பொது

முடியல 377


நீதியரசர் சிங்வி தீர்ப்பு சொன்னாலும் சொன்னார். தினசரி ஒரு சுனாமியாக பதிவுகளிலும் சமூகவலைத்தளங்களிலும் எதிர்ப்புக் கொடி நட்டு வருகிறார்கள் புரட்சியாளர்கள், சமூக மாற்றம் விரும்பிகள், ஒருபால் மோகம் கொண்டோர். முன்னர் கண்டதுக்கும் பொங்கிக்கொண்டிருந்த என்னை சக நண்பர்கள் பொதுவெளியிலோ தனிவெளியிலோ கண்டிப்பர். சமகால நிகழ்வுகளுக்கு எதிர்வினை ஆற்றுதல் தவறென்பர். பொதுவாக இது போன்ற பகுதிநேர உணர்ச்சிப் பொழுதுபோக்கினால் ஓர் பயனும் இல்லை.

377ல் பிரச்சினையாக பலரும் ஆதரவு x எதிர்ப்பாக இருக்கும் நிலையில் சமூக ஆர்வலர், குறும்பட இயக்குநர், பெண்ஓரினச்சேர்க்கையாளர்கள்-ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்-இருபால்
மோகம் கொண்டவர்கள்-தன்பால்விடுத்துபிறபால் மாற்றம் காணுவோர் (LGBT) (யப்பா. எவ்ளோ நீள மாத்ரே!!) செயல்பாட்டாளருமான லீனா மணிமேகலையின் இந்தக் கட்டுரை எரிகிற கோவத்தில் பெட்ரோலைக் கொட்டியது.
http://tamil.thehindu.com/opinion/columns/111213-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article5458638.ece

Inline image 2
Picture source: Internet

இதனால் அவர் சொல்ல வருவது

* இந்திய அரசியலமைப்புக் கோட்பாட்டையே நகைப்புக்குரியதாக்குகிறது.
* சாதி, மதம், கலாச்சாரம் என்பவற்றைக் கருதுகோள்களாக வைத்து ஒரு நாட்டின் நீதிமன்றம் குடிமக்களின் காமத்தை, அவர்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பதும் அதன் அடிப்படையில் சட்டங்களை நிறைவேற்றுவதும் தண்டனைகளை பரிந்துரைப்பதுமான செயல், சிவில் உரிமைகள் என்ற கருத்தாக்கத்தைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி கற்காலத் தெருக்களில் வலம்வர அனுப்பியிருக்கிறது.

புரோகிதம் செய்து கல்யாணம் செய்தால் கூட பதிவு செய்தால்தான் நடைமுறைக்கு ஒத்து வருகிறது. மதத்தை வைத்து அரசியல் நடத்த இது சவுதி அரேபியாவோ வாடிகனோ இல்லை. கணவன் கந்தசாமி மனைவி குப்பம்மாளிடம் இந்த வகையில்தான் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை.

ஒருவேளை தீர்ப்பை மாற்றிச் சொல்லியிருந்தால் நீதிபதி உலக மக்களின் பார்வையில் limelightல் நின்றிருப்பார். அனைவரும் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அதை அறிந்தும் நீதி தவறாமல் இருக்க முயன்றிருக்கிறார். ஆக இந்தியாவின் கொஞ்ச நெஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்தை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி கலாச்சாரம் அறியாத காலத்தில் வலம்வர அனுப்புவதைச் சற்று தள்ளிப்போட்டிருக்கிறார்.

* 377 ஆண்/ பெண் இடையிலான வழக்கமான உடலுறவு தவிர மற்ற எல்லாவகை உடலுறவுகளையும் குற்றமெனப் பார்ப்பதால், எச்.ஐ.வி./ எய்ட்ஸ் குறித்த மருத்துவத் தகவல் சேகரிப்பு மற்றும் சேவைகளில் சிக்கல் ஏற்படுகிறது என்பதே நாஸ் அறக்கட்டளை இ.த.ச. 377 நீக்கத்துக்கான வழக்கைப் பதிவு செய்ததன் காரணங்களில் மிக முக்கியமானது.

எனக்குப் புரியலை. நடைமுறை சிக்கல் ஆனால் அதற்கான தீர்வைத்தான் ஏற்படுத்தவேண்டும். அந்தத் தீர்வுக்கும் 377ஐ எடுப்பதற்கும் என்ன தொடர்பு என்று உண்மையில் புரியலை. செயல்பாட்டாளரே விளக்கினால் நல்லது.

