மெக்பெத் – Audio Book


ஒரு சிறுகதைத் தொகுப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் முடியவில்லை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அடுத்த ஒரு வாரத்திற்குத் தேவையான துணிகளை இஸ்திரி செய்வது வழக்கம். அப்போது வடிவேலு காமெடிகள் போன்ற செம்மொழி இலக்கியங்களை ரசிப்பது வழக்கம். அந்த நேரத்திற்கு ஆகட்டும் என்று நூலகத்திலிருந்து இந்த டிவிடியை எடுத்து வந்தேன். (உலக இலக்கியம்னு எழுதினா ‘என்ன…. ஒலக்கை இலக்கியமா’ன்னு கேக்குள ஆளுக நாங்கள்லாம்)

தலைப்பு:

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் – உலக இலக்கியப்பேருரை

உரை: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

Macbeth - Audio Book - S Ramakrishnan
Macbeth – Audio Book – S Ramakrishnan

 

அருமையான கதை சொல்லி ரசிக்க வைக்கிறார். நல்ல காலம் இஸ்திரி செய்ததால் முழுதாகக் கேட்டேன். ஒருவேளை இரவு கேட்டிருந்தால் தூங்கிட்டு இருப்பேன்.

ஒரு செய்தி அறிந்து கொள்ள முடிந்தது. மெக்பெத் சூனியக்காரிகளின் கைங்கரியத்தால் ஆட்சி அதிகாரத்திற்குத் தூண்டப்படுவதில் ஆரம்பிக்கிறது. இந்த சூனியக்காரிகள் என்பவர்கள் யார் என்பதைப் பற்றி முன்னுரையில் சொல்கிறார்.

sramakrishnan

சூனியக்காரிகள் என்று அந்தக் காலத்தில் தூற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் மருத்துவச்சிகள். மூத நம்பிக்கை மிகுந்த கிறித்துவ உலகத்தின் மதக் கோட்பாடுகளுக்கோ, மத செயல்பாட்டாளர்களுக்கோ கட்டுப்படாதவர்கள். எதற்காக சூனியக்காரிகள் என்று அறியப்பட்டார்கள்? மாசமா இருக்கற பெண்கள் வயித்துல வாத்து எலும்பை வைத்து இதயத்துடிப்பைக் கேட்டு அறிந்துள்ளார்கள் அந்த மருத்துவச்சிகள். அதற்கென கையில் எப்போதும் எலும்புத்துண்டுடன் சுற்றியிருக்கின்றனர். அதைப் பார்த்த அந்த ஊரு குருவம்மா குப்பம்மா அம்புட்டு பொம்பிளைகளும் ‘மருத்துவச்சி எலும்பை வைத்து குழந்தையுடன் ஏதோ பேசுறா, மந்திரம் ஓதுறா’ன்னு கதை கட்டி விட்டாளுக!

இவர்களை ஏன் மத குருமார்கள் தூற்றனும்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றாப்ள. இப்ப ஒரு பெண்ணுக்கு கரு சிதைஞ்சு போகுது. அது கடவுளோட விருப்பம். அந்தப் பெண்ணுக்கு மருத்துவம் செய்வது மத நம்பிக்கைக்கு எதிரானதுன்னு சொல்லிருக்கானுக மத சாமிமாருக. அதெல்லாம் முடியாது அப்டின்னு அவிகள மருத்துவம் செய்து காப்பாத்தியிருக்காங்க இந்த மருத்துவச்சி கூட்டம். மத சாமிகள எதிர்த்திட்டாலும் சுக வாழ்க்கை வாழ்றதுக்கு அந்தூரு மதம் என்ன இந்து மதம் மாதிரி சுதந்திரமானதா என்ன? கண்டத சொல்லி, வீண் பழி சொல்லி, அவங்களுக்கெதிரான மனநிலையை மக்களிடம் உண்டாக்கி உட்ருக்கானு அந்த கயவாளிப் பயமக்க.

இந்த மருத்துவச்சிகளை சூனியக்காரிகளென மாற்றி உயிருடன் பிடித்து எரிச்சி கொன்றுக்காய்ங்க. அடுக்குமா!

சரி, எந்த மனிதனுக்கும் ஒரு ஆசை கனவு இருக்கும். அது படி போன தப்பில்லை. யாரோ ஒருவரோட தூண்டுதல்ல போனா அதன் விளைவு எப்படி இருக்கும்? ஆட்சி அதிகாரத்திற்கான வேட்டையில என்னென்ன நடக்கிறது என்பதை சூனியக்காரிகள், மெக்பெத் மற்றும் லேடி மெக்பெத் (மெக்பெத் ஊட்டுக்காரம்மா) வழி ஷேக்ஸ்பியர் சொன்னதை இனிமையான முறையில் காதுக்கு விருந்தாக்கினார் எழுத்தாளர்.

மெக்பெத் பற்றிய பதிவுகள்

மாக்பெத்– மருத்துவர் ருத்ரன்

மக்பூல் – Maqbool – மெக்பெத் நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம்

Macbeth - Audio Book - S Ramakrishnan
Macbeth – Audio Book – S Ramakrishnan

 

2 thoughts on “மெக்பெத் – Audio Book

  1. ‘சூனியக்காரிகள்’, ‘வயித்துல வாத்து எலும்பை வைத்து இதயத்துடிப்பைக் கேட்டு அறிந்துள்ளார்கள்’
    அருமையான விளக்கம் நன்றி

    1. ஐயா, நான் விளக்கம் சொல்ல முடியும்ங்களா. அவர் சொன்னத சொன்னேன். ஆனால் அவர் சொன்னது உண்மையா இருந்தா மருத்துவம் பாக்கறவங்கள இந்த மதவாதிகளிடம் மாட்டிக்கொண்டு ரொம்ப பாடு பட்டிருக்கிறார்கள். வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s