வாகனச்சந்தை

Range Rover 2010 – வாகன விரும்பிகளுக்காக!


Range Rover 2010
Range Rover 2010

சக்தி வாய்ந்த புதிய எஞ்சின்கள், புரட்சிகரமான இன்டீரியர் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிரைவிங் லாவகம் என்று பல்வேறு அம்சங்களுடன், 2010லும் நானே ஹீரோ என்று சிலுப்புகிறது ரேஞ்ச் ரோவர், உலகத்தின் உன்னதமான சொகுசு கார்.

2010 மாடல் ஏற்கனவே உள்ளதை விட கணிசமான அளவில் முன்னோக்கிச் சென்றுள்ளது. புது எஞ்சின் தரும் அசர வைக்கும் திறன், முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டூயல் வியூ ஸ்கிரீன் எல்லாம் சேர்ந்து ரேஞ்ச் ரோவரின் கவுரவத்தைத் தக்கவைத்திருக்கிறது.

Range Rover 2010
Range Rover 2010

இதில் புத்தம் புதிய 510PS supercharged LR-V8 என்ற பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ள. இது ஜாகுவார் லேண்ட் ரோவர் மக்களின் சொந்த தயாரிப்பு. எரிபொருள் செலவு மற்றும் மாசுபாடு விதிகளை மீறாத அதே வேளையில் அதிக சக்தியையும் திறனையும் LR-V8 வெளிப்படுத்துகிறது. இதற்கு முந்தைய 4.2L எஞ்சினை விட எரிபொருள் சிக்கனம் 7.3 சதம் மற்றும் CO2 வெளிப்பாடு 7.4 குறைந்திருக்கும் அதே வை஀யில் 29 சதம் அதிக சக்தி மற்றும் 12 சத அதிக உந்து சக்தியையும் வெளிப்படுத்துகிறது.

டீசல் எஞ்சின் மாடல்களில் 272PS 3.6-litre TDV8 ஒரு சில மேம்பாடுகளுடன் தொடர்கிறது. வெளிப்புற தோற்றத்திலும், லைட், கிரில் மற்றும் பம்பர் போன்றவை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Range rover 2010
Range rover 2010
Range Rover 2010
Range Rover 2010

ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் ரேஞ்ச் ரோவரின் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். காரணம் முதன் முதலாக இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டூயல் வ்யூ செய்தி மற்றும் பொழுதுபோக்குக்கான தொடுதிரை வசதி. ஓட்டுநர் GPS திரையைப் பார்த்து ஓட்டிக்கொண்டிருக்க, பயணிகள் வேட்டைக்காரன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலே!

இன்னொரு கவர்ச்சியான கண்டுபிடிப்பு, ஆதிகால குறிமுள், சமிஞ்ஞை விளக்கு போன்றவை அனைத்தையும் 12 இஞ்ச் TFT திரையில் அனைத்தையும் கொண்டு வந்திருக்கின்றனர். பலே பலே!

அத்துடன் Adaptive cruise control, அவசர கால பிரேக் உதவி, Blind spot கண்காணிப்பு மற்றும் தானியங்கி விளக்கு உதவி மற்றும் சரவுண்டு காமிரா என்று முழுமுதல் சொகுசு காராக வந்துள்ளது RR 2010!

இனியும் ஆசை தீராதிருப்போர் http://www.landrover.in/ செல்லலாம்

Advertisements

2 thoughts on “Range Rover 2010 – வாகன விரும்பிகளுக்காக!”

  1. ரேஞ்ரோவர் பேரைக்கேட்டாலே கிர்ரடிக்கும், அந்தக்காலத்தில் ராஜிவ் காந்தி இந்த வண்டியை ஓட்டி வந்ததை சின்னப்பையானக இருந்தப்போது பார்த்தேன், அப்போது தான் இந்த பெயர் அறிமுகம் ஆனது! எனது கனவு வாகனம் பட்டியலில் இருப்பது.

    இது 4 வீல் டிரைவா, உங்கள் சுட்டி மூலம் போய்ப்பார்த்தேன் ஆல் டெர்ரைன் என்று அவர்கள் தளத்தில் போட்டுள்ளார்கள்.

    விலையைப்பாற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள், கனவு வருவது நின்று விடும்!

    1. அன்பின் வவ்வால், டூவீல் மற்றும் 4 வீல் டிரைவ் இரண்டுமே இருப்பதாகப் போட்டிருந்தார்கள். திரும்ப ஒரு முறை பார்த்து எழுதறேன். 99 லகரத்திலிருந்து ஆரம்பம் என்று கேள்விப்பட்டேன். கனவு வந்தால் சொல்லுங்கள்!
      ஆர்வக்காரராக இருக்கிறீரகள். வருகைக்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s