குருதிப்புனல்


ஒரு கொடூர சம்பவத்தை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழவெண்மணி கிராமத்தில் தலித் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்பட்டு ஒரே குடிசையில் வைத்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஆசிரியரின் மனதை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இந்த நாவல் காட்டுகிறது. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது இந்த நாவல்.

குருதிப்புனல்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
பதிப்பு: கவிதா பப்ளிகேஷன், முதல் பதிப்பு ஜூன் 2013
ISBN: 978-81-8345-334-9
பிரிவு: புனைவு

குருதிப்புனல்
குருதிப்புனல்

கதை முழுக்க டெல்லியிலிருந்து ஏற்கனவே அந்த கிராமத்தில் தங்கியுள்ள கோபால் வழியாக நகர்கிறது. அவனைப் பார்க்க வரும் இன்னொரு டெல்லி நண்பன் சிவா துணைக்கு. அது என்னவோ, இ.பா வின் உச்சிவெயில் முழுக்க டெல்லி பின்புலத்தில்தான் நடைபெற்றது. இதிலும் ரெண்டு டெல்லிவாலாக்கள்.

கதை முழுக்க எரிச்சல் தருவதாகவே கோபாலின் நடவடிக்கைகள் இருக்கின்றன. குணச்சித்திர கதாபாத்திரங்களாக வரும் கம்யூனிஸ்ட் ராமய்யா, கனகசபை டாக்டர் கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.

ஆண்மைக்குறைவு கொண்ட ஜாதி வெறி பண்ணையாராக கண்ணையா நாயுடு, அவர் பணத்தின் செல்வாக்கில் அட்டூழியம் செய்யும் காவல்துறை மற்றும் அரசியல் வாதிகள், புத்திசாலித்தனமான கிரிமினல் நடவடிக்கைகளை எடுப்பதுதான் கதை.

இந்தக் கதை எழுதப்பட்ட காலக்கட்டம் என்பது கவனிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் அரசை வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து, முதல் முறையாக அண்ணாத்துரை முதல்வரான நேரம். இந்தக் கதையில் ஆசிரியர் பரவலாக அப்போதைக்கு திராவிட அரசைக் கதைமாந்தர்கள் வழியாகச் சாடுகிறார். திராவிட அரசு, ஏழை மக்களுக்காகப் போடும் வேஷத்தைத் தோலுரிப்பதைப் பார்க்க இயலும். கம்யூனிஸ்டுகளையும் அங்காங்கே குத்திக்காட்டுவதையும் காணலாம். அக்கால கட்டத்தில் கம்யூனிஸ்டுகளே கணையாழியில் வந்த இந்தத் தொடரை எதிர்த்திருக்கிறார்கள்!! பிற்காலத்தில் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததாக இ.பா கூறியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு பற்றி செய்திகள் ஏதுமில்லை (அல்லது நான் கேள்விப்படவில்லை). கணையாழியோ, இ.பாவோ தங்கள் வாங்கு வங்கியை ஏதும் செய்ய இயலாது என்று நினைத்திருப்பார்கள்!

கடைசி வரையில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அவமதிப்பைப் பெற்ற மக்களின் துயரத்தைப் பார்த்த ஒரு எழுத்தாளனின் உணர்வு அது. திராவிட அரசுகள் மீதான எந்த ஒரு சாமான்யனின் பார்வையும் அதுவே. ஆனால் அதை எழுத்தில் கொண்டு வர ஒரு தைரியம் வேண்டும். ஒரு திராவிட அரசின் முதல்வர் தன் முறை தவறிப் பிறந்த குழந்தையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு என்ன ஆனது என்று திராவிட வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்! ஆனாலும் பின்வருமாறு காட்சியமைப்புகள் வைத்த இ.பாவையும், இதை அனுமதித்த கணையாழியையும், அதை வெளியிட்ட பதிப்பகத்தார்களுக்கும் தில் அதிகமே! தில்லுதொர!

குருதிப்புனல் - நாவல் அறிமுகம்
குருதிப்புனல் – நாவல் அறிமுகம்

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் ஒரு காட்சி..

சிவா திருவாரூர் செல்லும் பேருந்துக்கு டிக்கட் எடுக்க வரிசையில் நிற்கும்போது டிராயரும், கழுத்தில் கறுப்பு சிவப்பு நிறத்தில் மேல் துண்டு அணிந்த குடிகாரன் உதவி செய்கிறான்.

திருவாரூர் பற்றிய அறிமுகக்காட்சியில்…

சினிமாவைக் காமத்திற்கும், அரசியலைப் பொருளுக்கும், சமயத்தை அறத்துக்கும் உவமைப் படுத்தி, ‘தமிழர்கள் திருக்குறளை மறப்பதேயில்லை’ என்று பட்டாசு வெடிக்கிறார். அட.

