ஈராறுகால்கொண்டெழும் புரவி


ஈராறுகால் கொண்டெழும் புரவி – கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது.

ஈராறுகால்கொண்டெழும் புரவி
ஆசிரியர்: ஜெயமோகன்
பிரிவு: புனைவு
பதிப்பு: சொல்புதிது கடலூர்; முதல்பதிப்பு டிசம்பர் 2012
ISBN: –
NLBயில் இரவல் பெற – Īrār̲ukālkoṇṭel̲um puravi
விக்கி – http://ta.wikipedia.org/s/393d

ஈராறுகால்கொண்டெழும் புரவி
ஈராறுகால்கொண்டெழும் புரவி

ஈராறுகால்கொண்டெழும் புரவி – குறுநாவல்

சித்தர் ஞானம் அறியும் முயற்சியை சுவையான நகைச்சுவையாக சொல்லியிருக்கும் நூல். பாதி படிக்கும்போதே எப்படியும் சாஸ்தான்குட்டிப்புள்ளை மண்டையப்போட்டுடுவார் அப்புறம்தான் மாமரம் பழுக்கும் என்று தோன்றிவிட்டது 🙂 ஆனாலும் கதையோட்டம் வெகு சிறப்பு. ஞானம் குறித்த விவகாரங்கள் வந்துவிட்டால் புரியுதோ இல்லையோ கமுக்கமாகப் படித்துவிட்டு முன்னேறிப்போய்கொண்டே இருப்பதைத்தான் கற்றுவைத்திருக்கிறேன். ஆனால் பட்டாசாக வெடிக்கும் நகைச்சுவையான பகுதிகளை மேற்கோள் காட்ட சில பக்கங்களை மடிக்கத்தொடங்கினேன். சில பக்கங்கள் தாண்டியதும்தான் தெரிந்தது, கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களையும் மடித்து புத்தகத்தை அசிங்கமாக்கிவிட்டேன் என்று.

ஈராறுகால்கொண்டெழும் புரவி - நூல் அறிமுகம்
ஈராறுகால்கொண்டெழும் புரவி – நூல் அறிமுகம்

இதில் எனக்குப் பிடித்த இடம் பிள்ளை தன் மனைவி நாகம்மையைப் பார்க்கும் இடம்.

போன வார இறுதியில் துணி துவைக்கப்போனபோது, வாசிங் மெசினில் துணிகளைப் போட்ட பின் HDBயின் தோட்டத்தில் அமர்ந்து இந்தக் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன்.“ பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ?’ என்று நாகம்மை கேட்கும்போது வெடித்துச் சிரித்துவிட்டேன். எதிரில் உட்கார்ந்திருந்த ரெண்டு சீன பெரிசுகள் தங்கள் அரட்டையை நிறுத்திவிட்டு என்னை ஒருமுறை ஏறிட்டுவிட்டு மீண்டும் தங்கள் அரட்டையைத் தொடர்ந்தன.

சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது ”இது ஏம்ளா இப்டி இருக்கு ?” என்று கேட்டார். .நாகம்மை நொடித்து” பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? ” என்றாள் .

அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. ”நான் எங்க கண்டேன் ? ஆனா…”

நாகம்மை வாரிச்சுருட்டி” என்ன ஆனா?” என்றாள்

“இப்பிடி இருக்கு?”

“பின்ன எப்பிடி இருக்கணும்?’

“இல்லே …உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது வலதுகாளை எடக்காளையக்காட்டிலும் மூப்புமாதிரி இருக்கே… ”

“அவன் கண்டான் .. பெரிசா” என்றாள் நாகம்மை

சாஸ்தான்குட்டிப்பிள்ளை மேலும் தமிழாய்ந்து ”இணைமுலைண்ணு வேற சொல்லுதானே?” என்றார்

“கல்லோ கலயமோ கண்டிருப்பான். இஷ்டமானா பாருங்கோ… சும்மா….” என்றாள் அவள்

ஒருவாரம் பிள்ளைக்கு ஊடே தமிழ் வந்து தொந்தரவு செய்தது. இருதோளுற்று அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ

உதட்டை மென்று பல் இடுகுறிகளும் இட்ட பிறகு அவரே கற்றுக் கொண்டார். பின் உடலின் தூலவிசித்திரங்களை மொழி தொட முடியாதென்று அறிந்தார். தொடமுயலும்தோறும் மொழி வேறு வகை உடல்களையே உருவாக்குகிறது. சருமத்தின் வரிகளும் வெண்விரிசல்களும் மடிப்புகளும் கருமைகளும் ……

அணைத்துப்படுக்கையில் “என்னாண்ணு இப்பிடி பாக்கியோ? ” என்றாள் அவள்

“பாத்து தீரமாட்டேங்கே” என்றார் பிள்ளை.