* மாற்றுப் பாலியல் தேர்வாளர்களை சமூக விரோதிகளாக்குவதும் மனிதநேயத்துக்கும் மேன்மைக்கும் பாதுகாப்புக்கும் எந்த வகையிலும் உதவாது.

மாற்றுப் பாலியல் என்று வந்துவிட்டால் அதற்கு LGBT கொள்கை பரப்பு செயலாளர்கள் சொல்வது மட்டுமே எல்லை அல்ல. எல்லாவற்றையுமே அனுமதித்துவிடலாம். எவற்றை என்றெல்லாம் நான் விளக்க விரும்பவில்லை. டாட்.

* தேர்தலை நோக்கி மையம் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவாத பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறித்து என்னவிதமான அக்கறை செலுத்தும் என்பதற்குப் பாரிய மேற்கோள்கள் தேவையில்லை.
இவர் திட்டும் அளவிற்கு அரசியல் கட்சிகள் இவர்களைக் கைவிடவில்லை. இவர்களையும் ஒரு வாக்குவங்கியாக வைத்து அரசியல் மாறத்துவங்கியதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். சோனியா, ராகுல் மீடியா முன் முழங்குகிறார்கள். நாட்டுக்கு கணக்கு வழக்குப் பார்க்கவேண்டிய சிதம்பரம் பாலியல் கணக்குப் பார்க்கிறார். ஏன். முன்னர் தமிழக திமுக ஆட்சியில், இலங்கைக்காக அறவாணிகள் நடத்திய போராட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார்.

* சனாதன ஓட்டுவங்கி குரல் கொடுத்திருக்கும் வைகோ அதில் உள்ளூர் உதாரணம்.
அரசியலில் ஒரே கொள்கை வைத்துக்கொண்டு பிழைக்கத் தெரியாத ஒரு அரசியல்வாதி. உங்க இழுப்புக்கு வரலைங்கிறதுக்காக ஏன் அசிங்கப்படுத்தனும்.

* பாலின சிறுபான்மையினரை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் பெற்றோர்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் மிக மோசமாகக் காயப்படுத்தியிருப்பதோடு, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு
இந்த காங்கிரசு ஆட்சி வந்ததுல இருந்து எதை எடுத்தாலும் இந்த சிறுபான்மையினர் அப்டிங்கிற பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரை விடுங்க. பெரும்பான்மையினருக்கு நீங்க என்ன போராடியிருக்கிறீர்கள்? ITI, diploma முடிச்சிட்டு வளைகுடா, மலேசியா, சிங்கப்பூர் என்று தன்னந்தனியாக வருசக்கணக்கில் நேரம் பார்க்காமல் நாள் பார்க்காமல், மனைவி பிள்ளைகள் மறந்து வேலை செய்து அந்நிய நாட்டு கரன்சியை இந்தியாவிற்கு அனுப்பி அந்நிய செலாவணியியைப் பூர்த்தி செய்கிறார்களே. அவர்களின் பாலியல் தேவையை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா? ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று நீங்கள் அடிக்கும் கொட்டம், அரேபிய பாலைவனத்தின் கொடிய வெயிலில் கொதிக்கும் தார் ஊற்றி ரோடு போடும் இந்திய தொழிலாளியைவிட எனக்குப் பெரிதாக படவே இல்லை.

சரி அது வேண்டாம். அந்நிய நாட்டுப் பிரச்சினை. நாடு காசு வாங்க அவர்களை அந்நிய நாட்டிற்கு அனுப்புகிறது. வேறொரு உதாரணம் தருகிறேன். தற்போது பகட்டாக சென்னையில் நீண்டிருக்கிறதே OMR – IT Corridor. லீனா மணிமேகலையின் சிறு பிராயங்களில் ஆண்களால் கூட சுதந்திரமாக நடமாட முடியாது. எல்லாம் உங்களால் வக்காளத்து வாங்கப்படும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கைவண்ணம்

சமீபத்தில் மலேசியாவில் ஒரு சிறுபையன் கடத்தப்பட்டான். வெகு கொடூரமாக பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டான். உடல் ரீதியாக பலத்த காயமடைந்தான். ஒரு சிறு பையன். பல வெறி பிடித்த எருமை மாடுகள்!

