பை பை லிபர்டி


நேற்று எதேச்சையாக லிபர்டி திரையரங்கம் உள்ள சாலையில் நடந்து சென்றபொது, அவ்விடம் கீற்றுக்கொட்டகை கொண்டு மூடப்பட்டிருப்பதையும், வாசல் கதவுகள் பெயர்ந்திருப்பதைப் பார்த்ததும், சற்றே துணுக்குற்றவனாய் உள்ளே நோக்குகையில் திரையரங்கம் மூடப்பட்டது தெரிய வந்தது. அதன் சேர்கள் அனைத்தும் வெளியே கடாசப்பட்டிருந்தன.  அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அவர்களும் வருத்தப்பட்டவாறு திரையரங்கம் மூடப்பட்டதைச் சொன்னார்கள். கோடம்பாக்கத்தில் பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்த போது, அடுத்த வீதியில்  அமைந்திருந்த இத்திரையரங்கம் அவ்வப்போது எங்களுக்கு பொழுது போக்கு மையமாக உதவியிருக்கிறது. சும்மா வாங்க ஒரு [...]