பேஜியோ வெஸ்பா LX125 ஸ்கூட்டர்


வெஸ்பா ஸ்கூட்டர் திரும்ப இந்திய ரோடுகளை ஆக்கிரமிக்க வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஸ்கூட்டர் ரேஸ் வெகு பிரமாதமாக நடக்கிறது – நடக்க இருக்கிறது நம்ப ஊரில். ஏற்கனவே யமஹா ரே ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி ரேசில் கலந்து கொண்டுள்ளது. 18 முதல் 24 வயதுள்ள பெண்களை வளைத்துப்போட அந்த அழகு ஸ்கூட்டர் சதித்திட்டம் தீட்டி உள்ளது. பார்த்துக்கொண்டிருப்பாரா இந்தாலி பேஜியோ? அந்தக் காலத்திலேயே இந்திய ரோட்டின் பல்ஸ் பார்த்தவராயிற்றே. பெண்கள் மனம் கவரும் பல வண்டிகளை வெஸ்பா LX125 பெயரில் வெளியிட உள்ளனர். ஆரஞ்சு மற்றும் பிங்க் வர்ணத்தில் வர்ணத்திலும் இந்த ஸ்கூட்டர் வரப்போவதாக செய்திகள் உலா வருகிறது. வரும் தீபாவளிக்குள் தெரிந்துவிடும். காத்திருங்கள்.

2012-Piaggio-Vespa-LX125-Automatic-Scooter
2012-Piaggio-Vespa-LX125-Automatic-Scooter

ஹோண்டா, ஸுஸுகி, ஹீரோ நிறுவன ஸ்கூட்டர்கள் மாதிரி பெண்களுக்கான வண்டியாக இல்லாமல் இரு பாலினருக்கும் ஏற்றபடி வெஸ்பா ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கொஞ்சம் இருக்கப்பட்டவர்கள் வாங்கும்படிதான் விலை இருக்கும் போல. மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 66ஆயிரம் ஆகிறது. ஆனாலும் இதன் உயர்தர ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் பிராண்டு இமேஜ் உடன் இந்திய ஸ்கூட்டர் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.

2012-Piaggio-Vespa-LX125-in-pink
2012-Piaggio-Vespa-LX125-in-pink

வெஸ்பா LX125 ஸ்பெக்:
3 வால்வ்
125 சிசி 4 ஸ்ட்ரோக் CVT தானியங்கி டிரான்ஸ்மிஷன்
10 Bhp@10.6 Nm முறுக்குவிசை
மைலேஜ் – 60 கிமீ

News & Pictures (c) http://www.indiancarsbikes.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s