நண்பர் சொன்னது இன்னொரு கதை பிரித்தானியாவைப் பற்றியது. ஆஜானுபாகுவான கருப்பின அல்லது வெள்ளை ஆண்கள். கோழி போன்ற இந்திய ஆண்களைப் பாலியல் ரீதியாக துன்புருத்துவது.

அவ்வளவு ஏன். இந்தியால் உங்கள் அன்பிற்கு இனிய ஓரினச்சேர்க்கையாளர்கள் நிழலாய் இருந்து கொண்டு படுத்தும்பாடு கொஞ்ச நெஞ்சமா. ஆணென்றும் பாராமல் பெண் என்றும் பாராமல் தினசரி எத்தணை குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? சாதாரணமாக ஆண்கள் தங்கும் விடுதி, பேருந்தில் தொல்லைகள் என்று எத்தணையோ அன்றாட வாழ்வில் நடக்கிறது. அதைத் தாண்டி தெளிவாக வருபவர்கள் பிழைத்தார்கள். மனநோய் மிக்க அவர்களின் வலையில் விழுந்தால் வாழ்வு அழிவது என்னவோ நிச்சயம். நாவரசு கொலை வழக்கில் ஏன் அந்த வருங்கால பொறியாளன் இறந்தான்? அவனுக்கு நீங்கள் என்ன நீதி சொல்லப்போகிறீர்கள்? வெறும் ராகில் கொலை என்று பூசி மெழுகுதல் அர்த்தமற்றவை. வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கதைதான்!

சரி, மேற்சொன்ன இந்த மிருகங்களிடமிருந்து என் குடும்பத்தின் குழந்தைகளை முடிந்தவரை காப்பதே என்னுடைய முன்னுரிமையாக இருக்கும். உங்கள் புரட்சியைப் பற்றிச் சிறிதேனும் கவலை இல்லை. உங்களுடைய இந்தப் புரட்சியைப் பயன்படுத்திக்கொண்டு இந்த நிழல் உலக ஓரினச்சேர்க்கை தாதாக்கள் பகிரங்கமாக நடமாடக்கூடாது என்பதே எனது பயம்.

* கொலை செய்தவர்களும் கொள்ளை அடித்தவர்களும் சாதி வெறியர்களும் மதவாதிகளும் பாலியல் வன்புணர்வாளர்களும் வீதிகளில் சுதந்திரமாக உலா வர, அன்புக்குக் கட்டுண்ட ஒருபால் ஈர்ப்பாளர்கள் தலைமறைவாக வாழும் அபத்தங்கள் நடந்தேறும்.
ஆண்கள் மீதும் ஆண் குழந்தைகள் மீதும் வன்புணர்பவர்களும் சுதந்திரமாக உலா வரட்டும் என்பது உங்கள் குரலா? தவறு. விஷ விதையை விதைக்க முயல்கிறீர்கள்.
அன்பால் கட்டுண்ட 2 பேரை நீங்கள் காட்டலாம். அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் ஒற்றைப் பாலின வேட்கையைத் தணிக்கும் 4 பேரை நான் காட்டலாம். எனக்கு ஒன்றுதான் புரியலை. பஸ்சுல பக்கத்து சீட்டுல உக்காந்து சின்னப்பயக தொடைய சொரண்டுறானே, அவனுக்கெல்லாம் அந்தச் சின்னப்பய மேல அவ்வளவ்வு லவ்வ்வ்வா? அன்பால் கட்டுண்டவர்களோ? இவர்களை நீங்கள் சிறுபான்மை என்றா சொல்கிறீர்கள்? யாரை நம்ப வைக்க இந்த வேஷம்.

*  இப்படிப்பட்ட ‘நீதிமான்’களை எதிர்த்துப் போராடுவதும், நீதிமன்றங்களை அவமதித்தால் குற்றம் என்றால் சிறைச்சாலைக்குச் செல்வதும்தான், ஒரு போலி ஜனநாயகத்தின் குடிமக்களான நமக்கிருக்கும் மார்க்கங்கள்.

