குருதிப்புனல்


ஒரு கொடூர சம்பவத்தை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழவெண்மணி கிராமத்தில் தலித் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்பட்டு ஒரே குடிசையில் வைத்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஆசிரியரின் மனதை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இந்த நாவல் காட்டுகிறது. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது இந்த நாவல். குருதிப்புனல் ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி பதிப்பு: கவிதா பப்ளிகேஷன், முதல் பதிப்பு ஜூன் 2013 ISBN: 978-81-8345-334-9 பிரிவு: புனைவு [...]

ஏழாம் உலகம்


ௐ தொறந்த உடன ஓம் போட காரணம், பழநியைச் சுற்றி நடக்கும் கதை. சற்றும் ஈவு இரக்கமற்று உண்மையை நேர்படப் பேசி உள்ளத்தை உலுக்கிவிடும் ஒரு கதை. ஏழாம் உலகம் ஆசிரியர்: ஜெயமோகன் பிரிவு : புனைவு பதிப்பு: கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு ஏப்ரல் 2010 ISBN:978-81-8493-441-0 நாம் வாழுகின்ற சமூகத்தில் இவர்களைக் காண்கிறோம். ஆனால் அவர்களுக்குள்தான் என்னென்ன உணர்வுகள், வாழ்க்கை முறைகள்! ஒவ்வொரு வரியும் சுடுகிறது, நகைக்க வைக்கிறது, திடுக்கிட வைக்கிறது, வருந்த வைக்கிறது, [...]

விடுமுறையும் பிரிவுணர்வும்


ரொம்ப சீரியஸ் பதிவு என்று நினைத்து வந்தீர்களானால் சாரீ. சரி, கோடானுகோடி வாசகப் பெருமக்களே! (ம்ம்... சரி மேல) காலையில் எழுவது, விரைவுப் பறவை (early bird:))யாக பணியைத் தொடங்குவதென்பது புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அதற்கு விரைவில் எழ வேண்டுமே. காலையில் 6 மணிக்கு எழுந்தாலே, 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா என்ன'ங்கிற நினைப்பு வரத்தானே செய்யும். அந்த சமயத்தில் பக்கத்து தொடக்கப்பள்ளியிலிருந்து கியா மியாவென எழும் வாண்டுகளின் சத்தம் வேறு மாதிரி என் காதில் விழும். [...]

நூறு நாற்காலிகள் – ஒரு கலெக்டரின் உண்மைக் கதை


நூறு நாற்காலிகள் - ஒரு கலெக்டரின் உண்மைக் கதை ஜெயமோகன் எழுத்து பதிப்பகம், முதல்பதிப்பு 2011 ISBN: 81-904254-5-5 இந்த நூலை  இணையத்தில் வாசிக்க பின் வரும் பக்கத்திற்குச் செல்லவும் http://www.jeyamohan.in/?p=12714 இரண்டு பெரிய சிக்கல்களை வைத்து எழுதப்பட்ட நூல். உண்மைக் கதை என்கிறார். உண்மையில் அந்த ஐஏஎஸ் அதிகாரியின் மன உளைச்சல்களை எழுத்தில் வடிக்க முடியாது. அதைத்தான் ஆசிரியர் இந்தச் சிறுகதையில் 70 பக்கங்களுக்குள் செய்துள்ளார். வெளியில் இருந்து பார்க்க அரசியல்வாதிகள்தான் அரசாங்கம் என்கிற காட்சி [...]

ஜெயமோகன் சிறுகதைகள்


இந்த நூலைப் பற்றிச் சொல்ல ஒரு சுவாரசியம் உண்டு. எனக்கு இதைப் பறிந்துரைத்தவர் என் நண்பர் சிவான் நினைக்கிறேன். அவர் தந்த பரிந்துரைகளில் 99சதவீதம் படிக்கவேஏஏஏ இல்லை. நூலாசிரியர் ஜெ இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கை வந்திருந்தார் (இந்தப் பதிவை எழுதத்தொடங்கியது மார்ச் 9). சரி ஏதாவது கிடைக்கிறதா என்று நூலை இணைய தளத்தை அலசியதில், இது கிடைத்தது. ஆனால் நம்ம பேட்டையில் இல்லை. அடுத்த பேட்டையில் இருந்து நம்ப பேட்டைக்கு வரவழைக்கவேண்டியிருந்தது. ம்ம்.. என் ஊரிலும் [...]