இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் [...]
Month: April 2013
அழகிய பள்ளி
நண்பர்களே, பசங்களுக்கு கோடை விடுப்பு விட்டாச்சு. அவர்களுக்கு வீட்டில் இருப்பதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது. ஏதாவது ஒரு கேசை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக அலசும் சிபிஐ போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கழட்டிப்போட்ட 3 கால் சைக்கிளாக இருக்கலாம், ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கணினியின் கீபோர்டாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த பரபரப்புச் சூழலுக்கு இடையே ஊருக்குச் சென்று குலதெய்வத்துக்கு ஒரு சல்யூட்டை வைத்திட்டு வந்திடலாம் என்று இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டோம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள [...]
பத்திரிகை சந்தாவும் இரத்த அழுத்தமும்
ஒரு பத்திரிகைக்கு சந்தா கட்ட நிறைய காரணங்கள் இருக்கலாம். 1. கடையில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் கொடுக்கும் கட்டணத்தை விட வருடாந்திர சந்தாக்களுக்கான கட்டணம் குறைவாக இருக்கலாம் 2. குறிப்பிட்ட பத்திரிகை நாம் வசிக்கும் பகுதியில் கிடைக்காதிருக்கலாம். 3. பக்கத்தில் கிடைத்தாலும் நமது சோம்பல்தனத்தால் பக்கத்தில் கிடைக்கும் கடையிலும் வாங்க இயலாமல் அடிக்கடி சில புத்தகங்களை வாங்கத் தவறுவது. இங்கு புத்தகங்களுக்கான எனது சந்தா கட்டிய அனுபவங்கள். 1. இந்தியா டுடே. எனது சகோதரர் இதற்கான சந்தா வைத்திருந்தார். [...]
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்பின் சக வாசக நண்பர்களுக்கு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இதோ எனது புத்தாண்டு பீப்பி பதிவு! கோடை கோடை துவங்கிவிட்டது. இளநீர் மற்றும் தர்பூசணிகள் சாலைகளுக்கு வர்ணம் பூச ஆரம்பித்துவிட்டன. வியர்த்து வழிந்த முகத்துடன் கடைவீதிகளில் மக்கள் நடக்க ஆரம்பித்துள்ளனர். வேம்பு பூத்திருக்கிறது. மாம்பழம் வரத் தொடங்கி உள்ளது. புத்தாண்டு இன்னபிற அடையாளங்களுடன் செவ்வனே பிறந்துள்ளது. கொஞ்சம் மழை பெய்து நம்மைக் காப்பாற்றினால் நல்லது. கடந்த ஆண்டு பெரிதாக எந்த ஒரு [...]
TEMPLES OF TAMILNADU – WORKS OF ART
TEMPLES OF TAMILNADU - WORKS OF ART ஆசிரியர் – தேவமணி ரஃபேல் பதிப்பு – Fast Print Service (pvt) ltd, 1996 பிரிவு – கலை http://www.amazon.com/Temples-Tamil-Nadu-works-art/dp/9559440004 சிறப்பான ஒரு Coffee Table Book. சுதர்சனம் கலை கலாச்சார மையத்தில் பணிபுரிந்தபோது ஆசிரியர் ரஃபேலைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் கையொப்பமிட்ட இந்தப் புத்தகமும். தமிழகத்தின் தன்னிகரில்லா சொத்துக்களாக மதிக்கப்படும் கோவில்களைப் பற்றிய ஆசிரியரின் காமிரா பார்வை இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுகிறது. பக்கத்துக்குப் [...]