குகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது
- இரண்டாம் சனி – எலிஃபெண்டா தீவு
- இரண்டாம் ஞாயிறு – ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது)
- மூன்றாம் சனி – எல்லோரா
- மூன்றாம் ஞாயிறு – அஜந்தா
பயண ஆயத்தம்
இவ்வாறு முடிவு செய்து கொண்டதும் முதலாக செய்ய வேண்டிய வேலை அஜந்தா எல்லோராவிற்கான பயணம் மற்றும் தங்குமிடம் அல்லவா. நிறைய பயணம் செய்யவேண்டும் என்று தோன்றியது. அஜந்தா எல்லோராவைப் பற்றி எனக்கு அறியத்தந்தது எனது முதல் பாஸ் திரு. சுவாமிநாதன். எனவே அவருக்கே போன் அடித்தேன். ஜல்கான் ரயில்நிலையம் அஜந்தாவிற்குப் பக்கம் என்று ஆலோசித்தார். அதிலும் எனக்குப் பிரச்சினை இருந்தது. ஜல்காவிலிருந்து அஜந்தா பக்கமாய் இருக்கலாம். எல்லோரா 200 கிலோமீட்டர்களுக்கும் மேல். பயணத்திலேயே அதிக நேரம் போய்விடும். ஜல்காவிலிருந்து அஜந்தா சென்றுவிட்டு அடுத்த நாள், ஓட்டலைக் காலி செய்துவிட்டு எல்லோரா போய், பின் அங்கிருந்து அவுரங்காபாத்… நினைக்கையிலேயே கண்ணைக்கட்டுதே.. இறுதியில் ஒரு திட்டம் உறுதியானது
மும்பை – அவுரங்காபாத் (1 இரவு பயணம்)
அவுரங்காபாத் – எல்லோரா – அவுரங்காபாத் (1 மணிநேர பயணம் – ஒரு வழி)
அவுரங்காபாத் – அஜந்தா – அவுரங்காபாத் (ஒன்னரை மணிநேர பயணம் – ஒருவழி)
இது உறுதி செய்ய காரணம்
1. பயணம் எளிது
2. Saibaba Travels, Aurangabad – விக்கி டிராவல் தளத்தில் இவரைப் பற்றிய நல்ல ரிவ்யூக்கள் கிடைத்தன. போன் அடித்தேன். பங்கஜ் என்பவர் போன் எடுத்தார். நான் சொன்னது ஒரு வார்த்தைதான்.
“இந்த வாரம் போய் அடுத்த வாரம் நான் அவுரங்காபாத் வாரேன். எனக்கு ஹிந்தியோ மராத்தியோ மருந்துக்கும் தெரியாது. அஜந்தா எல்லோரா பார்க்கனும். ரயில விட்டு இறங்கினதிலிருந்து, திரும்ப ஏறும் வரை நான் உன் பொறுப்பு”
“கிளம்பி வாங்க ஜமாய்சிடலாம்” என்றார்.
“எனக்கு ஓட்டல் அறை முன்பதிவு செய்யனுமே. அதையும் பாத்துக்கிறியா”
“நோ ப்ராப்ளம்!”
அடுத்த கட்ட நடவடிக்கையாக தேவகிரி எக்ஸ்பிரசில் போக வர முன்பதிவு கனிஜோராக நடந்தது, அத்தணையும் 15 நிமிடத்திற்குள்! பயணம் பிரச்சினை இல்லாது இருந்தால்தானே குகைகளின் தேடல் முழுமை பெறும்!
சரி பயண ஆயத்தம் முடிந்தது, இனி ‘சிவன்மலைத்தீவு’ க்குப் போகலாம்!
