இது ஒரு பொன்மாலைப் பொழுது – ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்


ஒரு நண்பரைச் சந்திக்க கும்பகோணம் பயணம் செய்யவேண்டியிருந்தது. திருச்சி - புதுகை சாலை ஒற்றைச் சாலையாக இருந்த போது கூட தஞ்சை - புதுகை மாநிலச் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தது. என்றாலும் பொதுவான தேவைகளுக்கு புதுகை மக்கள் திருச்சியையோ அல்லது மதுரையையோதான் இன்றும் சார்ந்திருக்கிறோம். இதனால் காரண காரியம் இல்லாமல் தஞ்சைத் தரணிக்கு விஜயம் செய்வது மிகக் குறைவு. காரணம் ஒன்று இருக்கிறது என்றவுடன் மனதில் தோன்றியது அழகு கொட்டிக் கிடக்கும் தாராசுரம். யுனெஸ்கோவினால் கடந்த காலத்தில் தத்தெடுக்கப்பெற்ற [...]