சீனா – விலகும் திரை – IV (இறுதி)


சீனா – விலகும் திரை
ஆசிரியர்பல்லவி அய்யர்
தமிழில்ராமன் ராஜா
பரிந்துரைத்தவர்தமிழ் பயணி
பதிப்புகிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-164-8

Thanks Dinamani – http://dinamani.com/blogs/submit_blog_article/article1479823.ece

china01

china02

china03

☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

இந்தியாவால் முடியும் என்பதை எப்படி அறிவது?

வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்

பொருளாதார சக்தியாக வளர்ந்த பின்பே வளர்ச்சியை சமூகத்தின் இதர நிலைகளுக்குக் கொண்டு செல்லவேண்டும். இல்லையென்றால் இதன் ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார பலூனில் ஊசி குத்திவிடும் என்பதை உணர்கிறது சீனா (புத்தகத்தின் மூலமான புரிதல்). மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலமாக அந்த வேலையை இப்பவே இந்தியா பார்த்துக்கொள்கிறது (பார்க்க: Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) என்கிறார் இந்த நூலைப் பரிந்துரைத்த நண்பர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று மன்மோகன் இதனைக் குறிப்பிட்டது நினைவில் உள்ளது. விவசாயப் பணிகளைப் பாதிக்கிறது என்கிற விமர்சனத்துடன் இந்தத் திட்டத்தையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நக்ஸல்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மேலும் மக்களை நக்ஸல்கள் பக்கம் திருப்பாமலிருக்க இந்தத் திட்டம் உதவுமென்றால் – சமூக சமநிலை கருதி நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கிராமச் சாலைகள்

இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது கடந்த வருடம் இந்தியா டுடே தமிழ் இதழில் வந்த கிராமப்புற மாற்றங்கள் பற்றிய கட்டுரை நினைவிற்கு வருகிறது. முன்னெப்போதும் சாலைகளைப் பார்த்திராத கிராமங்களில் தற்சமயம் சாலைகள் போடப்படுகின்றன. (பார்க்க: Pradhan Mantri Gram Sadak Yojana) உள்ளுர் கிராம விளைபொருட்களை நகரத்திற்குக் கொண்டு போக – பிள்ளைகள் படிக்க பள்ளிக்குப் போக என்று போக்குவரத்து என்பது முன்பை விட இந்தியாவில் நல்ல முறையில் மாற்றப்படுகிறது. அதிலும் கிராமப்புற சாலைகள் என்று பார்க்கும்போது தமிழகத்தில் அது சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்கள். நல்ல மாற்றம்தான். ஆனால் தாமதமான மாற்றம்.

Pradhan-Mantri-Gram-Sadak-Yojana

நான் பிறந்த ஊருக்கு எனக்கு 29 வயதாகும்போது பேருந்து போனது. இல்லையேல் 3 கிமீ நடந்து சென்று அடுத்த ஊருக்குப்போய்தான் எல்லாம் செய்யவேண்டும். இன்றைய தேதிக்கு 2 பேருந்துகள் சேர்ந்து ஒரு நாளைக்கு 3 சிங்கள் அடிக்கின்றன. மாசம் 70லிருந்து 150 வரை கொடுத்துப் பார்க்க கேபிள் வந்துள்ளது. சில பல வீடுகளில் டிடிஎச் ஆண்டனாக்கள் வந்துள்ளன. நரேகா செய்த புண்ணியம். கிராமங்களில் உள்ள சில கீழ்தட்டு பல மேல்தட்டு வர்க்கத்தினரில் பிள்ளைகள் பொறியியல் பட்டதாரிகளாகிறார்கள். அவுட்சோர்சிங் புண்ணியத்தில் அயல்நாடுகள் கூட பறக்கிறார்கள். அமெரிக்கப் பணம் அத்திப்பட்டிக்கு மணிகளில் வந்து சேர்கிறது. இது சமீபத்திய கால மாற்றங்கள் – நேர்மறை மாற்றங்கள்.

