தாலிபன்
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
முந்தைய பாகங்கள்
வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன.
- அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ்
- தேர்தலா – பேத்துப்புடுவேன்.
- ஆட்சியாளர்களுக்கு – அரசு அலுவலர்களுக்கு – இராணுவ வீரர்களுக்கு சம்பளம் கிடையாது. தேசபக்திப் பணிக்கு சம்பளம் என்ன கேடா? உணவு உடை தருவோம்
- நபிகள் இப்படித்தான் வாழ்ந்தார். அந்த காலம்தான் இது.
- போட்டோ எடுக்கிறாயா? நபியை யாருடா போட்டோ எடுத்தது? ”அய்யாங்க. அந்தக் காலத்தில போட்டோ ஸ்டுடியோவே கிடையாதே” கேட்டால் அடிவிழும். இனி ஒரு பிளாஷ் அடிக்கக்கூடாது. எல்லா ஸ்டுடியோவையும் இழுத்து மூடு
- திரைப்படம் – நோ
- நாடகம் – நோ
- கலை நிகழ்ச்சி – நோ
- புட்பால் – கிரிக்கெட் – நோ நோ
- சங்கீதம் – ஸ்டார் ஓட்டல் – நோ
- ரேடியோ – டிவி -நோ
- ஆம்பளை ஷேவ் பண்ணக்கூடாது
- பொம்பளை தலைப்பாகை அணியாமல் நடமாடக்கூடாது. பர்தா மஸ்ட்! பொது இடங்களில் பொம்பளைகளுக்கு என்ன வேலை. தடா. சத்தம்போட்டுச் சிரிக்கக்கூடாது. குரல் சத்தமே வரக்கூடாது. லிப்ஸ்டிப் பவுடர் – நஹி ஹை. ஆபரணம் நோ.
- மீட்டிங் நோ- கோரிக்கை நோ – ஸ்ட்ரைக் நோ – தர்ணா நோ. முட்டி பேந்திடும்.
இன்னதுதான் தடை என்றில்லை. தோன்றிய எல்லாவற்றுக்கும் தடை. இதுதான் ஷரியத் என்று தாலிபன்கள் சொன்னார்கள்.
ஆசிரியரின் கூற்றுப்படி
தாலிபன்கள் முன் வைத்த இஸ்லாம் என்பது ஷரியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கெடுபிடிகளை மட்டுமே உள்ளடக்கியது. முழு ஷரியத்தும் இப்படித்தான் இருக்கும் என்பதில்லை. தனி மனித உரிமைகள் விஷயத்தில் முஹம்மது நபி அளவுக்குச் சிந்தித்தவர்கள் அக்காலகட்டத்தில் வேறு யாரும் கிடையாது என்பதற்கு குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறைய உதாரணங்கள் உண்டு
ஆனால் தாலிபன்கள் முன் வைத்த ஷரியத் அப்படிப்பட்டதல்ல. ஷரியத்தையும் முஹம்மது நபியையையும் சேர்த்துவைத்து தர்மசங்கடப்படுத்தக்கூடிய சட்டங்களை அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். பஃதூன் பழமைவாதச் சட்டங்களை ஒரு புறம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். இன்னொரு புறம் ஷரியத்தின் சில பகுதிகள். இரண்டையும் சேர்த்தக் கலக்கித் தயாரிக்கப்பட்டதே தாலிபன்களின் சட்டம். இஸ்லாமிய சகோதரத்துவம் – மேற்கத்தியத் தாக்கங்கள் மீதான கடும் எதிர்ப்பு – கலீஃபாக்களின் ஆட்சியை மறுஉருவாக்கம் செய்வது என்கிற பிரகடனம் – தீவிர மத உணர்வு – பழக்கவழக்கம் மற்றும் நடைமுறைகளில் அவர்கள் காண்பித்த எளிமை ஆகிய பல்வேறு அம்சங்கள் ஒன்றாக இணைந்து தாலிபன்களுக்கு அந்தக் காலகட்டத்தில் ஒரு ரசிகர் குழுவை உருவாக்கியது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
அரசுப் பணி முழுதும் பஃதூன்கள் ஆக்கிரமிக்கிறார்கள். படித்திருக்க வேண்டியதில்லை. பஃதூனாக இருந்தால் போதுமானது. ஒருத்தருக்கும் பணிகள் பிடிபடவில்லை. ஆப்கனில் 40 சதவீதம்தான் பஃதூன்கள். மீதி மற்றவர்கள். எள்ளுதான் காயணும். எலிப்புளுக்கை ஏன். புகைந்தார்கள், பஃதூன் மக்கள் உள்ளிட்ட அனைவரும். ஒட்டு மொத்தமாக ஒரு தேசமே வேலை இழந்தது. உலக சாதனை!
