வந்தாரு Harley Davidson!


harley davidson
harley davidson

அன்றைய தினம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வலைப்பூவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சக நண்பர் டேவிட்சன் இந்தியா வருவதாகச் சொன்னார். இன்றைய இந்து நாளிதழில் அதற்கான செய்தி வந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நகரங்களில் பிராண்டு பிரமோஷன் ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு தேவைக்குத் தகுந்தபடி மாற்றம் செய்தும் தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக அறிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவும், அமெரிக்காவும் முறையே ஹார்லி டேவிட்ஸன் பைக் மற்றும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (கிளிண்டன் இங்க வந்தப்ப மாம்பழம் தின்னப்பவே…. எனக்கு சந்தேகம்!!!). அதன்படி உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மோட்டார் சைக்கிளான ஹா.டே. இந்திய சந்தைக்குள் நுழைய தயாராகிவிட்டது.

ஜனவரியில் வரும் ஆட்டோ  எக்ஸ்போவில், இதன் விலை, நிறுவனத்தைப் பிரமோட் செய்யும் திட்டங்களை அனூப் பிரகாஷ் (இந்திய ஹார்லி டேவிட்ஸன் மேலாண்மை இயக்குநர்) வெளியிடுவார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென நடத்தப்பட்ட அறிமுக விழாவில் பேசிய பிரகாஷ் கூறியதாவது. “எங்கள் மோட்டார் சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன்னர், 107 வருட பாரம்பரிய பிராண்டை இந்திய ரைடர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறோம். இந்திய பைக் விரும்பிகளுக்கு ஹார்லி-டேவிட்ஸனின் உண்மையான அனுபவத்தைக் கொடுக்கக் காத்திருக்கிறோம்”

அதுபோன்ற அறிமுக விழாக்களை நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்த உள்ளார்கள். சென்னையில் நடந்தால் யாரேனும் போய் பார்த்துவிட்டு ஒரு பதிவு போடுங்கள்.

இந்தியாவில் தனது அனைத்து ரகங்களையும் அறிமுகப்படுத்துவதாக உள்ளனர். ஒரே மாதிரி இருந்தாலும் இரு பைக்குகளும் ஒன்றல்ல! புரியலையா, நான்கு வகை எஞ்சின்கள், ஐந்து வகையில் மாறுபட்ட சேஸிஸ் மற்றும் 31 மாடல்கள் வைத்து விருப்பத்திற்கேற்ப பைக்குகளை அள்ளிவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இது இந்திய சந்தைக்குப் புதிது!

குர்கானில் கும்பனியின் காரியாலயம் அமையப் போகிறதாம்!

விலை 4 முதல் 14 லகரங்கள் என்று கிசுகிசுக்கள் நிலவுகின்றன.

பைக் மன்னர்களுக்கு குஷி! மற்ற நிறுவனங்களுக்கு நல்ல போட்டி! மைலேஜ் மற்றும் குறைவான விலையில் நிறைய வசதிகளை எதிர்பார்க்கும் இந்திய சந்தைக்கான ஹார்லி டேவிட்ஸனின் திட்டம் என்ன என்பதைக் காத்திருந்து பார்ப்போம்

One thought on “வந்தாரு Harley Davidson!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s