ஏழாம் உலகம்


தொறந்த உடன ஓம் போட காரணம், பழநியைச் சுற்றி நடக்கும் கதை.
சற்றும் ஈவு இரக்கமற்று உண்மையை நேர்படப் பேசி உள்ளத்தை உலுக்கிவிடும் ஒரு கதை.

ஏழாம் உலகம்
ஆசிரியர்: ஜெயமோகன்
பிரிவு : புனைவு
பதிப்பு: கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு ஏப்ரல் 2010
ISBN:978-81-8493-441-0

ஏழாம் உலகம்

நாம் வாழுகின்ற சமூகத்தில் இவர்களைக் காண்கிறோம். ஆனால் அவர்களுக்குள்தான் என்னென்ன உணர்வுகள், வாழ்க்கை முறைகள்! ஒவ்வொரு வரியும் சுடுகிறது, நகைக்க வைக்கிறது, திடுக்கிட வைக்கிறது, வருந்த வைக்கிறது, அருவெருக்க வைக்கிறது. அவ்வளவு உணர்வுப் பொட்டலம். ஆனால் மிக எதார்த்தமாக சொல்லும் விதத்தில் உணர்வுப் பொக்கிஷமாகிறது.

அழுத்தமான மாந்தர்களாக முத்தம்மை வருகிறாள். கதை முழுக்க அவளுக்கு உயிரோட்டம். முத்தம்மை ஈனுவதில் தொடங்கி, பிறகு கருவுருவதில் முடிகிறது நாவல். அதிலிருந்து இவளது பாத்திரத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்

நூல் அரங்கம்பண்டாரம் கதையை ஓட்டிச் செல்கிறார். பிச்சைக் காரர்களை உருப்படி என்கிறார். அந்த உருப்படிகள் அவர் போட்ட காசுக்கு இலாபம் தருகின்றன. அந்த இலாபத்தில் சாப்பிட்டு வளர்ந்த பண்டாரத்தின் மகள்களில் ஒருத்தி நகை, பணத்துடன் ஒருவனுடன் ஒடி, தொழிலில் இறங்கிவிடுகிறாள். இன்னொருத்தி, ‘கஷ்டகாலத்திலும் கல்யாணம் செய்து வைக்கிறானே தகப்பன்’ என்றெண்ணாமல் மாங்காய் நெக்லசுக்காக அவர் மனதை சஞ்சலப்படுத்துகிறாள்.

முத்தம்மையின் பிள்ளைப் பிரிவைப் பெரிதாய் மதிக்காத பண்டாரம், நகை பணத்துடன் ஓடிப்போன மகளுக்காக மருகறான் பார். ஆதான் மனிச புத்தி.

கடத்திவரப்பட்ட குழந்தைகளைப் பற்றி அறியும்போது, மனம் பதறுகிறது. ஒரு நிமிடம் நூலை மூடிவிட்டு அப்படியே அமர்ந்திட்டேன். கிறு கிறு. அக்குழந்தையைக் கடத்திவந்த நாயக்கனுக்குப் போக்கு காட்டி பேருந்தில் தப்பிக்கும் பண்டாரம், பேருந்துக்குள் உட்கார்ந்து கலங்குமிடம்….. அது கடவுள் புத்தி. ரெண்டு புத்தியும் சேந்தாதானப்பா அவன் மனிதன்.

முத்தமைக்கு அடுத்தபடி, ஏக்கியம்மையின் பாத்திர கணம் ஜாஸ்தி. காசு பணம் நகை தொலைந்த போதும். மகள் ஓடிப்போன போதும், சுப்பம்மையின் திருமணத்தை நடத்தி ஆகவேண்டும் என்கிற உறுதி… நின்னுட்ட ஆத்தா!

‘இஞ்சேருங்க, இஞ்சேருங்க’ என்று பெருமாளிடம் இளையும் எருக்கு புன்னகைக்க வைத்தாலும், அந்தப் பயபுள்ளைக மனசுக்குள்ள உணர்வுகள் இருப்பதைக் காட்டுகிறாள்.

குய்யனின் புல் மீல்சு… அட!

