ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்


பொதுவாக நான் மஹாராஜா விமான சேவையில் ஈடுபாடு கொண்டவன். பொதுவாக எந்த ஒரு அரசு நிறுவனமும் சோடை போகும்போது நொந்து கொள்ளும் மில்லியன் கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். ஏர் இந்தியா பற்றி நான் ஏற்கனவே ஒரு பீப்பி பதிவில் புலம்பி இருந்தேன். மே மாதம் நான் ஊருக்குப் போகிறேன். திருச்சியிலிருந்து திரும்ப சிங்கை வர விமானம் தேடுகையில் எனக்கு மூன்று வழிமுறைகள்தான். இரவில் கிளம்பும் இரண்டு டைகர் விமான சேவைகள். காலையில் சிங்கை வந்து சேரும். [...]

இலக்கியப் ‘பொங்கல்’!


எதையும் பேசுவது சுதந்திரம் என்று நினைக்கும் சில தமிழிணைய மக்களின் கவனத்திற்கு.

சந்தோஷ் நாராயணன்

PONGAL-02

 

இலக்கியத்தையும், இலக்கிய வாதிகளையும் கிண்டல் பண்ணுறது இப்போ ஃபேஷனா போச்சு. அது ரொம்ப ஈசியும் கூட. மூணு வரி முகநூல் ஸ்டேட்டஸுக்கே முக்க வேண்டியிருக்கு ஆயிரம் பக்கத்துக்கு மேல எழுதுறது அசால்ட்டான விஷயம் இல்லை. இலக்கியம்னாலே அது ஏதோ முப்பது பேரு எழுதி இருபது பேரு படிக்கிறதுன்கிற நிலமை ஒரு காலத்தில் இருந்தது. இன்னைக்கு அது சில ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னா அதுக்கு நம் இலக்கிய வாதிகள் சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல.

சில நூறு பேரு படிக்கிற சிறுபத்திரிகைல தான் எழுதுவேன்னு அடம் பிடிக்காம ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதி வெறும் பொழுதுபோக்கு புத்தகங்களை மட்டுமே படிச்சிட்டிருந்த பயபுள்ளைகளை கொஞ்சம் தீவிரமாவும் வாசிக்க வச்சது எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாருன்னு நீளும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் தான்.

இன்னைக்கு விக்கிபீடியாவும், இணையமும் இருக்கு. யாரு வேணும்னாலும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்ணு அடிச்சா நாலு எழுத்தாளர் பேர அதுவே காட்டும். ஆனா இதெல்லாம் இல்லாத காலத்திலேயே போர்ஹே பற்றியும், மார்கோஸ் பற்றியும் நமக்கு நாலு நல்ல வார்த்த சொன்னது நம்ம இலக்கியவாதிக தான்.

நேற்று பெய்த முகநூல் மழையில் முளைத்த ஃபேக் ஐடி காளான்களெல்லாம் இலக்கியவாதிகளை இளக்காரம் பண்ணி திரிவதை பார்த்தால் “வயலுக்கு வந்தாயா” என்கிற கட்டப்பொம்மன் வசனத்தை தான் வாய் முணுமுணுக்குது.

கனமாக ஒரு புத்தகம் எழுதினால், தலைக்கு வச்சு தூங்கவா இல்ல தலையில போட்டு கொல்லவா…

View original post 236 more words

வெண்முரசு


வெண்முரசு நாவல் பதிவுகள் வெகு சிறப்பாக இருக்கிறது. இதுவே இன்னேரம் ஒரு பத்திரிகைகளில் வந்திருந்தால் அப்பத்திரிகைகள் கல்லா கட்டியிருக்கும். அதே சமயம் பத்திரிகையின் நிர்பந்தத்திற்கு சமரசம் கொண்டு எழுதவேண்டும். தனிப் பதிவில் வருவதால் சற்றும் சுவை குன்றாமல் வாசிக்கமுடிகிறது. பலரும் சிலாகித்துப் பேசும் தமிழ் வெகுஜன ஊடகங்களின் தோல்வியையும் தமிழிணையத்தின் எழுச்சியையும் இந்த நாவல் காட்டுகிறது. வெண்முரசு நாவலுக்கு என்னால் முடிந்த பங்களிப்பைப் பின்வரும் முகவரியில் உருவாக்கி இருக்கிறேன். https://kadaisibench.wordpress.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-mindmap/ ஜெய்ஹிந்த் Posted from WordPress for [...]

பாரத வங்கியைக் கொள்ளை அடிக்கும் திட்டம்


இரவு. நள்ளிரவு. வங்கியின் பெட்டக அறையின் காரிருள் எங்களின் முகங்களைப் பார்க்க விடவில்லை. அந்த இருளில் வங்கி பூட்டிய பிறகு நாங்கள் அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன? "எங்கடா ஓட்டையப் போட்டு வரீங்க" "ஆட்டையப் போடத்தான்!" எங்கள் பொருமையை ரொம்ப சோதிக்காமல் தெய்வாதீனமாக  பெட்டகம் திறந்து கொண்டது. நாங்கள் மூன்று பேர். கல்லூரி தோழர்கள். களவு வீரனை மனதில் வைத்துக்கொண்டு முடிந்த மட்டும் பணக் கட்டுகளை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டோம். வங்கிக் கட்டடத்தை விட்டு [...]

2014 இவ்வாறாக உதித்தது


31ஆம் தேதி அலுவலகம் ஐந்து நட்சத்திர விடுதியில் வழங்கிய மதிய உணவு. ஐந்து நட்சத்திர விடுதிகளின் விருந்துகளைப் பற்றி ஒரு பதிவே போடலாம். அது அப்புறமா.. சாப்பிடும் முன்பு நான் என்னது சூப்புல மாட்டுக்கறி போட்டாங்களா நட்சத்திர செஃப் வந்து அதெல்லாம் இல்லை என்று அறிவித்தவுடன் நான் கிடைத்த சப்பாத்தியைச் சாப்பிட்டு முடிக்கும் முன்பே கை கழுவும் கோப்பை வந்தவுடன் நான் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து போட்டோக்கள் எடுக்கும்போது இரவில் ஆட்டம் போட கூட்டம் கூட்டமாய் [...]