பாகிஸ்தான் அரசியல் வரலாறு
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து போடப்போன களப்பணியார்களையும் வெளியே காவல் காத்த போலீஸ்காரரையும் தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிவிட்டதாக செய்தி வந்துள்ளது – அதுதான் பாக் (விபரத்திற்கு: http://www.bbc.co.uk/news/world-asia-21585291 )
Thanks for tweeting http://www.doctorrajmohan.blogspot.in/
கொலைகாரர்களுக்கிடையே கிளிகளாய் மாட்டிக்கொண்ட பாக். மக்களுக்கு அனுதாபங்கள்.
—————
முன் கண்ட பாகிஸ்தானின் பால்ய கால அனுபவங்கள் நீங்கலாக அவர்கள் அரசியல் விளையாட்டில் அந்நாடு பட்ட அதகளங்கள் விரிவாக எளிய முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
ஜின்னாவின் தோல்விகளில் இன்னொன்று கிழக்குப் பாகிஸ்தானை மேலாண்மை செய்ய முயன்ற விதம். மாற்றாந்தாய் முறையில் நடத்தப்பட்டனர் கிடக்கு பாக் மக்கள். தேசீய மொழியாய் உருதுவை அறிவிக்கிறார் லியாகத் அலிகான். வங்காளி பேசும் கிழக்கு பாகிஸ்தானியர்கள் எதிர்க்கிறார்கள். இன்றளவும் மக்களின் குரலுக்கா செவி சாய்க்கிறது பாகிஸ்தான்? கட்டாய உருது திணிப்பு – கலவரம் – அடக்குமுறை.. துயரம். அங்குள்ள முஸ்லீம் லீக் தலைவர்களே லியாகத்தின் இந்த கொள்கையை ஏற்கவில்லை. “மதத்திற்கு எதிராக” நடப்பதாக ஊதினார்கள் மேற்குப் பாகிஸ்தானியர்கள். “மதத்திற்கு எதிராக” என்பதை உற்று நோக்கவேண்டும். பிரச்சினைகளைப் பெரிதாக்க – நினைத்ததை நடத்திக்கொள்ள – சமுதாயத்தின் சமநிலை பாதிக்கப்பட என்று எத்தணையோ விவகாரங்கள் இதனுள் இருக்கின்றன. சமீப கால விஸ்வரூபம் பிரச்சினை முதற்கொண்டு.
நிற்க. சுஹரவர்தே கிழக்கு பாகிஸ்தானி. இவர் காலத்திலாவது நல்லது நடக்கும் என்றால் இரண்டு வருடங்களில் அவரை நாடு கடத்திவிட்டனர். ரைட்டு! நடந்தது 1958. ராணுவ தளபதி அயூப்கான் நாட்டைக் கைப்பற்றுகிறார்.

அயூப்கானைப் பற்றி இராணுவமே ராஜா மற்றும் ஆக்ஷன் ஹுரோ அயூப் கட்டுரையில் காணப்படுகிறது. Positive Note.
தவறுகளுக்கான தண்டனை அதிகரித்தல் (பப்ளிக்கா மூச்சா போவதற்கு உட்பட) – கடத்தக்காரர்களை வளைத்துப் பிடித்து கும்முதல் என்று இவரது பக்கம் முழுக்க முதல்வனே முதல்வனே வன்னே வன்னே பாடல்தான். அத்தோடு இதர இஸ்லாமிய நாடுகளுடனுடனும் நல்லுறவு ஏற்படவும் அயூப் காரணமாக இருந்திருக்கிறார். அவை தவிற சீன அமேரிக்க உதவிகள் வேறு – தனது பத்தரை ஆண்டு ஆட்சி காலத்தில் தனது Guided Democracy வழியில் பட்டையையைக் கிளப்புகிறார்.

