பொன்னியின் செல்வன்


பொன்னியின் செல்வன்
ஆசிரியர் – கல்கி
பிரிவு – நாவல்
மேல் அதிக விபரத்திற்கு http://ponniyinselvan.in/book/kalki/ponniyin-selvan

இது இந்த வலைப்பதிவின் 100வது பதிவு. தமிழின் மிக முக்கிய நாவலைப் பற்றிய கட்டுரையோடு சிறப்பாக அமைந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி – பாண்டியன்

இந்த அனுபவக் கட்டுரையின் ஆசிரியர் - சஞ்சய்
இந்த அனுபவக் கட்டுரையின் ஆசிரியர் – சஞ்சய். எனது சகோதரரின் வாரிசு. இந்த வருடம் ஏழாம் வகுப்பு செல்கிறார்

சோழர் குடியில் பிறந்த மாமன்னன் ராஜராஜசோழனின் கதையை கொஞ்சம் கற்பனையோடு விவரிக்கும் கல்கியின் புத்தகம்.  கதையின் நாயகன்  வல்லவரையன் வந்தியத்தேவன்.  இரண்டாம் பராந்தகனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனின் கட்டளையை நிறைவேற்ற தஞ்சாவூருக்கும் பழையாறைக்கும் வல்லவரையன் புறப்பட்டுச் செல்கிறான்.  வழியில் நிறைய ஆபத்துகளைச் சந்திக்கிறான்.  இதற்கிடையில் இரண்டாம் பராந்தகனையும் ஆதித்த கரிகாலனையும் அருள்மொழிவர்மனையும் (ராஜராஜன்) ஒரு கூட்டம் கொல்ல திட்டம் தீட்டுகிறது.  வல்லவரையன் வந்த ஆபத்துகளை சமாளித்தானா?  மூன்றுபேரும் கொலையாளிகளிடமிருந்து தப்பித்தனரா?  என்பதே கதை.

ARV_PONNIYIN_SELVAN_352094g

வல்லவரையன் மிகக் கடுமையான ஆபத்துகளை அறிவாற்றலுடன் சமாளிப்பதாகக் கதையில் காட்டியிருக்கிறார் கல்கி.  ஆழ்வார்கடியான் நம்பி என்றும் வைஷ்ணவரை மிகச் சமர்த்தான ஒற்றனாகக் காட்டியிருக்கிறார் கல்கி.  இந்த கதையின் வில்லி நந்தினி…. பெரிய பழுவேட்டரையரின் மனைவி.  அவள் எல்லோரையும் மோகவலையில் வீழ்த்தி தன் பக்கம் இழுத்துக்கொள்பவள்.  கந்தமாறன் என்பவன் வந்தியத்தேவனின் பால்ய சினேகிதன்.  கந்தமாறனையும் தன்பக்கம் இழுத்துக்கொள்கிறாள் நந்தினி.  இவர்கள் இன்னும் பல ஆட்களுடன் சோழர்குலத்துக்கு எதிராக சதி செய்கிறாள்!.  இதில் கந்தமாறனுக்கு வந்தியத்தேவன் மீதுள்ள சினேகமெல்லாம் கொடிய துவேஷமாக மாறிவிடுகிறது.  இதற்கிடையில் வந்தியத் தேவனும் குந்தவையும் (ராஜராஜனின் சகோதரி) ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.  கந்தமாறனின் தங்கையான மணிமேகலையும் வந்தியத்தேவனை விரும்புகிறாள்.  ராஜராஜனும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ஒருவரை ஒருவர் விரும்பியதால் திருமணம் நடக்கின்றது.

12THKALKI_351690g

ஆனால் கடைசியில் கந்தமாறனின் தங்கை மணிமேகலை இறந்து விடுவதாகக் கல்கி காட்டியிருக்கிறார்.  கதையை இப்படி முடித்திருக்க வேண்டாம்.  ராஜராஜனும் வந்தியத்தேவனும் தூர தூர தேசங்களுக்குப் போய் அங்கே இருந்த ராஜ்ஜியங்களை எல்லாம் வென்று திரும்பிவந்து  நீடூழி வாழ்ந்தனர் என்று கதையை முடித்திருக்கலாம்.  கதையில் நிறைய தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  மற்றபடி கதையை கொஞ்சம் ஆக் ஷன் திரில்லராகவே கொண்டு போயிருக்கிறார் கல்கி.
அவ்வளவுதான்……….!
புத்தக அனுபவம் எழுதியது சஞ்சய்.

Advertisement

8 thoughts on “பொன்னியின் செல்வன்

 1. அடுத்த தலைமுறையையும் கல்கி வசியப்படுத்துகிறார் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு எடுத்துக்காட்டு.

 2. சமீபத்தில் தான் டேபில் பொன்னியின் செல்வன் படிச்சேன். கீழே வைக்க மனசே இல்லை. ரொம்ப அருமையா இருக்கு. அருமையான நாவல். அடுத்து லிஸ்டில் இருப்பது சிவகாமியின் சபதம். :))

  1. வாங்க. நல்வரவு.
   சிவகாமியின் சபதத்திற்கு நான் ஓட்டுப்போடுவேன். ஏன்னா நான் படிச்ச ஒரே சரித்திர நாவல் அது மட்டும்தான். அதுவும் இந்தப் பதிவை எழுதின சிறு வயது ஆசிரியர் மாதிரியான வயதில். தங்கள் பதிவு படித்தேன். பல்போனால் என்ன. கடுகு சிறியதானாலும் காரம் என்றுமே குறையப்போவதில்லை. சிங்கத்திற்கு ஒரு பல்போனால் சீற்றம் குறைந்துவிடுமா என்ன!

 3. ஏழாம் வகுப்புச் செல்லும் மாணவனின் புத்தக அனுபவம் நன்றாக இருக்கிறது. பொன்னியின் செல்வனை இத்தனை சுருக்கமாக யாராலும் சொல்ல முடியாது. இந்தக் கட்டுரை ஆசிரியர் வயதில் அதைப் படிக்க ஆரம்பித்த நான் திரும்பத் திரும்ப இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன். ஏற்கனவே படித்ததுதானே என்று தோன்றவே தோன்றாது. கற்பனைப் பாத்திரங்களும், உண்மை பாத்திரங்களுடன் கலந்து மிகவும் சுவாரஸ்யமான ஒரு நாவல்.

  இந்தத் தலைமுறை மட்டுமில்லாமால் வரும் தலைமுறைகளும் பொன்னியின் செல்வனைப் படிப்பார்கள் நிச்சயம்!

  1. வணக்கம் அம்மா,
   பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எல்லோரும் சிலாகிக்கும் விஷயம் இது. அடுத்த தலைமுறைக்கும் தமிழை எடுத்துச் செல்லும் எழுத்து என்றால் மிகை ஆகாது.

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

 4. வலைப்பதிவின் 100வது பதிவுக்கு வாழ்த்துகள்..பொன்னியின் செல்வனின் விமர்சனம் வியக்கவைத்தது..பாராட்டுக்கள்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s