பீப்பி

பாரத வங்கியைக் கொள்ளை அடிக்கும் திட்டம்


இரவு. நள்ளிரவு.

வங்கியின் பெட்டக அறையின் காரிருள் எங்களின் முகங்களைப் பார்க்க விடவில்லை. அந்த இருளில் வங்கி பூட்டிய பிறகு நாங்கள் அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன?

“எங்கடா ஓட்டையப் போட்டு வரீங்க”

“ஆட்டையப் போடத்தான்!”

எங்கள் பொருமையை ரொம்ப சோதிக்காமல் தெய்வாதீனமாக  பெட்டகம் திறந்து கொண்டது. நாங்கள் மூன்று பேர். கல்லூரி தோழர்கள். களவு வீரனை மனதில் வைத்துக்கொண்டு முடிந்த மட்டும் பணக் கட்டுகளை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

வங்கிக் கட்டடத்தை விட்டு வெளியே வரும்போதுதான் தெரிந்தது. நாங்கள் யாரும் கைபேசிகளை அணைக்கவில்லை என்பது. இது ஒரு பிரச்சினைக்குரிய விசியமாச்சே. இதை வைத்துப் பிடித்துவிட முடியுமே.

“மொதல்ல சிம்கார்டைக் கழற்றி எறி. இந்த போனை இனிமே பயன்படுத்தாதே”

படபடப்பில் நான் நண்பர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

“மூன்று பேரும் ஓரிடத்தில் இருப்பது நல்லதல்ல. ஆளுக்கு ஒரு திசையில் செல்லலாம்.”

“போன் இல்லாமல் தொடர்பு கொள்ள..?”

“சில நாட்களுக்குப் பிறகு சந்திக்கலாம்”

“கவனம். இனிமேல் இதே போன். இதே சிம்கார்டு பயன்படுத்துதல் கூடவே கூடாது. IMEI எண் போதும். நாம் போகுமிடம் தெளிவாகத் தெரிந்துவிடும்”

thief1

முதல் முறை கொள்ள அடித்த பதற்றம். பயம். மரண பயம்.

யாரும் யூகிக்க முடியாத ஓரு வீட்டில் தலைமறைவாகத் தொடங்கினேன். இதயத்துடிப்பு காதுக்குக் கேட்கிறது. எங்கேயோ தவறு நடந்துவிட்டது. எங்களை அடையாளம் கண்டுபிடிக்க ஏதோ ஒரு தடயத்தை விட்டுவிட்டு வந்துவிட்டதாக மனம் சொல்லுகிறது.

சில நேரம் போகிறது. வங்கி அதிகாரிகள் களவு நடந்ததைக் கண்டுபிடிக்கிறார்கள். எப்படியும் காலை தெரிந்துதானே ஆகவேண்டும். அதை விட துரதிருஷ்டம். சக களவாணி தோழர்களின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டார்களே. பதற்றம் அதிகரிக்கிறது. நான் அவர்களை வெவ்வேறு திசைக்கு அல்லவா? போகச்சொன்னேன்? ஓரிடத்தில் இப்படி கிட்டியில் அகப்பட்ட எலி மாதிரி சிக்கலாமா? களவுப் பொருள்வேறு அவர்கள் கையில் இருக்கிறதே.

”பணத்தைக் கொடுத்துவிடுகிறோம். போலீசுக்குப் போகவேண்டாம். எங்களை விட்டால் போதும்” நண்பனின் ராஜதந்திர பேச்சு வார்த்தை தொடங்குகிறது. கோட்டு சூட்டு போட்ட பாரத வங்கி அதிகாரிகள் அவன் சொன்னதைக் கேட்டு பணப் பையை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டுகின்றனர்!

—————

கோடான கோடி வாசகப் பெரு மக்களே.. (ஹச்ச்….)

சமீபத்தில் அரட்டை பதிவில் ஒரு கனவுக் காட்சி வருகிறது. நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு போகவேண்டாம். அது ஒரு U சர்டிபிகேட் கனவுக்காட்சி. அதற்கு எசைப்பாட்டாக இந்தப் பதிவு போடப்படுகிறது. சமீபத்தில் எனக்கு வந்த ஒரு திரில்லர் கனவு இது.

வடிவேலு

jai hind

Advertisements

7 thoughts on “பாரத வங்கியைக் கொள்ளை அடிக்கும் திட்டம்”

  1. ஆமாமா. நானும் ரவுடிதான் அப்டின்னு சொல்லுக்கிற அளவிற்கு..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  1. வாங்க தனபாலன் சார்.
   தங்கள் வருகைக்கும் மிரள்வுக்கும் நன்றி!

 1. கரெக்டான எசைப்பாட்டு தான்! ராஜி மேடம் இன்னும் இந்த பதிவை பார்க்கவில்லையோ?? இந்த புத்தாண்டில் உங்கள் கனவு நனவாக நான் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் 😉

  1. 😊
   இதை வாழ்த்து என்று எடுத்துக்கொள்வதா, சாபம் என்று கொள்வதா? 😊😊

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s