உயரும் கார்கள் விலை – கட்டாயமாகும் BS4


கார் விலை அதிகரிக்கப்போகிறது என்று ஏற்கனவே செய்திகள் வந்திருந்தன.  அதனை ஏற்கனவே பதிந்திருந்தேன். தற்போது செய்திகள் வந்துள்ளன.

அதிகரிக்கும் தயாரிப்பு செலவு மற்றும் ஏப்ரல் 2010ல் நடைமுறைக்கு வரும் இந்தியாவின் வாகன மாசு கட்டுப்பாடு சட்டம் போன்றவற்றைக் காரணம் காட்டி கார் கம்பெனிகள் விலை ஏற்றம் செய்யப்போகின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி ஸ்விப்ட் , ஹோண்டா சிவிக் போன்றவை 10ஆ முதல் 20ஆயிரம் வரை உயரலாம்.

ஸ்டீல் மற்றும் ஏனைய உலோகங்களின் விலை ஏற்றம், கம்பெனியின் லாபத்தைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் போன்றவை இந்த விலை ஏற்றத்தைத் தவிர்க்க முடியாததாக்குகின்றன.

சென்ற ஜனவரியில் விலையேற்றம் கண்ட வாகன சந்தை தற்போது இந்த விலையேற்ற செய்தியைத் தந்துள்ளது. மேலும் ஏப்ரல் 2010க்குள் இன்னொரு விலையேற்றம் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் பாரத மாசுகட்டப்பாடு தரம் 4, BS4 மற்றம் இதர நகரங்களில் தரம் 3, BS3 போன்றவை கட்டாயமாக்கப்படுவதால் 5000 முதல் 15000 வரை விலை அதிகமாகும் என்று சொல்கிறார்கள். பஸ் லாரி போன்றவற்றிற்கு இந்த  விலையேற்றம் இன்னும் அதிகமாகும்.

mitsubishi-outlander-jun09
mitsubishi-outlander-jun09

So,சென்னை மும்பை கோல்கத்தா தில்லி பெங்களூர் நகரங்களில் BS4 கட்டாயமாக்கப்படுகிறது!

2 thoughts on “உயரும் கார்கள் விலை – கட்டாயமாகும் BS4

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s