பாகிஸ்தான் அரசியல் வரலாறு
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
ஆன்மாவில் ஒரு கோடு கட்டுரையில் இந்தியாவில் அவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் நாம் பார்க்காத ஜனநாயகப் போர்வையில் நடக்காத திருவிளையாடல்களா? ஊழல்களா? ஆனால் எது எப்படியாயினும் மக்களாட்சியைக் கைவிடாது வைத்துக்கொண்டுள்ளது இந்தியா. பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதலில் நாயைக் கல்லால் அடித்து விரட்டுவதுபோல் மக்களாட்சியை விரட்டியே பழக்கப்பட்டுவிட்டனர் என்கிறார். இந்த ஒரு வரி பல்வேறு கட்டுரைகளால் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரிவினை அரசு மட்டத்தில் எவ்வாறு நடந்தது என்பதை விளக்குகிறார் ஆசிரியர். பிரிட்டிஷாரின் பாகிஸ்தான் பிரிவினை நிபந்தனை – ஜின்னாவிடம் எடுபடாத காந்தியின் பிரிவினைவாத எதிர்ப்பு வாதங்கள் – அம்பேத்கர் உட்பட்டவர்களின் பாகிஸ்தான் ஆதரவு – என்று ஒரு தேசத்தைக் கூறுபோட்டதைப் படிக்கும்போது சுதந்திரம் சுதந்திரம் என்று நாயடி பேயடி பட்டவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணப்பார்க்க முடியவில்லை. வகுக்கப்பட்டது இந்திய-பாக் எல்லைக்கோடு – இந்தியா பாக் பக்கம் திரும்பியே பார்த்திராத ஒரு ஆங்கிலேயரால். ம்ம்!! (பார்க்க Radcliffe_Line)
ஜின்னா என்பது ஒரு கலைந்த கனவு. அவரைப்பற்றிய செய்திகள் ‘ஜின்னா என்றொரு செயல்வீரர்‘ கட்டுரையில் வருகிறது. நல்ல காலம். புத்தக ஆசிரியராக இருந்து இதைச் சொல்ல முடிகிறது. இதுபே பா.ஜ கட்சியின் நிர்வாகி ஒருவர் சொன்னால் என்ன ஆகும்!!

துரதிஷ்ட வசமாக ஜின்னா இறந்தபோது அவருடன் சேர்ந்து அவருடைய சிந்தனைகளும் – பாகிஸ்தான் பற்றிய கனவுகளும் ஒட்டு மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. பிரித்துக்கொண்டு போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்த ஜின்னா தனது அணி பற்றியும் – தனது உடல் நிலை பற்றியும் எண்ணிப்பார்க்காததுதான் பிரச்சினை. அவரது இறப்பு என்பது பாகிஸ்தான் மக்களை விட பிரிட்டிஷ் ஆபீசர்களையும் பாதித்தது. ‘தப்பான தீர்ப்பு கொடுத்திட்டியே நாட்டாமை’ என்று அவர்கள் வருந்தினார்கள். ‘இந்தாளு இப்படி சீக்கிரமே டிக்கட் எடுப்பான்னு தெரிஞ்சிருந்தா பாகிஸ்தான் பிரிவினைக்கே பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்திருக்காது’ என்று மவுண்ட் பேட்டன் சொல்வதாக செய்தி வருகிறது.
இதற்கா இந்த ஆட்டம் போட்டார்கள் இந்த பிரித்தானியர்கள்? எவ்வளவு வன்முறை – எத்தனை கொலை கொள்ளை கலவர சம்பவங்கள்? எத்தணை பிணக்குவியல்கள். ‘எவன் செத்தா என்ன’ என்கிற சிந்தனையில் பிரிட்டிசாரும் – ‘எப்படியோ சுதந்திரம் கிடைத்தால் சரி’ என்கிற அயற்சியில் இந்தியாவும் – ‘பிடிங்கிட்டுப் போயே தீரனும். மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்’கிற ‘ஆளை விடுடா சாமி’ அவசரத்தில் பாகிஸ்தான் இருந்திருக்கவேண்டும்’.
