லஷ்கர் வழங்கும் சம்மர் விண்டர் கோர்சுகள்


மீண்டும் பாகிஸ்தானின் காஷ்மீர் நாடகங்கள் தீவிரவாதங்களாக நடைபெறத் தொடங்கி இருக்கின்றன. எல்லை தாண்டி வந்து இந்திய ஜவானின் தலையைத் துண்டித்துச் சென்றதில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தின் நவீன செயல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 80களை ஒப்பிடுகையில் பள்ளத்தாக்கில் தீவிரவாத அடிமைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இப்படியே போனால் தீவிரவாத அரசியல் செய்ய இயலாது என்று இந்திய எதிர்ப்பு குழுக்கள் உணர்ந்துள்ளன. ஆகவே இந்திய எல்லை அருகில் இருக்கும் பஞ்சாப் மாகாணம் போன்ற இடங்களில் இருந்து மாமூல் பாகிஸ்தானியர்களைவிட மத உணர்வுகளை அதிகமாக மண்டைகளுக்குள் புகுத்தி போக் (POK)கிற்கு அனுப்பி பாலீஷ் போட்டு காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் செய்கிறது பாகிஸ்தான்.

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இந்த வருடம் அதிகம். அதற்கேற்ப பாகிஸ்தான் உருவாக்கிய ஊடுருவல் மற்றும் தாக்குதல் தரித்திரங்களும் அதிகம்.

இதற்கான பயிற்சிப் பட்டறைகள் இந்தப் பதிவில் வருகின்றன.

தௌரா-இ-சூஃபா
இடம்: லாகூருக்கு அருகே முரிட்கே தலைமையகம்
நாள்: 21 நாட்கள்
கவனம்: மதப் பயிற்சி

20131020-222242.jpg

தௌரா-இ-ஆம்
இடம்: போக்-கில் முஸாஃபராபாத்
நாள்: 21 நாட்கள்
கவனம்: புது அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி

தௌரா-இ-காஸ்
இடம்: முஸாஃபராபாத்
நாள்: மூன்று மாதங்கள்
கவனம்:
எக்ஸிகூட்டிவ் டிரைனிங்
துப்பாக்கிகளைப் பிரித்துத் திரும்பப் பூட்டுதல்
ஜிபிஎஸ், திசைகாட்டிகள், வரைபடங்களைப் பயன்படுத்துவது
கொரில்லாப் போர்முறைகள்
அன்னம் தண்ணீரின்றி காட்டில் 55 நாட்கள் இருப்பது எப்படி போன்ற டிஸ்கவரி சேனல் உத்திகள்
ரெய்டு, அதிரடித் தாக்குதல் நடத்துவது எப்படி
20131020-222453.jpg

ஃபைதுல் ரிஸ்வான்
இடம்: தெரியலை
நாள்: தெரியலை
கவனம்:
நதிகளைக் கடப்பது
வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது

தௌரா-இ-ரிபாத்
வேவுத் தகவல் சேகரிப்பது
நாசவேலை புரிவது
எதிர் நாட்டில் ஏஜெண்டுகளைப் பிடிப்பது
லஞ்சம் கொடுத்தோ, ஊத்திக்கொடுத்தோ, கூட்டிக் கொடுத்தோ தகவல் பெறுவது
எஜெண்டுகளுக்குத் தகவல் கொடுப்பது, பெறுவது
ரகசிய எழுத்து முறை

ஃபீதாயின் பயிற்சி
இடம்: தெரியலை
நாள்: வரையறுக்கப் படாதது
கவனம்:
தற்கொலைப் படையினருக்கு சிறப்புப் பயிற்சி
தற்கொலைப் படையினருக்கு மதவாதப் பயிற்சி
20131020-222549.jpg

26/11 புகழ் அபு ஜிண்டாலின் கூற்றுப்படி பராகிளைடிங் பயிற்சி கூட முஸாஃபராபாத் பட்டறையில் தரப்படுகிறது.

தொல்லையாக இருந்தாலும் பாகிஸ்தான் இவற்றை சில நலன்களுக்காக ஊக்குவித்து வருகிறது.
2014 தேர்தலை காஷ்மீரில் தொல்லைகொடுப்பது
மற்றபடி மாமூல் இந்திய எதிர்ப்பைத் தொடர்வது.

ஜெய்ஹிந்த்

மூலம்

    இந்தியா டுடே சென்ற வாரக் கட்டுரை
    லஷ்கர்-இ-தய்பா விக்கிபீடியா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s