோம். அதிக அயற்சி இல்லாமல் போய் சேரலாம். மோட்டார் சைக்கிளில் போனால் இதெல்லாம் கிடைக்காது. பஸ், கார், ரயில் போன்ற பயணங்களில் தொடர்ச்சியாக நாம் கழுகு மாதிரி குர்ர்ர்னு பாத்துக்கிட்டே ஓட்ட வேண்டியதில்லை.

அப்பறம் என்ன ம…க்குடா மோட்டார் சைக்கிளத் தேடி ஓடுறீங்க.. அதும் வந்து சேரப்ப நொந்து நூலாயி அந்து அவலாயி.. அழுக்கு மூட்டையா வந்து சேரீங்க??

தோ பாருங்க. மத்த வண்டி மாதிரி சொகுசாவோ, ரெம்ப ஃபாஸ்டாவோ இருக்காது. ஆனா பாருங்க. இது வந்து சும்மா ஒரு கருவி இல்ல. இது மோட்டார் வண்டி, அது ரயில் வண்டின்னு பாக்கப்பிடாது. சும்மா அந்த இடத்துக்கு போய் சேரனும்கிறதுக்காக போறதில்ல. உங்களோட பைக் உங்களோட தோஸ்த். தோஸ்த் தோள் மேல கை போட்டுட்டு போறது மாதிரி போய் வர உணர்வே வேற, இல்லீங்களா! ஒரு கப் டீ நீங்க போய் அண்ணபூர்ணாவிலயோ, சரவண பவன்லயோ குடிக்கிறதுக்கும், பைக்கை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு ரோட்டோ  கடையில குடிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே.  அந்த டீக்கு சுவை அதிகம்!! “ரோட்டோ ர கடையில் தேனீர் குடிப்பேன்” அப்டின்னு வைரமுத்து சொல்லி அத ஒரு ஹீரோயின் பாடின ரசிக்கிறோம் இல்லையா. அதுமாதிரிதான். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்திட்டு, பனி பெய்யற காலையில போய், ரோடு சைடு நைனா கடையில போய் ஒரு பரோட்டா (அதையே காரில போய் ஓட்டல்ல சாபபிட்டா பரத்தா!) சாப்பிடும் சுகமே அலாதி!

இது மாதிரி கேள்வி கேக்கிறவுங்க எல்லாம் வாழ்க்கையில ஒரு தடவை பைக் டூரிங் போனீங்கன்னா, வாழ்க்கைக்கும் அடிமையாவது திண்ணம். (வீட்டுல வாங்கிக்கட்டிக்கிறதும் …. உறுதி!). சும்மா ஒரு கூண்டுக்குள்ள அடைஞ்சுக்கிட்டு, சன்னல் வழியா இயற்கையின் அதிசயத்தைப் பார்க்கனும்கிற தடை இல்லை. இந்த உலகமே உன்னுடையது.. “உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்..” அப்டின்னு பாட்டு பாடிக்கிட்டே போகலாம்! ஒட்டு மொத்த உலகமே உன்னுடைய மைதானம். இயற்கையோடு ஒன்றிப் போகலாம், புதிய விசியங்களைக் கண்டுபிடிக்கலாம், புதிய சவால்களைச் சந்திக்கலாம், ஒருசில பேர் மட்டுமே போயிருப்பாங்க, அந்த இடத்திற்குப் போகலாம்.. ஒரு முறை போய் வாங்க.

bike touring
bike touring

சக ஓட்டுனர்களின் (உங்களுடைய கம்மியா சைக்கிள், டிவிஎஸ்50; உங்களுக்கு சமமா FZ, அபாச்சி, பல்சர்; உங்களுக்கு எத்தன்கள் மண்ணு லாரி, தனியார் பேருந்துகள்) ஒரு மணித்துளி உன்னதமான அல்லது எரிச்சலான சிநேகம்! (லைட் பெயிலியர் சமயங்களில் எனக்காக லைட்டை ட்ரிப் செய்யும் ஓட்டுனர் நண்பர், நம்ம கூட போட்டி போட்டு விரட்டி வந்து சிக்னலில் நின்று சினேகமாய் சிரிக்கும் சக மோட்டார் சுந்தரம் பிள்ளைகள்! இவர்கள் மீது உன்னதமான சினேகம்.. நாம வரும்போது ரைட்ல புல்லா ஏறி வந்து நம்மை ரோட்டை விட்டு இறக்கிவிடும் எரிச்சல் எட்டப்பன்கள், சின்னப்புள்ளையாட்டம் நாம போறப்ப லாரியில வந்து ஐ பீம் அடிக்கும் இம்சை ஏகாம்பரங்கள்.. இவர்கள் இரண்டாம் வகையறாக்கள்.)

இப்டி ஒரு பயணம் போயிட்டு வந்த பின்னே, நீங்க பார்த்த விசியங்களைப் பற்றியும், போய் வந்த இடங்களைப் பற்றியும் உங்கள் நண்பர்களிடம் அளந்து விடுங்கள். அவர்கள் கண்ணில் மின்னல் மின்ன சேர்ந்து கதைப்பார்கள். நீங்க போன இடத்துக்கே அவங்களும் போயிருக்கலாம், ஆனா நீங்க உணரும் வகையில் அந்த இடத்தை அவர்கள் அனுபவிக்காமல் இருக்கலாம். நீங்கள் அலம்பி எடுத்த அந்த இடங்களை அவர்கள் ஒரு உலோக கூண்டுக்குள் இருந்தவாறு ரசித்திருப்பாராய் இருக்கும்!

எல்லாத்தையும் விட, உங்களுக்கும் உங்கள் பைக்கிற்கும் உள்ள சினேகம் இன்னும் உறுதியாகும்.

மோட்டார் சைக்கிள் டூரிங் எனப்படும் உன்னதமான உலகம்..

இந்த உலகத்தில், சேரும் இடம் என்பது பயணத்திற்காக சொல்லப்படும் காரணம்.
இந்த உலகத்தில், அதிகம் கால் பதியாத கிராம சாலைகளே, தேசீய நெடுஞ்சாலைகளாகும்
இந்த உலகத்தில், முன்பின் அறியாதவரும் ஏதோ நமது பழைய நண்பர் மாதிரி பழகுவர், அவரும் உங்களைப்போலவே டூரிங் வந்தவர் என்பதால்
இந்த உலகத்தில், மலைப்பாதை பயணம் ஒவ்வாமை இருந்தாலும், ஒரு முறை மோட்டார் பைக் பயணம் மேற்கொண்டால், திரும்பவும் அங்கே வர மனம் சத்தியம் செய்யும்!

இந்த உலகத்தில், போகும் வழியே முக்கியம், சேரும் இடம் அல்ல!!

வாழ்த்துக்கள்.

யோகேஷ் சர்கார், bcm touring,
தமிழில், மோட்டார் சுந்தரம் பிள்ளை!

5 thoughts on “உனக்கு என்ன பைத்தியமா?

  1. idenna bike… innum maatu vandi-la poyi parunga…. ulgam innum perusa theriyum….. sugamana payanam adu…. iyarkayey thollai paduthatha payanam…. enna poye sera konjam neram adigama aagum…… avvalavu than….. matha padi super000 superu…

    1. அட. அதுவும் மிகவும் அழகான பயணம். அதப்பத்தி எழுத ஒரு நாள் போதாது!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s