ரொம்ப சீரியஸ் பதிவு என்று நினைத்து வந்தீர்களானால் சாரீ.
சரி, கோடானுகோடி வாசகப் பெருமக்களே! (ம்ம்… சரி மேல)
காலையில் எழுவது, விரைவுப் பறவை (early bird:))யாக பணியைத் தொடங்குவதென்பது புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அதற்கு விரைவில் எழ வேண்டுமே. காலையில் 6 மணிக்கு எழுந்தாலே, ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா என்ன’ங்கிற நினைப்பு வரத்தானே செய்யும். அந்த சமயத்தில் பக்கத்து தொடக்கப்பள்ளியிலிருந்து கியா மியாவென எழும் வாண்டுகளின் சத்தம் வேறு மாதிரி என் காதில் விழும்.
ஏண்டா தடிமாடு. நாங்களே எங்க வேலைக்கு வந்திட்டோம். உனக்கெல்லாம் என்ன கேடு?
வாரிச்சுருட்டிக்கொண்டு பல் துலக்க ஓடுவேன்.

ஒரு வாரமாய் குயில் கூவலை. சேவல்கள் கொக்கரிக்கலை. காலை 6 மணி என்பது தினசரி வெறுமையாக விடிகிறது. எப்ப சார் பள்ளிய திறப்பீங்க?

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android
படங்கள் நல்லாயிருக்குங்க…
வணக்கம் தனபாலன் சார். எல்லாம் உங்க ஆசீர்வாதம். நன்றி.
சூப்பர் சார் 🙂
வாங்க வாங்க. தங்கள் வரவு நல் வரவாகுக