தொடர்ந்து போராளிக்குழுக்கள் பற்றிய பதிவுகளுக்குப் பிறகு இன்னொரு முறை புத்தக மதிப்புரைகளைத் தொகுக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள நினைகிறேன். இந்த இடைவெளியில் விடுபட்ட சில பதிவுகளை வெளியிட நினைக்கிறேன்.
விஸ்வரூபம் படம் சர்ச்சையில் இருந்துகொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தார். இப்பொழுது அதை மேற்கோள் காட்டத் தேடுகிறேன் கிடைக்கவில்லை.
ஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான படம் மட்டும் அல்ல. மிக மென்மையாக அது சில சிந்தனைகளை முன்வைக்கிறது. மதமும் பாரம்பரியமும் நமக்கு அளிக்கும் அறத்தை அப்படியே கடைப்பிடிப்பதல்ல சரியான வழி என்று சொல்கிறது இல்லையா? நம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் அந்த அறத்தை இன்னும் நீட்டித்துக்கொள்ள அது அறைகூவுகிறது. அபு சென்று சேர்வது மதம் சார்ந்த அறத்தை அல்ல. மதம் சார்ந்த அறத்தில் வேரூன்றி நின்றுகொண்டு மனிதம் சார்ந்த நவீன அறம் ஒன்றை அவர் தொடுகிறார்.
அந்த மையம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்து விவாதிக்கும்போதுதான் நாம் அந்தப்படத்தைப்பற்றிய உண்மையான எதிர்வினையை ஆற்றுகிறோம். அதுவே அந்தப் படத்துக்கு நாம் ஆற்றும் கௌரவம்.
சலீம்குமார் அற்புதமான நடிகர். நான் எழுதும் எல்லாப் படங்களுக்கும் அவரை இங்கே பரிந்துரை செய்திருக்கிறேன். நடக்கவில்லை.
– ஜெயமோகன்
மலையாளப் படங்களைப் பெரும்பாலும் மற்றவர்களின் ரெகமண்டேசனுக்குப் பிறகுதான் பார்த்திருக்கிறேன். அதுவும் முன்னரே கதை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு. புரியனுமில்லையா. ஆஸ்கருக்கு இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம் இதன் நாயகன் சலீம் குமாருக்கு தேசீய விருதினையும் பெற்றுத்தந்தது.
இந்தப் படத்தின் கதை ஒற்றை வரியில் அடக்கக்கூடியது
எளிய குடும்பத்தின் தலைவன் அபு மற்றும் அவனது மனைவி. அவர்களின் ஹஜ் பயண ஆவல். அதை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முடிந்ததா என்பதே.
ஆனால் இந்தப் படம் ஏற்படும் சிந்தனை மிக சுகமானது. இந்தப் படம் காட்சிப்படுத்தும் இஸ்லாம் வாழ்வு முறை மிக தீர்க்கமானது. இன்றளவும் நல்ல ஒரு இஸ்லாமிய குடும்பத்தார் எப்படி இருப்பார்கள் என்பதையும் காட்சிப்படுத்துகிறது.
இஸ்லாம் என்றால் வன்முறை – தீவிரவாதம் என்று காட்சிகள் மாறி காலம் பலவாகிறது. இதற்கிடையில் இப்படிப்பட்ட ஒரு படம் தீவிரவாதம் கலக்காத – அதைப்பற்றி யோசிக்காத ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் படம். ஏழ்மையான குடும்பம். அதன் தலைவன் அபு (ஆதமின் மகன்) – சலீம் குமார். இவர் ஒரு அத்தர் வியாபாரி. அவரது மனைவி ஐஷும்மா (ஜரீனா வஹாப்). விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாரின் அறிமுகத்தில் கன்சல்டண்டாக வருவாரே, அவர்.
குடும்பத்தின் ஏழ்மையைப் பொருட்படுத்தாத அவரது மகன் அமீரகம் சென்றதும் இவர்களைக் கைவிடுவிடுவது. இதற்கிடையே அவரது ஹஜ் செல்லவேண்டும் என்கிற ஆவல் – குறிக்கோள்!
சலீம் குமார் – அவரது தோற்றம் – உடல் மொழிகள் – வசனங்கள் படத்திற்கு மிக வலு சேர்க்கின்றன. அத்தர் வித்த பணத்தை அபுவும் பால் விற்ற பணத்தை அவரது மனைவியும் உண்டியல் பெட்டியில் சேர்த்து வைக்கும் காட்சிகள் அழகு
உள்ளுர் பிரமுகர் சிபாரிசின் பேரில் அக்பர் டிராவல்ஸ் அஷரஃபின் (முகேஷ்) ஆலோசனை பெறுகிறார். வீடு திரும்பும் வழியில் உள்ளுர் ஆன்மீகப் பெரியவர் உஸ்தாதிடம் ஆரூடம் கேட்கும் காட்சி கனமானது. கணவனும் மனைவியும் பாஸ்போர்ட் போட்டோ எடுக்கும் காட்சி அழகு. வாழ்ந்திருக்கிறார் சலீம்.
புது பாஸ்போர்ட்க்கு போலீஸ் என்கொயரி உண்டு என்பதை அறியாமல் அபுவின் மனைவி பதபதைப்பதும் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து கண் கலங்குவதும் அழகு. பதபதைப்புடன் தனது ஆசிரியர் நண்பருடன் காவல் நிலையத்திற்குச் செல்லும் காட்சிகளும் அங்கே பதில் சொல்லும் காட்சிகளும் மிக அருமை

ஆசிரியராக வரும் அபுவின் இந்து நண்பரின் கரிசனம். ஹஜ் பயணம் பணத்தட்டுப்பாட்டினால் தடை பட்டதை அறிந்து, தன் சேமிப்பைக் கொண்டு போய் அபுவிடம் கொடுப்பதும் அதனை
ஹஜ் குறிக்கோளைச் சுட்டிக் காட்டி அபு மறுக்கும் காட்சிகள் கனமானவை.