நஜிபுல்லா கேசை கையில் எடுக்கிறார்கள். தாலிபன்களின் அவர் மீதான கோபம் பற்றிய பின்புலத்தை விவரிக்கிறார் ஆசிரியர். 12 நிமிட நீதி விசாரணை. கழுவில் ஏற்றிவிடுங்கள் என்று தீர்ப்பளிக்கிறார் தாடிக்குள் ஒளிந்திருந்த நீதிபதி. ஆனால் மிகக் கொடூரமாகக் கொல்லப்படுகிறார் நஜிபுல்லா.

- 1008 கசையடி
- ஆண் உருப்பு வெட்டப்பட்டது
- வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது
- கூடைப்பந்து போஸ்ட்டில் தலையை மாட்டித் தொங்கவிடப்பட்டது.
- அவர் காப்பாற்ற விரும்பிய அவரது சகோதரர் மற்றும் மெய்க்காப்பாளர்களின் உடல்கள் கீழே கடாசப்பட்டிருந்தன
- 2 நாளைக்கு உடல்கள் அவ்விடமே கிடத்தப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்பட்டன.
தாலிபன்கள் ஆப்கன் மக்களுக்கு மட்டுமல்ல. தாங்கள் யார் என்பதையும் காட்டத் தொடங்கிய தருணம் அது.
நிர்வாகம் ஒட்டு மொத்தமாக ஸ்தம்பித்தது. தெரிந்தால்தானே செய்வார்கள்.
எண்ணைய் குழாய் திட்டத்தில் வரும் பணத்தை வைத்து தேசத்தை திரும்பக் கட்டலாம் என்றிருந்தார் ஓமர். வருகிற பணத்தை என்ன செய்வது. பேங்க் எல்லாம் நபிகள் காலத்தில் ஏது. எல்லாப் பணத்தையும் பள்ளிவாசல்களிலும் மதரஸாக்களிலும் அடுக்கி வைத்திடலாம் என்றார் ஓமர். யுனோகால் மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடியே விட்டது. மத்திய கிழக்கு நாடுகளின் நிறுவனங்களுக்கு ‘முதலீடு செய்யுங்கள்’ என்று ஓலை விட்டார். ஒருவர் வந்தால்தானே.
ஏதோ சில நிறுவனங்களின் மூலம் பணப் பட்டுவாடா இருந்து கொண்டிருந்தன. அவை ஓடியதும் ஒன்னும் கதைக்காகவில்லை. ஸ்டாக் மார்க்கெட்டா அது எங்கே இருக்கிறது?
யுனோகால் போகட்டும் பரவாயில்லை. ஐநா ஆதரவா. அது முக்கியமில்லை. கூப்பிடு ஒசாமாவை! சூடானிலிருந்து கந்தஹார் வந்திறங்கினார் தலைவர்.

நண்பர்களின் சந்திப்பு – தோராபோரா மலைக்குகையில் போதுமானவை செய்து ஒசாமாவை குடியேற்றுகிறார் ஓமர். தான் செய்யக்கூடிய புண்ணிய காரியங்களுக்கு ஆள் வேணும் என்கிறார் ஒசாமா. ஆள்பிடிப்பு வேலை நடக்கிறது ஆப்கனில். மனதைக் கனமாக்கும் கட்டுரை இது. கோபத்தைத் தூண்டும் கட்டுரையும் கூட. அனைத்துக் குழந்தைகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டு போனது இராணுவ லாரி. அல்காய்தா என்கிற தீவிரவாதக் கும்பலுக்கு ஆப்கன் அரசு ராணுவம் ஆள் பிடிக்கிறது. பள்ளிக்கூடம் போகிற பையன்களை பிடரியில் தட்டி ஒசாமா காலடியில் போட்டது.
“ஒரு வருசப்படிப்பா. ரெண்டு வருசப்படிப்பா? எப்ப வீட்டுக்குப் போகலாம்?”
