சீனா – விலகும் திரை II


சீனா – விலகும் திரை
ஆசிரியர்பல்லவி அய்யர்
தமிழில்ராமன் ராஜா
பரிந்துரைத்தவர்தமிழ் பயணி
பதிப்புகிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-164-8

china01

china02

china03

☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻

பாகம் I : https://kadaisibench.wordpress.com/2013/02/23/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-i/

இந்தப் புத்தகத்தில் நான் அறிந்த இன்னொரு விசித்திர செய்தி உள்நாட்டு பாஸ்போர்ட் (Hukou). பல்வேறு வித்தியாசங்கள் கொண்ட நம் நாட்டில் இல்லாத ஒன்று. தமிழ் நாட்டுக்காரன் பெங்களூரில் பணி செய்ய பாஸ்போர்ட் எடுக்கவேண்டிய நிலை. கள்ளத்தோணி ஏறினால் சிறை அல்லது கடத்திக் கொண்டு போய் சொந்த ஊரில் தள்ளிவிடுவார்கள்.

hucau

இதென்ன விசித்திர முறை என்று தோன்றியது. அதைவிட விசித்திரம் இந்திய நகரங்களைக் காரணம் காட்டிதான் அந்த முறையை நியாயப்படுத்தி இருக்கிறார்கள் என்பது. நகரக் குடியேறலுக்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்றால் இந்திய நகரங்கள் மாதிரி நமது நகரங்கள் ஆகிவிடும் என்று ppt presention செய்யாத குறை! இங்கிருக்கும் திறந்த சாக்கடையும் அதன் குடலைப் பிடுங்கும் நறுமணமும் டிராபிக் பிச்சைக்காரர்களும். இவர்கள் எல்லாம் சீனாவில் இருந்தால் என்ன ஆகும்? மானம் போய்விடாது?

ஆனால் காலம் மாற அதற்கும் காலம் கணிந்திருக்கிறது. சீர்திருத்தம் தொடங்கிவிட்டது. தொழிற்சாலைக்கு அதிகப்படியான தொழிலாளிகள் தேவைப்பட்டிருக்கிறார்கள். எனவே நகரக் குடியேறல் கொள்கைகளில் தளர்வு. பின்னாளில் அது தேவையில்லை என்று ஆகியிருக்கிறது. என்றாலும் நாட்டான்கள் வீதிகளில் உலவினால் வீதி அழகே போய்விடும் என்று அவர்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அனுமதித்துள்ளது என்ற செய்தி. பாமா விஜயத்தில் குழந்தைகளை அறையில் போட்டுப் பூட்டும் சவுகார் ஜானகி நியாபகம் வருகிறதா? கம்யூனிச செஞ்சீனத்தில் தொழிலாளர்கள் மேலாண்மை இது.

அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை

ஒலிம்பிக் வந்தது. சீனா நடத்தப்போகிறது. புதிய கட்டுமானங்கள் பெய்ஜிங்கில் துவங்கின. பெய்ஜிங் விமான நிலையத்திற்கு புது முனையம் ஒன்று. செயற்கை ஏரி ஒன்று. இப்படி ஒரு டஜன் கட்டுமானங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. 2002லிருந்து 2008க்குள் 2,50,00,000 சதுர மீட்டருக்குப் புதிய ரியல் எஸ்டேட் திட்டம் ஆரம்பிக்கப்போகிறது என்று அலறுகிறது சீன ரேடியோ. இங்கு எல்லாமே பெரிய எண்கள்தான். இத்தனை ஏக்கர் இடம் என்ன புதிதாகவா முளைக்கும்? ஏற்கனவே கட்டுமானங்கள் இருக்கும் இடங்களைத் தூர்த்துவிட்டு, அங்கே வசிப்பவர்களை மூட்டை கட்டி வேறு இடத்திற்கு தள்ளிவிட்டுவிட்டு அங்கே புது கட்டுமானங்கள் வந்து உட்கார்ந்து கொள்ளும். இந்தியாவில்? குடிசைகளைக் காலி பண்ணிவிட்டு கண்ணகி நகர் தொகுப்பு வீட்டுக்குப் போ என்றால் பெரிய பிரச்சினையே உண்டாகிறது. சில சமயங்களில் குடிசைகள் பற்றி எரிகின்றன. எத்தணை கலவரம்?

