நூறு நாற்காலிகள் – ஒரு கலெக்டரின் உண்மைக் கதை


நூறு நாற்காலிகள்ஒரு கலெக்டரின் உண்மைக் கதை
ஜெயமோகன்
எழுத்து பதிப்பகம், முதல்பதிப்பு 2011
ISBN: 81-904254-5-5

இந்த நூலை  இணையத்தில் வாசிக்க பின் வரும் பக்கத்திற்குச் செல்லவும்

http://www.jeyamohan.in/?p=12714

நூறு நாற்காலிகள்
நூறு நாற்காலிகள்

இரண்டு பெரிய சிக்கல்களை வைத்து எழுதப்பட்ட நூல். உண்மைக் கதை என்கிறார். உண்மையில் அந்த ஐஏஎஸ் அதிகாரியின் மன உளைச்சல்களை எழுத்தில் வடிக்க முடியாது. அதைத்தான் ஆசிரியர் இந்தச் சிறுகதையில் 70 பக்கங்களுக்குள் செய்துள்ளார்.

வெளியில் இருந்து பார்க்க அரசியல்வாதிகள்தான் அரசாங்கம் என்கிற காட்சி போய், உள்ளுக்குள் ஒரு அரசாங்கச் சக்கரம் சுழல்கிறது. இடையறாது சுழல்கிறது. அதுதான் அரசாங்கத்தை ஓட்டிச் செல்கிறது. பல்வேறு கனவுகளோடு அதில் சேரும் அதிகாரிகள், கடைசியில் அதன் சுழலில், உள்ளரசியலில் சிக்கி கடைசியில் அதுவாகவே மாறிவிடுவது என்பதுதான் அரசாங்கச் சக்கரம். இந்தக் கருத்தைக் இந்தப் புத்தகத்திலும் சொல்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

பழங்குடியினரிடத்திலிருந்து ஒரு பையன் மட்டும் தப்பித் தவறி ஒரு குருகுலம் மூலம் படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேறுகிறான். இட ஒதுக்கீட்டின் காரணமாக வந்தமையால் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் கூட அவனை நடத்தும் விதம், சூழலைச் சிறுதும் புரியாத, நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுத்து வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பாசமிக்க பழங்குடி அம்மா, சாதாரண அரசாங்கப் பணியாளாய் இருந்த இவரது மனைவி, இவருடைய ஐஏஎஸ் தகுதிக்காக மணம் கொண்டமை என்று மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து இந்தக் கதை நடந்திருக்கிறது. கடைசியில் ஒரு அரசு அதிகாரியின் பின்னுரையோடு முடிகிறது.பழங்குடியினரின் நிலையை மேம்படுத்த உருவான இட ஒதுக்கீடு, மற்றவர்கள் தங்களுக்கு வரவேண்டிய இடத்தைப் பரித்துக்கொண்டார்கள் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. இது முடிவற்றது. இன்னும் நூறு ஆண்டுகளில் இட ஒதுக்கீடு முடியுமா? இருநூறு வருடங்களில்? முந்நூறு?… முடியாதல்லவா. தவிற ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட தங்கள் குழந்தைகளுக்கும் இதே இட ஒதுக்கீடைப் பெற்றுத்தானே சலுகைகளையும் முன்னுரிமைகளையும் பெறப்போகின்றனர் – இது ஒரு கட்சி.படிப்பையே அறியாதவர்கள். மலங்காட்டில் குடியிருப்பவர்கள். காலம் காலமாக ஏவலுக்குக் கட்டுப்பட்டு அடிமைப்பட்டு வாழ்பவர்கள். கடைசி வரை இதேதான் நிலையா. இத்தணை நாள் அடிமைப்பட்டவனுக்கு உடனடியாக எப்படி படிப்பு மண்டையில் ஏறும்? சலுகைகளைத் தந்தால் ஒழிய இவனுக்கு எப்படி முன்னேறுவான்? அப்படியே சலுகைகளைப் பெற்று வருபவர்களில் சிலர் காணும் இத்தகைய துவேஷங்கள், அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிடும் – இது ஒரு கட்சி.இது முடிவில்லாதது. அதைப் பற்றி இணையத்தில் விவாதிப்பது நல்ல விளைவுகளைத் தராது என்பது பல செயல்கள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

நூறு நாற்காலிகள்
நூறு நாற்காலிகள்

ஒன்று மட்டும் தவறு என்று எனக்குப் படுகிறது. அது என்ன? பள்ளிப் பருவத்திலேயே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மாணவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்வது. சாதி வேறு பாடில்லாது, புதிய பொருட்கள் எதையாவது கண்டால் சிறியவர் பெரியவர் வேறுபாடில்லாது அதற்கு ஆசைப்படுவது என்பது  இயற்கை. அந்தச் சிறிய மாணவர்களிடத்தில் ஒரு சாராருக்கு மட்டும் புதிய செருப்பு, புதிய சைக்கிள், இலவச புத்தகம் (எவ்வளவு தாமதமாகக் கிடைத்தாலும்… புதுசு), இலவச சீருடைகள் (எவ்வளவு தரம் குறைந்ததாக இருந்தலும்.. அது புதுசு), உதவித்தொகை பணம் தருவது இரு உணர்வுகளை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும். (தற்போது பள்ளிகளில் மாறியிருப்பதாக சிலர் சொல்கின்றனர். ஆனால் நான் அரசுப்பள்ளியில் இருந்த போது இதுதான் நடந்தது)

  1. நான் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்கிற உண்மை தனக்கும் தெரிவதுடன், சக மாணவர்களின் மனதிலும் ஆழமாகப் பதிகிறது.
  2. ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. எனக்குக் கிடைக்கலையே என்கிற ஏமாற்றம் அதைப் பெறாத சிறுவர் சிறுமியர்களிடம் தோன்றும். ‘அது ஏம்பா எனக்குக் கொடுக்க மாட்றாங்க’ என்று ஒரு பையன் தன் தந்தையிடம் கேட்டால் அதற்கு என்ன பதில் கூறுவார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். அந்த பதிலிற்குப் பிறகு தன் சக வகுப்புத் தோழன் மீதான அவன் கண்ணோட்டம் என்னவாக இருக்கும்?

ஆக, குழந்தைகளிடத்தில் இந்தப் பிரிவைப் புகுத்தவேண்டாம். அதைத்தான் ஒரு அரசு அதிகாரி புத்தகத்தின் பின் அட்டையில் சொல்கிறார் (பார்க்க படம்). தவிற பள்ளி அதற்கான இடமே அல்ல. கொடுப்பதை அனைவருக்கும் தந்துவிடுவது சிறந்தது.

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s