இளம்பிள்ளை வாதத் தடுப்பு

இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் பெரிய நாடாக இருந்தது இந்தியா. சென்ற வருடம் ஒரு கேஸ் கூட இல்லை என்று அறிவித்துள்ளார்கள். நிஜமாகவே ஒரு சபாஷ் போடலாம். இத்தணை ஏக்கரா இந்தியாவில் ஒரு நோயை ஒட்டு இல்லாமல் அழிப்பது என்பது தொடர் முயற்சிகளால் மட்டுமே முடியும். (பார்க்க: http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=91539)

Polio National Immunisation Day

155,000 மேல்பார்வையினர்களின் கீழ் 2,500,000 பணியாளர்கள் 172,000,000 குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் கொடுக்கிறார்கள் என்பது சாமானியப்பட்ட விசியமா என்ன? பேருந்து நிலையம் – புகைவண்டி நிலையம் – வானூர்தி நிலையம் என்று இந்தியாவின் அத்தணை இடங்களும் சல்லடையாய் சலிக்கப்பட்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து போடப்பட்டது. ஒரு முறை என் மகனுடன் தெருவில் நடந்து வந்தபோது போலியோ மருந்து போட்டேனா என்று விசாரித்து – போட்டேன் என்று சொல்லியும் நம்பாமல் அவனுடைய விரல் மையைப் பரிசோதித்த சுகாதாரப் பணியாளரையும் – இன்னொரு முறை மணப்பாறை பேருந்து நிலையத்தில் பேருந்தின் உள்ளே ஏறி சோதனை செய்தவரையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.   இந்தியா “நினைத்தால்” முடியும் என்பதற்கு இந்த ஒரு உண்மை உலகிற்கே போதும்.

திரும்பவும் சீன நினைவு

ஒரு பிள்ளைதான் பெற்றுக்கொள்ளவேண்டும் – பிள்ளை பெறுவதற்கு நிர்வாகத்தின் அனுமதி வேண்டும் என்பதெல்லாம் இந்திய மனதிற்கு சற்றும் ஒவ்வாதது. நாமிருவர் நமக்கிருவர் என்று நம் அரசால் லாரி பின்னாடிதான் எழுதமுடியும். அதற்கு மேல் பெற்றுக்கொள்வோரை காயடிக்கவா முடியும்? ஆனால் கடுமையான சட்டங்களால் சீனர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இது வெகுஜன விரோதம் என்பதை விட பொருளாதார பாதிப்பையும் சீனாவில் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். ஒரு வீட்டுக்கு இரு பிள்ளைகள் இருந்து சம்பாதிப்பது எப்படி? ஒருவர் இருந்து சம்பாதிப்பது எப்படி? சம்பாதிப்பவர்களைச் சார்ந்திருக்கும் சம்பாதிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை (குழந்தைகள் – முதியவர்கள்) விகிதச் சமன்பாடு பாதிப்படைவதாகச் சொல்கிறார்கள்.

புத்தரைக் கும்பிட்டார்கள். பின்னாளில் தோழர் கவர்மெண்ட் வந்து அது எல்லாம் மாயை என்றார்கள். சொல்வதில் குற்றமில்லை. எல்லாத்தையும் உடைத்தெரிந்தார்கள். பிறகு அரசாங்கம் மீதான விமர்சனங்கள் போராட்டங்கள் அதிகமானதில் ஒரு மன மயக்க மருந்தாக திரும்ப ஆன்மீகத்தைப் புகுத்துகிறார்கள். அரசாங்கத்தின் உதவியால் தெய்வங்கள் உயிர்பெருகின்றன. அவற்றைப் பராமரிக்க அரசாங்க உளவாளிகள் பின்புலனுடன் மடாதிபதிகள்.

இதை எல்லாம் பார்க்கையில் சமூக மாற்றங்கள் பற்றி சீனா கவலைப்படவில்லை என்று சொல்லக்கூடாது. அது பற்றியான நிலையான பயத்தில் இருந்திருக்கறது என்றுதான் சொல்லவேண்டும். நாலு பேர் கூடிப்பேசினால் என்ன பேசுவார்களோ. சிவப்புக் கொடியில் அழுக்குப் படிந்திடும் – அரசாங்கம் கவுந்திடும் என்று அடக்குமுறையை ஏவுகிறார்கள். பணத்தை மட்டும் யோசி என்கிறார்கள். அதன் எதிர்வினையான சமூகப் பிரச்சினையைக் கண்டு தத்தளிக்கிறார்கள். திரும்ப மந்திரம் போட்டு நா(மா)ட்டைப் பொருளாதாரத் தடத்தில் செலுத்துகிறார்கள். ம்ம். கண்கட்டி வித்தை.