ஏழாம் உலகம் - ஜெயமோகன் குறிப்பு

போத்தி அருமை. சுப்பம்மை கல்யாணத்தை நடத்தும் இடத்தில் நச்சென்று நிற்கிறார்.

சுப்பம்மை போத்தியை மண்டியிட்டுக் கும்பிட்டாள். போத்தி அவள் தலையில் கை வைத்து ‘சர்வமங்களம் பவது’ என்று ஆசீர்வதித்தார். ‘குட்டி சுப்பம்மா… உன்னை நான் பெத்த மூணாம் நாள் கைல எடுத்திட்டுண்டு. உனக்கு சகல சடங்கும் செய்து வச்சது நானாக்கும். இப்பம் நான் சொல்லுயத கேட்டுக்கோ. எந்த ஒரு விஷயம் வந்தாலும் ஒரு காரியம் நினைச்சிக்கோ.. அந்த நிமிசத்தில அந்த நேரத்தில அது பெரிய காரியமா இருக்கும். அந்த பத்து நாள் போனா எல்லாம் சின்னக் காரியமா மாறிப்போகும். அந்த பத்து நாளை பல்லக் கடிச்சிட்டு தாண்டுயதுக்குப் பேராக்கும் மனோபலம். கேட்டியா, உனக்கு மனோபலம் வேணும். அது இருந்தா பிறவு ஒண்ணும் வேண்டாம். மங்களமா போ குட்டி. உனக்கு ஒரு குறயும் வராது’ என்றார்.

அருமை போத்தி.

இதுமட்டுமில்லை, இந்நாவலின் ஒரு வரி வசனங்களில் பல சுருக் விசியங்கள் பரவலாக இருக்கு. எல்லாவற்றையும் விளக்கினா இது பதிவா இருக்காது. புத்தகமா ஆகிவிடும்.

மாங்காண்டி சாமி, மன சம்மதத்திற்கும் பண வரவுக்கும் தொடர்பில்லை என காட்டுகிறார். அவர் பாடலே அவரை கம்பீரமாக்கிவிடுகிறது.

மருத்துவமனை, காவல் நிலையம், கோயில் திருவிழா என்பதில் நிகழும் சுரண்டல்கள், அப்பட்டமான குற்றங்கள் கொலைகள் எல்லாவற்றையும் தோலுறித்து தொங்கவிடுகிறது இந்த நூல்.

அழுத்தமான உணர்வுகளை விதைக்கக்கூடிய நூல். பண்டாரத்துடன் வயல்வெளிகளில் நடந்திருக்கேன். ரசனிகாந்தைத் தூக்கி முத்தம்மை கொஞ்சுவதைப் பார்திருக்கேன். குய்யனின் கேலி கிண்டல்களில் சிரித்திருக்கேன். எருக்குவின் முதுகெலும்பு வலியை உணர்ந்திருக்கிறேன். போத்தியின் சின்ன புத்தியைக் கண்டு நகைத்திருக்கேன். பெருமாள் மற்றும் வண்டியின் சமயோஜிதத்தைக் கண்டு வியந்திருக்கேன். குழந்தைகளைக் கடத்தி உருமாற்றும் நாயக்கன் கும்பலைப் பார்த்து அதிர்ந்திருக்கேன். ஊஊ!

பீக்காட்டுக்குள் ஒத்தைவிரல் கூனனை இணையவிடும்போது முத்தம்மையின் புலம்பலும், விசும்பலும் அதைக் கேட்டுக்கொண்டு  ‘பீயில்லாத எடம் எங்கிண இருக்கு. கடத்துடே’ என்னும் பெருமாளின் உதாசீனமும்தான் இந்த முழுநாவலுக்கான ஒரே வரியாலான விளக்கம். வேறென்ன சொல்ல!

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

2 thoughts on “ஏழாம் உலகம்

  1. நீங்கள் ஜெயமோகன் புத்தகங்களை விமரிசனம் செய்வதை படிக்கும்போதெல்லாம் சீக்கிரம் அவரது புத்தகம் ஒன்று படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    எல்லா புத்தகங்களையும் வாங்கிவிடுவீங்களா?

    1. நன்றிங்க. இவை நூலக புத்தகங்கள். அம்மாவிற்கு ஒரு ஏழாம் உலகம் பார்சேல்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s