எருமைகளும் எருமைக் குட்டிகளும்

முன்பெல்லாம் காசி யாத்திரை செல்வோரைத் தான், குடும்பத்தோடு ரோட்டுக்கு வந்து, கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்புவது வழக்கம். யாத்திரை செல்பவர் திரும்ப வருவாரா? மாட்டாரா? என்ற நிச்சயமற்ற தன்மையே அதற்கு காரணம். இப்போது, ரோட்டில் இறங்கினாலே போதும்; காசி யாத்திரை போன மாதிரி தான்; உயிரோடு திரும்புவதற்கான உத்தரவாதம் கிடையாது.
இந்தியா முழுவதும், ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எய்ட்ஸ் உள்ளிட்ட, உலகின் எந்தக் கொடிய நோய்க்கும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பலியாவது கிடையாது என்பதை, நான் தெரிவிக்க வேண்டியதில்லை. அவ்வளவு பெரிய ஆபத்தாக, சாலை விபத்துகள் உள்ளன.

இதில், தமிழகத்தின் பங்களிப்பு அலாதியானது. வேகமாக வளரும் மாநிலம் அல்லவா? கடந்த ஆண்டு மட்டும், அக்டோபர் வரை தமிழகத்தில் 10 ஆயிரத்து 742 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 11 ஆயிரத்து 592 பேர், தங்கள் இன்னுயிரை வேகவேகமாக இழந்துள்ளனர்.

வாகன எண்ணிக்கை:

கடந்த நவம்பர் 1ம் தேதி கணக்குப்படி, தமிழகத்தில் சரக்கு போக்குவரத்துக்கான வாகனங்கள் 8 லட்சத்து 22 ஆயிரத்து 290 உள்ளன. தனி மனித பயன்பாட்டுக்கான வாகனங்கள் ஒரு கோடியே 9 லட்சத்து 30 ஆயிரத்து 996 உள்ளன.
தனது வாகனமான எருமையைக் கட்டி மேய்த்து, தீனி போடுவது கடினமான காரியம் என எம தருமன் நினைத்தானோ என்னவோ, தமிழகத்தில் ஓடும் அத்தனை வாகனங்களுமே, அவனது வாகனமாகத் தான் காட்சியளிக்கின்றன. இவற்றில் டூ வீலர்கள் மட்டும், 96 லட்சத்து 28 ஆயிரத்து 720. எருமைக் குட்டிகள்.
விபத்துகளைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, மத்திய, மாநில அரசுகள் பறைசாற்றி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 5,287 பேரின் டிரைவிங் லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 660 பேரின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவிக்கிறது.

குடித்து விட்டு:

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, “குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம்’ எனச் சொல்வது என்ன நியாயமோ, தெரியவில்லை. போலீசார் உண்மையாகக் களமிறங்கினால், சென்னையில் மட்டும், ஒவ்வொரு நாளும் 5,287 டிரங்க் அண்டு டிரைவ் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம். இந்த எண்ணிக்கையைத் தொட, பிரசவ வேதனை போல் பத்து மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
லைசென்ஸ்கள் சஸ்பெண்ட்; ரத்து; வாகனம் பறிமுதல்; டிரைவர் கைது; ஆயிரங்களில் அபராதம்; பல மாதங்கள் சிறை என, விதிமுறைகளுக்கும் கடுமையான சட்டத்துக்கும் குறைவில்லை. ஆனால், அதை அமல்படுத்தும் விதத்தில் தான் கோளாறு இருக்கிறது.
சிக்னல்களைப் பாருங்கள். சிவப்பு விளக்கு இருந்தாலும், தயங்காமல் ஏறிச் செல்பவை அரசு பஸ்கள் தான். விதியை அவர்கள் மீறுவது மட்டுமில்லாமல்; சிக்னல்களுக்காக சமர்த்தாக நிற்கும் சிவனாண்டிகளையும், ஹார்ன் அடித்து மிரட்டுகின்றனர் அந்த டிரைவர்கள். விதிகளை மதிப்பவர்கள் என்றால், அவ்வளவு இளக்காரம்.
இந்த டிரைவர்களை போலீசாராலோ, போக்குவரத்துக் கழகத்தாலோ எதுவும் செய்துவிட முடியாது. மவுன்ட் ரோடின் குறுக்கே பஸ்சை மறித்துப் போட்டுவிட்டால் என்ன செய்வது, என்ற பயம் தான் காரணம்.