singhvi
Picture source: Internet

2ஜி வழக்கில் இதே சிங்விதான் இருந்தார். அதில் அவர் செயல்பட்ட விதத்தில் என்ன குற்றம் கண்டீர்கள்.
அதோடு அது என்ன போலி ஜனநாயகம்? பல கட்டுரைகள் தீர்ப்பை எதிர்த்து வெளியாகி இருந்தாலும் அழகு தமிழில் போலி ஜனநாயகம் என்று நீங்கள் கூறியதற்கு விளக்கம் அளித்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. வேறு எந்த நாடு உங்களுக்கு உன்னதமானதாகத் தோன்றுகிறதா?
வளைகுடா, சீனா போன்ற இடங்களில் சென்று உங்கள் பருப்பை விற்றுப்பாருங்களேன். இந்திய ஜனநாயகத்தின் மீது அமெரிக்காவிற்கோ, ஐரோப்பிய யூனியனுக்கோ நம்பிக்கை வராமல் போகலாம். இந்தியருக்கு இருந்தாகவேண்டுமே. அவ்வளவு நீங்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இந்திய ஜனநாயகம் தரம் தாழ்ந்து போய்விட்டால் வேறு நாட்டிடம் அகதியாக அடைக்கலம் சென்று சேர்ந்திடலாம். அல்லது பேசாமல் பாராளுமன்றத்திற்கு முன்னால் தீக்குளிக்கலாம். உங்களை இப்படி எழுதவிட்டதே ஜனநாயகம்தான் என்பதை மறந்து பொது வெளியில் உளர வேண்டாம்.

*ஆண்-ஆண், பெண்-பெண் ஒருபால் உறவில் வெட்கப்பட வேண்டியது ஏதுமில்லை. அது ஒரு வகை பாலியல் செயல்பாடும், அன்பின் வெளிப்பாடுமே. அதைக் குற்றமாக்குவது மனிதத்துக்கு எதிரானது. மனிதம் எல்லா நிறுவனங்களுக்கும் மேலானது, ஆதியானது. மனிதத்துக்கு ஆதாரமான அன்பை, காதலை, காமத்தை, அரசன் அன்றோ, அல்லது நீதி நின்றோ கொல்ல நினைத்தால், அரசக் கொடி கிழியும்.

பக்கத்து சீட்டுல உக்காந்து தொடையைச் சொரண்டியவனிடமும், குழந்தையைக் கடத்திச்சென்று பாலியல் தொல்லை புரிந்தவனிடமும் எந்த ஒரு அன்பும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. உங்கள் அளவிற்குச் சிந்தித்தால் எட்டுமோ என்னவோ? நீங்கள் சொல்கிறபடி இருக்கலாம். ஆனால் அதன் சதவீதம் என்ன? திறந்துவிட்டால் வரும் இன்னல்களின் சதவீதம் என்ன?

from Leena’s facebook: Cant believe that people leaders like @ S.p. Udayakumaran can write such regressive and homophobic statements! This shows “Queer movement” has not even started in Tamil Space!

அரசியல்வாதிதான் மனம் மாறி பிதற்றுகிறார் என்கிறீர்கள். நீதிபதி மதவாதியாக யோசிக்கிறார் என்கிறீர்கள். உதயகுமாரை எதில் சேர்க்கிறீர்கள்? அவரையும் குறை சொன்னால் இணையத்தில் அடிக்க வந்துவிடுவார்கள். உங்களுக்கு ஆதரவா யாரும் பேசலைங்கிறீங்க! உங்களுக்கு தலை ஆட்டலைன்னா இந்தியாவிற்கே கருப்பு நாளாகிவிடுமா?

நான் புரட்சியாளனாக விரும்பவில்லை. நிழல் உலகில் நடமாடும் மனப்பிரள்வு கொண்டவர்களிடமிருந்து என் குடும்பத்தின் குழந்தைகளை முடிந்த வரையில் காக்கும் ஒரு தன்னலமிக்க குடும்ப அங்கத்தினராகவே விரும்புகிறேன். குடும்பத்தை வளர்க்கவே விரும்புகிறேன். நிறுத்த அல்ல. டாட்!

பிற்சேர்க்கை:
From 2G to gay sex, Justice Singhvi’s judgments created ripples –
http://timesofindia.indiatimes.com/india/From-2G-to-gay-sex-Justice-Singhvis-judgments-created-ripples/articleshow/27231173.cms

Why Section 377 is Constitutional? Reasons given by Justice Singhvi
http://www.livelaw.in/why-section-377-is-constitutional/

தமிழ்பயணி குழுமத்திற்காக எழுதியது

வாழ்க பாரதம்

Advertisements