“அதுக்காச்சுட்டி இருவத்துநாலு நாழியுமா பாத்துட்டிருக்கது ?நாலாளு கண்டா என்ன நெனைப்பாக? நேத்தைக்கு களத்திலே வச்சு அப்பிடி உத்து பாக்கியோ. வேலம்மை அக்காவும் சரஸ்வதியக்காவும் பாத்துபோட்டு முணுமுணுங்கியாவ.. சிரிக்காவ… எனக்கானா ஐயேண்ணு ஆயிப்போச்சு.. ”

‘உனக்கு பிடிக்கல்லியா?’

“பிடிக்கல்லண்ணு இல்ல. ஆனா ஒரு இது வேணுமில்லா. இப்டியா ?”

“என்ன இது… கெட்டின பெண்டாட்டி .. பாக்காமப்பின்ன? இந்த ரோமம் இருக்கே.. இது மனுஷ சருமம் முழுக்க விதவிதமா பரவி என்னா வெளயாட்டு காட்டுதுங்கே?காவியத்த படிச்சு முடிக்கலாம், இதுக்க வரையெழுத்த வாசிச்சுமுடிச்சவன் இருக்கமாட்டான். கம்பனும் அருணகிரியுமொண்ணும் இதுக்க வெளயாட்ட கண்டு பாடிக்கிட மாட்டான். …”

‘போரும் பெனாத்தினது…” அவள் எழுந்து தலைமயிரை சுட்டிக்கட்ட ” அய்யோ ” என்றார் அவர்

“என்னது?”

“உனக்க கையில பாத்தியா? இங்க தோளில.. முத்தின செம்மூங்கில்மேல ஒரு வரியோடியிருக்குமே… அதமாதிரி…”

“செரியான கிறுக்கு…” என்று நாகம்மை கதவைத்திறந்தாள்.

“ஏளா ஒரு நிமிசம்ட்டி … இந்தா ஒரு நிமிசம் பாத்துக்கிடுதேன்…”

இரண்டு வருடமே நாகம்மையுடன் வாழ்ந்த வாழ்க்கை பிள்ளையின் அடிமனதில் பதிகிறது. அவரது மனம் அவரையும் அறியாமல் நாகம்மை நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டு இருக்கிறது. பாவம் மனிதர் –  ரசவாதம், நீரோட்டம், மலட்டு மாமரம் என்று கடைசி வரை தேடிய ஞானம் கிடைக்காமலேயே அலைகிறார்.

“தேடாதேரு. தேடிக் கிட்டுத ஒண்ணுமே தேடுகதுக்குண்டானது இல்லை. தேடிவாறதே செல்வம். ஆக்கம் அதர்வினாய் செல்லணும்ணாக்கும் சொல்லு. கேட்டேரா? ” – (நாடார் பிள்ளையிடம் கூறுவது)

மலையில் இருந்து இறங்கும் முதல் நாள் இரவில் நிலா வெளிச்சத்தில் பாறை மீது தனியே அமர்ந்து அவர் கலங்கும்போது, “பிள்ளே… நின்னுட்டலே!”

பிள்ளையின் அறிமுகமே பட்டாசு.

இலுப்பவிளை உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வகுப்பில் மூதுரைக்குப் பதிலாக ரசவாதம் சொல்லிக் கொடுக்கமுற்பட்டு தாமிரப்பாத்திரம் உடைந்து கமறும் புகை கிளம்பியது. கந்தகம் தின்ற நாயின் குசுபோல– பக்கத்துவகுப்பில் இந்தியவரலாறு நடத்திய முதல்சாட்சி சாலமன் ஞானதீபம் எம் ஏ,  பி .எட் சொன்னது . புகைத்திரை மறைந்தபோது தாடிபொசுங்கிய பிள்ளையின் கையில் இருந்த சருவமும் சட்டுவமும் காணமலாயின என்று தெரியவந்தது. மூன்றுநாள்கழித்து அவை கூரைப் பட்டியலில் ஒட்டியிருக்கக் கண்டபிறகுதான் அதில் மந்திரமில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதற்குள் பிள்ளை தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின்  கீழ்க்குளம்பிடாகை பள்ளிக்கு மண்டையோட்டைக் கொண்டுவந்து பிராத்தனைமூலம் நகரவைக்க,  அன்னலட்சுமி என்ற மாணவிக்குள்ளிருந்து பண்ணிமடைஏக்கி சன்னதமாகக் கிளம்பியது. மண்டைஓடு வருத்தமாக சிரித்து அமர்ந்திருக்க , ஏக்கி சாஸ்தான்குட்டிப்பிள்ளையை கையில் பிரம்புடன் சத்துணவுக்கூடம் வரை துரத்திவந்தது.

mango-tree-fruit

ஞானம் தேடும் பிள்ளைக்கு நாடார், ஞானமுத்தன் சொல்வதாகவும் வரும் ஞான சமாச்சாரங்கள் எனக்குப் பாதி புரிந்தது. பாதி புரியலை.