‘அரசியல் சட்டம் வேணுமேப்பா’ என்று யோசிக்கிறார் லியாகத். இஸ்லாமிய சட்டத்தை வெச்சிக்கிட்டா மேற்கத்திய நாடுகள் எப்படி படி அளப்பார்கள். கொஞ்சம் பிரிட்டிஷ் சட்டம். கொஞ்சம் இஸ்லாமிய சட்டம் வெச்சிக்கலாமா என்கிறார். போதாதா. 1951ல் அவரைப் போட்டுத்தள்ளிவிட்டார்கள். இதிலிருந்து இந்திய சாயம் பூசிய பாகிஸ்தான் முழுக்க ஒரு குழப்பவாத நாடாக உரு மாறிப் பயணிக்கத் தொடங்குகிறது. அடிக்கடி மாறும் பிரதமர்கள் – ஆட்டையைக் கலைக்கும் பிரசிடெண்டுகள். சொக்கட்டான் ஆடினார்கள்.
கிராமம் பற்றிய அறிவும் அனுபவம் இல்லாதவர்கள் கிராமவாசிகளின் நலனை எந்த விதத்தில் புரிந்து கொள்ளமுடியும்? வந்தார்கள் – சென்றார்கள் – வெல்லாமலேயே. கிராமமா? அப்படின்னா? கட்டுரை இதைப் புரிய வைக்கிறது
—–
நமது பர்சுக்குத் திரும்பத் திரும்ப வேட்டு வைக்கும் ஆசிரியரின் எழுத்து நடை!!
(பாகிஸ்தான்) ….ரிப்பன் வெட்டிக் கடைதிறப்பது மாதிரி, யாருக்கு என்ன அவசரம் வந்தாலும், முதல் வெட்டு அங்கே ஜனநாயத்துக்குத்தான். அவசரப் பசிக்குக் கிடைக்கிற கடையில் பன்னும் டீயும் சாப்பிடுவது போல ஆட்சியைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி கொண்டு வந்து விடுவார்கள்
… நம் மக்கள் (இந்தியா) சற்று புத்திசாலிகள். அரசியல்வாதிகளின் வீர வசனங்களை அவ்வளவாக நம்பமாட்டார்கள். சினிமா பார்க்கிற உணர்ச்சிதான் அதிலும். ஆனால் பாகிஸ்தான் மக்கள் சற்றே அப்பாவிகள். உணர்ச்சகரமாகத் தலைவர்கள் சொற்பொழிவாற்றினால் அப்படியே நம்பிவிடுவார்கள். காரணம் கொஞ்சம் துக்ககரமானது. அங்கே எழுத்தறிவு உள்ளவர்கள் …..
… மதரஸாக்களையும் பெரும்பாலும் ஆயுத கோர்ஸ் ஆரம்பப் பாடசாலைகளாக ஆக்கிவிட்டார்கள். இந்தியக் குழந்தைகள் அணில் ஆடு இலை படிக்கும்போதே பாகிஸ்தான் குழந்தைகளுக்கு இஸ்லாம், காஷ்மீர், ஜிகாத் புரிந்துவிடுவது …..
… இன்றைக்கு இரண்டு -இரண்டரை மாதங்களுக்குள் ஒரு வீடு பிடித்துக்கொண்டு குடி போகமுடியுமா? அன்று ஒருநாடு பிரித்துக் குடிபோனார்கள்!
(பிரிவினை).. நிலப்பரப்பில் தொடங்கி டேபிள், சேர், டைப் ரைட்டர், குண்டூசி வரை மூன்றில் ஒரு பங்கு பிரிப்பது என்பது கற்பனைக்கு எட்டக்கூடிய காட்சி அல்ல. ஆனால் அது நடந்தது
‘பாகிஸ்தானின் தந்தை’ என்று முதல் முதலாகக் கூறப்பட்டபோதே ஜின்னாவுக்கு ‘தாத்தா’ வயது.
(லியாகத்).. “நான் உயிரோடிருக்கும் வரை முஸ்லீம் லீகைத் தவிற இன்னொரு கட்சி இந்த மண்ணில் உதிக்க விடமாட்டேன்”. அந்த விநாடியே ஜனநாயகத்துக்கு அங்கே சலைன் ஏற்றத் தொடங்கியதாகிவிட்டது
(கிழக்கு பாக்.புகழ் (பங்களாதேஷ்) சுஹரவர்தே ஆட்சி அமைக்கிறார்.)…. மேற்கு பாகிஸ்தான் மக்கள் ‘யார் இந்த ஆசாமி’ என்பது போல பார்த்தார்கள். அதாவது பால்தாக்கரே தமிழ்நாடு எலக்ஷனில் நின்று ஜெயித்தால் நாம் எப்படிப் பார்ப்போம். அது மாதிரி
கலக தேவதைகளின் ஆட்டத்தை இன்னமும் பார்த்திடுவோம்
3 thoughts on “பாகிஸ்தான் அரசியல் வரலாறு – II”