பீப்பி

ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்


பொதுவாக நான் மஹாராஜா விமான சேவையில் ஈடுபாடு கொண்டவன். பொதுவாக எந்த ஒரு அரசு நிறுவனமும் சோடை போகும்போது நொந்து கொள்ளும் மில்லியன் கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். ஏர் இந்தியா பற்றி நான் ஏற்கனவே ஒரு பீப்பி பதிவில் புலம்பி இருந்தேன்.

Air India
Air India

மே மாதம் நான் ஊருக்குப் போகிறேன். திருச்சியிலிருந்து திரும்ப சிங்கை வர விமானம் தேடுகையில் எனக்கு மூன்று வழிமுறைகள்தான். இரவில் கிளம்பும் இரண்டு டைகர் விமான சேவைகள். காலையில் சிங்கை வந்து சேரும். பிரம்ம முகூர்த்ததில் கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விடிந்து சூரியன் சுள்ளென அடித்த பின் 10 மணிக்கு சிங்கை வந்து சேரும். அதில் இறங்கி அலுவலகம் போக இயலாது. அரைநாள் லீவு போடுதல் அவசியம். சிங்கையிலிருந்து கிளம்பும்போதும் இதே கதைதான். இரவில் கிளம்பும் இரண்டு டைகர் சேவைகள், இரவுச் சாப்பாட்டுக்கு திருச்சியில் கொண்டு சேர்த்துவிடும். பகல் பத்து மணிக்குக் கிளம்பும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பேய்கூட வெளிவர அஞ்சும் 12 மணி திருச்சி வெயிலில் கொண்டு போய் சேர்க்கும். ஆக, லீவு போட்டதில் அரைநாள் குட்டி மஹராஜா பிளைட்டுக்கு பங்கு கொடுக்கவேண்டும்.

நிற்க,

நாம கொடுக்கிற காசினால ஏர் இந்தியா எழுந்து நின்றிடப்போறதில்லை என்றாலும், யாரோ ஒரு சிங்கை நிறுவனத்திற்கு நாம கொடுக்கிற காசு ஏன் போகனும்கிறதுதான் என் ஆதங்கம். பிறகு நண்பர்கள் சொன்னார்கள், டைகர் போவது எல்லாம் மஹராஜா ஏர்லைன்சிடமிருந்து வாங்கிய வழித்தடங்கள் என்று (உறுதிப்படுத்த முடியாத தகவல்)  😦

சரி அது போகட்டும். நண்பர்கள் குழாமிலிருந்து சமீபத்தில் வந்த இன்னொரு தகவல்….

“The Descent of Air India” என்கிற புத்தகத்தை எழுதினார் முன்னாள் ஏர் இந்தியா நிர்வாக அதிகாரி ஜிதேந்திர பார்கவா. அதை கடந்த வாரம் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகம் வெளியிட்டது. அந்தப் புத்தகம் பதிப்பகத்தாரால் திரும்பப்பெறப்பட்டது.

The descent of Air India
The descent of Air India

என்ன கதையென்று பார்ப்போம்.

ஏர் இந்தியாவின் தற்போதைய நிலைக்குக்காரணம் அப்போதைய உள்நாட்டு விமானப்போக்குவரத்து  அமைச்சர் ப்ரஃபுல் பட்டேல், நிர்வாக இயக்குநர் வி. துளசிதாஸ் உட்பட்ட பலரின் உருப்பிடாத கொள்கைக் குழப்பங்கள் என்று கூறப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. நவம்பரில் வெளியான இந்தப் புத்தகத்தை எதிர்த்து பார்கவா மற்றும் ப்ளூம்ஸ்பெரிக்கு எதிராக மும்பை பெருநகர நீதிபதிக்கு முன்பாக அவதூறு வழக்கு தொடர்ந்தார் ப்ரஃபுல் படேல்.

பதிப்பகத்தார் என்ன சொல்றாங்க?

கடந்த வாரம் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகம் பிரபல நாளேடுகளில் பின்வருமாறு பகிரங்க மன்னிப்பு கேட்டது.

