திநகர் ஜிலேபி


பாருங்க, மதியம் சாப்பிட்டுவிட்டு சிவனேன்னு திரும்பி வரும்போது மழை பிடிச்சிட்டது. சும்மாதானே நின்னுட்டு இருக்கோம். டிவிட்டர் பேசுபுக்குல எலிக்சன் ரிசல்டு வாடை தாங்க முடியாம ரீடருக்குள்ள போனா ஜிலேபியைப் பற்றிப் பேசி உசுப்பிவிட்டது இந்தப் பதிவு – (தி)சின்ன (தி)சின்ன ஆசை!

விடுவோமா. ஜிலேபின்னு வந்திட்டா எந்த சமரசமும் பண்ணிக்கமாட்டோம். எனவே திநகர் ஜிலேபிக் கடையைப் பற்றி எழுதாம விடக்கூடாது என்பதற்காக இந்தப் பதிவு.

2007 என்று நினைக்கிறேன். நானும் என் சக நண்பனும் குற்றாலம் போவதற்காக நெல்லை விரைவு வண்டியில் சென்றபோது. நண்பன் திநகரில் ஒரு கடையிலிருந்து ஜிலேபியும் (ஜாங்கிரி அல்ல) வேறு சில பதார்த்தங்களும் வாங்கி வந்திருந்தார். புரச இலையில் மடிக்கப்பட்ட அந்த இனிப்பும் புளிப்பும் கலந்த வஸ்து மிக அற்புதம். பிறகு விட்டேனா பார் என்று இன்றைக்கு வரை திநகர் நடேசன் தெருவில் உள்ள கடைக்குக் குடும்பத்தோடு அவ்வப்போது ஆஜராவது வழக்கம்.

சமோசா, கச்சோரி, பஜ்ஜி, ஜிலேபி என்று உடலுக்கு ஊட்டச்சத்து!! அளிக்கும் அனைத்து பதார்த்தங்களும் இந்த வடநாட்டு மனிதர்களிடம் கிடைக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை கடந்ததும் கூட்டத்தைப் பாருங்கள்.

திநகர் ஜிலேபி கடை
திநகர் ஜிலேபி கடை

என்ன இருந்தாலும் வீட்ல செய்யறது போலாகுமா.

எனவே பதிவைப் படிக்க வந்த உங்களுக்கு என் மனைவியார் செய்த ஜிலேபிகள் இதோ! இருந்து சாப்டுட்டுதான் போகனும்.

jilebi1 jilebi2

வாழ்க பாரதம்

Advertisements

10 thoughts on “திநகர் ஜிலேபி

 1. Pandian December 8, 2013 / 2:05 pm

  🙂
  ஜிலேபி பத்தலைன்னா அல்வாதான் கொடுப்போம்!

 2. ranjani135 December 9, 2013 / 11:27 am

  reblog செய்ததற்கு நன்றி, பாண்டியன்.
  எங்கள் ஊரிலும் இதைபோல ஜிலேபி கடைகள் ஏராளம். ஆனாலும் புழுதி படிந்த ஜிலேபி எப்படியிருக்கும் என்று சாப்பிட்டுப் பார்க்க ஆவல்!

  • Pandian December 9, 2013 / 2:19 pm

   மனம் சிறுபிள்ளைத்தனமாக மாறுவதால் வரும் இன்பம் இது. 🙂 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 3. mahalakshmivijayan December 9, 2013 / 3:15 pm

  அடடே! ஜிலேபி பற்றிய நினைப்பு வந்தவுடன், உங்கள் மனைவி ஜிலேபி செய்து அசத்தி விட்டாரே! குடுத்துவைத்தவர் தான் நீங்கள் :

  • Pandian December 9, 2013 / 3:18 pm

   ஹாஹா. அது முன் ஒரு முறை செய்தது. எங்க வீட்டில் என்னை விட மனைவியார்தான் ஜிலேபிபட்சிணி. 😃

  • Pandian December 9, 2013 / 3:22 pm

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  • Pandian January 7, 2014 / 12:15 pm

   அருமை. திநகர் ஜிலேபி ரசிகர் மன்றத்தின் சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 😊

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s