இந்தியா – உதடு பிதுக்கும் தருணம்

ஆனால் அதே சமயத்தில் இந்தியா செய்யாது போன நிறைய விசியத்தை இந்தியா செய்யாது போய் இருக்கிறது. நில ஆர்ஜிதம், சமூக இனவாதம் போன்றவற்றில் இந்திய அரசிற்கான எதிர் குரல் கொடுக்கும் நிலையின் நான் இல்லை. ஆனால் ஒரு சில இடத்தில் இந்திய அரசுக்கெதிரான கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்யவேண்டிய நிலையிலேயே இருக்கிறோம்.

  1. கல்வித்தர மேம்பாடு
  2. சுகாதார நலன் மேம்பாடு
  3. உற்பத்தி – போக்குவரத்து மேம்பாடு
  4. நீதித்துறை சீர்திருத்தம்

நம்மூர் ஐந்தாண்டுத் திட்டங்களால் இவற்றை சரிவரச் செய்யமுடியவில்லை. இது மிகக் கடுமையான குறைபாடு. அடிப்படை வசதிகளான இவற்றை உலகம்போற்றும் ஜனநாயக வாதிகளால் செய்ய முடியாததை ஒரு சர்வாதிகார நாடு செய்திருக்கிறது என்கிறபோது ஒவ்வொரு இந்தியனும் – கவுன்சிலர் தொடங்கி ஜனாதிபதி வரை வெட்கமும் படவேண்டிய ஒரு விசியம்.

சிங்கிலீஷ் பற்றிய கட்டுரை இந்தப் புத்தகத்தில் திருவிளையாடல் தருமி போன்று சித்திரிக்கப்பட்டிருந்தாலும் கல்வி-மேம்பாடுக்கான சீனாவின் தாகமும் அதை நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டிய அக்கரையும் – கட்டாயமும்தான். நில ஆர்ஜிதத்தில் காட்டும் மெத்தனமும் கல்வியில் காட்டும் மெத்தனமும் ஒன்றல்ல. கல்விக்கான இந்தப் புலம்பலின் போது இதே கம்யூனிசம் பேசும் நக்ஸல்கள் பள்ளிக்கூடங்களைத் தகர்ப்பதும் நினைவிற்கு வருகிறது. சீனா இதையா செய்தது? கல்விக்கூடங்களைத் தகர்ப்பவர்கள் கையில் இந்தியாவைத் தொலைக்கக்கூடாது என்று தோன்றுகிறது. ஆனால் கம்யூனிசம் என்கிற ஒரு வார்த்தை ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மாதிரியாக கம்யூனிச வாதிகளால் அர்த்தம் கொள்ளப்படுகிறது – “polymorphism”!

அடுத்த x ஆண்டுகளில் n பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்போகிறோம் என்று அடுத்த தாவல் அறிவிப்பு ஒரு மாதத்திற்கு முன் வந்தது சீனாவிலிருந்து. உலகளாவிய போட்டிச் சந்தையில் நம் மக்களை இது சாய்த்துவிடக்கூடாது என்பதை நாம் உணரவேண்டும்.

பிள்ளையார் சிலையே ஆனாலும் இந்தியாவை விட யிவு நகரின் மொத்த விற்பனைக் கடைகளில் விலை சல்லிசு. இந்த நிலை எல்லாத் துறைகளிலும் வருகிறது என்பதுதான் இங்கே விசியம். சீனப் பொருட்கள் தரம் குறைந்தது என்றால் ஆப்பிள் – HP பொருட்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன. ஆக சீன மனித உழைப்பும் மேற்கத்திய தர நிர்ணயமும் சேர்ந்தால் தரமான பொருட்கள் கிடைக்கும் என்று நிருபணம் ஆகி உள்ளது. இங்கிலீஸ்னா அவனுகளுக்கு என்னான்னே தெரியாது என்று மென்பொருள் அவுட்சோர்சிங் துறையில் சமீபத்தில் பீற்றிக்கொண்டோம். இன்று முடியாது. நான் இரண்டு சீன மேலாளர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். இந்த பல்கலைக்கழகங்கள் உலகுக்கான கூலிகளின் மொத்த விற்பனை நிலையங்களாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. Biddingல் எதிர்காலத்தில் நிறைய சீன நிறுவனங்கள் வரலாம். நாம் சாராயக்கடை விரிப்பதை விடுத்து கல்வியில் மாறியே தீரவேண்டும். உலகின் டாப்200 பல்கலையில் ஒன்று கூட நம்மூரில் ஒன்று கூட இல்லை. எப்படி இருக்கும். சாராய வியாபாரி தனியார் பல்கலைக்கடைகள் நடத்தினால்?

