பொது

கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது


கூடங்குளம் தொடர்பான தலைமுறை டிவியில் ஒரு கலந்துரையாடலைக் காண நேர்ந்தது. (தலைமுறை டிவி பொதுவாக உதயகுமாரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து பிற கருத்துக்களை இருட்டடிப்பு செய்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு). எந்த ஒரு நுட்ப விளக்கங்களையும் கேட்க காதைக் கொடுக்க முடியாத ஒரு பிற்போக்கு அடிப்படைவாதத் தோற்றத்தை அளித்த திரு உதயகுமார், ‘இதெல்லாம் ஏட்டுச்சுரைக்கா. கறிக்கு உதவாது’ என்கிற இதே பழமொழியைச் சொல்லி நிராகரித்தார். விளக்கங்களைச் சொன்னவர் திரு அப்துல் கலாம் அவர்களின் குழாமைச் சேர்ந்தவர். உதயகுமாரின் பதிலைக் கேட்டதும் மனிதர் அசந்திருக்கவேண்டும்.

திரு ஜெயபரதன் அவர்களை எனக்குத் தெரியாது ஆனால் அவரது வலைப்பதிவினை நெடுங்காலமாகப் பின்தொடர்ந்து வருகிறேன். வானவியல் பற்றிய செய்திகளை மிக விரிவாக எழுதுபவர். ஒரு குறிக்கோளுடன் எழுதும் வெகு சில தமிழ் பதிவர்களில் இவரும் ஒருவர். கூடங்குளம் தொடர்பான உதயகுமாரின் கேள்விகளுக்கு இவரது பதிலை மறுபதிப்புச் செய்கிறேன்.

இருந்தாலும் இதில் எனக்கு பயம் ஏற்படுத்துவது இந்தியாவில் மறுக்க இயலாத வகையில் அதிகார அலுவலக வர்க்கத்தினைடையே இருந்துவரும் அஜாக்கிரதை, அலட்சியம். ஆந்திராவில் நடந்த கெயில் எரிவாயு குழாய் வெடிப்பு அதன் சமீபத்திய உதாரணம்.

-வாழ்க பாரதம்-

. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

Russian VVER -2

 [June 7, 2014]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MW உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது.   இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14.  மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் மேல்நிலை எட்டிய போது முதன்முதல் மின்வடங்களில் இணைப்பாகி, அனுப்பியது.   முதல் யூனிட் அடித்தளம் 2001 இல் போடப்பட்டு, கட்டி முடிந்த பிறகு, கூடங்குள ஊர்ப்புற எதிர்ப்பாளர் போராட்ட நிறுத்தத்தால்  அணு உலை இயக்கம் இரண்டு வருடங்கள் தாமதமானது.   அடுத்த இரண்டாம் யூனிட் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள்  இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, மேலும் 1000 MW மின்சக்தி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்..

பின்புலம் :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம். …

View original post 2,305 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s