யாரால் காப்பாற்ற முடியும்:

அரசு எந்திரமே இப்படி பயத்தில் நடுங்கினால், யாரால் மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும்?
விதிமுறை என்று ஒன்று இருந்தால் அதை, கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும். அல்லது, அந்த விதிமுறையையே ரத்து செய்துவிட வேண்டும். டூ வீலர் ஓட்டுபவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறது. அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதால், ஐகோர்ட் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.
கொஞ்ச நாளைக்கு ஹெல்மெட் விற்பனை தூள் பறந்தது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரேஞ்சுக்கு, நடுத்தெருவில் வைத்து கூவிக் கூவி விற்றனர்.
எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். சில மதத்தினருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது; பெண்கள் அணிய வேண்டியதில்லை என்றனர்; பின்னால் அமர்ந்திருப்பவரையும் பெருந்தன்மையோடு விட்டுவிட்டனர். அவர்கள் உயிர் எல்லாம் போனால் போகட்டும் என்று நினைத்துவிட்டனரோ என்னவோ.
விளைவு? இன்று ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சென்னையைத் தாண்டி, கட்டாய ஹெல்மெட் சட்டம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. உடல் உறுப்பு தானம் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஹிதேந்திரன் கூட, அரசு விதியை மீறி, அப்பாவின் எச்சரிக்கையை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளானவன் தான் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

கார் சீட் பெல்ட்:

அதே போல் தான், காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற காமெடி சட்டமும். பேன்ட் அவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, ஸ்டைலாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் இடுப்பு பெல்ட் அணியும் நம்மில் பலர், காரில் பயணிக்கும்போதோ ஓட்டும்போதோ சீட் பெல்ட் அணிவதில்லை. அதில் என்ன அலர்ஜியோ!
அத்தனை வாகனங்களுக்கும் எமிஷன் டெஸ்ட் எனப்படும், புகை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பெட்ரோல் பங்க்குகளில் விசேஷ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் சில நாட்களுக்குத் தான்.
“நம் வண்டியில் இருந்து எழும் புகை, பின்னால் வருபவனைத் தானே பாதிக்கும்; போகிறது போ’ என அலட்சியமாக விட்டுவிட்டார்கள். முன்னால் ஓடும் வாகன ஓட்டுனரும் அதே மாதிரி நினைத்தால், அவரது வாகனம் விடும் புகை நம்மை பாதிக்குமே என நினைக்காமல் விட்டுவிட்டனர்.
ஆயிரம் சட்டங்கள் வந்தாலும், தனி மனித ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாவிட்டால், எந்தச் சட்டங்களும் எடுபடாது என்பதற்கு, இவையெல்லாம் உதாரணங்கள்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் லைசென்ஸ் தர வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இன்று பெருந்தனக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைப் பாருங்கள். மீசை முளைக்காதவர்கள், அரைக்கால் சட்டை போட்டவர்கள் எல்லாம் டூ வீலரில் கம்பீரமாக வலம் வருகின்றனர். இவர்களை என்ன செய்வது? இவர்கள், லைசென்ஸ் இல்லாமல் தான் வாகனம் ஓட்டுகின்றனர் என்பது பள்ளி நிர்வாகங்களுக்குத் தெரியாதா? அல்லது, பெற்றோருக்குப் புரியாதா?
நம் பிள்ளைகள் பத்திரமாக ஓட்டுவர் என்ற நம்பிக்கை தான் இந்த அலட்சியத்துக்கு காரணம். ஆனால், நம் அஜாக்கிரதையால் மட்டுமல்ல; எதிரே வருபவர்களின் கவனக் குறைவாலும் விபத்துகள் ஏற்படும் என்பது இவர்களுக்குப் புரியவில்லை.