01 டிசம்பர் 2007 – சிவன் மலைத்தீவு யாத்திரை
இரண்டாவது வார சனிக்கிழமை வந்தது. 6 மணிக்கு எழுந்து, அவசரக்குளியல். அடிச்சிப் பிடிச்சு போரிவளி நிலையத்திற்கு ஓடி வரோம். காரணம் உண்டு. எலிபெண்டாவிற்கு இந்தியா கேட்டிலிருந்து 9 மணி முதல் போட்டுகள் கிளம்பும். முதல் வண்டியைப் பிடிப்பதென்று விரைகிறோம். சென்ற வாரம் மாதுங்கா போகும்போது ரயில் கூட்டம் சக்கை போடு போட்டது. இந்த முறை தப்பிக்க ஒரு வழி?? சரி, முதல் வகுப்பு டிக்கட் எடுத்தால் என்ன.. சர்ச்கேட் போக வர 100ரூபாய் சொச்சம். நடைமேடையில் வண்டிக்காகக் காத்திருந்தபோதுதான் கொடுத்த அம்புட்டு ரூபாயும் வீண் என்று. முதல் வகுப்பு என்பதால் மட்டும் கூட்டம் குறைந்துவிடாது.
From Elephanta |
தலைவிதியே என்று என்னை திணித்துக்கொண்டேன். தடதடக்க ஓடிய ரயில், அப்பும் கூட்டம். மும்பையின் காலை வெகு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
From Elephanta |
சர்ச் கேட் நிலையத்திலிருந்து இந்தியா கேட் நடக்கும் தூரம்தான். இந்தியா கேட் போய் சேரும்போதுதான் தெரிந்தது. அடடா. சாப்பாட்டுக்கு என்ன வழி!?
கடல நக்கர போனோரே
இந்தியா கேட் சென்று அங்கிருந்து படகைப் பிடித்து எலிஃபெண்டா செல்லவேண்டும். இரண்டு வகை பயணச்சீட்டுகள் உண்டு நண்பர்களே. கீழ்தளத்துக்கு கம்மி ரேட். மேல் தளத்துக்கு தனி ரேட். தம்பதியாகப் போனால் கீழ் தளத்திலும், ஜோடியாகப் போனால் மேல் தளத்திலும் போகலாம். அட. யாருப்பா இங்க கல்ல விட்டு அடிக்கிறது?
From Elephanta |
படகு ரிவர்சுல போய், திசைமாற்றிக்கொண்டு மேற்குப் பக்கமாக நகரத்தொடங்கியிருந்தது. சரித்திர முக்கியத்துவம் (என்னோட வாழ்க்கைச் சரித்திரத்தச் சொன்னேன்!) கொண்ட குகைகளின் தேடல் தற்போது அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. எண்ணெய் படலம் வானவில் வர்ணங்களை கடல் நீரில் வரைந்துள்ளது. காதைக் கிழிக்கும் ஒலியுடன் கப்பல் ஒன்று எதிரே வருகிறது.
பார்க் அணு நிலையம் தரிசனம் தருகிறது. இடிந்தகரை ஜிந்தாபாத்!
படகு பல்வேறு வகைகளில் இருந்தாலும், தற்காப்பு ஏற்பாடுகள் துளியும் இல்லை நண்பர்களே. போகும்போது கையில் பாதுகாப்பு மிதவை உடைகள் வைத்திருந்தால் நல்லது.
மெலிதாக கடல் நீருக்குள்ளிருந்து எழுகிறது ஒரு யானை. எலிபெண்டா.
From Elephanta |
தீவைச் சுற்றியும் சதுப்பாக இருப்பதைக் காண்கிறோம். மூச்சு முட்டிய வேர்கள் மேலே வளர்ந்து சேருக்கு மேலே நீட்டிக்கொண்டு சுவாசிக்கின்றன.
From Elephanta |
ஒரு சிறிய படகுத்துறையில் இறங்கிவிடுகின்றனர்.
From Elephanta |
“திரும்பிப் போகும் எந்தப் படகில வேணாலும் போய்க்கலாம்தானே?”
“ஆம்” என்கிறார் படகோட்டி.
கொஞ்சம் காரமான வெயில், பசிக்கும் வயிறு, தலை மயிர் பறக்கும் காற்று.
