ஈராறுகால்கொண்டெழும் புரவி


ஈராறுகால் கொண்டெழும் புரவி - கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது. ஈராறுகால்கொண்டெழும் புரவி ஆசிரியர்: ஜெயமோகன் பிரிவு: புனைவு பதிப்பு: சொல்புதிது கடலூர்; முதல்பதிப்பு டிசம்பர் 2012 ISBN: - NLBயில் இரவல் பெற - Īrār̲ukālkoṇṭel̲um puravi விக்கி - http://ta.wikipedia.org/s/393d ஈராறுகால்கொண்டெழும் புரவி - குறுநாவல் சித்தர் ஞானம் அறியும் முயற்சியை [...]

விரைவில் டிஜிட்டல் மயமாகிறது ‘பவள மல்லி’ – 75 ஆண்டுகளை நிறைவு செய்தது திருச்சி வானொலி நிலையம்


எந்நேரமும் ஒரு குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற வரம் தருகிறேன். யார் குரலை விரும்புகிறாய் என்று கடவுள் கேட்டால்... ஸ்ரீமீனாக்ஷி, திருச்சி வானொலி அறிவிப்பாளர் என்பேன். முன்பு AM அலைவரிசையில் ஒளித்துக்கொண்டிருந்த இவர் குரல், இப்போது FMஅலைவரிசையிலும் கேட்கிறது. தூய்மையான அழகான தமிழ் உச்சரிப்பு, மயங்கவைக்கும் குரலின் கார்வை. ஊர் பக்கம் இருக்க முடியாததால் இவரது குரலைக் கேட்க முடியாதது இழப்பே!!! 🙂 அம்மையாரின் குரலைக் கேட்க விரும்புவோர் (ஏற்கனவே கேட்டோர் நியாபகப்படுத்திக்கொள்ள....) பின்வரும் யூடியூப் அசைபடத்தைப் [...]

சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்


அஜந்தா முடிந்த கையோடு, நம்ப ஊரைப் பற்றி நினைவு படுத்தியே ஆகனும் அல்லவா. அதற்காக இந்தப் பழைய பதிவு.. புராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள். பாறைகளில் இருந்து எடுக்கப்படுபவை. பிற பச்சிலைநிறங்கள். ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. கூரை ஓவியத்தில் ஒரு தாமரைத்தடாகம் . சமணமுனிவர் தாமரைமலர்களை கொய்கிறார். யானை ஒன்று நீரில் நிற்கிறது கிறது. முதலைகள் மீன்கள். ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம், மிகச்சிறப்பான அணிகள் கொண்ட மணிமுடிகள் போன்றவை [...]

எங்க ஊரு… புதுக்கோட்டை


அரசு அலுவலர்கள் நிறைய, பெரிய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சம், சொந்தத் தொழில் - சிறுதொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சம். இதுதான் புதுக்கோட்டை. பிறந்தது 30 கிலோமீட்டர் தள்ளி காரசூரான்பட்டி என்கிற கிராமம் (குடுமியாமலை அருகில்). 'மூணாப்பு' படிக்கையிலேயே புதுகைக்கு ஜாகை மாறினாலும் இன்னும் உள்ளுர அந்த கிராமத்துச் சிறுவனே நான். ஒவ்வொரு நாளும் என் பிறப்பிடம் பற்றி எண்ணாமல் இருந்ததே இல்லை (நிஜம்ங்க!). வெயில் வரட்சியாகட்டும், மழைச் சதுப்பிலாகட்டும் வெள்ளாறு, குளத்தங்கரை, வயல்காடு என்று டிபிகல் பாரதிராஜா படம் [...]

புதுக்கோட்டை


எங்களது புதுக்கோட்டை இணைய தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய பாணியில் இருந்த இணையதளத்தை பராமரிப்பு பிரச்சினைகள் காரணமாக வேர்டுபிரசிற்கு மாற்றியிருக்கிறோம். இருந்தாலும் பழைய இணையதளத்தை அழித்திட விருப்பம் இல்லை என்பதால் அதையும் விட்டு வைத்துள்ளோம். தளத்தைப் பற்றிய அறிமுகம் - புதுக்கோட்டையில் உள்ள மிக முக்கிய தொல்லியல் இடங்களை எளிமையான முறையில் ஆர்வமுள்ளவர்களுக்குச் சொல்வதாக அமைத்திருக்கிறோம். மேலும் தள நிறுவனரின் படைப்புகளை ஒருங்கிணைத்து இதே தளத்தில் ஏற்ற இருக்கிறோம். நான்குபேர் புதுக்கோட்டையில் மூன்று வருடங்களாகப் போட்ட உழைப்பு இந்தத் [...]