chai4

chai3

chai2

chai

உங்கள் வீடு/கடையை இடிக்கப்போகிறோம். இப்படி ஒரு அரசு சொன்னால் எப்படி இருக்கும். அதே தான் நடந்திருக்கிறது. ஒரு வீதிக்கல்ல. ஒரு நகரத்திற்கே. ஒட்டுமொத்தமாக நுணுக்கித்தள்ளிவிட்டுவிட்டு புதிய நகரையும் புதிய வீதி சாலைகளையும் நிர்மாணிப்பது என்பது…. சீனாவில் மட்டுமே முடிகிற ஒரு காரியமாகத் தோன்றுகிறது. அப்ப இருக்கற மக்கள்? அவர்களை இடம் மாற்றிவிடுவதுதான். நம்ப ஊரில் புயல் அடித்து தண்ணி வந்தால்தான் பக்கத்து பள்ளிக்கூடத்திற்கே நகர்ந்து போவார்கள். ஆனால் நடந்திருக்கிறது. ஒலிம்பிக் பெயரைச் சொல்லி. அதிசயம்தான். என்னடா உங்க ஊரில இப்டிப் பன்றாய்ங்க என்று ஆசிரியர் கேட்டதற்கு. ‘மாற்றம் ஒன்றே மாற்றமில்லாததுஎன்று சிக்ஸர் அடித்திருக்கிறார்கள் சீன மாணவர்கள்!

அது ஒரு கான்கிரீட் கட்டடம் இது சீனம். ஒட்டடை படிந்த சுவர் கூட ஒரு நியாபகார்த்தம் இது இந்தியம்! என்ன செய்வது?

புத்தம் புது மெகா கட்டுமானங்கள் பக்கத்தில் அதற்குச் சற்றும் சம்பந்தப்படாத வயதானவர்கள். அதன் அருகில் விசிறி நடனப் பயிற்சி செய்யும் நடனமாதுக்கள் முரண்பாடுகளின் மூட்டை!

beijing olympic 2008

எப்படி மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ஆசிரியர் வரலாற்றில் பதில் தேடுகிறார். காலம் காலமாக மாற்றம்தான் அவர்களிடம் வந்திருக்கிறது. முடியரசுகளின் காலத்திலிருந்து. இந்த நிலை வருவதற்குப் பின்னால் எத்தணையே தலைகீழ் மாற்றங்களை சீன நகரங்கள் கடந்து வந்திருக்கின்றன. ஒரு மாற்றம் வரும்பொழுது நடைமுறை நியாபகார்த்தங்கள் விருப்புக்கள் புல்டோசர் வைத்து இடிக்கப்படுகின்றன – மீண்டும் மக்கள் மாறுகிறார்கள் புதுமை வந்து அமர்கிறது.

பழசையெல்லாம் மற – சரித்திரத்தை உடை தொப்புள்கொடியை அறுத்துப்போடு” என்பதே கம்யூனிஸ்ட்களின் முக்கியப் பிரச்சாரம் என்று அமைதி கொள்வதாக ஒலிம்பிக் கட்டுரை அமைகிறது.

மொழி

சீன அனுபவம் என்றால் அதன் மொழி இல்லாமலா. பொதுவாக அனைவருக்கும் தெரியும் அங்கே எழுத்துக்கள் கிடையாது ஐடியோகிராம்தான். ஆனால் அவற்றை எப்படி உச்சரிப்பது என்று ஆசிரியர் விளக்குவது விந்தையானது. பாவம் நம்மை மாதிரி மக்கள் ஜீவிப்பது கடினமே. அது போக லோக்கல் பேச்சு வழக்கு வேறு!

mandarin

ஒலிம்பிக்சுக்கு ஊரை மாற்றுவீர்கள் சரி. ஆங்கிலத்தைக் கொண்டுவரனுமே.. வரும் டெலிகேட்சுகள் டாக்சியில் ஏறினால் என்ன ஆவது? தொடங்கியது ஆங்கில வகுப்புக்கள். மாண்டரின் நாக்கு ஆங்கிலத்தைப் பீராயத்தொடங்கின. சீனமும் ஆங்கிலமும் சேர்ந்த சிங்கிலீஷ் போர்டுகளைப் பற்றிய ஆசிரியரில் உதாரணங்கள் சிரிப்பை வரவழைக்கும்

உயிருள்ள குப்பைகள்

தீயின் விதைகளை இங்கு இறைக்காதீர்கள்

இனப் பகை பூங்கா

chinglish

chinglish2

chinglish3

chinglish4

இவை எல்லாம் தமிழாக்கம் செய்யப்பட்ட சிங்கிலீஷ் போர்டு வாசகங்கள். ம்ம்.. மாற்றம் அப்படித்தான் இருக்கும்!

2 thoughts on “சீனா – விலகும் திரை II

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s