புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்பின் சக வாசக நண்பர்களுக்கு,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இதோ எனது புத்தாண்டு பீப்பி பதிவு!

கோடை

கோடை துவங்கிவிட்டது. இளநீர் மற்றும் தர்பூசணிகள் சாலைகளுக்கு வர்ணம் பூச ஆரம்பித்துவிட்டன. வியர்த்து வழிந்த முகத்துடன் கடைவீதிகளில் மக்கள் நடக்க ஆரம்பித்துள்ளனர். வேம்பு பூத்திருக்கிறது. மாம்பழம் வரத் தொடங்கி உள்ளது. புத்தாண்டு இன்னபிற அடையாளங்களுடன் செவ்வனே பிறந்துள்ளது. கொஞ்சம் மழை பெய்து நம்மைக் காப்பாற்றினால் நல்லது.

20130414-152503.jpg

20130414-152619.jpg

கடந்த ஆண்டு பெரிதாக எந்த ஒரு நினைவுகளையும் பெரிதாக விட்டுச் செல்லவில்லை.

பள்ளி செல்வோம்

கடந்த வருடம் என் வாரிசு பள்ளியில் காலடி எடுத்து வைத்தார். சென்னையில் கல்வி – ஆங்கில வழிக் கல்வி – மெட்ரிக் வழி கல்வி – இவை மூன்றுமே எனக்கு அலர்ஜி. வாழ்வின் போக்கு நாம் விரும்பும் படி அமைந்துவிட்டால் வாழ்க்கைக்கு ஏது அழகு. மாண்டிசரியில் சேர்ந்திருக்கிறார் என்பது ஒன்று மட்டும் என் மனதிற்கு அமைதியைத் தருகிறது. நியூக்ளியர் குடும்பமாக இருப்பதில் பிரச்சினைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தின் அங்கத்தினர்கள் கூடி உள்ள குழந்தைகளின் மனவளர்ச்சியின் வேகம் அதீதமாக இருக்கிறது. என் வாரிசு பள்ளி சென்றபின்தான் உலகுடன் பழக ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் கைபேசி

தமிழ் படிக்க எழுத ஏதுவாக எனது கைபேசியை HTC One Vக்கு மாற்றினேன். HTCயின் Indic Scriptக்கான ஆதரவு அபாரம். Explorer என்கிற பழைய போனில் இருந்து முரசு எழுத்துருக்களுடன் இந்தி மற்றும் தமிழுக்கான ஆதரவு உள்ளது. எனது முந்தைய போன் தற்போது இருப்பதை விட சிறப்பானது என்றாலும் அதில் பல்வேறு வேண்டுகோளுக்கு இடையிலும் தமிழ் ஆதரவைத் தராமல் இருந்ததில் HTCமீது வருத்தமே. எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லி ஆண்ட்ராய்டு 4ல் தந்திட்டனர். என்ன இருந்தாலும் தாய்வான் சப்பை மூக்கன்கள்தானே.

20130414-153042.jpg

 

தமிழ் ஐபேடு

மைக்ரோ பிளாகிங் வகைக்குதான் போன் சரிப்பட்டு வருகிறது. கூகிள் ரீடர் வழி பிற வலைப்பதிவுகள்-தளங்களைப் படிக்க வசதிப்படவில்லை. அத்துடன் நான் வாங்கியிருந்த டாப்ளட் எனக்கு இல்லை என்று வாரிசு மறுத்துவிட்டார். எனவே தமிழ் படிக்க, குறுகிய அளவில் கட்டுரைகளை எழுத வாங்கிக்கொண்டேன். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல்’ கலங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னும் 4 தவணை பாக்கி உள்ளது.

20130414-153153.jpg

கூகுள் ரீடர் – Your days are numbered

கூகுள் ரீடருக்கு நாள் குறித்திட்டாக அறிவிப்பு வந்துள்ளது. அதற்கு மாற்றாக மூன்று செயலிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தேன்

1. Pulse

Pulse_1-250x331

 

2. Feedly

20130414-152221.jpg

20130414-152319.jpg

3. Perfect RSS Reader

perfect rss perfect rss2

கருவிகள் மற்றும் கணினிகளுக்கான ஒருங்கிணைந்த பயன்பாடு – பகிர்வு வசதி – கண்ணை உறுத்தாமல் படிக்கும் வசதி என்பனவற்றை ஆராய்ந்து Feedlyயைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.

திருச்சி விமான நிலையம்

5 வருட காலத்திற்குப் பின் திருச்சிக்கு விமானத்தில் செல்லவேண்டிய நிலை வந்தது. ஓலைக்குடிசையில் ஒண்டிக்குடித்தனம் இருந்த மாதிரி இருந்த பழைய ஏர்போர்ட் எங்கே. சர்வதேச தரத்திலான புதிய ஏர்போர்ட் எங்கே. பட்டையைக் கிளப்பி இருக்கின்றனர். அன்பே வா படத்தில் MGR வந்து இறங்குவாரே, அது மாதிரி அனாமத்தா கிடந்த ஏர்போர்ட்டைத் தரம் உயர்த்தி சிங்கப்பூர், மலேசியா, அமீரகம், கொழும்புவுடன் இணைத்துள்ளனர். அசத்தல்.

TRZ_Aero_Bridges_Used

தமிழுக்கு சவால்

முன்னர் அழித்துவைத்திருந்த எனது வலைப் பதிவை மீண்டும் உயிர்ப்பித்து, தாய் தமிழுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்திருக்கிறேன்.

ஆணி உலகம்

பணியிடத்தின் தேக்க நிலை தொடர்கிறது. இந்த வருடத்திலாவது மாறும் என்று நம்புவோமாக.

காகித உலகம்

20130402-224326.jpg

புத்தாண்டுக்கு புதிதாக 3 புத்தகங்கள் பேரா. சுவாமிநாதன் தந்திருக்கிறார். நல்ல தொடக்கம்.

தற்போது “இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு” படித்துக்கொண்டுள்ளேன். மிக அற்புதமாக புரிதலைத் தந்திருக்கிறது.

பார்க்க

இந்தப் புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தோடு விரைவில் வருவேன்.

நலமே உண்டாகுக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s