பேய் வருது – Rolls-Royce Ghost தற்போது இந்தியாவில்!


கடந்த  20ஆம் தேதி ரோல்ஸ் ராய்ஸ் தனது கோஸ்ட் சூப்பர் சொகுசு மாடல் காரை முதன் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முந்தைய மாடல்களை விட மேம்பட்ட இந்த கோஸ்ட் -ஐ, பார்த்த உடனே ரோல்ஸ் ராய்ஸ் என்று தெரியும்!! புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்தினாலும் பழம் பாரம்பரியம் மாறாமல் வைத்துள்ளனர்.

Rolls Royce - Ghost
Rolls Royce – Ghost

ரோட்டை அடைச்சிக்கிட்டு போறமாதிரி அக்க்க்கலம்!!
தனித்தன்மை வாய்ந்த டிசைன். (பார்த்தாலே தெரியிது!)
83˚ வரை திறக்கும் கதவுகள்
அசத்தலான இண்டீரியர்.
முன் வரிசை மற்றும் பின்வரிசைக்கும் நீளும் சன் ரூஃப் (வ்வ்வாவ்!!)
4 பகுதிகளாலானா தானியங்கி ஏசி
தானியங்கி காற்று மறுசுழற்சி
தனித்தனி  சீட்
இண்டீரியருக்கு ஏற்றபடி பிக்னிக் டேபிள்
9.2 இஞ்ச் எல்சிடி திரை இரண்டு
10 சேனல் ஆம்ப்ளிபையர் மற்றும் 16 ஸ்பீக்கர் தரும் 600 வாட் ஆடியோ (வ்வ்வாவ்) அதில் தளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு ஊஃபரும் சேர்த்தி! (வ்வாவாவ். வ்வ்வாவ்.)
மிக துள்ளியமான ஏர் சஸ்பென்ஷன். பின்சீட்டுல யாராவது மாறி உக்காந்தா அதுக்கேத்தபடி மாறிக்குமாம்!!!
முன்ன, பின்ன, மேல என்று அனைத்து பக்கமும் பார்க்க காமிராக்கள்
lane departure warning எச்சரிக்கை

இன்னும் எத்தனை எத்தனையோ வசதி தராங்க…

தனித்தன்மை வாய்ந்த 6.6 லிட்டர் twin-turbo charged V12 எஞ்சின்
8 ஸ்பீடு தானியங்கி ZF டிரான்ஸ்மிஷன்.. (ம்க்கும்… இங்க 3, 4க்கு மேலே போக முடியல!!)
அதிகப்படியான திறன் 563bhp / 420kW / 570PS @ 5250rpm அதிகப்படியான டார்க் of 780Nm / 575lb ft at only 1500 rpm.
எரிபொருள் செலவு 100 கிமீக்கு 13 லிட்டர்.

இந்தியாவில் 2010ன் இரண்டாவது காலாண்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.பெறுகி வரும் தேவையை சமாளிக்க, அதிகப்படியான தொழிலாளர்களை நியமித்துள்ளதாம்.

விலை.. ஏற்கனவே சொன்னாமாதிரி இரண்டரை கோடி!!

Rolls Royce - Ghost
Rolls Royce – Ghost
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s