உச்ச கட்டம்:

சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு பற்றி பேச கிளம்பிவிட்டு, ஆட்டோக்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. விதிமீறல்களின் உச்சகட்டம் ஆட்டோக்கள். மீட்டர் கட்டணம் என்றால் என்ன என்பது, சென்னையிலேயே பல பேருக்குத் தெரியாது; தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. மீட்டர் கட்டணம் தான் என்றில்லை; மீட்டரே இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் ஓர் போக்குவரத்துத் துறை அதிகாரி, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். சரியான அளவில் மீட்டர் கட்டணம் வசூலிக்கும் வாகனங்களுக்கு சிறப்பு அடையாளம் பொருத்தப் போகிறார்களாம்; அந்த அடையாளத்தைப் பார்த்ததும், மக்கள், தயக்கமே இல்லாமல் ஏறி சவாரி செல்லலாமாம். இது என்ன கணக்கு என்றே புரியவில்லை.
விதிமீறாத ஆட்டோக்களைத் தேடித் தேடி அடையாளம் போடும் போலீசார், மீட்டர் கட்டணம் வசூலிக்காத ஆட்டோக்களைப் பிடிக்க வேண்டியது தானே! கட்டுப்படியாகாத கட்டணத்தை நிர்ணயிப்பானேன்; அதைக் கடைபிடிக்காத ஆட்டோக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பானேன்; அப்பாவி பயணிகளின் சாபத்தை வாங்குவானேன். எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த முறைகேடுகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி, எட்டு போடுவதில் நகரும் துட்டு.

கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு பத்திரிகை, இரு கால்களும் முடங்கி, நடக்கவே முடியாத நிலையில் இருப்பவருக்கும், அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கும், இருந்த இடத்தில் இருந்தபடியே டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் காட்டியது. அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன நம் ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்.
இறுதியாக ஒரு தகவலைக் கூறி முடிக்க விரும்புகிறேன்.
29 வயது இளைஞன். அழகன். புதிதாகத் திருமணமானவன். இரட்டைக் குழந்தைகளுக்குச் சொந்தக்காரன். 23 வயதில் சப் இன்ஸ்பெக்டராகத் தேர்வாகி, சட்டம், – ஒழுங்கு, உளவுத்துறை என பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவன்.
ஹெல்மெட் அணியாமல் வாசல் படி கூட தாண்டமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன், ஒரே ஒரு நாள் மட்டும் ஹெல்மெட் அணியாமல் பணி நிமித்தம் வெளியே கிளம்பினான். விபத்தில் அடிபட்டுச் செத்துப் போனான். அது, ஒரு பொங்கல் தினம். அவன், என் அருமைச் சகோதரன்.
இப்படி எத்தனை எத்தனை சகோதரர்கள் அனுதினமும் செத்துப் போகின்றனர் என்பதை எண்ணி, நான் வேதனைப்படாத நாள் இல்லை.
நம்முடைய பாதுகாப்பு தான் நம் குடும்பத்தின் பாதுகாப்பு என்பதை உணராததன் விளைவே, இத்தகையை விபத்துகள்.
உங்கள் வாழ்க்கை உங்கள் ஸ்டியரிங்கில்!
(ஜனவரி 1-8 வரை சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதன் நீட்சி இந்தக் கட்டுரை)

இந்த கட்டுரை தொடர்பாக வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

– ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாளர்

(Source: Dinamalar)

——————————–

இல்லறத்தில் தூய்மை இல்லத்திற்குச் சிறந்தது. சாலையில் ஒழுக்கம் நமக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் நல்லது. சாலையில் ஒழுக்கமில்லாத ஓட்டுநரும் ஒழுக்கமற்றவரே.