படகுத்துறையிலிருந்து கால் நடையாகப் போய்விணலாம். ஒரு குட்டி ரயில் குட்டிப் பசங்களுக்கு உள்ளது.
From Elephanta |
மலையில் ஏறும் வழியின் இருபுறமும் பெட்டிக்கடைகள்-பானங்கள், தின்பண்டங்கள், மேப்புகள், கைவினைப்பொருட்கள்.
From Elephanta |
மேலே வந்து, எதேச்சையாக வலதுபுறம் திரும்புகையில் மலைக்க வைக்கும் குகையின் வாசல் தெரிகிறது. பார்த்த முதல் கணத்தில் தொல்லியல் இடங்கள் உங்கள் உள்ளத்தைக் கவர்ந்துவிடும். மீண்டும் அந்த இடங்களுக்கு எத்தணை தடவை வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அந்த முதல் தோற்றம் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதலில் சித்தன்னவாசல் போனபோது 13 வயதிருக்கலாம், இன்னமும் சமணர் படுகையின் அன்றைய தோற்றத்தை ஒரு கனவுபோல என் நினைவுகள் பத்திரப்படுத்தி இருக்கின்றன.
From Elephanta |
சொன்னால் நம்பனும் நண்பர்களே, அது குகை அல்ல. மாளிகை. திறந்து போட்ட, வாசலற்ற மாளிகை. இரண்டாள் மட்டம் உயரம். 27 மீட்டர் சதுர அறை. பருத்த தூண்கள், சதுரமாய் கீழே தொடங்கி, அலங்கார வளையங்களுடன் மேல் பாறையைத் தாங்குபவை.
Massive!
From Elephanta |
ஒன்றாம் குகையின் வலது புறத்தில் உள்ள நடராஜர். சிதைந்துள்ளது. பெரியது. கண்களை மூடி மோன நிலை, ஆடலின் அசைவுகளைக் கல்லில் வடித்து, சிலை உயிரோட்டம் கொடுத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத சிற்பி. செஞ்சு முடிச்சதும் விரலை வெட்டினான்களோ, கையையே வாங்கிட்டான்களோ.
Lively!
From Elephanta |
ஒரு கருவறை. வெளியே காவலுக்கு ரெண்டு துவாரபாலகர்கள். வஞ்சகமில்லாமல் வளர்ந்திருக்கிறார்கள்.
From Elephanta |
From Elephanta |
“அண்ணே, உங்கள போட்டோ எடுத்துக்கட்டுமா”
“என்ன போட்டோ எடுக்கவா இம்புட்டு தூரம் வந்தே, மூடா” துவாரபாலகர் சீறினார்.
“சர்வம் சிவமயம்ணே.”
“சரி சரி. என் டைம வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் நகரு.”
உள்ளே சிவனார் தரிசனம்.
வலது பக்கம் அடுத்த காட்சி. அந்தகாசுரவத மூர்த்தி. கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, முகத்தில் போர் வீரனின் உக்கிரம்.
From Elephanta |
குடைவறைகளில் பெரிய சிலைகள் நம்மூரிலும் இருக்கின்றன. யாரை உதாரணம் சொல்லலாம்னு யோசிச்சா இரண்டு பேர் உடனே மனதில் வந்து நிற்கின்றனர்.
1. சிவன் குடைவறையின் துவாரபாலகர்கள், திருமயம்.
2. பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள் குடைவறை, திருமயம்
சரி, அவற்றுக்கும் இவற்றுக்கும் அப்படி என்ன வித்தியாசம், எனக்குத் தோன்றியது, அலங்காரம். கல் அலங்காரம். சுழித்திருக்கும் கூந்தல், அலங்கார கிரீடம், உடை நளினம். இவற்றிலெல்லாம் அவர்கள் காட்டும் த்த்ரூபக் காட்சி details அபாரம். அதற்காக, நம்மூரைக் குறைத்து மதிப்பிடலாகுது நண்பர்களே. அந்த ஊரின் பாறை அப்படி. மென்மையானது. நம்மூர் பாறையில் எடுத்துத் தட்டினால்….? நங்ங்ங்ங்..