இக்குறுநாவல் பற்றிய வாசகர் கடிதம் ஒன்றுக்குப் பதில் அளிக்கும் ஜெயமோகன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

நிஸர்கதத்த மகராஜின் ஒரு வரி. மாயையின் மிகச்சிறந்த அவதாரம் அகங்காரம்.

நான் அகங்காரமற்றிருக்கிறேன், நான் அகங்காரத்தைப் புரிந்துகொண்டுவிட்டேன், அகங்காரத்தை அகற்றும் வழி எனக்குத்தெரியும் என்று ஒருவன் எண்ணுவதுகூட மோசமான அகங்காரமாக ஆக முடியும்.

பிள்ளை கிணறு தோண்டுமிடத்தில் அந்த அகங்காரம் அப்பட்டமாய் வெளிப்படுகிறது. இதே அகங்காரத்தைச் சொல்லும் பிற கதைகளை மூச்சு வாங்க நான் வாசித்ததுண்டு. டார்த்தீனியத்தில் வரும் அப்பா, தவிர இதே போன்று கிணறு தோண்டும் சிறுகதை ஒன்றில் (பெயர் மறந்துவிட்டது) வரும் அப்பா என்று அகங்கார முகங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் சர்வமும் ஒடுங்கி இறுதியில் மனதில் நின்றுவிடுகிறார் பிள்ளை.

புரவியை இணையத்தில் வாசிக்க – http://www.jeyamohan.in/?p=6388

அலை அறிந்தது

Nargis-Attar-Arabian-

அத்தர் பாய்க்கும், ஒரு பெண்மணிக்கும் இடையில் நடக்கும் ஒரு சுவையான உரையாடல்

‘’இருபத்தஞ்சு தானே…எனக்கே இருபத்தாறிலேதான் தரம் வந்தது…ஒரு ஜாக்கெட்டு துணி இருக்கு கதிஜாவுக்கு குடுக்கவா? எனக்கு பாறசாலை அக்கா குடுத்தது. நான் இனிமே நிறமுள்ள துணி போடுறதில்லை…’’ அம்மா சிரித்தபடி ‘’அதுக்கு வெலை இல்லை பாய்.. அது சும்மா…’’ என்றாள்

‘’அது நமக்கு தெரியாதா… நாச்சிக்கு இனிமே வெள்ளைதானோ…மலையாளத்திலே மட்டும் எப்பமும் வெள்ளை’’ என்றார் கபீர்பாய். ‘’தமிழ்நாட்டுப்பக்கம் சுமங்கலிப்பொண்டுக வெள்ளைய கட்டமாட்டாக’’

இணையத்தில் வாசிக்க – http://www.jeyamohan.in/?p=8028

களம் (மகாபாரதச் சிறுகதை)

karna

கர்ணன் சபையில் அர்ஜுனனிடம் சவால்விடுவதும், துரியோதனன் கர்ணனை அங்க நாட்டு மன்னராக்குவதும் பிறப்பைச் சொல்லி கர்ணனை துரோணர் தகுதி இழக்க முயற்சிப்பதுமான அரசியல் விளையாட்டு

சீற்றத்துடன் துரியோதனன் முன்னால் நகர்ந்தான் ” நல்ல மரபு குருநாதரே . போர்க்களத்தில் இலச்சினை மோதிரத்தைக் காட்டாத எவரிடமும் மோத ஷத்ரியன் மறுத்துவிடலாம் ! என்ன அருமையான உத்தி!” என்று கூவி சொல்லிவிட்டு துரோணரிடம் திரும்பி “ஆசாரியாரே உங்கள் சொற்களை திருத்திக் கொள்ளுங்கள் . அர்ச்சுனன் பாரதவர்ஷத்தின் வில்லாளியல்ல , இந்த அரண்மனையிலேயே பெரிய வில்லாளி , அவ்வளவுதான் ”

”இது ரணகளமல்ல சுயோதனா. களத்தில் எவருக்கும் உரிய பாடத்தை கற்பிக்கும் தகுதிஎன் சீடனுக்கு உண்டு.இது அரங்கேற்றக் களம் .அரச மரியாதை இல்லாத எவரும் இங்கு அரங்கேற முடியாது ..” என்றார் துரோணர் .

