வாகனச்சந்தை

New Honda Aviator 110CC released


ஹோண்டா நிறு​வ​னம் 110 சி.சி திறன் கொண்ட நியூ ஏவி​யேட்​டர் ஸ்கூட்​டரை நேற்று (26th nov) அறி​மு​கப்​ப​டுத்தியது.

Honda Aviator
Honda Aviator

சென்னையில் நேற்று இந்த புதிய ஸ்கூட்டரை ஹோன்டா துணைத் தலை​வர் அனு​பம் மொஹிண்ட்ரூ அறி​மு​கப்​ப​டுத்​தி​னார்.

இந்த புதிய ஸ்கூட்டர், ஏற்​க​னவே உள்ள ஏவி​யேட்​ட​ரைக் காட்​டி​லும் 15 விழுக்காடு கூடு​தல் செயல் திறன் கொண்​டது. அத்துடன் பெட்ரோலும் குறைவாக செலவாகும்.

இந்த வகை ஸ்கூட்டரில் நியூ ஏவி​யேட்​டர் ஸ்டாண்​டர்ட் மற்​றும் நியூ ஏவி​யேட்​டர் டீலக்ஸ் என இரண்டு ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்​றின் விலை முறையே ரூ.43,938, மற்​றும் ரூ. 48,938 ஆகும். இவை ஐந்து வண்​ணங்​க​ளில் கிடைக்கும்.

இதில் டெலஸ்​கோப்​பிக் சஸ்​பென்​ஷன், முன்​புற டிஸ்க் பிரேக்,​ 20 லிட்​டர் கொள்​ள​ளவு கொண்ட பெட்டி, டஃப் அப் டியூப் ,கோம்பி-​பிரேக் சிஸ்​டம், பரா​ம​ரிப்பு தேவைப்​ப​டாத பேட்​டரி, விஸ்​கோஸ் ஏர் பில்​டர் ஆகி​யவை புதி​தாக சேர்க்​கப்​பட்​டுள்ளன. இது அ​டுத்த ஆண்டு ஏப்ர​லில் அமல்​ப​டுத்​தப்​பட உள்ள பாரத்-3 சுற்​றுச் சூழல் விதி​மு​றைக்​கேற்ப சான்​றி​தழ் பெற்ற வாக​ன​மாகும்.

இந்நிறுவனம் சென்ற ஆண்​டில் 10.7 லட்​சம் வாக​னங்​களை விற்​பனை செய்​துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 18 விழுக்காடு அதிகம். இந்த நிதி ஆண்​டில் 12.5 லட்​சம் வாக​னங்​களை விற்​பனை செய்ய இலக்கு நிர்​ண​யித்துள்ளது. இந்த இலக்கை எட்ட நியூ ஏவி​யேட்​ட​ரின் வரவு உத​வும் என்று மொஹிண்ட்ரூ தெரிவித்தார்.

ஹோண்டா நிறு​வ​னம் விரை​வி​லேயே 100 சி.சி திறன் கொண்ட மோட்​டார் பைக்கை அறி​மு​கப்​ப​டுத்த உள்​ளது. இந்த புதிய மோட்டார் பைக், புது தில்​லி​யில் நடை​பெற உள்ள ஆட்​டோ​மொ​பைல் கண்​காட்​சி​யில் இடம்​பெ​றும். இதற்​காக ரூ. 100 கோடி கூடு​த​லாக முத​லீடு செய்ய உள்​ள​தா​க​வும் அனு​பம் மொஹிண்ட்ரூ தெரி​வித்​தார்.

news: http://tamil.webdunia.com/newsworld/finance/news/0911/27/1091127023_1.htm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s