சட்டத்தை மதிக்காத சட்டாம்பிள்ளைகள்

முன்பெல்லாம் காசி யாத்திரை செல்வோரைத் தான், குடும்பத்தோடு ரோட்டுக்கு வந்து, கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்புவது வழக்கம். யாத்திரை செல்பவர் திரும்ப வருவாரா? மாட்டாரா? என்ற நிச்சயமற்ற தன்மையே அதற்கு காரணம். இப்போது, ரோட்டில் இறங்கினாலே போதும்; காசி யாத்திரை போன மாதிரி தான்; உயிரோடு திரும்புவதற்கான உத்தரவாதம் கிடையாது.
இந்தியா முழுவதும், ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எய்ட்ஸ் உள்ளிட்ட, உலகின் எந்தக் கொடிய நோய்க்கும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பலியாவது கிடையாது என்பதை, நான் தெரிவிக்க வேண்டியதில்லை. அவ்வளவு பெரிய ஆபத்தாக, சாலை விபத்துகள் உள்ளன.
இதில், தமிழகத்தின் பங்களிப்பு அலாதியானது. வேகமாக வளரும் மாநிலம் அல்லவா? கடந்த ஆண்டு மட்டும், அக்டோபர் வரை தமிழகத்தில் 10 ஆயிரத்து 742 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 11 ஆயிரத்து 592 பேர், தங்கள் இன்னுயிரை வேகவேகமாக இழந்துள்ளனர்.
வாகன எண்ணிக்கை: கடந்த நவம்பர் 1ம் தேதி கணக்குப்படி, தமிழகத்தில் சரக்கு போக்குவரத்துக்கான வாகனங்கள் 8 லட்சத்து 22 ஆயிரத்து 290 உள்ளன. தனி மனித பயன்பாட்டுக்கான வாகனங்கள் ஒரு கோடியே 9 லட்சத்து 30 ஆயிரத்து 996 உள்ளன.
தனது வாகனமான எருமையைக் கட்டி மேய்த்து, தீனி போடுவது கடினமான காரியம் என எம தருமன் நினைத்தானோ என்னவோ, தமிழகத்தில் ஓடும் அத்தனை வாகனங்களுமே, அவனது வாகனமாகத் தான் காட்சியளிக்கின்றன. இவற்றில் டூ வீலர்கள் மட்டும், 96 லட்சத்து 28 ஆயிரத்து 720. எருமைக் குட்டிகள்.
விபத்துகளைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, மத்திய, மாநில அரசுகள் பறைசாற்றி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 5,287 பேரின் டிரைவிங் லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 660 பேரின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவிக்கிறது.
குடித்து விட்டு: தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, “குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம்’ எனச் சொல்வது என்ன நியாயமோ, தெரியவில்லை. போலீசார் உண்மையாகக் களமிறங்கினால், சென்னையில் மட்டும், ஒவ்வொரு நாளும் 5,287 டிரங்க் அண்டு டிரைவ் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம். இந்த எண்ணிக்கையைத் தொட, பிரசவ வேதனை போல் பத்து மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
லைசென்ஸ்கள் சஸ்பெண்ட்; ரத்து; வாகனம் பறிமுதல்; டிரைவர் கைது; ஆயிரங்களில் அபராதம்; பல மாதங்கள் சிறை என, விதிமுறைகளுக்கும் கடுமையான சட்டத்துக்கும் குறைவில்லை. ஆனால், அதை அமல்படுத்தும் விதத்தில் தான் கோளாறு இருக்கிறது.
சிக்னல்களைப் பாருங்கள். சிவப்பு விளக்கு இருந்தாலும், தயங்காமல் ஏறிச் செல்பவை அரசு பஸ்கள் தான். விதியை அவர்கள் மீறுவது மட்டுமில்லாமல்; சிக்னல்களுக்காக சமர்த்தாக நிற்கும் சிவனாண்டிகளையும், ஹார்ன் அடித்து மிரட்டுகின்றனர் அந்த டிரைவர்கள். விதிகளை மதிப்பவர்கள் என்றால், அவ்வளவு இளக்காரம்.
இந்த டிரைவர்களை போலீசாராலோ, போக்குவரத்துக் கழகத்தாலோ எதுவும் செய்துவிட முடியாது. மவுன்ட் ரோடின் குறுக்கே பஸ்சை மறித்துப் போட்டுவிட்டால் என்ன செய்வது, என்ற பயம் தான் காரணம்.