சிவனார் கல்யாணம்
மாப்பிள்ளை பெண்ணின் ஆளுயர சிற்பங்கள், அதில் உள்ள நளினம், வானில் மிதக்கும் தேவர்கள் அசத்தல் பேனல்!
From Elephanta |
கங்காதர மூர்த்தி
From Elephanta |
முன்னால் நிற்கும் ஆசாமியை வைத்து அவர் முன்னால் நிற்கும் சாமியின் உயரத்தை அளந்து கொள்ளவும். நண்பர்களே, நான் பிரமாண்டம், பிரமாண்டம் என பிதற்றியதை இப்போ உணந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஒன்றாம் குகையின் பின்புற கருவறையில் உள்ள மகேஷமூர்த்தி சிவன் இவர். திரிமூர்த்தி என்று இவரை அழைக்கின்றனர்.
From Elephanta |
மூன்று முகம் ரஜினிகாந்த் கணக்கா இருக்காரில்லையா, இடதுபக்கம் மீசையும் கோபமுமாக இருப்பவர் ருத்ரன். இவர் கோபம் உலகத்தை அழிக்கும். எரித்து சாம்பலாக்கும். பூசுறதுக்கு திருநீறுதான் மிஞ்சும்.
நடுவில ஜெண்டில்மேன் கணக்கா, மோனத்தில் ஆழ்ந்திருப்பவர் தத்புருஷர். உலகின் நன்மை தீமைகளின் சமநிலை கெடாமல் பாத்துப்பார்
இந்தப்பக்கமா இருப்பவர் யோகேஷ்வரர். உலக நன்மைக்காக ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
சத்யோஜதர், இஷானர் என இரு முகங்கள் பின்னாடி இருக்கும். பாக்கறவன் பாறையைப் பிளந்து பார்த்துக்கட்டும்னு சிற்பி நினைச்சிருக்காப்ள.
இவர்படம்தான் மகாராஷ்ட்ர சுற்றுலா கழகத்தின் இலச்சினையாக உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர்
திரிமூர்த்திக்கு கருறைக்குப் பக்கத்தில் உள்ள பேனல்
From Elephanta |
மகாயோகி சிவன்
மலர் மேல் யோகநிலையில் அமர்ந்திருக்கும் யோகேஷ்வர சிவன்!
From Elephanta |
சிவ பார்வதியின் தாயவிளையாட்டு!
மனைவியோடு விளையாடும்போது தோற்கனும். ஆனால் கல்லாட்டை ஆடி சிவன் ஜெயிப்பதால் கோபமுற்ற பார்வதி.
From Elephanta |
கைலாசத்தைத் தூக்கும் ராவணன்
ஏம்பா. நான் எத்தணை நேரமா உன்ன கூப்டுட்டு இருக்கேன். இந்நேரம் என்னைக்கண்டுக்காம என்ன பன்ற. கயிலையையே தூக்கிய ராவணன்
From Elephanta |
இந்த கருவறைக்கு துவாரபாலகர் இல்லீங்களா. அதனால இவரப் போட்ருக்கோம்
From Elephanta |
கண் குளிர குகைக் காட்சிகள் சில
From Elephanta |
From Elephanta |
From Elephanta |
From Elephanta |
From Elephanta |
From Elephanta |
From Elephanta |
அற்புதமான புடைப்புச் சிற்பங்கள் நண்பர்களே. வெகு நளினமான அலங்காரங்கள் கொண்டது. பார்வதி உட்கார்ந்திருக்கும் அழகாகட்டும், துவாரபாலகர்களின் சடைமுடி பாணியாகட்டும், திரிமூர்த்தி கொண்டிருக்கும் ஒரு ஓங்கார அமைதியாகட்டும், மலைக்கவைக்கும் பிரமாண்டம். மேற்கிந்திய கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் மிகச் சிறந்த உதாரணம் எலிஃபெண்டா.