அடுத்த1965 போர் அயூப் நல்லாசிகளுடன் துவங்கியதை ‘போர் போர்‘ கட்டுரை குறிக்கிறது. அத்துடன் சீனப் போரில் மண்ணைக் கவ்வி – கட்ச் எல்லைத் தகறாரில் பெரிசா சோபிக்க இயலாது இந்திய ராணுவத்தின் சோகக் கதையோடு.
குறிப்பாக ஒரு செய்தி தெரிகிறது. இவர்களுக்கு காஷ்மீர் மீது உள்ள அபிலாஷைகளுக்கு நல்ல முறையில் பச்சைக் கலரில் மதச் சாயம் பூசுகிறார்கள் என்று. இந்தப் போரில் ஸ்ரீநகரைக் கைப்பற்றி இஸ்லாம் மக்களை இந்தியாவிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று போலிக் கண்ணீர் விடுவதை ஆசிரியர் காட்டுகிறார். சொந்த ஊர் முஸ்லீம் கஞ்சித் தண்ணிக்கு ஏங்கிக் கிடப்பதைக் கவனிக்க ஆள் இல்லை. தாஷ்கண்ட் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வருகிறது.
இந்தப் போரிலிருந்து அயூபிற்கு சரிவு காலம் துவங்கியதாகச் சொல்கிறார். காரணம் கிழக்கு பாகிஸ்தான். வினை விதைத்தவன் வேறு எதை அறுப்பது?
ஜுல்ஃபிகர் அலி புட்டோ ஏற்றம் பெறுகிறார். 1965 போருக்கான ப்ளுபிரிண்ட் போட்ட இந்த மகராசனுக்கு நாட்டின் பொருளாதார நசிவை விட தன் கொலைகார புத்தி சொல்வது பெரிதானது. அயுபின் நிராகரிப்பு அவரது ஈகோவை கண்ணா பிண்ணாவென்று சீண்டுகிறது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை வைத்து மக்களை கலவரப்பாதையில் தூண்டிவிடுகிறார் இந்த மக்கள் நலவிரும்பி புட்டோ. பாகிஸ்தானின் கவுரவத்தை அடகு வைத்துவிட்டதாக சலம்பினார்கள். எது கவுரவம்?

கட்சி தொடங்குகிறார் புட்டோ – தேசபக்தி (!) – இஸ்லாம் – காஷ்மீர் – இவைதான் கொள்கைகள். மித்ததெல்லாம் வேண்டாம். கஞ்சி – கல்வியெல்லாம் அவசியமில்லை. ஆண்டவன் அருளிடுவான். பேச்சு சாதூரியம் மிக்கவர் புட்டோ. ஒட்டு மொத்த தேசமே மயங்கியது படுபாவி பேச்சில். ‘ஜனநாயகம்னா அய்யா கொண்டுவந்தால்தான் ஆச்சு’ என்றார்கள்.
இடையில் ‘அவாமி லீக்’ முஜிபுர் ரகுமான் கிழக்குப் பாகிஸ்தான் விடுதலைக்காகப் போராட ஆரம்பிக்கிறார். இருவருமே அயூபிற்குத் தலைவலிகள்தான். ஆனால் அவர்களின் போராட்ட முறையில் உள்ள பெரிய வித்தியாசங்களை ஆசிரியர் கூறுகிறார். ஆரம்பத்தில் புட்டோவுடன் இணைந்திருந்த முஜிபுர், அந்த ஆள் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பற்றிக் கண்டு கொள்ளாததால் தானே களத்தில் இறங்கிப் போராடுகிறார்.

இடையில் புட்டோ நினைத்தபடி காட்சிகள் மாறி, அயுப் பதவி விலகுகிறார். ராணுவ ஜெனரல் யாஹியா கானிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு.