யாரால் காப்பாற்ற முடியும்: அரசு எந்திரமே இப்படி பயத்தில் நடுங்கினால், யாரால் மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும்?
விதிமுறை என்று ஒன்று இருந்தால் அதை, கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும். அல்லது, அந்த விதிமுறையையே ரத்து செய்துவிட வேண்டும். டூ வீலர் ஓட்டுபவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறது. அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதால், ஐகோர்ட் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.
கொஞ்ச நாளைக்கு ஹெல்மெட் விற்பனை தூள் பறந்தது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரேஞ்சுக்கு, நடுத்தெருவில் வைத்து கூவிக் கூவி விற்றனர்.
எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். சில மதத்தினருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது; பெண்கள் அணிய வேண்டியதில்லை என்றனர்; பின்னால் அமர்ந்திருப்பவரையும் பெருந்தன்மையோடு விட்டுவிட்டனர். அவர்கள் உயிர் எல்லாம் போனால் போகட்டும் என்று நினைத்துவிட்டனரோ என்னவோ.
விளைவு? இன்று ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சென்னையைத் தாண்டி, கட்டாய ஹெல்மெட் சட்டம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. உடல் உறுப்பு தானம் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஹிதேந்திரன் கூட, அரசு விதியை மீறி, அப்பாவின் எச்சரிக்கையை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளானவன் தான் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
கார் சீட் பெல்ட்: அதே போல் தான், காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற காமெடி சட்டமும். பேன்ட் அவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, ஸ்டைலாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் இடுப்பு பெல்ட் அணியும் நம்மில் பலர், காரில் பயணிக்கும்போதோ ஓட்டும்போதோ சீட் பெல்ட் அணிவதில்லை. அதில் என்ன அலர்ஜியோ!
அத்தனை வாகனங்களுக்கும் எமிஷன் டெஸ்ட் எனப்படும், புகை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பெட்ரோல் பங்க்குகளில் விசேஷ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் சில நாட்களுக்குத் தான்.
“நம் வண்டியில் இருந்து எழும் புகை, பின்னால் வருபவனைத் தானே பாதிக்கும்; போகிறது போ’ என அலட்சியமாக விட்டுவிட்டார்கள். முன்னால் ஓடும் வாகன ஓட்டுனரும் அதே மாதிரி நினைத்தால், அவரது வாகனம் விடும் புகை நம்மை பாதிக்குமே என நினைக்காமல் விட்டுவிட்டனர்.
ஆயிரம் சட்டங்கள் வந்தாலும், தனி மனித ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாவிட்டால், எந்தச் சட்டங்களும் எடுபடாது என்பதற்கு, இவையெல்லாம் உதாரணங்கள்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் லைசென்ஸ் தர வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இன்று பெருந்தனக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைப் பாருங்கள். மீசை முளைக்காதவர்கள், அரைக்கால் சட்டை போட்டவர்கள் எல்லாம் டூ வீலரில் கம்பீரமாக வலம் வருகின்றனர். இவர்களை என்ன செய்வது? இவர்கள், லைசென்ஸ் இல்லாமல் தான் வாகனம் ஓட்டுகின்றனர் என்பது பள்ளி நிர்வாகங்களுக்குத் தெரியாதா? அல்லது, பெற்றோருக்குப் புரியாதா?