ஆனால் மனம் வருந்தும் வகையில் சிற்பங்கள் அனைத்தும் அழிந்துள்ளது. மனித அழிவுகள், இயற்கை அழிவுகள். அது தவிற போர்த்துகீசியர்கள் துப்பாக்கி வைத்துச் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளதாக சில செய்திகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிற்பங்கள் முழுமையாகக் கிடைத்திருந்தால், காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.
முடிவடையாத ஒரு குகை
From Elephanta |
முடிவடையாத குகைகள் ஒரு வெறுமையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. முடிவடையாத முயற்சி, யாரோ ஒரு சிற்பிக் கூட்டத்தின் முடிக்கப்படாத செயல்திட்டம், முழுமையாக வெளி வராத கனவு. யார் கண்டார்கள், இந்த இடத்தில் இவ்வளவு பெரிய சிற்ப சாம்ராஜ்ஜியத்தை அமைத்த கூட்டத்தின் வீழ்ச்சியின் சாட்சியாகவும் இருக்கலாம்.
முடிவடையாத குகைகளை நிறைய பேர் குறிப்பிடுவதில்லை. எலிபெண்டாவிலும் சரி, அஜந்தாவிலும் சரி, இந்த முடிவடையாத குகைகள் எனக்குத் தந்த உணர்ச்சிகள் உக்கிரமானவை, விளக்கிச் சொல்ல முடியாதவை. வெரிச்சோடிப்போன வீட்டை நினைவு படுத்துபவை, ஆண்டு முடித்த சொத்தை நினைவு படுத்துபவை. ஒரு இனத்தின் வீழ்ச்சியை நினைவு படுத்துபவை. இந்த இடத்தின் வரலாற்றில் முடிவாகக்கூட இருக்கலாம். ‘இத்தோட நான் முடிந்துவிட்டேன்’ என்று அந்த இடம் எனக்குக் கூறுவதாக உணர்கிறேன்.
பீரங்கி மலை
அடர்ந்த கானகத்தின் ஒற்றைப் பாதை வழியாக மலையேறுகிறோம் நண்பர்களே
From Elephanta |
மேலே ஏதோ பீரங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். வந்தது வந்தோம் கழுதை அதையும் பார்த்திட்டுப்போவோமே.
ஆனால் போகும் வழியில் அங்கங்கு காடு விலகி கடல் தெரியும் காட்சி, சட்டென்று மனத் தெளிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியது.
From Elephanta |
From Elephanta |
From Elephanta |
மழை பெய்தால் இந்த மாதிரி பாதையில போகாம கம்முன்னு திரும்பி வந்திடனும். இல்லைன்னா நீங்கள் வழுக்கி கீழே விழ வாழைப்பழத் தோல் தேவையில்லை!!
இதுதான் நாம் வந்து இறங்கின படகுத்துறை.
From Elephanta |
கடைசியாக மலை உச்சியில் பிரிட்டிஷ் கால பீரங்கி. சொல்வதற்கு ஏதும் பெரிசா இல்லை. திரும்பலாம்!
From Elephanta |
தொல்லியல் துறையினர் குகைகளைச் சுற்றிப்பார்க்க நல்ல பாதையை அமைத்திருக்கின்றனர். கடகடவென கீழே இறங்கி வருகையில தாகம் வாட்டுகிறது. நீங்களாவது போகும்போது நிறைய தண்ணீர், சிறிய உணவு வகைகளைக் கொண்டு சொல்லுங்கள்.
பாதி மலை இறங்குகையில் ஒரு மராட்டிய அண்ணன் எழுமிச்சை ஜுஸ் வித்துட்டு இருந்தாப்ள.
“கித்னா ஹுயா பையா”
“தஸ் ருபீயே.”
“தஸ் ருபீயே!!??”
பதிலுக்கு ஏதோ சொல்றார் நமக்கு விளங்கலை.
“salt.. salt.. no sugar. ”
போட்டுக் கலக்கிக் கொடுக்கிறார். உள்ளே சகல கலர்களுடனும் தூசு துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
நான் அதை மராட்டிய அண்ணனிடம் விசாரிக்கிறேன்.