பீமன் கோபத்துடன் கையை நீட்டியபடி ” நீ யார்? உன் குலமென்ன, சொல்” என்றான்

கர்ணனின் கண்கள் கோபத்துடன் எரிந்தன” வீரர்கள் வாயால் வெற்றிபெற எண்ணுவதில்லை ” என்றான் மெல்லிய குரலில்.

இணையத்தில் வாசிக்க – http://www.jeyamohan.in/?p=7140

பழைய முகம்

பழைய நடிகையின் ரசிகனின் பார்வை. விதியால் வஞ்சிக்கப்பட்ட நடிகையும். அவர்தம் ரசிகனும். கதையின் போக்கிலேயே கிட்டத்தட்ட உணரமுடிந்தது. ஆனால் நான் நினைத்தது, அவனுக்குத் தெரிந்த யாரோ ஒரு பெண் ஓட்டலுக்கு வரப்போகிறதென்று. அது நடிகையாகப்போயிற்று 🙂

கல்யாணம் ”அண்ணா வேற என்னமாம் வேணுமா?” என்றான். ”ஒரு ஆ·ப் திரிப்பிள் எக்ஸ் வாங்கிட்டுவாடா” என்று பணத்தை எடுத்தான். ”சேத்து வாங்குங்க அண்ணா . சேச்சியும் குடிப்பாள்ல?” ”சரி புல்லா வாங்கிக்க…” என்றான். ”சிக்கன் பக்கடா இருந்தா வாங்குகிக்கோ” கல்யாணம் பணத்துடன் வெளியே சென்றான். அவன் கதவைச் சாத்தினான். அவள் கட்டிலில் அமர்ந்து முக்காட்டை விலக்கினாள். ”என்ன வெளிச்சம். செவத்த வெளக்கை போடு அண்ணாச்சி…” என்றாள்.

இணையத்தில் வாசிக்க – http://www.jeyamohan.in/?p=6909

மன்மதன்

மன்மதன் - சில்பி
மன்மதன் – சில்பி

எளிமையான நடையில் அமைந்த சிறுகதை. அந்தக் கரும்பெண்ணின் வனப்பிலே காதலும் கொண்டேன். அந்த விழி தெரியா அறிஞன் மேல் பொறாமையும் கொண்டென்.

ஆமாம். கிருஷ்ணன் வியந்து நின்றுவிட்டான். ”அவன் கை சூட்சுமமா அந்த நுனியைத்தான் சார் பிடிச்சிருக்கு. முல்லை அரும்பை பிடிக்கிற மாதிரி அதை பிடிக்கணும்னு சொல்றதுசார் இந்தச் செலை” கிருஷ்ணன் மன்மதனின் கண்களைப் பார்த்தான். அவற்றில் அடங்காபெருங்காமம் ஒரு மென்சிரிப்பாக ஒளிவிட்டது. ‘காமம்’  என்று உச்சரிப்பதுபோல் உறைந்த கல் உதடுகள்.

இணையத்தில் வாசிக்க http://www.jeyamohan.in/?p=5810

அதர்வம் – மகாபாரதச் சிறுகதை

draupadi

தோல்வி தந்த குரோதத்தின் பிறப்பாகத் தோன்றுகிறாள் திரௌபதி. இன்று காலைதான் துரோணர் வெண்முரசில் அறிமுகமானார். மாலையில் இந்தக் கதையில் பாஞ்சாலியே பிறந்துவிட்டாள். பேஷ்!

‘மன்னனே நான் மீண்டும் சொல்கிறேன். இது சாதரணமான வேள்வியே அல்ல. அதர்வம் பாதாளத்தில் உறையும் பிரம்மாண்டமான நாகங்களை துயிலெழுப்பும் குரல் போன்றது. அதில்பிறக்கும் பேரழிவுச்சக்திகளின் கையில் நீயும் உன் எதிரிகளும் ஏன் மானுடகுலமே வெறும் பொம்மைகளாக வேண்டியிருக்கும். பின்பு மனம் வருந்தி பயனில்லை…கடைசியாக முடிவெடு. ’

இணையத்தில் வாசிக்க – http://www.jeyamohan.in/?p=13941

சமூக வலையில்….

https://plus.google.com/102606654023929138723/posts/BZgLgNueocA
https://twitter.com/rajkuma93078047/statuses/482263621116772352

சிறப்பானதொரு நூல். மீண்டுமொரு புத்தக அனுபவத்தில் சந்திப்போம் நண்பர்களே!

ஜெய் ஹிந்த்

2 thoughts on “ஈராறுகால்கொண்டெழும் புரவி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s