ரே – யமஹாவின் ஸ்கூட்டர் அறிமுகம்


இந்தியாவில் யமஹா சற்று அழுத்தம் திருத்தமாக சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஸ்கூட்டர் வழக்கொழிந்துவிட்டது என்று நினைக்கையில் பஜாஜ் சன்னி ரோடுகளில் வலம் வர பிறகு டிவிஎஸ் ஸ்கூட்டி – ஹோண்டா ஆக்டிவா என்று விரிந்த ஸ்கூட்டர் மார்க்கெட் வெகு விரைவில் இளம் வயதினரை – குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகம் விரையும் இளம் பெண்களை வளைத்துக் கொண்டது. தற்சமயம் ஹோண்டா, டிவிஎஸ், ஹீரோ, மஹிந்திரா, என்று கடும் போட்டி நிலவுகிறது.

44ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஸ்கூட்டர்கள் பலதரப்பட்ட மாடல்களில் கிடைக்கின்றன. அதனை ஒட்டி யமஹா கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ரே ஸ்கூட்டர் செய்தியை வெளியிட்டது. பைக்குகளுக்கு ஜான் ஆபிரகாம் உள்ளதைப் போல ஸ்கூட்டர்களுக்கு தீபிகா படுகோனை விளம்பரத் தூதராகவும் நியமித்தது.

சந்தையில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் ரே ஸ்கூட்டரை வெளியிட்டது யமஹா.

Yamaha Ray
Yamaha Ray

அதன் விபரங்கள் கீழே

Spec யமஹா ரே ஹோண்டா ஆக்டிவா
எஞ்சின் 113சிசி 109 சிசி
முறுக்குவிசை Torque 7.1PS at 7500rpm and 8.1Nm of torque 5.71KW (8bhp) @ 7500 RPM
மைலேஜ் 62.1கிமீ/லி 35கிமீ/லி
எடை 104 கிலோ 110 கிலோ
பிரேக் 130மிமீ டிரம் 130மிமீ டிரம்

12 விநாடிகளில் 60 கிமீ வேகத்தை அடையும் ரே ஸ்கூட்டரின் 60+ மைலேஜ் ஒரு வியாபார உத்தியாகும் என்பதில் ஐயமில்லை

ரே ஸ்கூட்டரை வாங்க வரபவர்களை பெண்களை வைத்தே வரவேற்கவும் தயாராகிறதாம்!

மற்றவற்றை விட குறைந்த எடை என்பதால் எளிதாகக் கையாள வாய்ப்பு உள்ளது

சீட்டின் உயரம், சைடு ஸ்டாண்டு, மையப்பகுதியின் டிசைன் ஆகியவை முழுக்க பெண்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிங்க், கருப்பு, நீலம், கத்திரப்பூ, சாம்பல் மற்றும் அரக்கு (burgundy) என்று 6 வர்ணத்தில் வர இருக்கிறது.

சென்னை விலைக்கு 54ஆயிரம் விலைக்கு வர உள்ளது. புக்கிங் ஆரம்பித்துள்ளது என்றாலும் வண்டி இந்த மாத இறுதியில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Yamaha ray scooter Adv
Yamaha ray scooter Adv

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s