TEMPLES OF TAMILNADU – WORKS OF ART
ஆசிரியர் – தேவமணி ரஃபேல்
பதிப்பு – Fast Print Service (pvt) ltd, 1996
பிரிவு – கலை
http://www.amazon.com/Temples-Tamil-Nadu-works-art/dp/9559440004
சிறப்பான ஒரு Coffee Table Book. சுதர்சனம் கலை கலாச்சார மையத்தில் பணிபுரிந்தபோது ஆசிரியர் ரஃபேலைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் கையொப்பமிட்ட இந்தப் புத்தகமும்.
தமிழகத்தின் தன்னிகரில்லா சொத்துக்களாக மதிக்கப்படும் கோவில்களைப் பற்றிய ஆசிரியரின் காமிரா பார்வை இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுகிறது. பக்கத்துக்குப் பக்கம் பளீரென்ற புகைப்படங்கள் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்வது உறுதி.
ராஜராஜீஸ்வரம் (தஞ்சாவூர்)
சிதம்பரம்
திருச்செங்கோடு
திருவெற்றியூர்
குடுமியான்மலை
தாராசுரம்
ஸ்ரீரங்கம்
திருபுவனம்
திருவாரூர்
ஆவுடையார்கோயில்
மதுரை
கங்கை கொண்ட சோழபுரம்
மாமல்லபுரம்
திருவானைக்காவல்
திருப்பரங்குன்றம்
அழகர்கோயில்
திருச்சி
திருவண்ணாமலை
நார்த்தாமலை
மூவர் கோயில் (கொடும்பாளூர்)
புள்ளமங்கை
ஆக 21 கோவில்கள் (அவற்றில் 4 நம்ப ஏரியாவிலிருந்து – புதுக்கோட்டை) இந்தப் புத்தகத்தில் காணக்கிடைக்கின்றன. தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சை உள்ளிட்ட அனைத்துக் கோவில்களின் புகைப்படங்களும்…. வார்த்தை சொல்ல முடியாத அளவிற்கு அழகு.
கோயில் கட்டிடக்கலை என்று வரும்போது கொடும்பாளூர், நார்த்தாமலை மற்றும் குடுமியான்மலை தவிர்க்க இயலாதது. அவற்றையும் தன் புத்தகத்தில இணைத்தமைக்காக மிக்க மகிழ்வுடன் இந்தப் புத்தகத்தைப் பதிகிறேன்.