திருவரங்கம் நினைவுகள்


வீடு விட்டு வேறு இடம் எதையும் விரும்பாத வீட்டுப்புழுக்களில் நானும் ஒருவன். விதி வேறு மாதிரி விளையாடி பணி பணம் என்று தற்சமயம் சென்னையில் ஜாகை கொண்டாலும் சொந்த இடம் தேடிப்போகும் நாளுக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்திருப்பவன். அதில் தவறு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சக நண்பர்களுக்கும் அந்த நினைப்புகள் இருந்தவண்ணம் இருக்கின்றன என்பதே உண்மை. கொசுவத்தி சுத்துவது இருக்கட்டும். இந்தப் பழமை பதிவு திருவரங்கம் பற்றியது. கொஞ்சம் 18 வருடங்கள் பின்னால் செல்லலாம். பழங்கதைன்னா [...]

பத்திரிக்கை உலகையும் தொலைக்காட்சி ஊடகத்தையும் சிதைத்த அரசியல் இன்று பதிவுலகையும் சிதைக்கிறதா?


சில பல பதிவுகளைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. அரசியல் ரீதியான பதிவு என்றால் சாக்கடை மாதிரி மூக்கைப் பொத்திக்கொண்டு போக வைத்து விடுகிறார்கள் நம் வலைப் பதிவர்கள். ஆக்கப்பூர்வமான கட்டுரைகளோ விமர்சனங்களோ எழுதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவ்விடமும் வெற்றி நமதே, குற்றி நமதே என்று அலம்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது பதிவுலக ஆர்வத்திற்கு வைக்கப்படும் தீ! யாரோ ஒரு அரசியல் கட்சிக்கு பதிவுலகில் வந்து பிரச்சாரம் செய்யும் இந்த அறிவாளிகளின் நோக்கம் என்ன? இந்தத் தேர்தல் [...]