ஒருவேளை பல்கலைக்கடைகளின் தரம் நாளுக்கு நாள் தேய்ந்தால், மேற்சொன்ன சீனப் பல்கலைக்கழகங்கள் சந்தையை எளிதில் கைப்பற்றும் வாய்ப்புகள் உண்டு. தயாரிப்புகளில் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை நாம் பெறாத பட்சத்தில் நாளுக்கு நாள் பின்தங்கவே நேரிடும்.

A survey of human resource professionals at multinational corporations in India revealed that only one quarter of engineering graduates with a suitable degree could be employed irrespective of demand – பார்க்க http://www.mit.edu/~lrv/writing/Private_Engineering_Education_in_India_Market_Failures_and_Regulatory_Solutions.pdf

போலியோவை விரட்டியதும் இந்தியாதான். பொதுக் கழிப்பிடங்களைப் பார்க்க முடியாத வீதிகளைக் கொண்டதும் இந்தியாதான். இருக்கும் பொதுக்கழிப்பிடங்கள் கிருமிகளின் ஒட்டு மொத்தக் கிடங்குகள். உருப்பிடாத திடக்கழிவு மேலாண்மையால் மழை காலம் முடிந்தஉடன் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுகிறது. பறவைக்காய்ச்சல் வந்து பாடாய் படுத்துகிறது. நோயை மறைக்கவேண்டிய அரசாங்கம் பத்திரிககைகளில் உண்மையை மறைத்துக்கொண்டு உள்ளன.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு தேசீய அவமானம். இந்தக் கொடுமை என்று ஒழியுமோ?

in_malnutrition_screenshot

In 1999, the National Family Health Survey (NFHS) survey found that 47 percent of all children under age three were underweight – a higher average prevalence than in sub-Saharan Africa. பார்க்க http://www.unicef.org/india/nutrition_3889.htm

நாட்டு வளர்ச்சி விகிதத்தையும் – இருப்புப்பாதை வளர்ச்சி விகிதத்தையும் எடுத்துப் பார்ப்போம். கடந்த 20 ஆண்டுகளில் போடப்பட்ட புது ரயில் பாதைகள் எத்தணை? புதிய சரக்கு கையாளுமிடங்கள் எத்தணை – துறைமுகங்களை நகரங்களுடன் இணைத்து சரக்குகளை அனுப்புவது எத்தணை எளிதாகியிருக்கிறது? துறைமுகத்தில் சரக்கு ஏற்றி இறக்க எத்தணை மணிநேரம் ஆகிறது? புதிதாகப்போடப்பட்ட தனி சரக்கு இருப்புப்பாதை அல்லது துறைமுகச் சாலை எத்தணை கிலோமீட்டர்?

ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான ரியோ டிண்டோவின் சீன தொழில் அனுபவத்தைப் பார்த்து “சீனாவா.. செம ரிஸ்க்கு மச்சி” என்று உலகத்தையே சொல்ல வைத்தன. பார்க்க http://online.wsj.com/article/SB10001424052702304370304575151612455202950.html நீதியை நாடி நீதி மன்றம் சென்றபோது கட்டப்பஞ்சாயத்து செய்து வெறுப்பேற்றி விட்டனர். இதே போன்று இந்திய தொழில்துறைக்கு வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்பதை அறிவோம். வோடபோன் வரி வழக்கு – நோக்கியா வரி வழக்கு போன்றவை காலத்திற்கேற்ப மாறாத நீதித்துறையைக் காட்டுகின்றன. என்றாலும் வோடபோன் வழக்கில் நீதிமன்றம் வோடபோனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது தொழில்துறைக்கு ஆரோக்கியமான விசியமாகப் பேசப்பட்டது. என்றாலும் விதியை காலத்திற்கேற்ப மாற்றியிருந்தால் வரவேண்டிய வரி அரசாங்கத்திற்கு வந்திருக்கும்.

முடியாத விசியங்களை விடுத்து முடியும் விசியங்களில் நாம் இன்னும் பெருமுயற்சி எடுத்தல் வேண்டும்.
வல்லரசாக அல்ல. நல்லரசாக இருக்கும் நிலையில் இருந்து கீழே போகாமல் இருக்க.

முடியும் என்றே நம்புகிறேன் – இந்தியனாக.

salute to india

சுபம்!

One thought on “சீனா – விலகும் திரை – IV (இறுதி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s