புத்தாண்டு நினை(றை)வுகள்


நண்பர்களே, கடந்த ஆண்டின் நினைவுகள் சுவையானவை. அவற்றை புத்தாண்டு அன்றைக்கே தொகுத்திருக்கலாம். எனது கெட்ட நேரம். உங்க நல்ல நேரம். அன்றைக்கு அலுவலகம் செல்லவேண்டியதா போயிற்று. ஆனா, கெரகம் சும்மா விடலை. இதோ இந்த ஆண்டு அறிக்கை. கடந்த ஆண்டில் எழுதியதை எடுத்துப் பார்த்தேன். அதற்குள் ஒரு வருடம் போயிற்றா என்று ஆச்சரியமாக உள்ளது. வீட்டுப் பக்கம் பள்ளி செல்லும் மாணவர் என்கிற தகுதியைப் பெற்ற எனது வாரிசு இந்த வருடம் அப்பன் இணையத்தில் ஆடுவது போதாது [...]

புத்தாண்டு வாழ்த்துக்கள்


சகலகோடி வாசகர்களுக்கும் (இப்படிக் கூப்பிட்டு எத்தணை நாளாகிறது!!!),சக பதிவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

விஷ்ணுபுரம்


முந்தைய நூலனுபவத்திற்குப் பிறகு பனிமனிதன் நாவலை எடுக்கத்தான் விருப்பம். ஆனால் நூலகத்தில் விஷ்ணுபுரம் மிகச் சில புத்தகங்களே இருந்தன. அதில் ஒன்று வாசகர் எடுக்கத் தயாராய் இருந்ததை அறிந்ததும் மனம் பரபரப்படைந்தது. ஆனால் மனதில் ஓர் அச்சம். விஷ்ணுபுரத்திலிருந்து மீண்டு வர முடியுமா என்று. ஒரு நூலை வாங்கிப் படிக்காமல் விட்டால் கூட பரவாயில்லை, பாதியில் நிறுத்துவது என்பது வீடு கட்டுவதைப் பாதியில் நிறுத்துவது போன்றது. அது தரும் குற்ற உணர்வு அதிகம். விஷ்ணுபுரம் ஆசிரியர்: ஜெயமோகன் [...]