பத்திரிகை சந்தாவும் இரத்த அழுத்தமும்


ஒரு பத்திரிகைக்கு சந்தா கட்ட நிறைய காரணங்கள் இருக்கலாம்.

1. கடையில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் கொடுக்கும் கட்டணத்தை விட வருடாந்திர சந்தாக்களுக்கான கட்டணம் குறைவாக இருக்கலாம்

2. குறிப்பிட்ட பத்திரிகை நாம் வசிக்கும் பகுதியில் கிடைக்காதிருக்கலாம்.

3. பக்கத்தில் கிடைத்தாலும் நமது சோம்பல்தனத்தால் பக்கத்தில் கிடைக்கும் கடையிலும் வாங்க இயலாமல் அடிக்கடி சில புத்தகங்களை வாங்கத் தவறுவது.

இங்கு புத்தகங்களுக்கான எனது சந்தா கட்டிய அனுபவங்கள்.

குலை குலையா பத்திரிகை
குலை குலையா பத்திரிகை

1. இந்தியா டுடே.

எனது சகோதரர் இதற்கான சந்தா வைத்திருந்தார். சென்னைக்கு நான் வந்தபிறகு நான் தனியே சந்தா கட்டினேன். அவர்கள் அனுப்புவதில் ஏதும் குறைகள் இருக்காது. ஆனால் பிரச்சினைகள் இப்படியாகத் துவங்கும்

நேரத்திற்குப் பத்திரிகை கைக்குக் கிடைக்காது. சமயத்தில் கடைகளில் புத்தகம் வந்து தீர்ந்த பிறகுதான் கைக்கு வந்து சேரும்

வந்து சேர்கையில் கவர் கிழிந்து, மடங்கி, கசங்கி புதுப் புத்தகத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாதிருக்கும் (இடையில் ஏதோ ஒரு ஓசி பேப்பர் பேர்வழி படித்திருக்கிறார்)

சமயத்தில் வந்தே சேராது.

அம்மா எனக்கு மட்டும் புத்தகம் வரலைம்மா..
அம்மா எனக்கு மட்டும் புத்தகம் வரலைம்மா..

குறைகளைச் சொல்லி கொரியரில் அனுப்புங்கப்பா என்றால் எதிர்மறையாகப் பதில் வந்து சேர்ந்தது. ஒரு கட்டத்தில் திரும்ப சந்தா கட்டுவதை நிறுத்திவிட்டேன்.

2. அம்புலிமாமா

குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்பதில் மிகப்பெரிய வரட்சி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. காமிக்ஸ்கள் காணக்கிடைப்பதில்லை. சுட்டி விகடன் கிட்டத்தட்ட பள்ளிப் படிப்பிற்கான துணைக் கையேடுகள் போல தோன்றுகிறது. இடையில் இன்னும் கலர் மங்காதிருப்பது அம்புலி மாமா மட்டுமே. வருத்தத்திற்குரிய வகையில் அது கடைகளில் கிடைப்பதில்லை. இதற்கு ஆன்லைன் மூலமாக சந்தா கட்டினேன். போதாக்குறைக்கு நண்பர் வேறு அவருக்காகக் கட்டச் சொன்னார். அங்குதான் விதி விளையாடியது.

எனது சந்தா கிளியர் ஆகிவிட்டது. நண்பருக்காகச் செய்கையில் பாதியில் ஏதோ ஆகிவிட்டது. விளைவு. பணம் கழிக்கப்பட்டது, பதிப்பகத்தார் வசம் போய் சேரவில்லை. 4 மாசமாச்சு இன்னும் வந்து சேரலை.

போஸ்ட் மேன் எப்ப வருவார்?

சரி முதல் சந்தாவாவது கிளியர் ஆச்சே என்று பார்க்கையில் அந்த சந்தாவும் பிரச்சினைக்குள்ளானது. 2 இதழ்கள் வந்தன. அதற்கப்புறம் வருவது நின்றுவிட்டது. போன் – கடுதாசி என்று போய்க்கொண்டிருக்கிறது.

இரத்த அழுத்தத்தைத் தூண்டுவதுதான் சந்தாக்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது. தேவையில்லாத டென்சன்.. தேவையில்லாத STD போன் செலவு..

magzter

இதற்கு மாற்றாக Digital Subscription உகந்ததாக இருக்கும். விகடன் துவங்கி வைத்தார்கள் என்று நினைக்கிறேன். எனது சிற்றறிவுக்கு எட்டாத வகையில் ‘இலக்கிய சுவையோடும், சிறந்த தமிழ் நடையோடும்’ வருவதால் அந்தப் பக்கம் கிஞ்சித்தும் செல்வதில்லை. நேற்று இந்தியா டுடேவின் தமிழ் பதிப்பிற்கான டிஜிட்டல் சந்தா கட்டினேன். Magzter வழி இவர்களின் சேவை அழகாக இருக்கிறது. பிரச்சினை இன்றியும் இருக்கிறது. ஒரு வருடத்திற்கான புத்தக சந்தா 875 ரூபாய். டிஜிட்டல் சந்தாவிற்கு 699 ரூபாய். இதாவது பிரச்சினை இன்றிப் போகும் என்று நம்புகிறேன்.

