பாகிஸ்தான் அரசியல் வரலாறு – IV (இறுதி)


பாகிஸ்தான் அரசியல் வரலாறு
ஆசிரியர்பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்

pakistan01

pakistan02

paa.ragavan

முந்தைய பதிவுகள்

ஒவ்வொரு பாகிஸ்தான் ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு போர் ஆப்பாக அமைந்துவிடுகிறது. நவாஸுக்கு வந்தது வளைகுடாப் போர்.  ஈராக்கு எதிராக படையை அனுப்பியாக வேண்டிய நிர்பந்தம். வேறு வழி கிடையாது. அதிபர் கடுப்பாகி நவாஸ் ஆட்சியைக் கலைத்தல் – கேஸ் போட்டு ஜெயித்து மீண்டும் வருகிறார் வெற்றிவேந்தன் நவாஸ்.

நவாஸ் ஷெரீஃப்
நவாஸ் ஷெரீஃப்

கேஸில் ஜெயித்தார். கேஷில் தோற்கிறார். ஊழல் குற்றச்சாட்டு. இராணுவம் மூக்கை நுழைத்து நவாஸ், அதிபர் என்று ரெண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்புகிறது. மொயின் குரேஷி கொஞ்ச காலம் – பிறகு தேர்தலில் பெனசீர் வெற்றியில் ஓடியது 3 வருடம் – பிறகு திரும்ப நவாஸ்.  அதிரடித் திருப்பங்கள்தான். ஆனால் நாட்டுக்கோ மக்களுக்கோ பைசாவுக்குப் புண்ணியமில்லாமல் வருடங்கள் ஓடின

ஒப்பீட்டு முறையில் பெனசீரைவிட நவாஸ் சிறந்த மக்கள் நலன் விரும்பி என்று கூறும் ஆசிரியர் அவரது தோல்வி என்பது அவருடைய அரசியல் முடிவுகளால் இருந்தது. முஷாரஃபின் நியமனம். ஜியாவுதீனின் நியமணம். அது பூமராங் ஆகும் என்று அவர் கணிக்கத்தவறிவிட்டார் என்கிறார் ஆசிரியர்.

நவாஸ் ஷெரீஃப் - முஷாரஃப்
நவாஸ் ஷெரீஃப் – முஷாரஃ

முஷாரஃப் ஓட்டும் குறுக்கு உழவுகள் நவாஸுக்குத் தலைவலியாகின்றன. கார்கில் யுத்தம் இந்தியாவைக் குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. முஷாரஃப் நவாஸைக் குறிவைத்து நடத்தப்பட்டது என்கிறார். ஜெயித்தாலும் சரி தோற்றாலும் சரி நவாஸ் கிரீடத்தைக் கழட்டுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார் முஷ்.

பர்வேஸ் முஷாரஃப்
பர்வேஸ் முஷாரஃப்

நவாஸ் வாஜ்பேயியுடன் கை குலுக்கி லாகூர் ஒப்பந்தம் போட்டு சரித்திரப் பயணம் வாய்ந்த பேருந்து பயணம் வரும்போது இந்தப் பக்கம் முஷ் படைகளை கார்கில் பகுதிக்கு ஊடுருவ விட்டு சாத்தான் வேலை செய்தது நாம் அனைவரும் அறிவோம். நவாஸுக்கும் அது தெரியாமல் போகவே பேய்முழி முழித்தார். அந்த சமயத்தில் கிளிண்டனின் இந்திய நிலைப்பாட்டைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். யுத்தம் நிற்கிறது. நவாஸ் பலிகடா ஆக்கப்படுகிறார். அவரை நாடு கடத்திவிடுகிறார்கள்.

வாஜ்பேயி - நவாஸ்
வாஜ்பேயி – நவாஸ்

பொருளாதார சீர்திருத்தம் – வறுமை ஒழிப்பு – கல்வி வளம் என்று பாகிஸ்தானின் நல்ல முகமாகத்தான் முஷ் இருந்திருப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர். தனக்குத்தானே அதிபராகி இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கு வருகிறார். பேச்சுவார்த்தை தோல்வி.

எல்லாருக்கும் ஒரு போர் தலைவலி – முஷ்சுக்குத் தலைவலியோடு திருகுவலி. ஏற்கனவே பாக் அரசியலுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த அவருக்கு அமெரிக்காவின் ஆப்கன் போர் இம்சையைத் தருகிறது. பாக் நிலைப்பாட்டை ஆதரிக்காத அடிப்படை வாதிகள் சமூகம் பாக் மண்ணைத் திரும்ப கலவர பூமியாக்கியது.