“என்னது வீட்டுக்கா. இவர்கள் இனிமே இங்கதான் ஓமர்” கூறினார் சமகால வனவாச ஆசிரியர் ஒசாமா. அல் காய்தா வளர்ச்சி பெறுகிறது.

வற்புருத்தி வந்தவர்கள் – அள்ளிப்போட்டுக்கொண்டு வந்தவர்கள் – தானாக வந்து இணைந்தவர்கள் – எல்லாரையும் வைத்துக்கொண்டு பயிற்சி ஆரம்பமாகிறது. பயிற்சிப் பள்ளிகள் ஆப்கன் – பாக் எல்லையில் ஆப்கன் மலைப்பகுதிகளில் (ஜலாலாபாத், ஹீரட் இன்னும் பல) தொடங்கின. பயிற்சிக் கூடங்களின் அமைப்புகளை விளக்குகிறார் ஆசிரியர்.
தேர்ந்தெடுத்த மதப்பாடங்கள். அரபி மொழிப் பயிற்சி – உடல் பயிற்சி – ஆயுதப் பயிற்சி
பிள்ளைகளை இவர்கள் பயிற்சி அளிக்கும் விதம் – நடத்தும் விதங்கள் விவரிக்கப்படுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் இராணுவ வீரர்களுக்கு அளிக்கக்கூடிய பயிற்சிகள் அனைத்தும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.
பயிற்சிகள் மட்டுமல்ல. தண்டனைகளும் அப்படியே.
திடீரென்று ஒருவரை இழுத்து வருவார்கள். அனைத்து சிறுவர்கள் மத்தியிலும் அவர் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்படும். அவர்கள் மத்தியிலேயே அவரைத் தலையிலேயே சுட்டுவிடுவார்கள். அந்த ஆள் சுருண்டு விழுந்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று சிறுவர்கள் குரல் எழுப்பவேண்டும். எளிய சிறுவர் மனதினைக் கடினமாக்க இத்தகு காட்சிகள், நிகழ்வுகள் உதவின.
ஓமர் அளவிற்கு ஒசாமா அடிப்படைவாதத்தை அமல்படுத்தச் சொன்னாரா என்பதற்கான செய்திகள் இல்லை என்கிறார் ஆசிரியர். என்றாலும் ஒசாமாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகே தாலிபன் சட்ட திட்டங்கள் அறிமுகமாகின்றன. அவற்றைக் கேட்டு பயிற்சி முகாம்களிலிருந்து தப்பியோடிய சிலர் வீதிகளில் அவற்றைப் பற்றி ஓலமிடுவதைப் பற்றிக் கூறுகிறார். தண்டனைகள் கடுமையாக இருக்கின்றன. கடுமையான சட்டங்களின் மூலம் சரியான சமூக ஒழுக்கத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறார் ஓமர்.
தாலிபன்களும் பெண் உரிமைகளும்!!
இது ஒரு தனி சரித்திரம். அவற்றைச் சுருங்க எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
நம்மூரில் பெண்ணுரிமைவாதிகள் கேட்டும் அத்தணை வீரியம் மிக்க, உணர்ச்சி எழக்கூடிய அத்தணை கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் சொல்கிறார் ஓமர். The face of the woman is a source of corruption! பெண்களைக் குழந்தை பெற்றுப்போடும் எந்திரமாக மட்டும் ஆக்கிக்கொண்டால் தேரப்பிரச்சினை தீர்ந்திடும் என்று நினைக்கிறார் ஓமர். பெண்கொடுமைச் சட்டங்கள் அரங்கேறுகின்றன.
“பல நூற்றாண்டு காலமாக இப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள். பஃதூன் இனத்தில் கற்பழிப்புப் புகார் என்று ஏதாவது குற்றம் நிகழ்ந்திருக்கிறதா? பெண்ணை முன் வைத்து ஏதாவது குற்றம் நிகழ்ந்திருக்கிறதா? எந்தப் பெண்ணாவத காவல் நிலையத்திற்கோ நீதி மன்றத்திற்கோ வந்திருக்கிறாளா? இல்லை அல்லவா. அதுதான் விசியம். பஃதூன் பெண்கள் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்”
இது தாலிபன்களைப் புரிந்து கொள்ள மிக முக்கியம் என்கிறார் ஆசிரியர்.
- பர்தா அணியவேண்டும். வீட்டை விட்டு வெளியே வருவதென்னால் அது மிகக் கட்டாயம். பார்வை தரையின் மீது மட்டுமே இருக்கவேண்டும்.