மர வியாபரியாக வரும் கலாபவன் மணி கொடுத்த முன்பணத்தைப் பெற்று டிராவல்ஸ்க்குக் கட்டிவிட்டு, கடைசியில் மீதிப் பணத்தை முதலில் அபுவிடம் கொடுத்துவிட்டு, அதன் பிறகு மரம் உளுத்துப் போனதைச் சொல்வதாக காட்சி அமைத்துள்ளனர். அருமையான காட்சி. வியாபாரத்தி இலாப நட்டம் சகஜம். நட்டத்தை நான் ஏத்துகிறேன். நீ ஹஜ் போயிட்டு வா அபுக்கா என்று மனதில் நிற்கிறார் இந்த கிறித்துவ மர வியாபாரி.


ஹஜ் பயணம் எப்படியும் போய் விட முடியும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் சென்று கடன்களைத் தீர்த்து விடை பெறும் காட்சிகளில் கண்கள் குளமாகின்றன. பக்கத்து வீடு சண்டைக் கோழி சுலைமான் வீட்டில் நடை பெறும் காட்சிகள் இதற்கு நல்ல உதாரணம். விபத்தில் சிக்கி படுக்கையில் கிடக்கும் சுலைமான், ‘நீ ஹஜ் பயணம் பொகும் முன்பு என்னைப் பார்க்க வந்து நான் இல்லாமல் போனால் உன் மனம் வருந்துமே என்றுதான் கடவுள் உயிர் போகாமல் வைத்திருக்கிறான்’ என்று சொல்வது அழகான காட்சி.

முகேஷ், டிராவல்ஸ் மேலாளராக வருகிறார். ஹஜ் பயணத்தைக் கேன்சல் செய்ய வரும் அபுவிடம், ‘தன் பெற்றோரை அனுப்புவதாக நினைத்துக் கொள்கிறேன். நீ போய் வா அபுக்கா’ என்று முனையும் காட்சிகள் அவருக்கு வலு சேர்க்கின்றன.

சலீம் குமர், இவரை நகைச்சுவை நடிகராக அறிவோம். நிறைய படம் சொல்கிறார்கள். நான் இவரை வட்டிக் கடைகாரராக ‘ஏஞ்சல் ஜான்’ படத்திலும், எழுத்தாளர் மனோகரன் மங்களோதயமாக ‘போக்கிரி ராஜா’ படத்திலும் கண்டிருக்கிறேன். ஜெய மோகன் இவரைப் பற்றி சிலாஹித்துப் பேசுகிறார். இவருடைய நடிப்பு இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது.

பாஸ்போர்ட்க்காக போலிஸ்காரருக்கு லஞ்சம் கொடுப்பது, கனவு கண்டதை மனைவியிடம் சொல்லி மகிழ்வது, எல்லோரிடமும் ஹஜ் போகிறேன் என்று சொல்லி, விட்டிய பலா மரம் உளுத்து போய்விட்டது என்று அறிந்து உடைந்து பொவது, ஐஷும்மா தன் நகைகளைத் தருகிறேன் என்கிறபொது மறுப்பது, ‘என்னவோ இவன் வீட்டுக்குப் போக பயமாகத்தான் இருக்கு’ என்று புலம்விக்கொண்டே சுலைமானைப் பார்க்கப் போவது, ‘நீங்க மட்டும் ஹஜ் போய் வாங்க. இருக்கும் பணம் ஒருத்தருக்கும் போதுமே என்று மனைவி சொல்லும்போது கனவினைக் காரணம் காட்டி மறுப்பது, தனக்குப் பின் மனைவிக்கு இருக்க வீடு வேண்டும் என்று விற்க மறுப்பது, உஸ்தாது மறைவுக்குப் பின் அவர் இருந்த இடத்தில் சென்று புலம்புவது என்று அனைத்து ரீல்களுக்கும் உயிர் சேர்த்திருக்கிறார்.




ஜரீனா வஹாப் – last but not least – பிரிந்த மகனை நினைத்து கலங்குவதாகட்டும், பசுவைக் கன்றுடன் விற்றுவிட்டு முற்றத்தில் கண்கள் குலமாக நிற்பதாகட்டும், புது பாஸ்போர்ட்டில் ‘என் கை பட்ட மட்டும் மண் ஆகிடுமாக்கும்’ என்று கொணட்டுவதாகட்டும், ஐஷுமாவாகவே வாழ்ந்திருக்கிறார்.




ஒளிப்பதிவு அழகோ அழகு.
மக்கா மதினத்தில் பாடல் மனதில் நிற்கும்
இயக்குநர் சலீம் அகமது
மக்கா மதீனத்தில் பாடல் காதிற்கு இனிமை.
கடன் தீர்த்து விடை பெறும் அபு
பயணத்தை இரத்து செய்யவரும் அபுவிடம் பேசும் முகேஷ்
அனைவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஒரு படம்
தமிழ் பயணி குழுமத்திற்காக எழுதியது
சுபம்
ஜரீனா வஹாப் சிர்ச்சோர் ஹிந்தி படத்தில் பார்தது போலவே இப்போதும் இருக்கிறார். அவர் ஒரு மலையாள படத்தில் நடிப்பது பற்றி சமீபத்தில் படித்தேன்.
படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது பதிவு. ஆனால் எனக்கு சான்ஸ் இல்லே.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தென்றலாரே. யூ டியூபில் முழுப் படமும் கிடைக்கிறது.