- கிழக்குப் பாகிஸ்தான் புரட்சி ஆரம்பம். முக்தி பாஹினி பிறப்பு (‘என்ன புரட்சிப்படையா’ என்று புலிகேசி கணக்கில் டரியலாகிறார் யாஹியா கான்)
- தாக்குதல் – மரணத் தாக்குதல் – கற்பழிப்பு – கற்பழித்துக் கொலை
- ஹைவே முழக்க பிணங்கள்
- தப்பி ஓடிய மக்களையும் புண்ணாக்கிக் கொன்று குவித்தது இன்று வரை இரத்த வெறி அடங்காத பாக். ராணுவம்
- இந்தியாவிற்கு அகதிகளாக வந்தார்கள் வீர வசனம் பேசி தனிக்குடித்தனம் போன ஜின்னாவின் விழுதுகள்
- இந்திராவின் வேகம் – உலக நாடுகளின் ஆதரவு திரட்டுவதில் இருந்த சாமர்த்தியம்
- பங்களாதேஷ் போரில் இந்தியாவின் வெற்றி பற்றி விரிவாகவும் வேகமாகவும் காணமுடிகிறது
- சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சரணாகதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பாக். தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே நியாஸி. இந்தியத் தரப்பில் லெப்டினன்ட்ஜெனரல் ஜகஜித்சிங் அரோரா
Lt General Jagjit Singh Aurora (c) http://www.timescontent.com/tss/showcase/preview-buy/8544/News/Lt-General-Jagjit-Singh-Aurora.html - புட்டோ கணக்குப்போட்டபடி யாஹியாவை பலிகடா ஆக்கி தானே ஆட்சிக்கு வந்தார் புட்டோ
- புட்டோவின் ஆட்சி – விலையில்லாத் திட்டங்கள் – கவர்ச்சி – சுதந்திரக் காற்று
- ராணுவ தளபதி ஜியா உல் ஹக் செய்த முதல் திருவிளையாடல் – புட்டோவுக்கு அப்பர் பெர்த் டிக்கட் – தூக்கில் போட்டுவிட்டார்கள். இத்தணைக்கும் ஜியாவைக் கொண்டு வந்தவரே புட்டோதான்.
- ஜியாவை ஒழிக்க புட்டோவின் மனைவி – மகள் பெனசீர் – மகன் முர்தஸாவின் புரட்சிப்படை – கார்கில் புகழ் நவாஸ் செரீஃப் என்று ஒரு டஜன் பேர் முக்கினார்கள் – முனகத்தான் முடிந்தது – ஒன்னும் பெரிசா செய்ய முடியவில்லை
- ஜியாவின் அடக்குமுறை அரசு – முஷாரஃப் பானியில் சாக்குச் சொல்லி தேர்தல்களைத் தள்ளிவைப்பது – தனக்குத்தானே முடி சூட்டிக்கொள்வது – கட்சிகள், பத்திரிகைகளுக்கு திண்டுக்கல் பூட்டு – செம காண்டில் இருந்தனர் அனைவரும்
- அரசியலில் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த ஜியாவின் மக்கள் நலத் திட்டங்கள் – 1979 ரஷ்ய – ஆஃப்கன் போரிலிருந்து அமெரிக்க ஆதரவு – அதே ஆஃப்கன் போதை விவசாயிகள் புண்ணியத்தில் பாகிஸ்தானில் போதைப் பொருள் பெருக்கம் – முகாஜிர் – பஷ்டுக்கள் கலவரம் – இறுதியாக விமான வெடிப்பு விபத்தில் ஜியா பரலோக பதவி
- ஒருவழியாக 24 வயது புரட்சித்தலைவி பெனசீரின் தேர்தல் வெற்றி – திரும்ப மக்களாட்சி. அந்த பாவ ஆத்மாவிற்கு வெளியில் பிரச்சினை இல்லை. தாய் – சகோதரன் – ஆசைக் கணவன் என்று மும்முனைத் தாக்குதலில் பலமிழந்தார். கலவர தேவதைகளின் ஆசீர்வாதம் -ஆட்சியைக் கலைத்து பெனசீரையும் சர்தாரியையும் கம்பி எண்ணுதல் – கொஞ்ச நெஞ்ச நல்ல பெயரையும் பாகிஸ்தான் காற்றில் பறக்கவிடுதல்!
- பெனசீர் செய்த தவறு ISIஐ முற்றிலுமாகப் புறக்கணித்தது என்கிறது “மூன்று தவறுகள்“ கட்டுரை. இதையே ISI புத்தகத்திலும் (விடுவதாயில்லை. கூடிய விரைவில் அந்தப் புத்தகத்திற்கும் அறிமுக விழா நடந்துவிடும்! ) இந்தக் கதை வருகிறது. பச்சை மண்ணின் நிழல் அரசாங்கம் ISI பற்றிய அறிமுகம் இந்தக் கட்டுரையில் கிடைக்கிறது.
- கூடவே எல்லையில் கலவரக் காரர்களைக் கால் பதிக்கவிட்டது (இது பற்றி தாலிபன் புத்தகத்தில் விரிவான காட்சி கிடைக்கும்.) – போதைப்பொருள் வியாபாரிகளை ஒடுக்கி வைக்க முடியாதது. எல்லாம் சேர்ந்து பெனசீரின் முதல் ஆட்சிக்கு மங்களம் பாடி “முஷாரஃப்” புகழ் நவாஸ் செரீஃபை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது.
—-
நமது பர்சுக்குத் திரும்பத் திரும்ப வேட்டு வைக்கும் ஆசிரியரின் எழுத்து நடை!!
(அயூப் கான்)… முஷாரபின் தொழில்வழித் தாத்தா இவர்தான்
(புட்டோ கலவரம்) … லாகூர் நகரமே ஆம்புலன்ஸில் ஏறியது
(ஜியா).. 1979-80 கால கட்டங்களில் பாகிஸ்தானில் ‘பிரசிடெண்ட்’ எனறு சொல்லி அடம் பிடிக்கும் குழந்தையைப் பயமுறுத்திச் சோறூட்டும் அளவிற்குப் ‘புகழ்’ பெற்றிருந்தார் ஜியா
3 thoughts on “பாகிஸ்தான் அரசியல் வரலாறு III”