திருவாரூர் அவன் எதிர்பார்த்தற்கு மேல் ஒரு பெரிய ஊராக இருந்தது. ….திருவாரூர் தேர் என்று அவன் சொல்லக் கேட்டிருக்கிறான். ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. பழுதுபட்டு பழைமையின் சின்னமாக நின்று விட்டது. தெய்வ நம்பிக்கை கிடையாது என்று சொல்லிக்கொண்டு, அதைப் பகுத்தறிவின் மீது பகிரங்கமாகச் சத்தியம் செய்து பதவிக்கு வந்த ஒரு கட்சி அரச பீடத்தில் ஏறியதும் தேரை ஓட வைத்ததுதான் ஓர் ஆச்சரியம். …. சமயத்தினால் அரசியல் லாபங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்சி பதவிக்கு வந்த பிறகுதான் புரிந்து கொண்டிருந்தது…… இதற்கு இங்குள்ள பணக்காரர்களின் ஆதரவு வேறு. ‘சாமான்’யர்களின் அரசாங்கத்தில் சரித்திரம் மாறவேயில்லை!

திருவாரூரில் தங்கும் விடுதி தேடும்போது….

‘அங்க எல்லாம் கிடைக்கும்’. பையன் சிரித்தான். அவனுக்குப் பன்னிரண்டு வயதுக்கு மேலிருக்காது.
…….
‘போலீஸ்?’
‘அந்த பயமெல்லாம் இங்கு ஒண்ணும் கிடையாது சார். இந்த ஓட்டல் நடத்தறவரு மந்திரிகளுக்கெ்லாம் வேண்டியவரு. யாரும் கிட்டே போக முடியாது.’
…..
பார்ப்பதற்கு  அது ஓட்டலாகத் தெரியவில்லை… நுழைந்ததும் வாசல் முகப்பில் இந்திரா காந்தி, அண்ணா, கருணாநிதி ஆகியோர் படங்கள்.

image

மந்திரி பற்றிய காட்சி..

பெரியோர்களே, தாய்மார்களே‘ என்று ஆரம்பித்தார் மந்திரி.

சிவாவுக்கு வேடிக்கையாக இருந்தது. உலகத்தில் வேறு எங்கேனும் இப்படி கூட்டத்தை விளிக்கும் மரபு இருக்க முடியுமா? இத்தகைய வேஷதாரித்தனம் நிச்சயமாக எங்குமே இருக்க முடியாது…….. ஒரு மரபுமில்லை. இது தமிழர்களுடைய சுபாவமானப் போலிப் பண்பாட்டு வேஷந்தான். சந்தேகமில்லை.

கிஸான் பிரச்சினையை ‘பாப்பாத்தி’ பிரச்சினையாக மந்திரி பீல் பண்ணும்போது…

நால்வரும் எழுந்திருந்தார்கள். மந்திரி பின்னால் சாய்ந்தார். அவர்கள் வெளிவரும் போது ‘பாப்பாத்தி எங்கே?’ என்று மந்திரி முனகிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

….
மந்திரி ஏதோ கொஞ்சம் படித்தவன் என்று சொல்கிறார்கள். ஆனால் படிப்பு இவனைச் சிறிதளவும் ‘பாதித்ததாக’த் தெரியவில்லை. தண்ணீரில் மூழ்கியதும் இவனுக்குத் தேவை ஒரு பெண். தமிழ்நாட்டில் என்ன மாபெரும் ‘சமூகப் புரட்சி’ ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கட்சியின் சரித்திரமே இப்படித்தான். இவனைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.

கீழவெண்மணி கொடூரத்தைப் பற்றி நிறைய பதிவுகள் இருக்கின்றன. ஒரு தலைப்பட்ச தகவல்கள், சாதி சார்பான வாயுமிழல்கள் (நன்றி ஜெமோ!) இவற்றை நீக்கி பின்வரும் சுட்டியில் அறியலாம்.

 1. கீழவெண்மணிப் படுகொலைகள் – விக்கிபீடியா
 2. ராமைய்யாவின் குடிசை – பத்ரி

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

2 thoughts on “குருதிப்புனல்

 1. என்ன பாண்டியன், ஜெயமோகன் புத்தகம் ஒன்றும் அகப்படலையா? (கோச்சுக்காதீங்க!)

  //திருவாரூரில் தங்கும் விடுதி தேடும்போது….

  ‘அங்க எல்லாம் கிடைக்கும்’. பையன் சிரித்தான். அவனுக்குப் பன்னிரண்டு வயதுக்கு மேலிருக்காது.
  …….//
  தற்போதைய சிறுவயதுக் குற்றவாளிகளின் நினைவு வருகிறது!

  66, 67 களில் வந்த கதையோ? படித்தாற்போல நினைவு. முழுக்கதை நினைவில்லை.

  புத்தகங்களை நன்றாக அலசுகிறீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி!
  வாழ்த்துகள்!

  1. ஹாஹாஹா. அவ்ளோ சுளுவில உங்கள விடப்போறேனா என்ன.. அடுத்தது ஜெமோ புத்தகம்தான்.. இ.பா கூற்றுப்படி 60களில் மேற்படி படுகொலைகள் நடந்தபோது தொடர்கதையாக வந்தது. எனவே நீங்கள் ஊகித்த காலம்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s