நம் பிள்ளைகள் பத்திரமாக ஓட்டுவர் என்ற நம்பிக்கை தான் இந்த அலட்சியத்துக்கு காரணம். ஆனால், நம் அஜாக்கிரதையால் மட்டுமல்ல; எதிரே வருபவர்களின் கவனக் குறைவாலும் விபத்துகள் ஏற்படும் என்பது இவர்களுக்குப் புரியவில்லை.
உச்ச கட்டம்: சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு பற்றி பேச கிளம்பிவிட்டு, ஆட்டோக்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. விதிமீறல்களின் உச்சகட்டம் ஆட்டோக்கள். மீட்டர் கட்டணம் என்றால் என்ன என்பது, சென்னையிலேயே பல பேருக்குத் தெரியாது; தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. மீட்டர் கட்டணம் தான் என்றில்லை; மீட்டரே இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் ஓர் போக்குவரத்துத் துறை அதிகாரி, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். சரியான அளவில் மீட்டர் கட்டணம் வசூலிக்கும் வாகனங்களுக்கு சிறப்பு அடையாளம் பொருத்தப் போகிறார்களாம்; அந்த அடையாளத்தைப் பார்த்ததும், மக்கள், தயக்கமே இல்லாமல் ஏறி சவாரி செல்லலாமாம். இது என்ன கணக்கு என்றே புரியவில்லை.
விதிமீறாத ஆட்டோக்களைத் தேடித் தேடி அடையாளம் போடும் போலீசார், மீட்டர் கட்டணம் வசூலிக்காத ஆட்டோக்களைப் பிடிக்க வேண்டியது தானே! கட்டுப்படியாகாத கட்டணத்தை நிர்ணயிப்பானேன்; அதைக் கடைபிடிக்காத ஆட்டோக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பானேன்; அப்பாவி பயணிகளின் சாபத்தை வாங்குவானேன். எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த முறைகேடுகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி, எட்டு போடுவதில் நகரும் துட்டு. கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு பத்திரிகை, இரு கால்களும் முடங்கி, நடக்கவே முடியாத நிலையில் இருப்பவருக்கும், அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கும், இருந்த இடத்தில் இருந்தபடியே டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் காட்டியது. அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன நம் ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்.
இறுதியாக ஒரு தகவலைக் கூறி முடிக்க விரும்புகிறேன்.
29 வயது இளைஞன். அழகன். புதிதாகத் திருமணமானவன். இரட்டைக் குழந்தைகளுக்குச் சொந்தக்காரன். 23 வயதில் சப் இன்ஸ்பெக்டராகத் தேர்வாகி, சட்டம், – ஒழுங்கு, உளவுத்துறை என பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவன்.
ஹெல்மெட் அணியாமல் வாசல் படி கூட தாண்டமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன், ஒரே ஒரு நாள் மட்டும் ஹெல்மெட் அணியாமல் பணி நிமித்தம் வெளியே கிளம்பினான். விபத்தில் அடிபட்டுச் செத்துப் போனான். அது, ஒரு பொங்கல் தினம். அவன், என் அருமைச் சகோதரன்.
இப்படி எத்தனை எத்தனை சகோதரர்கள் அனுதினமும் செத்துப் போகின்றனர் என்பதை எண்ணி, நான் வேதனைப்படாத நாள் இல்லை.
நம்முடைய பாதுகாப்பு தான் நம் குடும்பத்தின் பாதுகாப்பு என்பதை உணராததன் விளைவே, இத்தகையை விபத்துகள்.
உங்கள் வாழ்க்கை உங்கள் ஸ்டியரிங்கில்!
(ஜனவரி 1-8 வரை சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதன் நீட்சி இந்தக் கட்டுரை)

இந்த கட்டுரை தொடர்பாக வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

– ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s