டிஜிட்டல் வழி பதிப்பு என்பதுதான் எதிர்கால முறை. ஆங்கில ஏடுகள் கையடக்கக் கருவிகளிலும் இணையத்திலும் படிக்கும் வண்ணம் புத்தகங்களைக் கொண்டு வந்துவிட்டனர். தமிழிலும் வரும் காலம் அதிகமில்லை. NHM Reader அதற்கு ஒரு நல்ல உதாரணம். கூடிய விரைவில் சர்வதேச தரத்தில் தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்லாது புத்தகங்களும் டிஜிட்டல் வழியில் வரும்.

நலமே விளையட்டும்.

12 thoughts on “பத்திரிகை சந்தாவும் இரத்த அழுத்தமும்

 1. டிஜிட்டல் வழி பதிப்பு என்பதுதான் எதிர்கால முறை. ஆங்கில ஏடுகள் கையடக்கக் கருவிகளிலும் இணையத்திலும் படிக்கும் வண்ணம் புத்தகங்களைக் கொண்டு வந்துவிட்டனர். தமிழிலும் வரும் காலம் அதிகமில்லை.

  அருமையான பயனுள்ள தகவல்கள்…

  1. ஆமாங்க. நாம் இதில் இன்னமும் பின் தங்கி இருக்கிறோம். குறிப்பாக கருவிகளில் தமிழின் ஆதரவு என்பது சமீப காலத்தில்தான் கிடைக்க வாய்த்துள்ளது. இனி தடைகள் ஏதும் இருக்காது.

   குறிப்பாக, டிஜிட்டல் சந்தாவை ஊக்குவிக்க ஆரம்பகாலத்தில் பேப்பர் பதிப்பை விட விலையைக் குறைக்கவேண்டும். விகடன் சந்தா மாதிரி குழப்பமாக இல்லாமல் வெளிப்படையாக இருக்கவேண்டும்.
   அது மட்டுமின்றி பதிப்பகத்தார்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். பேப்பர் – மை இரண்டுக்குமானது மிகப்பெரிய செலவு. டிஜிட்டல் புத்தகம் கணிசமான அளவில் செலவைக் குறைக்கும்.

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

 2. It is clear that the e-subscribe/Reading will be the future..but reading a hard copy is much more convenient than other reading methods also we may miss some interesting features like solving cross words or puzzles like joining numbers to find out the hidden images and coloring in children’s magazines etc…

  1. வாங்கண்ணே. அது என்னவோ சரிதான். ஒழுங்கா புத்தகம் நம்ப கைக்கு வந்து சேருகிற வந்தா எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறைந்த பட்சம் சந்தா அனுப்பிறவனுக கொரியர்ல அனுப்பினா நல்லா இருக்கும். (முன்பொரு காலத்தில் PC-Qவில் அந்த வசதியைச் செய்து தந்தார்கள். தனியே வேண்டுகோள் விடுத்தால் கொரியரில் வந்து சேரும்)

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   1. Yes. I do subscribe a children’s magazine called Magic pot from the house of Malayala Manorama. Personally i feel the content of the book is not much good, but it has been delivered properly to my remote home town every week for past two years…!

 3. சந்தா கட்டி நொந்த கஷ்டம் எனக்கும் உண்டு. டிஜிட்டலுக்கு மாறலாம்னு இருக்கேன்.

  1. வணக்கம் தென்றலாரே.
   ஆம். பலரிடமும் இந்தப் புலம்பல் இருக்கிறது. நான் இந்தப் பதிவில் சொன்ன தளத்தில பல தமிழ் பத்திரிகைகள் உள்ளன. (தேவி கண்மணி முதற்கொண்டு…)

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

 4. உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன்.
  நான் சந்தா எல்லாம் கட்டுவதில்லை. ஆனால் இப்படி எல்லாம் செய்தால் யார் பிறகு சந்தா கட்டுவார்கள் ? ஆனால் உங்கள் பதிவில் சொன்ன வலித்தளம் குறித்துக் கொண்டேன். நல்ல அருமையான தகவல் .நன்றி பகிர்ந்ததற்கு.

  1. அலட்சியம். அது ஒன்றுதான் காரணம். நமது தேசீய பாவங்களில் ஒன்று இந்த அலட்சியம். அதுதான் காரணம். அவரவர் வேலையைச் சரியாகச் செய்தால் ஒரு பிரச்சினையும் வராது.

   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   1. உங்கள் கருத்துரையை படித்ததும் பயந்து விட்டேன்.என் பின்னூட்டம் முதல்வரி //உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன்//

    உங்கள் reply இல் முதல் வரி //அலட்சியம். அது ஒன்றுதான் காரணம்.//
    சேர்த்து படியுங்கள் புரியும். ஹா…..ஹா….ஹா……..(just for joke)
    தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் எழுதியதற்கும் உங்கள் பதிலையும் படித்து ரசித்தேன். வேறொன்றுமில்லை. தொடர்ந்து வருகிறேன்.
    நன்றி.

 5. @rajalakshmiparamasivam
  ஆஆஆ! ஒரு நிமிடம் பதறிச் சிதறிவிட்டேன்.
  தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
  அவசியம் வாருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s