நீதிபதி நீக்கம் – அது தொடங்கி வைத்த போராட்டங்கள் கலவரங்கள் – பிறகு மத வாதிகள் கிளப்பும் முஷாரஃப் எதிர்ப்பு கோஷம், பிரச்சாரம் – கலவரம் – கண்ணீர் புகை குண்டு – துப்பாக்கிச் சூடு – சாவு – ஊரடங்கு உத்தரவு. நவாஸின் வருகை நிராகரிப்பு – பெனசீரின் ரீ எண்ட்ரி – தகித்தது பாக். (பார்க்க Riots in Islamabad Over Musharraf http://www.time.com/time/world/article/0,8599,1666872,00.html )

பெனசீர் கொலையை ஒட்டின கலவரத்தில் முஷாரஃப் படத்திற்குத் தீ வைக்கும் PPP தொண்டர்
பெனசீர் கொலையை ஒட்டின கலவரத்தில் முஷாரஃப் படத்திற்குத் தீ வைக்கும் PPP தொண்டர்

பெனசீரைப் போட்டுத்தள்ளிவிட்டார்கள். தாலிபன் திருவிளையாடல். பெனசீர் வந்திருந்தால் எப்படிப்பட்ட ஆட்சி அமைந்திருக்கும் என்பதைக் கூறும் ஆசிரியர், அதற்கான அச்சாரத்தை எப்படி அமெரிக்க வகுத்துக்கொடுத்தது என்றும் கூறுகிறார். ஆனால் கூறுகெட்டுப்போய் நவாஸுடன் கூட்டணி வைத்தார் பெனசீர். ஆசிரியர் இதனை விளக்கிக் கூறும்போது என்னவோ தமிழக அரசியல் வரலாறைப் படிக்கும் உணர்வு வந்துவிடுகிறது. காரணம் முஷாரஃப் எதிர்ப்பு. இப்ப பொது எதிரி ஆகிவிட்டார் அல்லவா. கடுப்பாகி அரசுப் பாதுகாப்புகளை வாபஷ் பெறுகிறார் முஷாரஃப். ராவல் பிண்டி கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது துப்பாக்கி சுட்டது. மனித வெடிகுண்டு வெடித்தது. அதிர்கிறது பாக்.

பெனசீர் பூட்டோ கொலை
பெனசீர் பூட்டோ கொலை

கொன்றது முஷாரஃப்தான் என்று சத்தியம் செய்கிறார்கள் அனைத்து அரசியல்வாதிகளும். தகிக்கும் உள்நாட்டுக் கலவரம். முஷாரஃப் பதவி விலகுகிறார். பெனசீர் பதாகைகளைத் தாங்கி ஆட்சியைப் பிடிக்கிறார் ஜர்தாரி.

இந்த நிகழ்வுடன் புத்தகம் நிறைவடைகிறது. இதற்குப் பின் ஜர்தாரிக்கும் நவாஸுக்கும் ஜர்தாரிக்கும் உரசல் வந்திட்டது. இன்றைக்கும் குழப்பங்கள் நிறைந்த வரலாறாகவே உள்ளது பாகிஸ்தான்.

புத்தகம் தரும் பாகிஸ்தான் பார்வை

மக்கள் நலம் பேணாத அரசுகள் என்று ஒரு வார்த்தையில் கொல்லிவிட முடியாது. அதற்கான சூழல் அமையாத தேசமாகவே இருந்துவிட்டது. பதவி மோகம் – பச்சை சுயநலம் – ஊழல் அரசியல்வாதிகள் என்கிற ஓநாய்களின் கூடாரமாகத் திகழும் பாக் பூமியில் இன்றளவும் உள்நாட்டு நலத்தில் கவனம் செலுத்தாமல் இந்திய எதிர்ப்பு மூலம் அதிகாரத்தில் ஒட்டியிருக்கிறார்கள் அந்த நாட்டு ஆட்சி கணவான்கள். அத்தோடு சீனா பாக் முதலிய நாடுகளோடான தனது நட்பையும் இந்திய எதிர்ப்புக்காகவே பயன்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் இவர்கள் இருக்கும் வரை என்னதான் செய்வது.

காஷ்மீர்
காஷ்மீர்

பெனசீர் புண்ணியத்தி்ல் ஆஃப்கன் எல்லையில் பாகிஸ்தானுக்குப் புற்றுநோய் பிடித்து வருடக்கணக்காகிறது. இந்திய எல்லையைவிட ஆஃப்கன் எல்லைப் பிரச்சினை என்பது பாகிஸ்தானுக்கு மிகவும் நெருடலான ஒன்று. ஆனால் அவற்றைத் தீர்ப்பதில் ஒரு பெரிய சுணக்கமே இருக்கிறது அந்த அரசியல் வியாபாரிகளுக்கு. தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இந்தியா பக்கம் திரும்பி கிசும்பு செய்து உள்நாட்டில் தமது இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்வது என்பது இந்த கேவலமான நிலைப்பாடை பாக் ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். முஷாரப்பின் கார்கில் திருவிளையாடல் ஆகட்டும் – இப்ப தலையை வெட்டி எடுத்துப்போனார்களே அதாகட்டும். எல்லாம் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டவையே. காஷ்மீர் விடுதலை என்று பிரச்சாரம் செய்வது அப்பட்டமான சுயநலம். நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்களே. அவர்கள் நம்பும்வரை சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்றும் நிகழும் வெடிகுண்டு வெடிப்புக்கள் – அப்பாவி மக்கள் மரணம் – பிரச்சினை என்றால் ஓடி ஒளியும் ஆட்சியாளர்கள் என்று ஈனஸ்வரத்திலேயே முனகுகிறது பாகிஸ்தான். மற்ற நாடுகள் தரும் பணம் என்கிற டானிக்கைக் குடித்து உயிர் ஜீவிக்கிறது.

நன்றி.

25 மார்ச் 2013 தினமணி

பர்வேஸ் முஷாரஃப் நாடு திரும்புகிறார் - 2013
பர்வேஸ் முஷாரஃப் நாடு திரும்புகிறார் – 2013

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s