உச்சி வெயில் முடிந்தது. கடந்த வியாழன் அன்று நூலகத்தில் அதிர்ஷ்ட வசமாக ஜெ புத்தகம் கண்ணில் தட்டுப்பட்டது. ஜெயமோகன் குறுநாவல்கள். உருவிக்கொண்டு வந்தேன். கதையைச் சொல்லி படிங்கப்போகும் வாசகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொண்டு வேண்டாம் என்பதால், கதைகளின் குறிப்பிட ஏதுவான இடங்கள் மட்டும் இங்கே தருகிறேன். (ஒரு trailer போல. எல்லாவற்றிலும் கிளைமேக்ஸ்தான் நல்லாருக்கும். அதற்காக அதைப் போடமுடியாதில்லையா)
ஜெயமோகன் குறுநாவல்கள்
ஆசிரியர் – ஜெயமோகன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம் 2011
பிரிவு – புனைவு
ISBN – 978-81-8493-667-4
கிளிக்காலம்
‘போடா, அவள் யாரைப் பார்த்தாலும்தான் சிரிக்கிறாள். என்னைப் பார்த்துக்கூடத்தான் சிரிக்கிறாள்.’
கோபால் முகம் சிறுத்து, ‘உன்னைப் பார்த்து சிரித்தாளா?’ என்றான்.
‘ஆமாம்.’
கோபால் மௌனமானான். பிறகு , ‘அவள் ஆள் சரியில்லை என்று நினைக்கிறேன்’ என்றான்.
‘என்ன சரியில்லை?’
‘அவளுக்குக் கற்பு இல்லை.’
‘என்னது?’
‘கற்பு.’
நான் கோபாலை ஊடுறுவிப் பார்த்தேன். அவன் சங்கடமாகப் பார்வையை விலக்கியபடி, ‘கற்பு உள்ள பெண் இப்படி பார்ப்பவன் இடமெல்லாம் சிரிப்பாளா?’ என்றான்.
‘என் அம்மா கூடத்தான் இப்படிச் சிரிக்கிறாள்’ என்றேன்.
‘பெரியவர்கள் சிரிக்கலாம்.’
கிளிக்காலம் – கிளர்ச்சி
பூமியின் முத்திரைகள்
உண்மைக் கதையா இருக்குமோ..
இருக்கலாம்.
பூமியின் முத்திரைகள் – பிரிவு
மடம்
இந்தக் கதையின் மாதாவைப் பார்த்தால் கேரளத்து மாதா சாமிப் பெண் ஒருவர் நினைப்பு வருகிறது. 😉
சாமியை தரிசித்த உடனே அவருக்கு ஒன்று தெரிந்தது. பசு நெய் விட்டு மூன்று வேளை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் ஏற்படுவதற்குப் பெயர் தேஜஸ் அல்ல..
…..
அதச் செண்ணு கும்பிடுயதக் காட்டியும் வல்ல கல்லையோ மரத்தையே கும்பிடுயது சொயம்பு காரியமாக்கும். நாலு நாள் கெட்டும் கெட்டி இஞ்ச வாறது இதுக்க சூம்பக் குண்டியக் காணுயதுக்கா?
……
‘ரொம்ப முக்கியம் மூப்பரே. கொஞ்சம் நல்ல யோசிச்சு சொல்லனும்.’
‘இந்த அய்யருமாருக்க ஒரோ ரோகங்க. பய அப்பிடி பலதும் செல்லுவான். என்னத்தயிண்ணு செல்லுது?’
எதையாவது மந்திரம் மாதிரி திரும்பத் திரும்ப ஜெபிக்கிறதக் கேட்டிருக்கீங்களா?’
‘கொள்ளாம், அவனுக்கு நாலு சாமமும் அதுதான வேல. நல்லா கேட்டீரு.’
மடம் – அரசியல்
பரிணாமம்
அம்மை சொன்னாள்: ‘நாட்டுக்குப் போகவேண்டாம் மக்களே; நாட்டுநீலி மகா மாயாவி. அவள் பார்வை பட்டால் கரி மோட்சம் இல்லை. அவளிடம் சிக்குபவர்களுக்குப் பேராசயும் பொறாமையும் ஏற்படும். அவர்கள் பரஸ்பரம் வெறுப்பார்கள். திருடுவார்கள். சண்டையிடுவார்கள். பழம் பழுத்த மரத்தின் வேர் தோண்டிப் பார்க்க நினைப்பார்கள். மீள வழியின்றி நாட்டிலேயே சுற்றி வருவார்கள். பிச்சை எடுத்தாலும் விட்டு வர மட்டும் மனம் வராது. நாட்டு நீலியின் மோகவலையில் சிக்கவேண்டாம் பிள்ளைகளே, அம்மை இருக்கிறேன், அடங்கியிருங்கள்.’
…….
ஆனா ஒண்ணுண்டு ஏமானே, இந்தக் கும்பிக்குள்ள ஒரு தீயுண்டு. இண்ணலங்கி நாளை அம்மை மடியில செண்ணு சேராம இருக்கப் போறதில்ல பாத்துக்கிடுங்க. ஏழு தலமொற செய்த சகல பாவத்தையும் மறந்து பொறுக்கணும் மலையம்மோ எண்ணு அம்மைக்க காலில் விளுந்து கரையணும். அம்மை மறக்காம இருக்கமாட்டாள்.’
……
பரிணாமம் – பண்டை நாகரீகம்
லங்கா தகனம்
நான் அவரிடம் தயங்கி, ‘சாப்பாடா?’ என்றேன்.
