பொது

இலக்கியப் ‘பொங்கல்’!


எதையும் பேசுவது சுதந்திரம் என்று நினைக்கும் சில தமிழிணைய மக்களின் கவனத்திற்கு.

PONGAL-02

 

இலக்கியத்தையும், இலக்கிய வாதிகளையும் கிண்டல் பண்ணுறது இப்போ ஃபேஷனா போச்சு. அது ரொம்ப ஈசியும் கூட. மூணு வரி முகநூல் ஸ்டேட்டஸுக்கே முக்க வேண்டியிருக்கு ஆயிரம் பக்கத்துக்கு மேல எழுதுறது அசால்ட்டான விஷயம் இல்லை. இலக்கியம்னாலே அது ஏதோ முப்பது பேரு எழுதி இருபது பேரு படிக்கிறதுன்கிற நிலமை ஒரு காலத்தில் இருந்தது. இன்னைக்கு அது சில ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னா அதுக்கு நம் இலக்கிய வாதிகள் சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல.

சில நூறு பேரு படிக்கிற சிறுபத்திரிகைல தான் எழுதுவேன்னு அடம் பிடிக்காம ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதி வெறும் பொழுதுபோக்கு புத்தகங்களை மட்டுமே படிச்சிட்டிருந்த பயபுள்ளைகளை கொஞ்சம் தீவிரமாவும் வாசிக்க வச்சது எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாருன்னு நீளும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் தான்.

இன்னைக்கு விக்கிபீடியாவும், இணையமும் இருக்கு. யாரு வேணும்னாலும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்ணு அடிச்சா நாலு எழுத்தாளர் பேர அதுவே காட்டும். ஆனா இதெல்லாம் இல்லாத காலத்திலேயே போர்ஹே பற்றியும், மார்கோஸ் பற்றியும் நமக்கு நாலு நல்ல வார்த்த சொன்னது நம்ம இலக்கியவாதிக தான்.

நேற்று பெய்த முகநூல் மழையில் முளைத்த ஃபேக் ஐடி காளான்களெல்லாம் இலக்கியவாதிகளை இளக்காரம் பண்ணி திரிவதை பார்த்தால் “வயலுக்கு வந்தாயா” என்கிற கட்டப்பொம்மன் வசனத்தை தான் வாய் முணுமுணுக்குது.

கனமாக ஒரு புத்தகம் எழுதினால், தலைக்கு வச்சு தூங்கவா இல்ல தலையில போட்டு கொல்லவா…

View original post 236 more words

5 thoughts on “இலக்கியப் ‘பொங்கல்’!”

 1. வணக்கம்
  (((நம்மை மொழி என்னும் ஏர் கொண்டு உழுது பக்குவப்படுத்தும் உழவர்கள் நம் எழுத்தாளர்கள். அவர்களை கொண்டாடுவோம், அவர்களின் எழுத்துகளை வாங்கி படிப்போம். அவர்களின் தேடலுக்கும், உழைப்புக்கும் மரியாதை செய்வோம் என்று வரும் பொங்கல் நன்னாளில் உறுதி ஏற்போம்.!))))))

  நீங்கள் சொன்ன இந்த விடயத்தை எல்லோரும் கடைப்பிடித்தால் எமது மொழி கலாசாரம் பண்பாடு எல்லாம் வளர்வது உறுதி … நண்பரே…. பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. பேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடு அற்ற பேச்சு அல்ல என்பதை, சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு அப்புறமும் கற்றுக் கொள்ளாதது வருத்தப்பட வைக்கிறது சார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s