5D சினிமா


இன்று எங்களுக்கு முழுநேர பவர் கட். இருந்தா மட்டும் என்ன வாழப்போகுது. அக்னி நட்சத்திரத்தில் பவர்கட்டின் உச்சத்தை எதிர்க்க விரும்பாத நான் குடும்ப சகிதம் Express Avenue Mallல் சென்று செட்டில் ஆனோம். அதன் உள்ளே எஸ்கேப் சினிமாவில் டிக்கட் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பக்கத்தில் இருந்த 5டி சினிமா என் மனைவியாரின் கவனத்தை ஈர்த்தது.

சென்னை Express Avenueவில் 5டி தியேட்டர்
சென்னை Express Avenueவில் 5டி தியேட்டர்

ஏற்கனவே அங்கே சென்றிருக்கிறோம். ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அப்போது தவிர்த்துவிட்டோம்.
இன்றைக்கு வீட்டுக்காரம்மாவே சென்று டிக்கட் வாங்கிவந்துவிட்டதால் பதுவிசாக உள்ளே சென்று அமர்ந்துவிட்டோம். 10 நிமிடத்திற்கு 150 ரூபாய். ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் வெறும் 10 நிமிடப் படத்திற்கென 3 பேருக்கு 450 ரூபாய் கொடுத்தது என்னவோ செய்தது.

உள்ளே நுழையும்போதே கண்ணாடி கொடுத்தனர். எந்த ஒரு குறிப்புரைகளோ விளக்கமோ இல்லாமல் படம் ஓடத் தொடங்கியது. முதலில் ஒரு குட்டி டயனோசர் பற்றிய ஒரு படம். பிறகு ஒரு ரோலர் கோஸ்டர். 10-12 நிமிடங்களில் ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

3டி – சினிமாவிற்கு

நான்காவது டி – நாற்காலியின் அசைவிற்காக இருக்கலாம்

ஐந்தாவது டி – மழை பொழிவது, காற்று வீசுவது போன்றவைக்காக இருக்கலாம்

இதன் விளக்கக் காட்சியைக் கீழே உள்ள அசைபடத்தில் காணலாம்.

டயனோசர் நடந்து வருவதன் அதிர்வு – டயனோசர் குட்டி பட்டாம்பூச்சியைப் பிடிக்கப்போகும் தாவுதல் அதிர்வு – டயனோசர் குட்டி வெகு உயரத்தில் நிற்கும்போது வீசும் காற்று – ரோலர் கோஸ்டரில் குகைக்குள் போகும்பொது பெய்யும் சாரல் மழை என்று அற்புதமான அனுபவம் இது

குவாலியரைச் சேர்ந்த இந்த குழுமம் சென்னையில் Express Avenue மற்றும் Phoenix மால்களில் கடை விரித்துள்ளனர். மேலும் கோவையில் ப்ரூக்பீல்டு மால் செல்வோரும் கண்டுகளிக்கலாம்.

13 thoughts on “5D சினிமா

 1. வணக்கம் பாண்டியன்!
  உங்கள் செலவில் நாங்கள் 5D படங்களின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பற்றித் தெரிந்து கொண்டோம்.

  உங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் குழந்தை எப்படி இவற்றையெல்லாம் ரசித்தாள்/ன் என்று கேட்டு எழுதுங்களேன். (நீங்கள் மூன்று பேர் என்று போட்டிருப்பதால் உங்கள் குழந்தை என்று ஊகித்தேன். ஊகம் தவறானால் மன்னிக்கவும்.)

  என் முதல் வருகை. இனி தொடர்ந்து வருகிறேன். பழைய இடுகைகளையும் படிக்கிறேன்.

  அன்புடன்,
  ரஞ்சனி

  1. அம்மா, தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் ஊகம் சரியே. கூட வந்தது எனது 4 அகவை நிரம்பிய புத்திரர். அவனுக்கு முதலில் நாற்காலி ஏன் ஆடுகிறது என்று புரியவில்லை. பிறகு செட் ஆகிவிட்டான் என்கிற எண்ணத்தில் நான் படம் பார்க்கத் துவங்கிவிட்டேன்.

   இடையில் பார்த்தபோது 3டி கண்ணாடியை மேலே தூக்கிவிட்டு வெறும் கண்களால் கலங்கிய படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். கேட்டா, கண்ணாடி போட்டா எல்லாம் இங்க வருதுப்பா.. என்று கலவரப் பட்டுக்கொண்டார். பிறகு கண்ணாடியை மீண்டும் மாட்டிவிட்டு கைகளால் பிடித்துக் கொண்டிருந்தேன்.

   தங்கள் வரவு நல்வரவாகுக!

 2. தங்கள் அனுபவத்துடன் சில நுட்பங்கள் மற்றும் கானொளி விளக்கமும் பகிர்ந்தமைக்கு நன்றி…

  1. ஒரு ஆட்டோமொபைல் தமிழரின் பின்னூட்டத்தில் கடைசிபெஞ்ச் மகிழ்வடைகிறது. நன்றி

 3. டயனோசர் நடந்து வருவதன் அதிர்வு – டயனோசர் குட்டி பட்டாம்பூச்சியைப் பிடிக்கப்போகும் தாவுதல் அதிர்வு – டயனோசர் குட்டி வெகு உயரத்தில் நிற்கும்போது வீசும் காற்று – ரோலர் கோஸ்டரில் குகைக்குள் போகும்பொது பெய்யும் சாரல் மழை என்று அற்புதமான அனுபவம் இது ..!

  அருமையான அனுபவப்ப்கிர்வுகள்..பாராட்டுக்கள்…

  காணொளிக்காட்சிகள் ரசிக்கவைத்தன ..!

  1. தங்களின் வருகைக்கு நன்றி.

   முடிந்தால் ஒரு முறை போய் கண்டு களித்து வாருங்கள். தற்போது அபிராமியில் 7டி என்று ஏதோ ஒன்று போட்டிருக்கிறார்களாம். என்னான்னு பார்க்கலாம்.

   1. நன்றிகள்..

    சிங்கப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு சென்றுவந்தோம் ..

    குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள்….

 4. வணக்கம்…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_28.html) சென்று பார்க்கவும்… நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s