‘ஆமாம். இன்று சற்று முன்னதாகவே வந்துவிட்டேன். ஆட்டம் இருக்கிறது. வேஷம் கட்டவேண்டும்.’
‘நான் சொல்லுகிறேன்’ என்றபடி உள்ளே போனேன்.
‘பார்த்தேன். என்ன அவசரம்? முதல் ஆளாகச் சாப்பிடனுமோ தண்டசோற்றுத் துரைக்கு! நிற்கட்டும்’
நான் வாளியில் நாய்ச் சோறுடன் வெளியே வர ஆசான் இலையை நீட்டினார். சற்றுக் கூசிப்போய், ‘ஆசானே, இது நாய்ச்சோறு’ என்றேன்.
ஆசான் சிரித்தபடி ‘ஓகோ’ என்றார்.
…….
‘வைத்தியரே, இதுதான் பூரணவேஷமா’ என்றேன் ஆசானைக் காட்டி.
பச்சை வேடதாரி கண்களைத் நிறக்காமலேயே சிரித்தார்.
‘இல்லை. இரண்டு வேஷக்குறை வைத்திருக்கிறேன். ஒன்று வழக்கம்போலக் கன்னச்சுட்டிக்கு அருகில். ஒன்று நெற்றியில். அவருக்குக் கண்ணாடி கிடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.’
லங்கா தகனம் – வெப்பம்
அம்மன் மரம்
‘யாரம்மா நீ?’ என்றார்.
‘குஞ்ஞூலட்சுமி’ என்றாள் அவள். குரல் மிக இனிமையானதாக இருந்தது.
‘எந்த ஊர்?’
‘பொன்னுமங்கலம்’ என்றாள் அவள்.
‘ரொம்ப உள்ளூராச்சே. எப்படி இங்கே வந்தாய்? ஏன் இங்கே நிற்கிறாய்?’
‘இங்கேதான் ரொம்பக் காலமாக நிற்கிறேன்’ என்றாள் அவள்.
……
கிழவி அழுதபடி வீறிட்டாள். ‘எனக்கு ஒண்ணும் இல்ல மக்கா இந்த நரகத்தில இருந்து என்னை அவுத்துவிடு. ஒனக்கு ஏளு சென்மப் புண்ணியம். எனக்கி ஒரு தீனமும் இல்லை மக்கா.’
அம்மன் மரம் – ஆதிகாலப்பழி
டார்த்தீனியம்
‘முட்டாள், உனக்குத் தெரியுமா, உன் ரத்தத்தை ஒரு அவுண்ஸ் எடுத்து ஒரு யானையின் உடம்பில் செலுத்தினால் அது செத்துப்போகும். அத்தணை விஷம். எப்படி அது உன் உடம்பில் ஏறியது? எப்படி படிப்படியாய் இப்படி விஷமானாய்?’
டார்த்தீனியம் – கருங்குடும்பம்
மண்
புலம் மாறும் மக்கள். பஞ்சம்
படிக்கும்போது அந்த மண்ணின் சூன்யம் நம்மைப் பீடித்துவிடுகிறது. ச்சே
மண் – ஒத்தைக் கொம்பன் பேட்டை
நிழலாட்டம்
ஒப்பாரிப் பாட்டின் நீட்டல்களோடு விளங்காத சொற்களில் கூவி அழுதாள். கண்ணீர் கொட்டியது. ‘சொல்லிப்போடு, ஆராக்கும் நீ?’ என்று பூசாரி கேட்டான். ‘நான்தான்’ என்றாள் அக்கா. ‘நான் எண்ணு சொன்னா?’. அக்கா தலையை ஆட்டி, விசும்பியபடி, ‘மலையாச்சியாக்கும் நான்’ என்றாள்.
காதல் கொலையா இருக்குமோ.
நிழலாட்டம் – தூபப்புகை
பத்ம வியூகம்
இனி குருவம்சத்தில் யாரும் நிம்மதியாகத் தூங்கமுடியாது. ஒரு போதும் போர் இவர்களை விட்டு விலகாது. வெற்றி மாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள் நிம்மதிநாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும் மிச்சம் இருக்கும்.
பத்ம வியூகம் – தாய்மை
இறுதி விஷம்
‘தட்சகன் விஷமயமானவன். அவன் பூமி மீது எஞ்சுவது பேரபாயம்’ என்றார் ஸௌனகர்.
‘ஸௌனகரே, விஷம் இல்லையேல் அமுதும் இல்லை. தட்சகன் காமமூர்த்தி. சகலவிதமான செயலூக்கங்களுக்கும் காரணம் அவனே. அதை மறவாதீர்!’
…….
‘லிங்கத்தை அறுத்தெறிந்துவிட்டு பிரம்மச்சரியம் காப்பது அறமல்ல, கோழைத்தனம்’ ஆஸ்திகன் அழுத்தமாகக் கூறினான்.
……
மார்ச் 2000ல் வெளி வந்த கதையாம் இது. இதுதான் வெண்முரசின் தொடக்கமும் கூட.
இறுதி விஷம் – வெண்முரசு.
ஒரு வேகத்துடன் இரு நாட்களில் இதை முடித்திருப்பதனால் திரும்ப மறுவாசிப்பு செய்யவேண்டும்.
லங்கா தகனத்தில் ஆசான், டார்த்தீனியம் கதையில் அப்பா, பத்மவியூகத்தில் சுபத்திரை மனதில் இடம்பிடிப்பார்கள். எனக்குப் பிடித்த கதைகளும் கூட.
ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android
2 thoughts on “ஜெயமோகன் குறுநாவல்கள்”