நெடுஞ்சாலை திருட்டு


சிலர் சொல்லும் கதைகளைக் கேட்டா பயங்கரமா இருக்கு.
நம்மில் எத்தணையோ பேர் கார் பைக் வைத்திருக்கிறோம். ஆனால் சில கணங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் நமக்கு கிலியை உண்டாக்குவதாக உள்ளது. தன் விதியை நம்பாமல் நம் விதியை நொடியில் மாற்றி விபத்தில் சிக்க வைக்கும் சக ஓட்டுநர், நள்ளிரவில் கூட்டமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் குண்டர்கள், கானக வாசத்தில் வழி மறிக்கும் விலங்குகள் (அவை பாவம்!!) இப்படி!

கார் கொள்ளை
கார் கொள்ளை

தற்போது சொல்லவருவது இரண்டாம் வகை.

இரவு நேரம், காரினைச் செலுத்தும்போது யாரோ எறிய நம் கார் கண்ணாடி மீது விழுந்து உடையும் முட்டைகள் சாலை மீதான நமது கவனத்தைக் குலைக்கும். சரி அதைத் துடைக்கலாம் என்று வைப்பரைப் போட்டால் ஒட்டு மொத்த கண்ணாடி மீதும் முட்டை திரவம் பரவி சுத்தமாக ஒன்னும் தெரியாமல் போகும். தொல்லையாப் போச்சு என்று துடைக்க இறங்கினீர் என்றால் போச்சு.  உங்களைச் சுத்தி பத்து பேர் நின்று ஒட்டு மொத்ததையும் பிடுங்கிவிட்டுச் செல்வார்கள். மும்பை பக்கம் இப்படிப்பட்ட நூதன கொள்ளை நடக்கிறதாம். எனவே முட்டை வந்து விழுந்தா இருக்கிற கொஞ்ச கேப்பில ரோட்டைப் பார்த்து நிறுத்தாமல் ஓட்டி, பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் அல்லது காவல் நிலையத்தில் சரணடைவது உத்தமம்!

இன்னொரு பக்கம் ஏதோ ஒரு உலோக பொருளை தூக்கி பேனட் மீது எறிய, நம்பாளு அடடா  சுந்தரா டிராவல்ஸ் வண்டில இருந்து ஏதோ நட்டு போல்ட்டு கழண்டு போச்சு என்று இறங்கிப் பார்க்க…. அம்பேல்!!

சில இடங்களில் கல் கப்படா என்று என்னென்னவோ வந்து விழுதாம்!

உ.பி மாநிலம் இத்தகைய திருட்டுக்களுக்குப் பெயர் போனதாம். இன்னொருத்தர்கிட்ட ஒரு ஓட்டுநர் எச்சரிச்சிருக்கார். நைட்டு நேரத்தில கார ஒட்டிப் போகாதீங்க. ஒரு வேளை போகவேண்டி வந்ததுன்னா, அந்த  சமயத்தில வழியில் யாராவது காரை நிப்பாட்டினா,  பேசாம அந்த ஆளை காரை விட்டு ஏத்திட்டு வந்திடுங்க!!  அத செய்யாம காரை நிப்பாட்டினா, நீங்களும் உங்க காரும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டி வரும்!!

தினமலர்காரங்க சொல்ற மாதிரி இரவு 10 – காலை 5, நெடுஞ்சாலைப் பயணத்ததைத் தவிர்ப்பீர். இல்லையேல் பிரச்சினைகளை சமயோசிதமாக சமாளித்து வென்றுவருவீர். ஆல் தி பெஸ்ட்.

2 thoughts on “நெடுஞ்சாலை திருட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s