“க்யா ஹுவா பையா?”
“மசாலா மசாலா!!”
பக்கத்தில் இன்னொரு கிளாஸ் எழுமிச்சை நீரை விழுங்கிக்கொண்டிருந்த பிரான்சுக்காரன் என்னைப் பார்த்து நகைத்தான்.
“என்னப் பாத்து எதுக்குவே சிரிக்கே? அங்க என்ன வாழுது? எப்டி இருக்கு உன் சூசூ?”
“Ha ha. too much sweeeeetttt!!” – அந்த ஸ்வீட் வார்த்தையைச் சொல்லும்போது அவன் குரல் கீச்சிடும் அளவிற்கு தொண்டையில் இனித்திருக்கிறது பாவம்!
அதுக்கு நம்ப பாடு எவ்வளவோ பரவாயில்ல என்று கிளாசைக் காலி செய்றோம்.நல்ல அண்ணன். ஒரே வாளியில் கிளாசைக் கழுவாமல், வெளியே கழுவி ஊத்தினார். இல்லைன்னா இதக்குடிக்கிற வெள்ளைக்காரன் அம்புட்டுப்பேருக்கும் வயிறு டரியல்தான்!!
From Elephanta |
திரும்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே. திரும்பி படகை நோக்கி நடக்கையில் முதல் குகையை கடக்கிறோம். ஏதோ கண்கள் நம் மீது பதிவதாக உணர்கிறோம். உள்ளே அதே துவாரபாலகர் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“எங்க அவரு?” – நான்.
வலதுகையை உயர்த்தி, ஒரு விரலால் உள்ளே சுட்டினார். முரட்டுத்தனமான அந்த முகத்தில் மந்தகாசம் ததும்பிக்கொண்டிருந்தது
ஜெய் ஹிந்த்!
வணக்கம்
கண்னைக் கவரும் இடங்கள் மிக அழகாக உள்ளது. அத்தோடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்…. நாங்களும்பார்த்த ஒரு உணர்வுதான்.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் கவிஞரே,
இந்தியா என்பது என்ன என்பதற்கு இந்தப் பதிவும், இதற்கு முன்னர் இட்ட தேர்தல் பதிவும் உதாரணமாக இருக்கும். பலர் இந்தியா என்பது ஒரு நாடே இல்லை என்கின்றனர். நாடாக இல்லாது, நாடாக ஆனவர்கள் நாம். பல கலைகள் தெரிந்த நாம், இருண்ட காலத்திற்குள் சென்றிருக்கிறோம்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
வணக்கம்
எனது பக்கம் கவிதையாக புதிய பதிவு-
எப்போது ஒளிருமட வசந்த காலம்…...
வாருங்கள்அன்புடன்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றுதான் இந்தப் பதிவு முழுவதையும் படித்து முடித்தேன். புகைப்படங்கள் இன்னும் நிறையச் சொல்லுகின்றன. உடைந்த சிற்பங்களைப் பார்க்கும்போது கையாலாகாத ஒரு கோவம் வருகிறது. பெருமூச்சு விட்டு கோபத்தை அடக்கிக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லையே!
Calm down, Calm down என்று சொல்லிவிட்டு
உங்கள் ஊரைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுத உங்களை அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நீங்கள் எழுதிய பின் உங்களுக்குத் தெரிந்த நான்கு பேரை தொடர்ந்து எழுதச் சொல்லி அழையுங்கள்.
http://wp.me/p244Wx-GT
அன்புடன்,
ரஞ்சனி
மிகச்சிறப்பான படங்களின் பகிர்வுகளும் அருமையான பயணக்குறிப்புகளும் ..பாராட்டுக்கள்..
கல்லும் சொல்லுமே கவிதை..!
நல்வரவு. தங்கள் வருகையாலும் பின்னூட்டத்தாலும் மிகுந்த உவகை கொள்கிறேன். மிக்க நன்றி.