தேர்தல் திருவிழாக் காட்சிகள்


எங்க பாத்தாலும் வந்தேறிகள். How to control them? How to control them. எங்க பாத்தாலும் இண்டியன்ஸ். அரசாங்க வேலையில இண்டியன்ஸ். பேக்டரில இண்டியன்ஸ்..

இன்றைக்கு டாக்சி ஓட்டுநராக வந்த சீன தாத்தா அங்கலாய்த்தார். அவரிடம் போய் கோவிச்சு என்ன ஆகப்போகுது. சரி பேச்சுக் கொடுக்கையில் அவர் உணர்ச்சியோடு நிறைய பேசினார். சமயத்தில் ஓடும் வண்டியின் ஸ்டேரிங்கில் இருந்து கையை எடுத்திடுவாரோ என்று நினைக்கும் அளவிற்கு இந்தியா இந்தியா என்று நிறையப் பேசினார்.

இன்னைக்கி உங்க ஊர்ல தேர்தலா? யாரு மோடி ஜெயிப்பாரா? குஜராத் (ஜ-வுக்கு எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுக்கிறார்) BHOOM.. Modi follows China. Modi has eye on Singapore… மோடி வந்தா India Bhooom.

China Bhooom.. India Bhoom… Thats why America is afraid.

அளந்து கொண்டே வந்தவரை நிறுத்தி, “அங்கிள் அங்கிள். சைனா மாதிரியா இந்தியா வளருது. பேசறதுல கொஞ்சம் நியாய தர்மம் வேணாமா. நாங்க கொஞ்சம் பொறுமையாத்தான் வருவோம்” என்று ஒரு அணையைப் போட்டேன்.

‘இந்தியாவில தேர்தல். டைம் வேஸ்ட்.’ ஒரு கையை  ஸ்டியரிங்கில் இருந்து எடுத்து மைக் மாதிரி வைத்துக்கொண்டு ஊஊ என்று கத்துகிறார். (அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்வதைச் சொல்கிறார்). ‘இதெல்லாம் தேவையே இல்லை.’

‘ஆமா சைனாவில இதெல்லாம் இல்லையே’ இது நான்.

‘சைனாவுக்குத் தேவையே இல்லை. இவங்க மைக்ல பேசும்போது (திரும்ப மைக் சிம்பல்.. ஊஊ சத்தம்) சீனாக்காரன் பேக்டரிக்குப் போவான் (இப்ப கையை எடுத்து சுத்துகிறார். பேக்டரில வேலை பாக்கறாங்களாம்!). We want productivity.. ம்ம்ம் (ஒரு உறுமல்).. productivity. productivity. we want money.. money-laah! சைனாவில ஒரு கட்சி ஆட்சி. அங்க இதெல்லாம் கிடையாது’

ஒருவழியா நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. காசு கொடுத்து நான் தவழ்ந்து காரைவிட்டு வெளியேறும்வரை சொல்லிக்கொண்டே இருந்தார் தாத்தா. India Bhooom India Bhooom

ஆக, இது தேர்தல் சிறப்புப் பதிவு!

கடைசி பெஞ்ச் செலிபிரிடிகள்

நம்ப பதிவில் இது வரை ஆதர்ச எழுத்தாளராக இருந்து வரும் திரு பா.ராகவன்

கவிஞர் வைரமுத்து

இணைய அளப்பறை கோஷ்டி

இணையத்தில் ஆள்காட்டி விரலைக்காட்டிக்கொண்டு இருக்கின்றனர். கொட்டுகிறது. அதுக்குப் பேரு செல்ஃபியாம். முடியல! சாம்பிளுக்கு ஒன்னே ஒன்னு!

புதுச்சேரி

தமிழ்நாடு

 

 

புதுச்சேரி

 

 

கர்நாடகா

 

மஹராஷ்ட்ரா

டார்ஜீலிங்

சிக்கிம்

 

ஹரியானா

மிஸோரம்

டெல்லி

கேரளா

 

உத்திரபிரதேசம்

 

திரிபுரா

ஜெய் ஹிந்த்!

Advertisements

8 thoughts on “தேர்தல் திருவிழாக் காட்சிகள்

 1. ranjani135 April 24, 2014 / 9:33 pm

  தேர்தல் திருவிழா காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. அதென்ன ஆஸ்தான எழுத்தாளர்? உங்கள் வலைத்தளத்தில் எழுதுகிறாரா, பா.ரா? எனக்குக் கூட இவரது எழுத்துக்கள் ரொம்பவும் பிடிக்கும்.
  உங்கள் பதிவுகள் சில படிக்காமல் இருக்கின்றன. சீக்கிரம் படிக்கிறேன்.

  • Pandian April 25, 2014 / 5:13 am

   அடக்கடவுளே, அப்படித்தான் எழுதியருக்கேன். மாற்றியாச்சு. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தங்களின் வருகைக்காக கடைசி பெஞ்சில் தூங்கிவழிந்துகொண்டே காத்திருக்கிறேன். இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

  • Pandian April 25, 2014 / 5:15 am

   வாருங்கள் கவிஞரே. தங்கள் வருகையால் கடைசி பெஞ்ச் பெரு உவகை கண்டது. இந்த நாள் இனிய நாளாகட்டும்.

 2. Andi Chamy April 25, 2014 / 7:30 am

  முதியவர்கள் ஓட்டு போடுவதைப்பார்த்து பொறாமைப்படுகின்றேன்.தமிழ்நாட்டில்,முதியவர்களின் பெயர்கள் லிஷ்ட்டில் இருப்பது ஏனோ அதிகாரவர்க்கத்துனருக்கு பிடிப்பதில்லை.சகட்டுமேனிக்கு குதறி துப்பி விடுகிறார்கள்.சண்டை போட தெம்பில்லை அவ்வளவுதான்,ரேசன் கார்டுகளிலும்,அதேதான்.மார்க்கண்டேயர்கள்.

  • Pandian April 25, 2014 / 5:37 pm

   பெரியவர்கள் தரும் அங்கீகாரமும், பெரியவர்களுக்கும் நாம் அளிக்கும் அங்கீகாரமும் ரொம்ப முக்கியம். வருகைக்கு நன்றி நண்பரே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s