- எந்த ஆணையும் ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது. அவர்க்ள பார்வை படும்படி நடமாடக்கூடாது
- அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றுவது தடை செய்யப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வராதே.
- எட்டு வயது முடிந்ததா. படிக்காதே (ரகசியமாக படிப்புச் சொல்லிக்கொடுத்து உயிர்விட்டவர்களைப் பற்றியும் தெரியவருகிறது)
- ஆண் டாக்டர்களிடம் மருத்துவம் பார்க்கக்கூடாது. பெண்கள் படிக்கவே கூடாது. உத்தியோகமே பார்க்கக்கூடாது.(பக்கத்துவீட்டில் டாக்டர் இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாமல் செத்ததாகத் தெரியவருகிறது)
- எட்டு வயதிற்குமேல் தந்தை, சகோதரர்கள்,கணவர்கள் தவிற யாருடனும் நேரடியாகப் பேசக்கூடாது
- ஹை ஹீல்ஸ் நோ. நடக்கிற சத்தமே கேட்கக்கூடாது
- பொது இடங்களில் உரக்கப்பேசுவதோ சிரிப்பதோ தடைசெய்யப்படுகிறது
- வீடுகளில் கதவு ஜன்னல்களுக்கு திரை அவசியம்
- பால்கனி – ஹாலில் கூட பெண்கள் இருக்கக்கூடாது. யாரும் இல்லை என்றால் ஹால் வரை வரலாம்
- வாகனம் ஓட்டக்கூடாது. சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து சென்றாலும் கணுக்கால் தெரியக்கூடாது. தெரிந்தால் அடி
- வழக்குத் தொடர அனுமதி மறுக்கப்படுகிறது
- ஆண்கள் பயணம் செல்லும் பேருந்துகளில் ஏறக்கூடாது
(டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவில் இஸ்லாமிய சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்று பொங்கிய ஆடவர் பெண்டிர் தனியே தொடர்பு கொள்ளவும். பெரிய லிஸ்டு தனியாக இருக்கிறது!)
வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆப்கன் பெண்களை ஒரு நஷ்ட ஈடு கூட தராமல் நீக்கிவிட்டார்கள். யுத்தம் சீரழித்திருந்த அந்த தேசத்தில் குடும்பத்திற்கான பணத்தேவை அதிகமாக இருந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 800 ரூபாய். இந்த (அவ)லட்சனத்தில் அனைவரையும் sack செய்துவிட்டது மக்கள் நல தாலிபன் அரசு. ஓடினார்கள் காபூலுக்கு. ஓடினார்கள் பாகிஸ்தானுக்கு – அகதிகளாக. பெனசீருக்கு இந்த அகதிகள் வருகை பெரிய தலைவலியாக இருந்தது.
“திட்டமிட்டும் கூட இப்படியொரு நாசகாரியத்தை யாராலும் இத்தணை திறம்பட நிறைவேற்ற முடியாது. நேர்ந்து கொண்டவர்கள் போலத் தாலிபன்கள் அப்படியொரு ஆட்டம் ஆட ஆரம்பித்தார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பத்தே நாளில் ஆப்கன் வீதிகளில் பெண் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இலவச இணைப்புகளாக அவரவர் குழந்தைகள்”
ஆப்கனை ஒருதரித்திர தேசமாக வளர்த்துக்கொண்டிருந்தனர் தாலிபன்கள்.
பெண்களுக்கு வழங்கக்கூடிய தண்டனைகள் என்று ஒரு தனிக்கட்டுரை இருக்கிறது. கொடுமை! உதாரணம் – மொட்டை மாடியில் பெண்குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையை மொட்டை மாடியில் இருந்து தூக்கி கீழே வீசிவிட்டார்கள். டரியல்!

முஜாகிதீன்களுக்கான சட்டப்புத்தகம் “லாயேஹா”. ஓமரே கைப்பட எழுதியிருப்பதை இரண்டு கட்டுரைகளில் விளக்குகிறார் ஆசிரியர். அதே ரணகளம்.
இந்த அடக்குமுறைக் கொடூரங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளுக்காக கை தட்டல்கள்.
அடுத்த இன்னிங்ஸ் தொடங்குகிறது இனப்படுகொலை!
One thought on “இது வேறு ஷரியத் – தாலிபன் 3”