BLOOMSBERRY PUBLIC-NOTICE
BLOOMSBERRY PUBLIC-NOTICE

மேற்குறிப்பிடட புத்தகத்தில் ஆசிரியர் அவர்கள் எம்பியும் யூனியன் மினிஸ்டருமான பிரஃபுல் படேல் மீது சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். அந்தப் புத்தகத்தின் கருத்துக்கள்  எந்த விதத்திலும் திரு பட்டேலின் நம்பகத்தன்மையைக் குறைக்க சொல்லப்பட்டதில்லை.

பார்கவா என்ன சொல்றாங்க
ஜட்ஜ்கிட்ட சொன்னது படி, அந்தப் புத்தகத்தில் திருவாளர் பிரஃபுல் பட்டேல் பற்றி சொன்னதெல்லாம் உண்மை. ஆதாரத்தின் பேரில் சொல்லப்பட்டவை. ப்ளூம்ஸ்பெரியில் இந்த முடிவு ஆசிரியரான என்னைக் கூட கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக எடுத்தது.

பார்க்க.
http://www.thehindubusinessline.com/economy/bloomsbury-withdraws-book-on-air-india-apologises-to-praful-patel/article5579288.ece

ஏர் இந்தியாவைக் கொன்றது யார் - இந்தியா டுடே
ஏர் இந்தியாவைக் கொன்றது யார் – இந்தியா டுடே

திருவாளர் ப்ரஃபுல் பட்டேல் என்ன சொல்றாங்க
ப்ளூம்ஸ்பெரி மன்னிப்புக் கேட்டுட்டதால் போனா போகுது என்று விட்டுட்டுடேன். அந்தாளு பார்கவா தனியா பதிப்பிக்கிறாருன்னா பண்ணட்டும்.

http://articles.economictimes.indiatimes.com/2014-01-16/news/46264258_1_air-india-v-thulasidas-bloomsbury

கடைசி பெஞ்சில நாங்க என்ன சொல்றோம்.

திருவாளர் பிரபுல் பட்டேல் நல்லவர். வல்லவர். நாலும் தெரிஞ்சவர். ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்த அல்லும் பகலும் பாடு பட்டவர். எமிரேட்ஸ், எதிஹட், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் என்று அனைவருக்கு எதிராக ஏர் இந்தியாவை இலாபம் பெறுக்க உதவியாக நின்றவர்.

ஏர் இந்தியாவிற்கு வரும் பிரச்சினைகள் எல்லாம் வானத்தில் வானத்தில் பறக்கும் குருவிகளும், தேவர்களும் செய்த சதி வேலை. திருவாளர் பட்டேல் அவர்கள் குற்றமற்றவர். அப்பழுக்கற்றவர். தூய்மையானவர்.

1497461_616581868378169_1660120823_n

Update 29 may 2017-

Advertisements

6 thoughts on “ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்”

    1. ஆமாங்க. ஏர் இந்தியா குரூரமான வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. அரசியல் புண்ணியவான்களுக்கும் அதிகாரிகள் புண்ணியவான்களுக்கும் சம பங்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் ஊழல் சின்னங்களில் ஒன்று ஏர் இந்தியாவின் தற்போதைய வீழ்ச்சி.

      1. இதை பற்றி எனக்கு சத்தியமாய் ஆதியும் தெரியாது, அந்தமும் தெரியாது! உங்கள் பதிவை படித்து கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.. இந்த பதிவில் ஏதோ நல்லதொரு விஷயம் சொல்ல பட்டிருப்பதால் இதனை லைக் செய்தேன், ஒரு பின்னூட்டமும் இட்டேன், மற்றப்படி விவாதிக்க தெரியவில்லை சார்! இன்னும் நாலு பேர் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளட்டும் என்று மட்டுமே நினைத்தேன்!

      2. விவாதமே இல்லை. விவாதித்தும் புண்ணியமில்லைங்க. ஒரு தேசீய ஏர்லைன் இப்படி இருக்கிறதே என்கிற வருத்தம் மட்டுமே. வருத்தப் பட்டுக்கலாம் வாங்க. அவ்வளவே. வருகைக்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s